Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Tuesday 22 July 2014

ஆசிரியர் நியமனம் - வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் .

ஆசிரியர் நியமனம் குறித்து தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்; மீனாட்சி சுந்தரம் கல்வி மானியக் கோரிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் அல்லாத 3459 புது ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படு வார்கள் என்று அறிவித்து இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தொடக்கத்தில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதைத்தொடர்ந்து வந்த 5 அமைச்சர்கள், ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு குழப்பமான புள்ளி விவரங்களை அறிவித்தனர்.இப்போது 6வதாக வந்துள்ள அமைச்சர் வீரமணி, கடந்த 3 ஆண்டில் 51 ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் 18 ஆயிரம் ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் அறிவித்தார். ஆனால் பேரவையில் அறிவித்தது வேறு. எனவே ஆசிரியர் நியமனங்கள், நிலை வாரியாக, நிர்வாக வாரியாக மாவட்ட வாரியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லை என்றால் போராட் டம் நடத்தப்படும் Share No comments:

Monday 14 July 2014

employment website.

வேலை வாய்ப்புகளுக்கு இணையதளம் தொடங்கியது மத்திய அரசு!          புதிய வேலைவாய்ப்புகளை அடையாளம் காணவும், திறமையுள்ளவர்களுக்கு வேலை கிடைக்கவும் உதவும் வகையில் மத்திய அரசின் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. www.niesbudnaukri.com என்ற பெயரில் இதை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தொடங்கி வைத்துள்ளார்.           இந்த இணையதளத்தில் வேலைக்கு ஆள் தேவை என நிறுவனங்கள் இலவசமாக தகவல் வெளியிட வழி செய்யப்பட்டுள்ளது.            அதேபோல, வேலை தேடுவோரும் இலவசமாக பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என்றும் அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறினார். சுமார் 150 பிரிவுகளின் கீழ் வேலைவாய்ப்புகள் இந்த இணையதளத்தில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Wednesday 9 July 2014

Monday 7 July 2014

2013-14 trs award proposal

பள்ளிக்கல்வி - 2013-14ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு CLICK HERE-GO.218 SCL EDN DEPT DATED.05.07.2013 - TEACHERS AWARD SELECTION GUIDELINES CLICK HERE-DSE - 2013-14 TEACHERS AWARD PROPOSALS CALLED REG PROC

Sunday 6 July 2014

New CEO list will be published very soon

விரைவில் புதிய சி.இ.ஓ., பட்டியல் கல்விதுறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், விரைவில் புதிய முதன்ைம கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்), அவர்களுக்கு இணையான நிலையில் உள்ள கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், கடந்த மே 31, மற்றும் ஜூன் 30 ல் பணி ஓய்வு பெற்றனர். தற்போது 12 க்கும் மேற்பட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது.இந்த பணியிடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பட்டியல், பணியிட மாற்றம் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் சி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பட்டியல் வெளியிடப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

(EL ) ஈட்டிய விடுப்பு பற்றிய முழு விளக்கங்கள்

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள் * தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.  * பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.  * தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும் (உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10= 170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)  * வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் . *  மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.  * 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும். * வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.  * எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.  * மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த தாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும். CL, RL, தவிர வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.  * ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.  * அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம். மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்ச மாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.  *மாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்குமிடையே குறைந்தது 8 கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5 நாட்கள். 160 கி.மீ க்கு மேற்படின் அட்டவணைப்படி நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்)  *ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கணக்கீட்டிற்கு வசதியாக இருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண் செய்வது சிறந்தது. எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15 நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்க வேண்டும்.  * ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ, ECS ஆகும் தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை.  * EL ஒப்படைப்பு நாளின் போது குறைந்த அளவு அகவிலைப்படியும் பின்னர் முன்தேதியிட்டு DA உயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில் அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து சுதந்தரித்துக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன்தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத் தகுதியுண்டு.  * பணிநிறைவு / இறப்பின் போது இருப்பிலுள்ள EL நாட்களுக்குரிய (அதிகபட்சம் 240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.  * அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம். 180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது 

ICE என்று நமது குடும்பத்தாரின் முக்கிய எண்ணை நமது தொலைபேசியில் பதிவு செய்யவும்.

தயவு செய்து படிக்கவும் மிகவும் முக்கியமான செய்தி.. இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன். நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும், மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்தஎண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது. ஆனால் “ICE” என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும். ICE என்பது In Case of Emergency. இதன் முக்கிய நோக்கம் அவசர நேரங்களில் மக்களை காப்பாற்றுவதாகும். இன்று ஏறத்தாழ அனைவரிடமும் கைபேசி உள்ளநிலையில் இதுசாத்தியமாகும். இந்த முறையானது பாராமெடிக் (PARAMEDIC) ஆல் கொண்டுவரப்பட்டது.. இவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அனைவரிடமும் கைபேசி வைத்திருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இப்படி கைபேசி இருந்தும் ஏன் இவர்கள் குடும்பத்தினர்களுக்கு தகவல் போய் சேரவில்லை என ஆராய்ந்து இந்த முறையை அமல்படுத்தினர். இது நாடுமுழுதும் அங்கீகரிக்கப்பட்டதாகும். ஒன்றுக்கு மேற்ப்பட்ட எண்களை ICE1 , ICE2 , ICE3………….etc எனவும் பதிவு செய்துகொள்ள்ளாம். இன்றே, உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள் இந்த முறையை நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். உங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள்.

Saturday 5 July 2014

DSE உபரி பணியிடம்-மாற்றம் ஆணை

Oபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உபரி பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் மாவட்டத்திற்குள் தேவையுள்ள / காலியாக பணியிடத்திற்கு மாற்றம் செய்து ஆணை வெளியிடப்பட்டது சார்பான தெளிவுரை DSE - SURPLUS SGT / BT REG INSTRUCTIONS CLICK HERE... 

Friday 4 July 2014

ஐடிபிஐ வங்கி.

ஐடிபிஐ வங்கியில் 500 உதவி மேலாளர் பணி ஐடிபிஐ வங்கியல் நிரப்பப்பட உள்ள 500 Assistant Manager பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Assistant Manager காலியிடங்களின் எண்ணிக்கை: 500 காலியிடங்கள் விவரம்: 1. SC - 75 2. ST - 37 3. OBC - 135 4. PWD - 15 5. Others - 238 வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு முறை: 200 மதிப்பெண்கள் கொண்ட தேர்வு. இரண்டு மனி நேரம் நடைபெறும். ஆன்லைன் தேர்வு வினாக்கள் கீழ்கண்டவாறு அமைந்திருக்கும். 1. Reasoning - 50 quiz 2. English Language - 50 quiz 3. Quantitative Aptitude - 50 quiz 4. General Awareness - 50 quiz பயிற்சி மற்றும் உதவித்தொகை: 1. பயிற்சி காலம் (9 மாதங்கள்) மாதம் ரூ. 2500. 2 வேலைவாய்ப்பு காலம் (3 மாதங்கள்) மாதம் ரூ. 10,000. பயிற்சி பின் பணியில்: மாதம் 14,400 - 40,900. விண்ணப்பக் கட்டணம்: 1. பொது பிரிவினருக்கு ரூ.600. 2.SC, ST, PWD பிரிவினருக்கு ரூ.100. விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்