Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Monday 30 October 2017

பள்ளியில்ஆசிரியர் பணிநிரவலின போதும் /புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி இயக்குநரிடம் பெற்ற RTI-ல் தகவல்

பள்ளியில்ஆசிரியர்
பணிநிரவலின போதும் /புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி இயக்குநரிடம் பெற்ற  RTI-ல் தகவல்

Thursday 26 October 2017

Income tax slab.

income tax assesses:

Proposed Income Tax slab rates by Central Board of Direct Taxes to be implemented from the next Financial Year (2017-18)...

There will be 4 slabs unlike 3 at present...

Up to 4,00,000 : Nil

4,00,001 - 10,00,000 : 10%
10,00,001-15,00,000 : 15%
15,00,001-20,00,000 :20%
20,00,001 & above : 30%
It is official information, released this evening by CBDT (as received).

https://finapp.co.in/tax-slab-rate/

Sunday 22 October 2017

Maximum permissable pay பற்றி விளக்கம்

அரசாணை 303 ன் பக்கம் 15 ல் உள்ள Rule 11(3) ல் உள்ள maximum permissable pay என்பதனை தவறாக புரிந்து, இந்த அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட ஊதியம் - maximum permissable pay என்பதை தற்போதைய pay matrix level - ல் கடைசி cell ஐ பார்த்து அதை அடைந்த பின்னர் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் increment என தவறுதலாக தகவல் பகிர்ந்து வருகின்றனர். இதனை நண்பர்கள் தவிர்க்கலாம். விதிகளில் உள்ளதை விளக்குகிறேன். நண்பர்கள் பொறுமையாக படிக்கவும்.

   Rule 15(3) ஐ பார்க்கும் முன்னர் existing pay என்பதை நண்பர்கள் புரிய வேண்டியது அவசியம். Existing pay structure என்பது முந்தைய ஊதிய அமைப்பு அல்லது விகிதம் ஆகும். ஊதிய குழு விதிகளில் சில இடங்களில் இதனை Pre revised scale எனவும் குறிப்பிடுவர். எனவே existing pay or Pre revised scale என்பது முந்தைய ஊதிய அமைப்பு, அதாவது ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதம் அல்லது அமைப்பு என்பதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

   *தற்போது விதி 11(3) ஐ பார்ப்போம்*

   Maximum permissable pay of the applicable pay or scale in the existing pay structure என்பது முந்தைய ஊதிய விகிதத்தில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட ஊதியம் என்பதாகும். அதாவது உதாரணமாக இ.நி.ஆ.பொறுத்தவரையில் 5200-20200+2800 என்ற ஊதிய விகிதத்தில் அதிகபட்சம் அனுமதிக்கப்பட்ட ஊதியம் என்பது 20200+2800 என்பதாகும். ( இவ்வாறே பக்கம் 29 - ன் அட்டவணையிலும் உள்ளது.) அடுத்ததாக for more than two year as on Ist January 2016 என்ற வரிகளுடன் இவ்விதியை படித்தால், 1.1.16. - ல் இரண்டாண்டுகளுக்கு மேலாக முந்தைய ஊதிய விகிதத்தில் ( அதாவது ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில்) அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச ஊதியத்தை பெற்றுவரும் ஊழியருக்கு, அவர் அதிகபட்ச ஊதியத்தை அடைந்த பின்னர் உள்ள காலங்களுக்கு, ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கு ஒரு ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டு ஊதியம் கணக்கிடப்படும்.

   தற்போது இதனை புரிய பக்கம் 29 - ன் அட்டவணையை பாருங்கள்.

  முந்தைய ஊதிய விகிதத்தில் PB 1A - ல் 4800  - 10000 + GP 1300 - ல் உள்ள ஒருவரது அதிகபட்ச ஊதியம் 4800 - 10000 ல் உள்ள 10000+1300 =11300 ஆகும். இவ்வாறாக ஒருவர் maximum permissable pay 1.7.13 - ல் பெற்றுவிட்டால் அவருக்கு தற்போது 2.57 ஆல் பெருக்க அனுமதித்து, அவர் 1.7.13 லேயே அவரது முந்தைய ஊதிய விகிதத்தில் (4800-10000+1300 ) அதிகபட்ச ஊதிய தொகையை அடைந்து விட்டதால் 1.7.13 - ல் அதிகபட்ச ஊதியமான 11300×2.57 ல் பெருக்கி pay matrix - ல் 29300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    1.7.13 ல் அடைந்த அதிகபட்ச ஊதியத்தை 2.57 ஆல் பெருக்கினால் அவர் 1.7.14, 1.7.15, 1.7.16 - ல் ஆறாவது ஊதிய குழு விகிதத்தில் increment பெற்றிருப்பாரே, அதனை எப்படி கணக்கில் சேர்ப்பது என்ற கேள்வி எழுகையில், அதற்காகவே அதிகபட்ச ஊதியத்தை அடைந்த பின்னர் பணியாற்றிய காலங்களான 2 years 6 months - க்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு increment என ஒரு increment கொடுக்கப்பட்டு pay matrix - ல் அடுக்கு cell ஆன 30200 என நிர்ணயிக்கப்பட்டடுள்ளது. ( பக்கம்.29 பார்க்கவும்) அதற்கு பிறகு வழக்கம் போல 1.7.16 ல் ஆண்டு ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டு அட்டவணையில் குறிப்பிட்பட்டுள்ளது.

   இ.நி.ஆ. பொறுத்தவரையில் existing pay structure அதாவது முந்தைய ஆறாவது  ஊதிய விகித அமைப்பில் 5200 - 20200+ 2800, இதில் PP யை தவிர்த்து கணக்கிட்டாலும் maximum permissable pay என்பது 20200+2800 என்பதாகும். இதனை இ.நி.ஆ.யாரும் 1.1.2016 க்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் அடைந்திருக்க வாய்ப்பில்லை.

  தவறான புரிந்து கொள்ளுதலினால் இவ்வாறான தகவல் பரவியதால், இதனை படித்து பொருள் அறிய நேர்ந்தது. இதற்காகவும் நண்பர்களுக்கு நன்றிகள்.

   தயவுசெய்து சற்று பொறுமையாக படிக்கவும்.மேலும் அரசாணையை பொறுமையாக படிக்க நண்பர்களை வேண்டுகிறேன்.

*21/10/2017  இயக்குநரால்  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு  சொல்லப்பட்ட பள்ளி சம்பந்தப்பட்ட செய்திகள் பின்வருமாறு....*

*மழைக்காலம் தொடங்க இருப்பதால், அந்தந்த ஒன்றிய உதவி தொடக்க்ககல்வி அலுவலர் மற்றும் கூடுதல்
உதவி தொடக்க்ககல்வி அலுவலர்,வரும் வாரம் நடைபெறும் இருக்கின்ற
தலைமையாசியர் கூட்டத்தில்  இயக்குநர்,மற்றும் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களின் அறிவுரைகளை ஆலோசனைகளையும் தலைமையாசிரியர்  கூட்டத்தில் எடுத்துரைப்பார்கள்...*

*21/10/2017  இயக்குநரால்  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு  சொல்லப்பட்ட பள்ளி சம்பந்தப்பட்ட செய்திகள் பின்வருமாறு....*

இது பற்றிய முழுவிபரம் தெரிவிப்பார்கள்....

1.மாணவர்களின் பாதுகாப்புகுறித்த விஷயங்களில் அனைத்து ஆசிரியர்களும் மிகவும் கவனமுடன் இருத்தல் வேண்டும்.

2.பள்ளி வளாகத்தில் இடிக்ககப்பட வேண்டிய கட்டிடங்கள் இருந்தால் உடன் (நாளை) அலுவலகத்திற்கு தகவல் எழுத்துபூர்வமாக அளித்துவிட்டு "தடைசெய்யப் பட்ட பகுதி "என எழுதி ஒட்டிவிட்டு,  அந்த கட்டிடடத்திறகு அருகில் மாணவர் செல்லாதவண்ணம் ஒரு கயிற்றைக்
கட்டி தடுக்கவும்.

3.பள்ளியில் உள்ள மின்சாதனங்களை மாணவர்களைவிட்டு இயக்கச் (மின்விசிறி போடுதல்,லைட் போடுதல்) செய்யவேண்டாம்.

4.பட்டு போன மரங்கள் பள்ளி அருகிலோ,பள்ளி வளாகத்திலோ இருந்தால் உடன் அப்புறப்படுத்தவும்.

5.குடிதண்ணீரை சத்துணவு பணியாளர் மூலம் காய்ச்சி வடிகட்டி மாணவர்களுக்கு அளிக்கவும்.

6.ஆறு,குளங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் மாணவர்களை அவற்றில் குளிக்கச்செல்லவேண்டாம் என கண்டிப்பாக அறிவுறுத்தவும்.

7.மழை நேரத்தில மாணவர்களை குடை, ரெயின்கோட் கொண்டுவர அறிவுறுத்தவும்.

8.தலைமை ஆசிரியர்கள் பள்ளியில் ஒரு குடை,Torch light வாங்கி வைக்கவும்.
9.இயற்கை பேரிடர் நடைபெறும் காலங்களில் பொதுமக்கள் தங்குவதற்கு இடம் கேட்டால் (முக்கியஆவணங்கள்,பொருட்களை பத்திரமாக பீரோ அல்லது தலைமை ஆசிரியர் பொறுப்பில் வைத்துக்கொண்டு) உடன் தங்க அனுமதி அளிக்கவும்.
10.பள்ளி அமைந்துள்ள பகுதியைச் சார்ந்த மருத்துவமனை,மருத்துவ அலுவலர்,சுகாதாரச் செவிலியர்,காவல் நிலையம்,தீயணைப்பு நிலையம,கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருடைய கைப்பேசி எண்கள் கட்டாயம் பள்ளியில் எழுதியிருத்தல் வேண்டும்.

11.NCERT மூலம்"தமிழப்பள்ளி கலைத் திருவிழா "நடத்தப்படவுள்ளது.வட்டார அளவில் 1-5 வகுப்பு மாணவர்களுக்கும்,மாவட்ட அளவில் 6-8 வகுப்பு மாணவர்களுக்கும் போட்டிகள் நடைபெறும்.
1-2 வகுப்பு;3-5வகுப்புகள்;6-8 வகுப்புகள் என்ற நிலையில் போட்டிகள் நடத்தப்படும்.

12.பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாத நிலை (கழிவறை,குடிதண்ணீர்)  இருந்தால் உடன் வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யவும்.

13.மாணவிகளுக்கு "நாப்கின்"தேவைப்படும் நடுநிலைப்பள்ளிகள் இருந்தால் உடன் மாணவிகள் எண்ணிக்கையை குறித்து அலுவலகத்தில்  தபால் அனுப்பினால் சுகாதாரத்துறை உதவியுடன் பெற்று வழங்கப்படும்.

14.துப்புரவுப் பணியாளருக்கான ஊதியம் வங்கிக் கணக்கிற்கு வந்தவுடன் (வங்கி கணக்கை பார்க்கவும்) அதனை காசோலையாக தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட பணியாளருக்கு நேரடியாக வழங்கவு.

15.EMIS பதிவு செய்ய(போட்டோ&இரத்தப்பிரிவுடன்)  கடைசி தேதி 31/10/17.

16.NAS தேர்வு நவம்பர் 13 நடைபெறும்.எட்டாம் வகுப்பிற்கு மட்டும் Coding sheet.

17.Team visit "A" கிரேடு பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளுக்கும் இந்த மாத இறுதியில் உண்டு.

18.பள்ளிகளில் "மெல்லக் கற்போர் " பதிவேடு கண்டிப்பாக நடைமுறையில் இருத்தல் வேண்டும்.அதில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான மேற்கொள்ளளப்பட்ட செயல்பாடு "Remedy " குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

*“ஏமாற்றிவிட்டார் எடப்பாடியார்!” - சம்பள கமிஷன் அறிவிப்பால் கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள் - ஜீனியர் விகடன் நாளிதழ் கட்டுரை*

*“ஏமாற்றிவிட்டார் எடப்பாடியார்!” - சம்பள கமிஷன் அறிவிப்பால் கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள் - ஜீனியர் விகடன் நாளிதழ் கட்டுரை*

22 October 2017

தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அடுத்தடுத்து நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

‘இனி அதிகபட்ச ஊதியம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம்,  
வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல்வேறு படிகளிலும் அதிகபட்ச உயர்வு, ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்வு’ எனச் சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இதைத் தீபாவளிப் பரிசாக நினைத்து அறிவித்தார் முதல்வர். சமூக வலைதளங்களிலும் இந்தச் சம்பள உயர்வு பற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ‘‘இது நாங்கள் எதிர்பார்த்தது இல்லை. எங்களுக்குத் தீபாவளி தித்திக்கவில்லை’’ என்கின்றன ஊழியர் சங்கங்கள்.  

‘‘நீதிமன்றம் தலையிட்ட பிறகு ஏற்பட்ட நிர்பந்தத்தினால் ஊதிய மாற்றத்தை முதல்வர் அறிவித்தார். ஆனால், இந்த அரசாங்கம் ஏதோ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்மீது அதீத அக்கறைகொண்டு, தானாக முன்வந்து ஊதிய மாற்றத்தைத் தந்தது போலத் தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார் முதல்வர்’’ என்று குமுறுகிறார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான மு.அன்பரசு. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.  

‘‘அரசு ஊழியர்களுக்கு இரண்டு மடங்குச் சம்பள உயர்வு கொடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்களே?’’ 

‘‘அது முற்றிலும் தவறு. உதாரணமாக, ஓர் அலுவலக உதவியாளர் இப்போது மாதாந்திர மொத்த ஊதியம் ரூ.21,792 வாங்குகிறார் என்றால், இனி அவர் ரூ.26,720 வாங்குவார். அவருக்குக் கூடுதலாக ரூ.4,928 கிடைக்கும் என்பதுதான் உண்மை. இப்படி இளநிலை உதவியாளருக்கு 9,549 ரூபாய் வரை கூமுதல் கிடைக்கும். சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.2,910 ரூபாயும் சத்துணவு சமையலருக்கு 2,118 ரூபாயும் கூடுதலாகக் கிடைக்கும். இந்தச் சம்பளத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான அரசுப் பணியாளர்கள் இருக்கிறார்கள். இந்த ஊதிய உயர்வெல்லாம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் திருத்திய ஊதிய உயர்வு. இது எங்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தையே தந்துள்ளது.’’ 

‘‘சில படிகளைத் தவிர அனைத்துப் படிகளும் 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறியிருக்கிறாரே?’’ 

‘‘மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்குவதாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு, குறைந்தபட்ச ஊதியம், வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுத் தொகை, குறைந்தபட்ச ஓய்வூதியம் போன்ற பல இனங்களில் மத்திய அரசு ஊழியர்கள் பெறுவதைவிட குறைவான தொகையை நிர்ணயித்துள்ளது. இப்போதும் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் பல்வேறு சலுகைகளில் சிலவற்றைக்கூட தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்காமல் புறக்கணித்துள்ளது. இது, தமிழக அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகம். மக்கள் நலனிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனிலும் அக்கறை கொண்டுள்ளதாகக் கூறும் இந்த அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தையும் படிகளையும் வழங்க வேண்டும்.’’ 

‘‘குறைந்தபட்ச அடிப்படை ஊதியமும் குறைந்தபட்ச ஓய்வூதியமும் மத்திய அரசுக்கு இணையானதாகத் தரப்பட்டுள்ளது என்று முதல்வர் அறிவித்துள்ளாரே?’’ 

‘‘அடிப்படை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மத்திய அரசில் ரூ.18,000 ஆக உள்ள நிலையில், மாநில அரசின் ஊழியர்களுக்கு ரூ.15,700 ஆக நிர்ணயித்துள்ளார்கள். அதேபோல் மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.7,850 என்று நிர்ணயித்து இருக்கிறார்கள். இதுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியமா?’’ 

‘‘கடந்த 6-வது சம்பள கமிஷன் ஊதிய முரண்பாடுகள் குறித்து நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டனவா?’’  

‘‘இல்லை. ஊதிய உயர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுவிடம் சங்கங்கள் வைத்த கோரிக்கைகளில் முதன்மையானது, ‘2008-ம் ஆண்டு அறிவித்த ஊதிய மாற்றத்தினால் எழுந்த முரண்பாடுகளைச் சரிசெய்த பின்னரே 2016-ம் ஆண்டுக்கான ஊதிய மாற்றத்தை அறிவிக்க வேண்டும்’ என்பதாகும். இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் முதல்வரிடமும், அலுவலர் குழுவிடமும் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய மாற்றத்தை நடைமுறைப்படுத்தும் முன்னர், அந்த ஊதிய முரண்களைச் சரி செய்யவேண்டும்.’’ 

‘‘மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல 7-வது சம்பள கமிஷனின் திருத்திய ஊதியத்தின் நிலுவைத் தொகை உங்களுக்குத் தரப்பட்டுவிட்டதா?’’ 

‘‘இல்லை. 2014-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் சட்டமன்றத்தில் 2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வாசித்தபோது, ‘7-வது சம்பள கமிஷன் நிலுவைத்தொகை உடனே வழங்கப்படும்’ என்று அறிவித்தார். ஆனால், இப்போது தரவில்லை. ‘இந்தப் புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப் பயனுடனும் அமல்படுத்த ஆணையிட்டுள்ளேன்’ எனச் சாமர்த்தியமாக அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. *மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் ஊதிய நிலுவைத் தொகையை ரொக்கமாகப் பெற்றனர். ஆனால், 2016 ஜனவரி முதல் புதிய ஊதிய உயர்வு அமலானாலும், 2017 செப்டம்பர் வரை 21 மாதங்களுக்கான ஊதிய நிலுவைத் தொகையை அரசு பறித்துக்கொண்டுள்ளது. உண்மையிலேயே இது ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படும் அரசு என்றால், இந்த நிலுவைத் தொகையை மத்திய அரசு ரொக்கமாக வழங்கியது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.’’ *

‘‘அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?’’ 

‘‘அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நீதிமன்றம் அரணாக உள்ள நிலையில், ஊதிய மாற்றம் ஏமாற்றத்தை அளித்துள்ளது என அரசுக்குத் தெரிவிப்பதற்காக முதலில் விளக்கக் கூட்டம் நடத்துகிறோம். வரும் 23-ம் தேதி திங்கள்கிழமை, உயர் நீதிமன்றத்தில் ஊதிய மாற்றம் சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஊதிய மாற்றத்தில் அரசு செய்துள்ள குறைபாடுகளை அப்போது சுட்டிக்காட்டி, அதற்கான உரிய உத்தரவுகளையும் உயர் நீதிமன்றத்தின் மூலம் பெறுவதே ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும்.’’ 

- எஸ்.முத்துகிருஷ்ணன் 
படம்: கே.ஜெரோம் 

நன்றி ; ஜீனியர் விகடன்

Wednesday 4 October 2017

Monday 2 October 2017

சென்னை உயர்நீதிமன்றம் வாதி

சென்னை உயர்நீதிமன்றம்
வாதி

M.சுரேஷ்,
4/19-B கோகுலம் ,
VIP நகர் ,
கருப்பணார்கோவில் தோட்டம் ,
ஒடுவன்குறிச்சி அஞ்சல் ,
இராசிபுரம் வட்டம் ,
நாமக்கல் மாவட்டம் ,
637 406.                        
மற்றும் பலர் ..
எதிர்வாதிகள்

1.    கல்வித்துறை முதன்மை செயலாளர் ,
      பள்ளிக்கல்வித்துறை ,
      தமிழ்நாடு அரசு ,
      தலைமைச் செயலகம் ,
      சென்னை - 09 .

2.    பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ,
      DPI வளாகம் ,
      சென்னை -06.

3.    தொடக்கக் கல்வி இயக்குனர் ,
      DPI வளாகம் ,
      சென்னை -06.

அபிடவிட் மாதிரி
M.சுரேஷ் த/ பெ k.மணி , இந்து , வயது 36 ஆகிய நான் என்சார்பிலும். என்னோடு இந்த வழக்கில் உள்ள பிறர் சார்பிலும் மாண்பமை நீதிமன்றத்திடம் மன்றாடுவதாவது ,

நானும் என்னைப் போன்றவர்களும் தமிழ் நாடு பள்ளிக் கல்வித்துறையில் 2004, 2005,2006 காலங்களில் தொகுப்பூதியத்தில் இளநிலை இடைநிலை ஆசிரியராக ரூ3000, இளநிலை பட்டதாரி ஆசிரியராக  ரூ 4000, இளநிலை முதுகலை பட்டதாரி ஆசிரியராக ரூ 4500 ஊதியங்களில் நியமிக்கப்பட்டு பிறகு 01.06.2006 ல் காலமுறை ஊதியமும் பணிவரன்முறையும் பெற்றோம் .

நாங்கள் தொகுப்பூதிய காலத்தில் பணிபுரிந்த காலத்தை பணிவரண்முறை செய்து பணிக்காலமாக்கவும், தொகுப்பூதிய காலத்தில் பணிபுரிந்த நாட்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும், நிலுவைகளை பெறவும் , அனைத்து பணிக்கால பலன்களையும் பெற உரிய ஆணைகளை அரசிற்கு வழங்க மாண்பமை நீதிமன்றத்தை பணிந்து கேட்டுக் கொள்கின்றோம் .

காலமுறை ஊதியம் கோருவதற்கான அடிப்படை காரணங்கள் :-

1. தமிழக கல்வித்துறையில்.  அரசாணை எண்.1524 , பள்ளிக்கல்வி(M1)த்துறை , நாள் :  12.11.1990 ன்படி.  1991-92 , 92-93 காலங்களில் 800,1400,1750 ரூபாய் சம்பளத்தில் எம்மைப்போல் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆசிரியர் பணியிடங்களில்  நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் நீதிமன்ற ஆணைகளின் படி அரசாணை எண். 336, பள்ளிக்கல்வி(M1)த்துறை , நாள் : 30.12.2009 ன்படி நியமன நாள் முதல் காலமுறை ஊதியமும் நிலுவைத் தொகையினையும் மற்ற பணிக்கால பலன்களையும் அரசு வழங்கி உள்ளது .

2. 2004க்கு முன்பாக 1991-92 , 92-93 காலங்களில் தொகுப்பூதிய காலத்தில் நியமிக்கப்பட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிய நிலையில் 2004-2006 காலங்களில் தொகுப்பூதிய காலங்களில் நியமனம் செய்யப்பட்ட எங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க மறுப்பது அரசியல் அமைப்பின் சட்ட விதி 14ன்படி  தவறாகும் .

3. 2004-2006 காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் தமிழக அரசின் ஆசிரிய தேர்வ வாரியம் மூலமாகவும் , வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலமாகவும் இன சுழற்சி முறையை ,  அனைத்து காலமுறை ஊதிய நியமனங்களின் அனைத்து தகுதி மற்றும் விதிகளை பின்பற்றியே நியமனம் செய்யப்பட்டது .

4. 2004-2006 பணிக்காலத்தில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் எந்த பணி முறிவின்றி தொடர்ந்து பணி செய்து வந்தனர் .

5. தமிழக கல்வித்துறையில் 2004 ல் தொகுப்பூதித்தில் கரூர் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பின்னடைவு பணியிடங்களில் எங்களைப் போல் நியமிக்கப்பட்ட பல ஆசிரியர்களுக்கும் நீதிமன்ற ஆணைகளின் படி நியமன நாள் முதல் அரசாணை எண். (3டி) 78, பள்ளிக்கல்வித்துறை , நாள் : 25.05.2012 , அரசாணை எண்.(3டி) 35 பள்ளிக்கல்வித்துறை நாள் : 10.04.2014 மற்றும் அரசாணை எண்.(3டி) 63 நாள் : 13.04.2016ன்படியும் நியமன நாள் முதல் காலமுறை ஊதியமும் அனைத்து பணிக்கால பலண்களையும்  அரசு வழங்கி உள்ளது .

4. 13 ஆண்டுகாலமாக சங்கங்களின் மூலமாகவும் தேர்தல் அறிக்கை மூலமாகவும் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்குவதாக  கூறிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவே இல்லை .

5. குறைந்த பாடவேளைகளை கையாண்டால் போதும் என்ற ஆணைகள் எங்கும் பின்பற்றப்படாமல் முழு நேர ஆசிரியர்கள் செய்யும் அனைத்து பணிகளையும்  பயிற்சிகளையும் மேற்கொள்ள பணிக்கப்பட்டோம்  .

6. இந்திய அரசியலைமைப்பு குடிமகனுக்கு வழங்கிய சமத்துவம் சமதர்மம்அரசியலமைப்பு விதிகள் 14-18 எங்களுக்கு வழங்கப்படவில்லை .

7. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீதிமன்றங்களின் பலதீர்ப்பை அரசு செயல்படுத்தவில்லை ..


8. படித்து உரிய தகுதிகளை பெற்றிருந்த பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை அரசு அவர்களின் வறுமையை ,வேலைவாய்ப்பின்மையை பயன்படுத்தி கொத்தடிமைகளைப் போல ஒப்பந்தம் செய்து கொண்டு இரண் ஆண்டு உழைப்பை சுரண்டி பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தியது  அரசியல் அமைப்பின் சுரண்டலுக்கு எதிரான உரிமை விதி  22,23 க்கு முற்றிலும் மாறானது .


9. 13 ஆண்டுகாலமாக எங்கள் உரிமையை எங்கள் கோரிக்கையை எங்கள் வாழ்வாதார உரிமைகளை அரசு வழங்க மறுப்பது குடிமக்களின் அடிப்படை உரிமை பறிப்பாகும் ..இது அரசியலமைப்பு விதிகளுக்கு முற்றிலும் விரோதமானது ..

10. 2002 ல் நியமிக்கப்படலாம் 2004 ல் தொகுப்பூதிய காலத்தில் பின்னடைவு பணியிடங்களில் நியமிக்கப்பட்ட கரூர் , திருச்சி மாவட்ட ஆசிரியர்கள் பலருக்கும் நியமனம் முதல் காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு விட்டது ..

11. பல பள்ளிகளில் தலைமையாசிரிரை தவிர பிறர் தொகுப்பூதிய நியமன ஆசிரியர்கள் பணிபுரியும் போது தலைமையாசிரியர் விடுப்பில் இருக்கும் போதும் தலைமையாசிரியர் பயிற்சிகளின் இருக்கும் போதும் பல நாட்கள் முழுநேர தலைமை ஆசிரியர் பொறுப்பேற்று தொகுப்பூதிய ஆசிரியர்கள் முழு நேரம் பள்ளியை நடைமுறைபடுத்தி உள்ளனர் ..இந்நிலையில் வாரம் 14 பாடவேளைகளை மட்டுமே இவர்கள் எடுத்தனர் என்பதை ஏற்க முடியாத ஒன்று ..

12. கற்பித்தல் பணி தவிர மக்கள் தொகை கணக்கெடுப்பு , தேர்தல் பணி , குடும்ப அட்டை கணக்கெடுப்பு , பொருளாதார கணக்கெடுப்பு போன்ற பல்வேறு அரசு பணிகளையும் தொகுப்பூதிய காலத்தில் செய்துள்ளோம் .

13.முழு உழைப்பையும் பெற்றுக்கொண்டு சம்பளம் மட்டும் மிக மிக குறைவாக கொடுப்பது நியாயமல்ல ..

14. அரசுப்பணியில் பத்தாண்டு பணிக்காலத்துக்கு வழங்கப்பட்ட தேர்வுநிலை ஊதியமும் தொகுப்பூதிய காலத்தின் அளவிற்கு தள்ளிப்போனதால் அரசு பணிக்காலத்திற்கான பணப்பலன் மறுக்கப்பட்டது

15. தொகுப்பூதிய காலத்தில் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் வழங்கப்படும் ஆண்டு ஊதிய உயர்வுகள் வழங்கப்படவில்லை..

16. பணியேற்கும் போது பணிக்கான கல்வித்தகுதியை விட கூடுதல் கல்வித்தகுதியை பெற்றிருந்தும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளும் மறுக்கப்பட்டது .கல்வித்துறையில் கல்விக்கு ஊக்க ஊதியம் கூட ஆசிரியர்களுக்கு அரசு வழங்கவில்லை

17 .தமிழக அரசு 2004-2006 ல் தொகுப்பூதிய காலத்தில் நியமிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான  ஆசிரியர்களின் உணர்வுகளை உரிமைகளை இதுவரை புறக்கணித்த காரணத்தால் வேறு நிவாரணம் இன்றி நாங்கள் நீதிமன்றத்தை நாடுகின்றோம் ..

18 .நீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு சட்ட  விதிகளின் படி 2004-2006காலத்தில் தமிழக கல்வித்துறையில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் பணிக்காலத்தை வரண்முறை செய்யவும் பணிக்கால நிலுவை பணப் பலன்களை வட்டியுடன் திருப்பி வழங்கவும் ஆணைகளைப் பிறப்பிக்க நீதிமன்றத்தை பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம் ..

மேற்காணும் தகவல்களில் விடுபடுதல் இருந்தால் எனது 9943790308 என்ற வாட்சப் எண்ணிற்கோ அல்லது msh28111981@gmail.com என்ற மெயிலுக்கோ தகவல்களை அனுப்பவும் ..

ஆக்கப்பூர்வமான தகவல்கள் வரவேற்கப்படும் ..

அன்புடன்
உங்களில் ஒருவன்
சுரேஷ்மணி
ப.ஆ கணிதம்
நாமக்கல் ...

....நன்றி ...