Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Monday 22 April 2019

புத்தகங்கள் பற்றி உலகத்தலைவர்களும் அறிஞர்களும் சொன்ன கருத்து!

புத்தகங்கள் பற்றி உலகத்தலைவர்களும் அறிஞர்களும் சொன்ன கருத்து!

புத்தகங்கள் பற்றி உலகத்தலைவர்களும் அறிஞர்களும்  சொன்ன கருத்து!

ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, *ஒரு நூலகம் கட்டுவேன்* என்று பதிலளித்தாராம் மகாத்மா…

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் *ஜவஹர்லால் நேரு*…

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் *பெட்ரண்ட் ரஸல்*…

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் *ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்*…

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் *நெல்சன் மண்டேலா*…

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி *லெனின்* கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்…

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் *சார்லிசாப்லின்*…

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் *வின்ஸ்டன் சர்ச்சில்*…

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் *மார்டின் லூதர்கிங்*…

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் *பகத்சிங்*…

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன். *ஆபிரகாம் லிங்கன்*…

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி – *ஜூலியஸ் சீசர்*…

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்.. – *டெஸ்கார்டஸ்*…

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு… – *இங்கர்சால்*…

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்! – *பிரான்சிஸ் பேக்கன்*…

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே! – *லெனின்*…

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை! – *ஆஸ்கார் வைல்ட்*…

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு! – *சிக்மண்ட் ஃப்ராய்ட்*…

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ… – *மாசேதுங்*…

வாசிக்கும் பழக்கம் ஓர் மனிதனை முழு மனிதனாக மாற்றிவிடும்

உலகில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்கள் பலரும் நூல்கள் வழியாகத் தான் வாழ்வின் வெளிச்சத்தை நோக்கி பயணித்தனர்.

Sunday 21 April 2019

*குளிகை என்றால் என்ன..?* *தொட்டதைத் துலங்கச் செய்யுமா குளிகை நேரம்..?*

*குளிகை என்றால் என்ன..?*
*தொட்டதைத் துலங்கச் செய்யுமா குளிகை நேரம்..?*
*இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன் தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான்...*
*யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம்* *கேட்டுக் கொண்ட இராவணன் அதற்கு வழிமுறைகள் என்ன என்றும் அவரிடம் கேட்டான்...*
*அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், “கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்..”என்று யோசனை கூறினார்...*
*உடனடியாக, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டான் இராவணன்...*
*ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் யாவும் தவித்துப் போயினர்...*
*இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்தும் கொண்டனர்...*
*தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டனர்...*
*அதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெருமளவு தவித்தாள்...*
*வலி அதிகம் இருந்த போதிலும் குழந்தை பிறக்கவே இல்லை...*
*இந்தச் செய்தி நவக்கிரகங்களை எட்டியதும், அதற்கும் தாங்கள்தான் காரணம் என்று இராவணன் தண்டிப்பானோ என்று அச்சம் கொண்டனர்...*
*இது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். “இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால், உங்கள் ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவன் ஒருவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும்...* *அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும்.*
*நீங்களும் இராவணின் சிறையிலிருந்து விடுதலை பெறலாம்’’ என்றார்..*
*சுக்கிராச்சாரியாரின் வாக்கின்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால், தனது மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும் படி செய்தார்..*
*சனீஸ்வரன்-ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வனுக்கு குளிகன் என்று பெயரிடப்பட்டது...*
*குளிகன் பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தது...*
*குழந்தை பிறந்து முதன்முதலில் அழுதவுடன் ஒரு மாபெரும் வீரன் பிறந்துள்ளான்* *என்பதைக் குறிக்கும் வகையில் இடி, மின்னலுடன் அடர்மழை பெய்தது...*
*அதனால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான்...*
*அவனே இராவணனின் தவப்புதல்வனான மேகநாதன். பின்னாளில் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பல அபூர்வமான அஸ்திரங்களைப் பெற்று, இந்திரனையே வென்று இந்திரஜித் என்று அழைக்கப்ட்டான்...*
*இந்திரஜித் என்ற மேகநாதன் பிறந்த நேரம் தான் குளிகை நேரம்* *எனப்படுகிறது. தான் பிறக்கும்போதே நல்லதை நடத்தி வைத்ததால், குளிகன் நவக்கிரகங்களால் பாராட்டப்பட்டார்...*
*குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக வழங்கப்பட்டது...*
*குளிகை நேரத்தை, “காரிய விருத்தி நேரம்” என்று ஆசீர்வதித்தார் சுக்கிராச்சாரியார்...*
*அதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து* *நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்றும் கூறப்பட்டது...*
*குளிர்விக்கும் தன்மையைக் கொண்ட குளிகன் ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப் பட்டான்.*..
*குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம்...*
*சனீஸ்வரனை வணங்கும்போது மனதினில் குளிகனை எண்ணி வணங்கலாம்....*
*இராகுகாலம், எமகண்டத்தில் எப்படி ஒரு நல்ல செயலை செய்ய மாட்டார்களோ, அதேபோல குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும் என்ற நம்பிக்கை வெகு காலமாக இருந்து வருகிறது.*
*இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு இது பொருத்தமில்லாததாகவும் கருதப்படுகிறது.குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத்* *தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை...* *குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கும்...*
*ஆனால் அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலிசெய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்றவற்றை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது
ஆக..தொட்டதைத் துலங்கச் செய்யுமாம் குளிகன் என்ற மாந்தனின் நேரம்🙏🙏🙏🙏🙏🙏
[21/04, 06:44] +91 89406 76670: 💐பிளஸ் 2 மாணவர்கள்  4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் சேர விண்ணப்பிக்கலாம் காந்திகிராம் பல்கலைக்கழகம் அறிவிப்பு

🎖🎖மத்திய அரசு பல்கலைக்கழக மான காந்திகிராம் கிராமிய பல் கலைக்கழகம் திண்டுக்கல் அருகே அமைந்துள்ளது.

💐 ஆசிரியர் பணி யில் சேர வேண்டும் என்ற குறிக் கோளுடன் இருக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இப்பல் கலைக்கழகம் 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த பிஎஸ்சி. பிஎட் படிப்பை (கணிதம், இயற்பியல், வேதியியல்) வழங்கி வருகிறது. பிஎட் படிப்புக்காலம் 2 ஆண்டு களாக உயர்த்தப்பட்ட நிலையில், பட்டப் படிப்பை முடித்து அதன் பிறகு பிஎட் படித்தால் 5 ஆண்டுகள் ஆகிவிடும்.

💐 ஆனால், இந்த ஒருங்கிணைந்த பிஎஸ்சி, பிஎட் படிப்பை 4 ஆண்டுகளில் முடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

💐 தற்போது 2019-2020-ம் கல்வி ஆண்டில் பிஎஸ்சி, பிஎட் மாண வர் சேர்க்கைக்கான அறிவிப்பை காந்திகிராம் கிராமிய பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

💐 *கணிதம், இயற்பியல், வேதியியல்*
பாடங் களுடன் பிளஸ் 2 படிப்பை முடிக்கும் மாணவர்கள் இப்படிப்பில் சேர லாம்.

🥇குறைந்தபட்சம்
*50 சத வீத மதிப்பெண் அவசியம்.*

🙏 *நுழைவுத்தேர்வு ஏதும் இல்லாமல்* *பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்படி, கணிதம், இயற்பியல், வேதியியல்-இவற்றில் ஏதேனும் ஒன்றில் *ஒருங்கிணைந்த பிஎஸ்சி, பிஎட். படிக்கலாம்.*

💐 இதற்கான ஆன் லைன் பதிவு தொடங்கப்பட் டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 10 நாட்களுக்குள் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

👍இது ஒரு மத்திய அரசு பல்கலைக்கழகம் என்பதால் மாணவர்களிடம் *மிகவும் குறைவான கல்விக்கட்டணமே* வசூலிக்கப்படுகிறது.

💰 *முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு செமஸ்டருக்கு ரூ.6,600 (வேதியியல் பாடப்பிரிவு எனில் ரூ.7,600) செலுத்த வேண்டும்.*

இறுதி ஆண்டு ஒரு செமஸ்டருக்கு அனைத்துப் பாடப்பிரிவினருக்கும் கல்விக்கட்டணம் ரூ.8,600. தகுதி யுடைய பிளஸ் 2 மாணவ-மாணவி கள் ஆன்லைனில்

(www.ruraluniv. ac.in )

பதிவுசெய்யலாம் என காந்தி கிராம் கிராமிய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

💐💐🌹🌹🌹💐💐
[21/04, 10:54] +91 94881 11789: ”நீதித்துறை மிகப் பெரிய ஆபத்தில் உள்ள, என்னை விலை கொடுத்து அவர்களால் வாங்க முடியவில்லை” உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதி அதிர்ச்சி தகவல்!

முக்கியமான தீர்ப்புகள் வழங்கப்படவுள்ள நிலையில் என்னை விலை கொடுத்து அவர்களால் வாங்க முடியவில்லை எனவே என் மீது பெண்ணை வைத்து புகார் கொடுக்க வைத்துள்ளார்கள் நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதில் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது இதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எனது இருக்கையில் இருந்து சொல்லும் நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்.!!

வெறும் 6 லட்சம் ரூபாய் மட்டுமே பேங்க் பேலன்ஸ் வைத்துள்ள ஒரு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 20 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைக்கும் பரிசா இது ? லஞ்ச புகாரில் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ள பெண்ணை வைத்து என் மீது புகார் கொடுக்க வைத்துள்ளனர்.!!

இந்திய வரலாற்றில் இதுவரை நடக்காத வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்ற ஆண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து நீதித்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என புகார் அளித்தனர். அந்த புகார் அளித்தவர்களில் தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய்யும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.!!

பிஎம் மோடி படத்தை வெளியிடுவதற்கு தடை , யோகி ஆதித்யனாத் பேச்சுக்கு தடை உள்ளிட்ட தீர்ப்புகள் உச்ச நீதிமன்றத்தின் மூலம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடதக்கது.!!