Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Tuesday 30 September 2014

பெட்ரோல் விலை ₹0.65குறைப்பு.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65 காசுகள் குறைப்பு: எண்ணெய் நிறுவனங்கள் .

இரண்டாவது பட டியல். விரைவில் TNTET.

TNTET;ஆசிரியர்களுக்கு இரண்டாவது பட்டியல் 2032 பணியிடங்கள் விரைவில் வர உள்ளது? ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது அதில் வெயிட்டேஜ் அடைப்படையில் 12000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இரண்டாவது பட்டியல் வெளிவரஉள்ளது இதில் 2032 பணியிடங்கள் மேல் உள்ளது இதில் தமிழுக்கு மட்டும் 250 பணியிடங்கள் வரலாம் என உறுதியான தகவல்கள் கூறுகிறது. 

Monday 29 September 2014

pg trng for 3days.

PG TRAINING | புதிதாக பணியில் சேர்ந்துள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு 29.09.2014, 30.09.2014 மற்றும் 01.10.2014 ஆகிய மூன்று நாட்கள் ஏழு மையங்களில் திட்டமிட்ட நிரல்களின்டி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 2011-2012 மற்றும் 2012-2013ம் ஆண்டிற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக நேரடி நியமனம் மூலம் முதுகலை ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு 29.09.2014, 30.09.2014 மற்றும் 01.10.2014 ஆகிய மூன்று நாட்களில் ஏழு மையங்களில் பாடவாரியாக உண்டு உறைவிட பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் புதியதாக பணியேற்றுள்ள முதுகலை ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். புதிதாக  பணி  நியமனம் செய்யபட்ட  முதுகலை  பட்டதாரி  ஆசிரியர்களுக்கான பயிற்சி  செப் 29  முதல்  பாடவாரியாக நடைபெறவுள்ளது .தற்பொழுதய  அசாதாரண  சூழ்நிலையை  கருத்த்ல் கொண்டு  இந்த  தள்ளிபோகுமோ  என்று எதிர்ப்பார்க்கப்பட்டது . ஆனால்  பயிற்சி  கால அட்டவணையில்  எந்த  மாற்றமும்  இல்லை என்ற  தகவல்  வெளியாகியுள்ளது .       மேலும் புதிதாக  தேர்ந்தெடுக்கப்பட்ட  பட்டதாரி  ஆசிரியர்களுக்கான  பயிற்சி  30 ம்  தேதி  முதல் நடக்கவுள்ளதால்  அவர்காளுக்கான  கருத்தாளர்  பயிற்சி  நடக்கவுள்ளது .

Tuesday 16 September 2014

Important phone no

இந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் இலவச தொலைபேசி எண்கள்!!! --------------------------------------------------------------------- இந்தியாவில் உள்ள முக்கிய நிறுவனங்கள் ,அமைப்புகள் ,தொழிற்சாலைகள் ஆகியவற்றின் இலவச எண்கள் நான் பார்த்தது நீங்களும் அறிந்து கொள்ளுங்கள் . குறிப்பாக வங்கிகள் , விமானங்கள் ,மொபைல் நிறுவனங்கள் ,கம்ப்யூட்டர் ஐ.டி கஸ்டமர் சேவை ,கோரியர்ஸ் ,நலபிரிவு ,கல்வி நிறுவனங்கள் ,உணவு விடுதிகள் , பயண முன் பதிவு போன்ற இலவச தொலைபேசி எண்கள் கீழே .... Airways Toll Free Numbers Air India / Indian Airlines 1800 180 1407 Jet Airways 1800 22 55 22 SpiceJet 1800 180 3333 Automobiles “1-800″ Numbers Mahindra Scorpio 1800 22 6006 Maruti 1800 111 515 Tata Motors 1800 22 5552 Windshield Experts 1800 11 3636 Banks Toll Free Customer Care ABN AMRO 1800 11 2224 Axis Bank 1860 425 8888 Canara Bank 1800 44 6000 Citibank 1800 44 2265 Corporatin Bank 1800 443 555 Development Credit Bank 1800 22 5769 HDFC Bank 1800 227 227 ICICI Bank 1800 333 499 ICICI Bank NRI 1800 22 4848 IDBI Bank 1800 11 6999 Indian Bank 1800 425 1400 ING Vysya 1800 44 9900 Kotak Mahindra Bank 1800 22 6022 Lord Krishna Bank 1800 11 2300 Punjab National Bank 1800 180 2222,1800 122 222 State Bank of India 1800 233 7933,1800 44 1955 Syndicate Bank 1800 44 6655 Mobile Phone Companies Customer Service Numbers BenQ 1800 22 08 08 Bird CellPhones 1800 11 7700 Motorola Customer Care number 1800 3000 4343 Motorola MotoAssist 1800 11 1211 Nokia 1800 425 3388 Samsung 1800 110011 Sony Ericsson 3901 1111 Computers/IT Customer Care Adrenalin 1800 444 445 AMD 1800 425 6664 Apple Computers 1800 444 683 Canon 1800 333 366 Cisco Systems 1800 221 777 Compaq / HP 1800 425 4999, 1800 112 267, 1800 444 999 Data One Broadband 1800 424 1800 Dell 1800 425 9046 1800 444 026 Epson 1800 44 0011 eSys 3970 0011 Genesis Tally Academy 1800 444 888 HP 1800112267 HCL 1800 180 8080 IBM 1800 443 333 Lexmark 1800 22 4477 Marshal’s Point 1800 33 4488 Microsoft 1800 111 100 Microsoft Virus Update 1901 333 334 Quickheal 18002333733 Seagate 1800 180 1104 Symantec 1800 44 5533 TVS Electronics 1800 444 566 WeP Peripherals 1800 44 6446 Wipro 1600 345 3456, 1800 200 3456, 1800 333 312 xerox 1800 180 1225 Zenith 1800 222 004 Couriers/Packers & Movers ABT Courier 1800 44 8585 AFL Wizz 1800 22 9696 Agarwal Packers & Movers 1800 11 4321 Associated Packers P Ltd 1800 21 4560 DHL 1800 111 345 FedEx 1800 22 6161 Goel Packers & Movers 1800 11 3456 UPS 1800 22 7171 Education Edu Plus 1800 444 000 Hindustan College 1800 33 4438 NCERT 1800 11 1265 Vellore Institute of Technology 1800 441 555 Healthcare Best on Health 1800 11 8899 Dr Batras 1800 11 6767 GlaxoSmithKline 1800 22 8797 Johnson & Johnson 1800 22 8111 Kaya Skin Clinic 1800 22 5292 LifeCell 1800 44 5323 Manmar Technologies 1800 33 4420 Pfizer 1800 442 442 Roche Accu-Chek 1800 11 45 46 Rudraksha 1800 21 4708 Varilux Lenses 1800 44 8383 VLCC 1800 33 1262 Home Appliances Haier 1800 200 9999 Aiwa/Sony 1800 11 1188 Anchor Switches 1800 22 7979 Big TV 1800 200 9001 Blue Star 1800 22 2200 Bose Audio 1800 11 2673 Bru Coffee Vending Machines 1800 44 7171 Daikin Air Conditioners 1800 444 222 DishTV 1860 180 3474, 1800 12 3474 Electrolux 1860 200 1212, MTNL / BSNL Users dial – (0124/022) 33001212 Faber Chimneys 1800 21 4595 Godrej 1800 22 5511 Grundfos Pumps 1800 33 4555 IFB 1800 425 5678 (For BSNL and MTNL) Kelvinator 800 419 4040 Kenstar 1800 419 40 40 LG 1800 180 9999 ONIDA 1800 300 99000 Philips 18601801111 1800 22 4422 Philips (LCD, LED, TFT) 18004256396 Samsung 1800 113 444 Sanyo 1800 11 0101 Sharp 1800 4254 322 Sony 1800 103 7799 TCL 1800 102 5060 Voltas 1800 33 4546 WorldSpace Satellite Radio 1800 44 5432 Hotel Reservations GRT Grand 1800 44 5500 InterContinental Hotels Group 1800 111 000 Marriott 1800 22 0044 Sarovar Park Plaza 1800 111 222 Taj Holidays 1800 111 825 Insurance AMP Sanmar 1800 44 2200 Aviva 1800 33 2244 Bajaj Allianz 1800 22 5858 Chola MS General Insurance 1800 44 5544 HDFC Standard Life 1800 227 227 LIC 1800 22 4077, 1800 33 4433 Max New York Life 1800 33 5577 Royal Sundaram 1800 33 8899 SBI Life Insurance 1800 22 9090 Mattresses Kurl-on 1800 44 0404 Sleepwell 1800 11 2266 Investments/Finance CAMS 1800 44 2267 Chola Mutual Fund 1800 22 2300 Fidelity Investments 1800 180 8000 Franklin Templeton Fund 1800 425 4255 J M Morgan Stanley 1800 22 0004 Kotak Mutual Fund 1800 222 626 LIC Housing Finance 1800 44 0005 SBI Mutual Fund 1800 22 3040 Sharekhan 1800 22 7500 Tata Mutual Fund 1800 22 0101 Paints Asian Paints Home Solutions 1800 22 5678 Berger Paints Home Decor 1800 33 8800 Teleshopping Asian Sky Shop 1800 22 1800 Jaipan Teleshoppe 1800 11 5225 Tele Brands 1800 11 8000 VMI Teleshopping 1800 447 777 WWS Teleshopping 1800 220 777 Travel Club Mahindra Holidays 1800 33 4539 Cox & Kings 1800 22 1235 God TV Tours 1800 442 777 Kerala Tourism 1800 444 747 Kumarakom Lake Resort 1800 44 5030 Raj Travels & Tours 1800 22 9900 Sita Tours 1800 111 911 SOTC Tours 1800 22 3344 UPS APC 1800 44 4272 Numeric 1800 44 3266 Others Consumer Helpline 1800 11 4000 L’Oreal, GARNIeR 1800 223 000 KONE Elevator 1800 444 666 Indane 1800 44 51 15 Aavin 1800 44 3300 Pedigree 1800 11 2121 Kodak India 1800 22 8877 Domino’s Pizza 1800 111 123 World Vision India 1800 444 550 Telecom Monitoring Cell 1800 110 420 Bsnl(cdma) 1800 233 1500 Bsnl 1800 180 1800

C L.

Tuesday, 16 September 2014 அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதற் கான விதிகள் 1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக் கலாம். 2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக் கும்போது, இயற்கை சீற்றம், தேசிய தலை வர் மரணம், பந்த், பண்டிகை, திடீர் விடுமு றை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10க்கு மேற் பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்க லாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93) 3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலா து. 4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற் கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில் லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ). 5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI ) 6. தகுதிகாண்பருவம் முடித்தவர்- நிரந்தர பணியாளர் ஆண்டு துவக் கத்திலேயே பணி நிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற் செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்தி லேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83) 7. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும். 8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்துவிட்டு பின்னர் இதற்கான விண் ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)

Tuesday 2 September 2014

Sep diary

SEPTEMBER DIARY Sep 5-Teachers day Sep 6-Pri CRC Sep 10,11,12-Up Pri Maths Trg Sep(22-26)-Ist Term Exam Sep 27-Oct 5-Holidays Oct 6-School Reopen

Tuesday 12 August 2014

மருத்துவ குறிப்பு.

இயற்கை மருத்துவ குறிப்புகள் * கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம். • வயலட் நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய், கருஞ்சிவப்பு நிறமுள்ள பசலைக் கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் அயோடின் சத்து அதிகம் உள்ளது. இவற்றை அதிகமாகக் குழையவிடாமல் சாப்பிட்டு வர சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கிவிடும். • நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும். • மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மத்திய மற்றும் தமிழக SG & BT ஊதியம் நிலவரம்

புதிதாக நியமனம் செய்ய உள்ள பட்டதாரி ஆசிரியர் ஊதியம் 9300+4600+27800+260+100=28160 புதிய இடைநிலை ஆசிரியர் ஊதியம் 5200+2800+750+8750+180+100=17780 ஆனால் மத்தியஅரசு வழங்கியதைப் போல தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியிருந்தால் அவர்கள் பெறும் ஊதியம் 9300+4200+13500+240+100=27340 மாதந்தோறும் இழப்புகளைப் பாருங்கள்! எப்போது பெறப்போகிறோம் நமக்கான ஊதியத்தை? இன்றைய விலைவாசியில் பெரும்கனவுகளோடு அரசுப்பணிக்கு வரும் இடைநிலையாசிரியர் Cps&பிற அரசுப்பிடித்தங்கள் போக கையில் பெறும் ஊதியம் குறைவே இதில் அவசரத் தேவைகளுக்காக Society ல் கடன் பெற்றால் என்ன மிஞ்சும்? இந்த ஊதிய முரண்பாட்டை இப்போதாவது அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று இழந்த ஊதியத்தை மீட்டெடுப்பது எப்போது?விடியப் போவது எப்போது???????

தற்போதைய நியமன ஆசிரியருக்கு ஊதிய நிலவரம்.

புதிதாக நியமனம் செய்ய உள்ள பட்டதாரி ஆசிரியர் ஊதியம் 9300+4600+27800+260+100=28160 புதிய இடைநிலை ஆசிரியர் ஊதியம் 5200+2800+750+8750+180+100=17780 ஆனால் மத்தியஅரசு வழங்கியதைப் போல தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியிருந்தால் அவர்கள் பெறும் ஊதியம் 9300+4200+13500+240+100=27340 மாதந்தோறும் இழப்புகளைப் பாருங்கள்! எப்போது பெறப்போகிறோம் நமக்கான ஊதியத்தை? இன்றைய விலைவாசியில் பெரும்கனவுகளோடு அரசுப்பணிக்கு வரும் இடைநிலையாசிரியர் Cps&பிற அரசுப்பிடித்தங்கள் போக கையில் பெறும் ஊதியம் குறைவே இதில் அவசரத் தேவைகளுக்காக Society ல் கடன் பெற்றால் என்ன மிஞ்சும்? இந்த ஊதிய முரண்பாட்டை இப்போதாவது அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று இழந்த ஊதியத்தை மீட்டெடுப்பது எப்போது?விடியப் போவது எப்போது???????

ATM >

Monday 11 August 2014

கணவனின் எதிர்ப்புகள்...

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? 1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல். 2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல். 3. எப்போதும் சிரித்த முகம். 4. நேரம் பாராது உபசரித்தல். 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும். 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும். 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது. 8. அதிகாரம் பணணக் கூடாது. 9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது. 10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும். 11. கணவனை சந்தேகப்படக் கூடாது. 12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது. 13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும். 14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது. 15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும். 16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும். 17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது. 18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். 19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும். 20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. 21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும். 22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும். 23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும். 24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும். 25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும். 26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது. 27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும். 28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். 29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். 30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும். 31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது. 32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது. 33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.

UPSC 13/2014 apply online..

Union Public Service Commission (UPSC) 13/2014 – Apply Online for 108 Various Vacancies: Union Public Service Commission (UPSC) has issued a notification for the recruitment of 108 Assistant Director, Aeronautical Officers, Legal Officers, Deputy Registrar, Professor, Assistant Engineer, Assistant Drugs Controllers, Specialists, Gr III, Assistant Professors, Superintendent, Assistant Public Prosecutor vacancies in various Departments. Eligible candidates may apply online on or before 28-08-2014 by 23:59 Hrs. For more details like age limit, qualification, selection process, application fee, how to apply are given below… UPSC Vacancy Details: Total No.of Posts: 108  Name of the Posts: 1. Assistant Director: 07 Posts (i) Chemistry: 03 Posts (ii) Plant Pathology: 04 Posts 2. Assistant Director of Air Safety: 04 Posts 3. Aeronautical Officers: 15 Posts 4. Legal Officers: 02 Posts 5. Deputy Registrar: 04 Posts 6. Professor: 01 Post 7. Assistant Engineer: 14 Posts (i) Mechanical Engineering: 11 Posts (ii) Metallurgical Engineering: 03 Posts 8. Assistant Drugs Controllers: 10 Posts 9. Specialists, Grade-III, Assistant Professors: 17 Posts (i) Neurology: 08 Posts (ii) Paediatric Cardiology: 03 Posts (iii) Orthopaedic Surgery (Sports Injury): 06 Posts 10. Superintendent (Legal): 02 Posts 11. Assistant Public Prosecutor: 32 Posts Age Limit: Candidates age limit should be 35 years for Sr.No:1,3,4,5,10 Posts, 40 years for Sr.No:2,8,9 Posts, 50 years for Sr.No:5,6,7 Posts, 30 years for Sr.No: 7,8,11 Posts. Age relaxation will be applicable as per rules. Educational Qualification: Candidates should possess M.Sc in Agricultural Chemistry, Three years experience in relevant field for Sr.No:1(i) Post, M.Sc Degree in Plant Pathology, Three years experience in relevant field for Sr.No:1(ii) Post, Degree in Aeronautical Engineering of a recognized University, 5 years experience in relevant field for Sr.No:2,3 Posts,Degree in Law from a recognized university, Three years experience in relevant field for Sr.No:4,5 Posts, M.Sc Degree in Agriculture Chemistry from a recognized University or Institute, 12 years experience in relevant field for Sr.No:6 Post. For other Posts Qualification refer Notification. Selection Process: Shortlisted candidates will be called for interview. Application Fee: Candidates should pay Rs.25/- only either by remitting the money in any branch of the SBI by cash or by using net banking facility of the SBI or by using visa/ master credit/ debit card.SC/ ST/ PH/ Women candidates are exempted from fee. How to Apply: Eligible candidates may apply online through the website http://upsconline.nic.in/ on or before 28-08-2014 by 23:59 Hrs. Instructions to Apply Online: 1. Before applying online candidates have to scan the copies of photograph & signature. 2. Log on through the website http://upsconline.nic.in/. 3. Click on the “Online Recruitment Application (ORA) for Various Recruitment Posts”. 4. Click on the “New Registration”. 5. Fill the form with all the relevant details & submit the application form. 6. After successful registration, a unique registration ID will be alloted, note down the ID & password. 7. Now fill the personal profile, contact details, age relaxation if applicable. 8. Now fill the details of qualification, experience. 9. Now fill the details of Professional Registration, Language, Miscellaneous Module. 10. Now candidate have to choose the Recruitment Test Centre. 11. Now candidates have to upload documents in Document Upload Module 12. After uploading photograph & signature preview the ORA form and check the details carefully. 13. Now click on the submit button 14. Candidates can Pay Online using the Internet banking facility in SBI or other associated banks or can pay through Visa/ Master Debit or Credit card issued by any Bank/ Institution. 15. Here the Transaction ID & Date of Registration details will directly uploaded automatically. 16. Now pay the fee through cash at any branch of State Bank of India through the Pay-in-Slip 17. A transaction ID will be given, again revisit the website and click on the “Click here to view your Previous/ Currently active applications”. 18. Log in by registration ID & password, candidates can see “My Active Application (My draft Application)” link. 19. Now fill the details of transaction ID and Date of Transaction if paid through cash. 20. Click “Continue”, check the details of fee and submit the application. 21. Now take the printout copies of application attach the attested copies of all documents and keep it for future use. Important Dates:  Last Date to Apply Online: 28-08-2014 by 23:59 Hrs. Last Date to take the printout copies of Applications: 29-08-2014 by 23:59 Hrs. For more details like pay scale, qualification & other information click on the link given below.. Click here for Recruitment Advt Click here to Apply Online Click here for Instructions

Tuesday 22 July 2014

ஆசிரியர் நியமனம் - வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் .

ஆசிரியர் நியமனம் குறித்து தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்; மீனாட்சி சுந்தரம் கல்வி மானியக் கோரிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் அல்லாத 3459 புது ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படு வார்கள் என்று அறிவித்து இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தொடக்கத்தில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதைத்தொடர்ந்து வந்த 5 அமைச்சர்கள், ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு குழப்பமான புள்ளி விவரங்களை அறிவித்தனர்.இப்போது 6வதாக வந்துள்ள அமைச்சர் வீரமணி, கடந்த 3 ஆண்டில் 51 ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் 18 ஆயிரம் ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் அறிவித்தார். ஆனால் பேரவையில் அறிவித்தது வேறு. எனவே ஆசிரியர் நியமனங்கள், நிலை வாரியாக, நிர்வாக வாரியாக மாவட்ட வாரியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லை என்றால் போராட் டம் நடத்தப்படும் Share No comments:

Monday 14 July 2014

employment website.

வேலை வாய்ப்புகளுக்கு இணையதளம் தொடங்கியது மத்திய அரசு!          புதிய வேலைவாய்ப்புகளை அடையாளம் காணவும், திறமையுள்ளவர்களுக்கு வேலை கிடைக்கவும் உதவும் வகையில் மத்திய அரசின் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. www.niesbudnaukri.com என்ற பெயரில் இதை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தொடங்கி வைத்துள்ளார்.           இந்த இணையதளத்தில் வேலைக்கு ஆள் தேவை என நிறுவனங்கள் இலவசமாக தகவல் வெளியிட வழி செய்யப்பட்டுள்ளது.            அதேபோல, வேலை தேடுவோரும் இலவசமாக பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என்றும் அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறினார். சுமார் 150 பிரிவுகளின் கீழ் வேலைவாய்ப்புகள் இந்த இணையதளத்தில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Wednesday 9 July 2014

Monday 7 July 2014

2013-14 trs award proposal

பள்ளிக்கல்வி - 2013-14ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு CLICK HERE-GO.218 SCL EDN DEPT DATED.05.07.2013 - TEACHERS AWARD SELECTION GUIDELINES CLICK HERE-DSE - 2013-14 TEACHERS AWARD PROPOSALS CALLED REG PROC

Sunday 6 July 2014

New CEO list will be published very soon

விரைவில் புதிய சி.இ.ஓ., பட்டியல் கல்விதுறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், விரைவில் புதிய முதன்ைம கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்), அவர்களுக்கு இணையான நிலையில் உள்ள கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், கடந்த மே 31, மற்றும் ஜூன் 30 ல் பணி ஓய்வு பெற்றனர். தற்போது 12 க்கும் மேற்பட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது.இந்த பணியிடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பட்டியல், பணியிட மாற்றம் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் சி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பட்டியல் வெளியிடப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

(EL ) ஈட்டிய விடுப்பு பற்றிய முழு விளக்கங்கள்

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள் * தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.  * பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.  * தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும் (உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10= 170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)  * வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் . *  மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.  * 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும். * வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.  * எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.  * மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த தாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும். CL, RL, தவிர வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.  * ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.  * அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம். மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்ச மாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.  *மாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்குமிடையே குறைந்தது 8 கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5 நாட்கள். 160 கி.மீ க்கு மேற்படின் அட்டவணைப்படி நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்)  *ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கணக்கீட்டிற்கு வசதியாக இருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண் செய்வது சிறந்தது. எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15 நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்க வேண்டும்.  * ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ, ECS ஆகும் தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை.  * EL ஒப்படைப்பு நாளின் போது குறைந்த அளவு அகவிலைப்படியும் பின்னர் முன்தேதியிட்டு DA உயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில் அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து சுதந்தரித்துக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன்தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத் தகுதியுண்டு.  * பணிநிறைவு / இறப்பின் போது இருப்பிலுள்ள EL நாட்களுக்குரிய (அதிகபட்சம் 240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.  * அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம். 180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது 

ICE என்று நமது குடும்பத்தாரின் முக்கிய எண்ணை நமது தொலைபேசியில் பதிவு செய்யவும்.

தயவு செய்து படிக்கவும் மிகவும் முக்கியமான செய்தி.. இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன். நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும், மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்தஎண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது. ஆனால் “ICE” என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும். ICE என்பது In Case of Emergency. இதன் முக்கிய நோக்கம் அவசர நேரங்களில் மக்களை காப்பாற்றுவதாகும். இன்று ஏறத்தாழ அனைவரிடமும் கைபேசி உள்ளநிலையில் இதுசாத்தியமாகும். இந்த முறையானது பாராமெடிக் (PARAMEDIC) ஆல் கொண்டுவரப்பட்டது.. இவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அனைவரிடமும் கைபேசி வைத்திருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இப்படி கைபேசி இருந்தும் ஏன் இவர்கள் குடும்பத்தினர்களுக்கு தகவல் போய் சேரவில்லை என ஆராய்ந்து இந்த முறையை அமல்படுத்தினர். இது நாடுமுழுதும் அங்கீகரிக்கப்பட்டதாகும். ஒன்றுக்கு மேற்ப்பட்ட எண்களை ICE1 , ICE2 , ICE3………….etc எனவும் பதிவு செய்துகொள்ள்ளாம். இன்றே, உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள் இந்த முறையை நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். உங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள்.

Saturday 5 July 2014

DSE உபரி பணியிடம்-மாற்றம் ஆணை

Oபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உபரி பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் மாவட்டத்திற்குள் தேவையுள்ள / காலியாக பணியிடத்திற்கு மாற்றம் செய்து ஆணை வெளியிடப்பட்டது சார்பான தெளிவுரை DSE - SURPLUS SGT / BT REG INSTRUCTIONS CLICK HERE... 

Friday 4 July 2014

ஐடிபிஐ வங்கி.

ஐடிபிஐ வங்கியில் 500 உதவி மேலாளர் பணி ஐடிபிஐ வங்கியல் நிரப்பப்பட உள்ள 500 Assistant Manager பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Assistant Manager காலியிடங்களின் எண்ணிக்கை: 500 காலியிடங்கள் விவரம்: 1. SC - 75 2. ST - 37 3. OBC - 135 4. PWD - 15 5. Others - 238 வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு முறை: 200 மதிப்பெண்கள் கொண்ட தேர்வு. இரண்டு மனி நேரம் நடைபெறும். ஆன்லைன் தேர்வு வினாக்கள் கீழ்கண்டவாறு அமைந்திருக்கும். 1. Reasoning - 50 quiz 2. English Language - 50 quiz 3. Quantitative Aptitude - 50 quiz 4. General Awareness - 50 quiz பயிற்சி மற்றும் உதவித்தொகை: 1. பயிற்சி காலம் (9 மாதங்கள்) மாதம் ரூ. 2500. 2 வேலைவாய்ப்பு காலம் (3 மாதங்கள்) மாதம் ரூ. 10,000. பயிற்சி பின் பணியில்: மாதம் 14,400 - 40,900. விண்ணப்பக் கட்டணம்: 1. பொது பிரிவினருக்கு ரூ.600. 2.SC, ST, PWD பிரிவினருக்கு ரூ.100. விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

Wednesday 18 June 2014

மாவட்டம் மாறுதல தேதி தள்ளிவைப்பு.

தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு.   இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக  30.6.14 & 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ  கலந்தாய்வு 21.6.14 பதிலாக 02.7.14 அன்று  நடைபெறவுள்ளது. DEE - 2014-15 CONDUCT OF ONLINE COUNSELING FOR SG / BT DISTRICT TRANSFER REG PROC CLICK HERE... DEE - DISTRICT TRANSFER APPLICATION CLICK HERE... DEE - ZONE LIST - 1 CLICK HERE... DEE - ZONE LIST - 2 CLICK HERE...

Monday 16 June 2014

தமிழ்பபல்கலைகழகம் ்b,ed

தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சை -2014-2015 பி.எட் சேர்க்கைகான விண்ணப்படிவம்

விதவை/திருமணமாகாத மகளுக்கு ஒய்வூதியம்

ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத/ விவாகரத்தான/விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து தெளிவுரை வழங்குவது- தொடர்பாக click here to download the Govt. Letter No. 43105 Dt: December 02, 2013 - Pensions - Government Employees' Unmarried / Divorced / Widowed Daughters to Provide Clarity with regard to Providing a Lifetime of Family Pension

Wednesday 11 June 2014

பழமொழியின் உண்மை பொருள் .

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... தப்புங்க தப்பு,,, ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்.... இதுவும் தப்பு சரியானது என்னன்னா ........... படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...

3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்... இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை ) ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .... சூடு அல்ல சுவடு... சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது... ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்.... அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.... வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி விட்டோம் ... காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்... மாறுவோம்...பிறரை மாற்றுவோம் .

Tuesday 10 June 2014

வழக்கு அவமதிப்பு.

ஆசிரியர் இடமாற்ற வழக்கு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பது இல்லை நீதிமன்றத்தை அதிகாரிகள் மதிக்காதது வேதனை அளிக்கிறது என்று உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் தேர்வு வாரி யம் மூலம் நான் உள்பட சுமார் 100 பேர், ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டோம். 2006ல் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.இந்த 3 மாவட்டங்களில் சுமார் 280 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சிறுபான்மையினர் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த துறையின் கீழ் இயங்கும் பள்ளியில் பணியாற்றும் எங்களை, மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். இந்த மனுவை நீதிபதி கிருபாகரன் விசாரித்து, எங்களை வேறு மாவட்ட அரசு பள்ளிக்கு மாற்ற பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை அமல்படுத்தாததால் அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து எங்களுக்கு இடமாற்றம் வழங்க உத்தரவிட்டது. அதன்பிறகும் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே உயர் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி கிருபாகரன் விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு:‘‘உயர் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இப்படி அதிகாரிகள் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், மக்களிடம் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும். நீதி நிர்வாகத்தில் குறுக்கீடு செய்வது போலாகிவிடும். அதிகாரிகள் கோர்ட் உத்தரவை மதிப்பது இல்லை. இதை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதி பரிபாலனம் சரியாக செய்ய முடியாது. அதிகாரிகள் செயல் நீதித்துறைக்கு ஆபத்தாகவிடும். எனவே வரும் 23ம் தேதி பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரன் முருகன், பிற்பட்டோர் நலத்துறை ஆணை யர் அசோக் டோங்க்ரே ஐ.ஏ.எஸ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை புதுடில்லி: மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு, மாற்றுத்திறனாளி குழந்தை இருந்தால், அந்தக் குழந்தைக்காக அவர், அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவரை இடமாற்றம் செய்தால், குழந்தையின் மறுவாழ்வு நடவடிக்கைகள் பாதிக்கும். மாற்றுத்திறனாளி குழந்தைகளை கவனிக்க, அதிக செலவாகும். அத்தகைய ஊழியர்களுக்கு, வழக்கமான இடமாற்றத்தில் இருந்து விதி விலக்கு அளிக்கலாம். அவர்கள் இடமாற்றத்தை ஏற்க மறுத்தால், அவர்களிடம் தானாக முன்வந்து பதவி விலகி விடும்படி கேட்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, மத்திய பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது. suresh v

M.b.b.s/b.d.s randam numbee

Know Your Random Number-M.B.B.S. / B.D.S. Courses 2014-15 Session CLICK HERE-Know Your Random Number

Transfer application

Transfer application.

தொடக்கக்கல்வி துறை ஆசிரியருக்கான பதவியுயரவு/ பணிமாறுதல்

அரசாணை 137/ப.க/நாள்:9.6.14 இன் படி தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விவரம்: ஜூன் 18 காலை BT பணிநிரவல் மாலை மாறுதல், பதவி உயர்வு மாறுதல் பதவிஉயர்வு கலந்தாய்வு: (அரசாணை 137/ப.க/நாள்:9.6.14) விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.14-13.6.14 ஜூன் 16 காலை AEEOs மாறுதல் ஜூன் 16 மாலை MHM to AEEO ஜூன் 17 காலை MHM மாறுதல் மாலை பதவிஉயர்வு ஜூன் 18 காலை BT பணிநிரவல் மாலை மாறுதல், பதவி உயர்வு ஜூன் 19 BT ஒன்றியம் விட்டு மாறுதல் ஜூன் 21 BT மாவட்ட மாறுதல் ஜூன் 23 காலை PHM மாறுதல் மாலை பதவி உயர்வு ஜூன் 24 இநிஆ பணிநிரவல் ஜூன் 25 இநிஆ மாறுதல் ஜூன் 26 SGT ஒன்றிய மாறுதல் ஜூன் 28 SGT மாவட்ட மாறுதல்

Sunday 8 June 2014

தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலைகழகம் பி.எட்படிப்பு விண்ணப்பம்

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பி.எட். படிப்பு நாளை முதல் விண்ணப்பம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி

மத்திய அரசு ஊழியர்களுக்குஆறு நாட்கள் வேலையாட்கள

June 8, 2014 மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வேலை: விரைவில் அமல்? › வாரத்தில், ஐந்து நாட்கள் மட்டுமே வேலைபார்த்து வந்த, மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையி...

Saturday 7 June 2014

எம்.எஸ.சி்இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி க்கு பட்டதாரி பணி.

எம்.எஸ்.சி இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்கு வேதியியல் பாடப்பிரிவு பட்டதாரி ஆசிரியர் பணி உயர் நீதிமன்றத்தில் இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் படிப்பை முடித்த திருவருட்செல்வன், மதிவாணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் பாடப்பிரிவில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி யிடத்துக்கு நாங்கள் விண்ணப்பம் செய்தோம். நாங்கள் இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி பாடப்பிரிவில் எம்எஸ்சி படித்துள்ளோம். எம்எஸ்சி வேதியியல் படித்தவர்களுக்கு மட்டும்தான் வேதியியல் பாடப்பிரிவில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று கூறி எங்களுக்கு பணி வழங்கவில்லை. கடந்த 20102011ல் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் எங்களின் பாடப்பிரிவைக் காட்டி எங்களுக்கு பணி வழங்கவில்லை. எனவே, எங்களுக்கு பணி வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார் பில் ஆஜரான கே.வெங்கடரமணி வாதிடும்போது, பாரதியார்பல்கலைக்கழகத்தில் உள்ள எம்எஸ்சி இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி பாடப்பிரிவும் எம்எஸ்சி வேதியியல் பாடப்பிரிவும் சமமானது தான் என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் மனுதாரர்கள் இருவரும் அதே பிரச்னையில்தான் உள்ளனர் என்றார். இதையடுத்து, நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரர்கள் இருவரும் படித்த எம்எஸ்சி இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி படிப்பும், எம்எஸ்சி வேதியியல் படிப்பும் சமமானதுதான் என்றும் இரு பிரிவுகளில் படித்தவர் களுக்கான கல்வித் தகுதியும் ஒன்று தான் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது. எனவே, இந்த வழக்கில் மனுதாரர்கள் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் பாடப்பிரிவில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற தகுதியுள்ளவர்கள்தான். எனவே, அவர்களுக்கு பணி வழங்குவது குறித்து 8 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆலயத்தில கடைப்பிடிக்க வேண்டியவை.

திருக்கோயிலில் செய்த்தகாதவை எவை? 01. குளிக்காமல் ஆலயத்திற்குச் செல்வது. 02. உலராத ஈர உடையுடன் செல்வது. 03. தலையில் தொப்பி, தலைப்பாகையுடன் செல்வது. 04. சுவாமிக்குக் காலை நீட்டி உட்காருதல். 05. சுவாமிகளைத் தொட்டு வணங்குதல். 06. லௌகீக சம்பந்தமான உரையாடல்கள், வீண் பேச்சுக்கள். 07. கோயிலின் உள்ளும் புறமும் அசுத்தம் செய்தல். 08. தீபாராதனை நிகழும் போது எதிர் மறைத்தல். 09. தீபாராதனை நிகழும் போது விழுந்து வணங்குதல். 10. அபிஷேகம் நடக்கும் போது வரம் கேட்டல். 11. சுவாமிகள் எண்ணைக்காப்பு அணிந்து இருக்கும் போது வரம் கேட்டல். 12. வீபூதி மற்றும் பிரசாதங்களை பூமியில் சிந்துதல். 13. மற்ற பக்தர்களுக்கு இடையூறு செய்தல். 14.மனத்தை ஒருமுகப்படுத்தாமல் அலையவிடுதல்.

கல்வித்துறையில் சீர்திருத்தம். தேவை

கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 1 பள்ளிக் கல்வியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப் பள்ளிகள், 1 முதல் 8 வகுப்புகளைக் கொண்ட நடுநிலைப் பள்ளிகள், 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட உயர்நிலைப் பள்ளிகள், 6 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட மேல்நிலைப் பள்ளிகள் என நான்கு வகையான பள்ளிகள் உள்ளன. அவற்றை 1. 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப் பள்ளிகள் 2. 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட உயர்நிலைப் பள்ளிகள் 3. 11 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட மேல்நிலைப் பள்ளிகள் என மூன்று வகையான பள்ளிகள் மட்டுமே உள்ளவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களும், மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களும் பணியாற்றும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஒன்றிய அளவில் தொடக்கப் பள்ளிகள் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் [AEEO - Elementary] அவர்களாலும், மாவட்ட அளவில் தொடக்கப் பள்ளிகள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் [DEEO - Elementary] அவர்களாலும், மாவட்ட அளவில் உயர்நிலைப் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் (உயர்நிலை) [DEO - Secondary] அவர்களாலும், மாவட்ட அளவில் மேல்நிலைப் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் (மேல்நிலை) [DEO - Higher Secondary] அவர்களாலும் நிர்வகிக்கப்பட வேண்டும். சுமார் 75 பள்ளிகளுக்கு ஒரு மாவட்டக் கல்வி அலுவலர் என்ற வகையில் கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இது பள்ளிகளைத் திறம்பட நிர்வகி்க்கவும், பள்ளிகளின் தரத்தைப் பார்வையிடவும், மாணவர்கள்களின் கற்றல் அடைவினை மேம்படுத்தவும், மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தினை உயர்தவும் உதவியாக இருக்கும். மாவட்ட அளவில் அனைத்து வகைப் பள்ளிகளும் முதன்மைக் கல்வி அலுவலர் [CEO] அவர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். மாநில அளவில் தொடக்கப் பள்ளிகள் தொடக்கக் கல்வி இயக்குநர் [Director - Elementary] அவர்களாலும், மாநில அளவில் உயர்நிலைப் பள்ளிகள் உயர்நிலைக் கல்வி இயக்குநர் [Director - Secondary] அவர்களாலும், மாநில அளவில் மேல்நிலைப் பள்ளிகள் மேல்நிலைக் கல்வி இயக்குநர் [Director - Higher Secondary] அவர்களாலும் நிர்வகிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தொடக்கப் பள்ளியும் [மாணவர்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு] குறைந்தது மூன்று இடைநிலை ஆசிரியர், ஒரு தமிழாசிரியர் பணியிடங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியும் [மாணவர்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு] குறைந்தது ஐந்து பட்டதாரி ஆசிரியர், ஒரு தமிழாசிரியர், ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு இளநிலை உதவியாளர், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு இரவுக்காவலர் பணியிடங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியும் [மாணவர்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு] குறைந்தது ஆறு முதுகலை பட்டதாரி ஆசிரியர், ஒரு உடற்கல்வி இயக்குநர், ஒரு உதவியாளர், ஒரு ஆய்வக உதவியாளர், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு இரவுக்காவலர் பணியிடங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

பெயரில் தமிழில் தலையெழுத்து.

DEE.14109/j2/2014 dt.06.06.2014 Dir ordered Govt Staffs and Teachers - Initial of their names must be written in Tamil- reg

தலைமை ஆசிரியர் கூட்டம்.

மழை நீர சேகரிப்பு வாரம். கொண்டாடுவது தொடர்பாக தமிழகத்தில் அனைத்து ஒன்றியங்களிலும தலைமையாசிரியர் கூட்டம்  இந்த வாரம் நடைபெறும்
மழை நீர் சேகரிப்புக்குறித்து தலைமையாசிரியர் கூட்டத்தில். வலியுறுத்தப்படும்.

தலைமையாசிரியர்க்கு நோட்டிஸ்

இலவச நோட்டு, புத்தகம் வினியோகம்: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' சிவகங்கையில், இலவச நோட்டு, புத்தகம் வினியோகம் தொடர்பாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டார். நடப்பு கல்வியாண்டு கோடை விடு முறைக்கு பின், ஜூன் 2ந்தேதி பள்ளிகள் திறக்கும் போது, மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டது. இதன்படி, நோட்டு, புத்தகம், காலணி, பை உள்ளிட்ட நலத்திட்டங்கள் மாணவர்கள் வழங்கப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய இரு மாவட்டத்திற்கு ஒரு இணை இயக்குனர் வீதம் பள்ளிக்கல்வித்துறை நியமித்தது. ஜூன் 2ல் குறிப்பிட்ட சில பள்ளிகளில் காலை முதலே இணை இயக்குனர்கள் ஆய்வு செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இடைநிலைக்கல்வி இணை இயக்குனர் முத்து பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது, இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கியது குறித்து, உறுதி செய்வதற்கான மாணவர்களின் கையெழுத்து பெறவில்லை என்பது தெரிய வந்தது. இந்நிலையில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கருதி, அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, இணை இயக்குனர் உத்தரவிட்டார். முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அவருக்கு விளக்க 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர். அவரது பதிலை பொறுத்து, அவர் மீதான நடவடிக்கை தெரிய வரும் என, சிவகங்கை கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

மழை நீர் சேகரிப்பு.வாரம்

பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு வாரம்: பள்ளி கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை பள்ளி கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 'அனைத்து வகை பள்ளிகளிலும், மழைநீர் சேகரிப்பு வாரம் கொண்டாட வேண்டும்' என, முதல்வர், உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஜூன் 9 முதல், 13 வரை, 6 முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரிடையே, மழைநீர் சேகரிப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும். வரும், 9ம் தேதி, பள்ளி அளவில், மழைநீர் சேகரிப்பு, விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள பகுதியில், பேரணி நடத்த வேண்டும். ஜூன் 10 ல், 'மழைநீர் சேகரிப்பு, வளமான எதிர்காலம்' என்ற தலைப்பில், கட்டுரை போட்டியும், ஜூன் 11 ல், ஓவிய போட்டியும், ஜூன்13 ல் மாணவர்களை, 'புராஜக்ட்' செய்யவும், அறிவுறுத்த வேண்டும். மாவட்ட அளவில், 13ம் தேதி, கண்காட்சி நடத்த வேண்டும். சிறந்த படைப்புகளுக்கு, பரிசு வழங்க வேண்டும், என்றார்.

தமிழில் தலையெழுத்து( initial in tamil) போட உத்மரவ

அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை (Initial) தமிழில் மட்டுமே எழுத தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு.

Wednesday 4 June 2014

இலங்கை பிரதமரின் தற்போதைய பரிதாபநிலை.

கழுகார் பதில்கள்! ராஜபக்ஷேவின் டெல்லி வருகையை எதிர்த்து, டெல்லி சென்று வைகோ போராட்டம் நடத்தினாரே... அதன் பயன் என்ன? 'ராஜபக்ஷே இந்தியாவுக்கு எப்போது வந்தாலும் கறுப்புக் கொடி காட்டப்படும்’ என்று வைகோ அறிவித்து இருந்தார். அதன்படி இந்தப் போராட்டமும் நடத்தப்பட்டு இருக்கிறது. 'சார்க் நாடுகளின் அனைத்து தலைவர்களையும் அழைக்கிறோம்’ என்று மத்திய அரசு அதிகாரிகள் இதற்குக் காரணம் சொன்னார்கள். இந்த எதிர்ப்புகள் காரணமாக ராஜபக்ஷேவின் வருகையைத் தடுக்க முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு மறுதினம் ராஜபக்ஷே உள்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை கடைசி நேரத்தில் பிரதமர் மோடி, ரத்து செய்துவிட்டார். 'செக்யூரிட்டி காரணங்களுக்காக இந்த விருந்து கேன்சல் செய்யப்படுகிறது’ என்று சொல்லப்பட்டது. உண்மையான காரணம், 'இப்படி ஒரு விருந்து நடப்பது விமர்சனங்களை இன்னும் அதிகமாக்கும்’ என்று அவர் நினைத்ததாக டெல்லி அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு இருக்கிறது. வைகோ, பழ.நெடுமாறன், சீமான், வேல்முருகன், ம.க.இ.க மற்றும் பல்வேறு இயக்கத்தினர் நடத்திய எதிர்ப்புப் போராட்டங்கள், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை, கருணாநிதி வெளியிட்ட கருத்து... 'ஈழப்பிரச்னையை பக்குவமாகக் கையாள வேண்டும்’ என்பதை மத்திய அரசுக்கு உணர்த்தியிருக்கிறது.

ஆசிரியர் பயிற்சி குஜராத் பின்பற்ற மத்திய அரசு முடிவு.

ஆசிரியர் பயிற்சி முறையில் குஜராத் மாடல் அமலாகிறது நாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி முறையில், குஜராத் மாதிரியைப் பின்பற்ற, மத்திய மனித வளத்துறை முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பயிற்சி முறை, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. பொதுவாக, குறிப்பிட்ட, ஓராண்டோ அல்லது இரண்டு ஆண்டுகளோ பயிற்சி பெறும் மாணவர்கள், ஆசிரியர்களாக தேர்ச்சி பெற்று, பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கின்றனர். ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த பிறகு அவர்கள், பெரிய அளவில் ஆசிரியர் பயிற்சி பெறுவதில்லை. இந்த முறை குஜராத்தில் கிடையாது. ஆசிரியராக இருப்ப வர்கள், மாதம் ஒருமுறை அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக, தகவல், தொழில்நுட்பம், அறிவியல், சட்டம் போன்ற பாடப் பிரிவுகளில் தொடர்ந்து பயிற்சி பெற்று வர வேண்டும். குஜராத்தில் பின்பற்றப்படும் இந்த முறையை, நாடு முழுவதும் அமல்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி முடிவு செய்துள்ளார். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை.

புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை தொடர்பாக அரசாணையை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த முறையுடன் ஒப்பிடும்போது இந்தப் புதிய முறையில் ஒவ்வொரு மதிப்பெண் சதவீதத்துக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அடுத்த 2 வாரங்களில் இந்த ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று 29 ஆயிரம் பேரும், 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு 45 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவடைந்த நிலையில், பழைய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை ரத்து செய்யப்பட்டதால் தேர்வுப் பட்டியல் வெளியிடுவது தாமதமாகி வந்தது. இப்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 74 ஆயிரம் பேரில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம்: இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. இதில் மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். அதேபோல், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், பட்டப் படிப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படும். இதில் மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் இருக்கும். முந்தைய முறையில் குறிப்பிட்ட சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவருக்கும் ஒரே வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்தப் புதிய முறையில் ஒவ்வொரு சதவீத மதிப்பெண்ணுக்கும் ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண் கிடைக்கும் வகையில் மதிப்பிடும் முறை மாற்றப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஒரே வெயிட்டேஜ் மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களின் பிறந்த தேதி தேதி அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றம் என்ன? ஏற்கெனவே இருந்த வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக இருந்தது. இதில் பிளஸ் 2 தேர்வில் 90 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் 15 மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய முறையில் 91 சதவீத மதிப்பெண் பெற்றவருக்கு 13.65 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 92 சதவீத மதிப்பெண் பெற்றவருக்கு 13.80 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 93 சதவீத மதிப்பெண் பெற்றவருக்கு 13.95 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் கிடைக்கும். அதேபோல், பழைய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீதத்துக்குக் கீழ் மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படவில்லை. இந்தப் புதிய முறையில் அவர்களுக்கு 7.5 வெயிட்டேஜ் மதிப்பெண் கிடைக்கும்.

Thursday 29 May 2014

Ignou term exam start from June 2nd.

இக்னோ பருவத்தேர்வுகள் ஜூன் 2-ல் துவக்கம் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்(இக்னோ) பருவத் தேர்வுகள் ஜூன் 2-ம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக, மதுரை மண்டல மைய இயக்குநர் எஸ்.மோகனன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பது: மதுரை மண்டலத்தில் 2,500 மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர். ஜூன் 2014 பருவத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இக்னோ இணையதளத்தில்(www.ignou.ac.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள், தங்களுக்குரிய நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான தேர்வு மையங்கள் மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், உத்தமபாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், தங்களுக்கான இக்னோ அடையாள அட்டையுடன் தேர்வுக்கு செல்ல வேண்டும். தேர்வு அறைக்குள் கைபேசி கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பிசிஏ, எம்சிஏ படிக்கும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஜூன் மாத இறுதியில் அனுப்பப்படும். தேர்வு மற்றும் நுழைவுச்சீட்டு சம்பந்தமான விளக்கங்களுக்கு மாணவர்கள் மதுரை மண்டல மையத்தினை 0452-2370733, 2380733 ஆகிய தொலைபேசி எண்களிலும்,remadurai@ignou.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

பிறந்த தேதி திருத்தம்.

பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி? ===================================================== பள்ளி / கல்லூரி சான்றிதழ்களில் பிறந்த தேதியோ, வருடமோ, மாதமோ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தந்தஎ ல்லைக்குட்பட்ட சிவில் (முன்சீஃப்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு » அனைத்திந்திய ஆசிரியர் பேரவை: பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?

UPSC சலுகை.

இந்த ஆண்டு ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வயது வரம்பு மற்றும் வாய்ப்புகளில் பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டுகள் சலுகை வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்பட 24 விதமான அரசு உயர் அதிகாரிகளை நேரடியாகத் தேர்வு செய்வதற்காக ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் இந்தத் தேர்வை எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப் படுகிறது. பொதுப்பிரிவினர் 4 முறையும் (அட்டெம்ட்), ஓபிசி வகுப் பினர் 7 தடவையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயது வரை எத்தனை தடவை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். வயது வரம்பு, வாய்ப்புகளில் சலுகை இந்நிலையில், நடப்பு ஆண்டு அறிவிக்கப்பட உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வில் அதிரடி மாற்றங் கள் கொண்டுவரப்பட உள்ளன. அதன்படி, பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் கூடுதலாக 2 வாய்ப்புகளும், வயது வரம்பில் கூடுதலாக 2 ஆண்டுகளும் சலுகை வழங்க யூபிஎஸ்சி முடிவு செய்துள்ளது. இதன்மூலம், பொதுப்பிரிவினர் 32 வயதுவரை ஐஏஎஸ் தேர்வு எழுதலாம். அத்துடன் அவர்கள் 6 முறை முயற்சி செய்யலாம். அதேபோல், ஓபிசி வகுப்பினர் 35 வயதுவரை ஐஏஎஸ் தேர்வு எழுத முடிவதுடன் 9 முறை முயற்சிக்கலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் 37 வயது வரை சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத முடியும். கூடுதலாக 2 வாய்ப்புகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மே 31-ல் தேர்வு அறிவிப்பு மேற்கண்ட மாற்றங்கள் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தேர்வு தொடர்பான அறிவிப்பு மே 31-ம் தேதி வெளியிடப்படுகிறது. தேர்வு முறையிலோ, தேர்வுக்கான பாடத்திட்டத்திலோ எவ்வித மாற்றமும் இல்லை என்று யூபிஎஸ்சி அறிவித்துள்ளது. தற்போது முதல்நிலைத் தேர்வு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக கோவையிலும் முதல்நிலைத்தேர்வு மையம் அமைக்கப்படும் என்று முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்திருந்தது. கோவை மையம் இடம்பெறுமா, இல்லையா என்பது மே 31-ம் தேதி வெளியிடப்படும் தேர்வு அறிவிக்கையில்தான் தெரியும். கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதம் சிவில் சர்வீசஸ் தேர்வில் கூடுதலாக 2 வாய்ப்புகள் மற்றும் 2 ஆண்டு வயது வரம்பு சலுகை அளிக்கப்படுவது குறித்து தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மைய இணை பேராசிரியை பி.பிரேம்கலா ராணி கூறியதாவது: அனைத்து வகுப்பினருக்கும் கூடுதலாக 2 வாய்ப்புகளும், 2 ஆண்டு வயது வரம்பு சலுகைகளும் அளிக்கப்படுவதால் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் குறிப்பாக விளம்பு நிலையில் இருப்பவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவர். இன்னும் ஒரு வாய்ப்பு இருந்தால் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த வாய்ப்புகள் பெரும் வரப்பிரசாத மாக இருக்கும். அதேபோல், சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்து தாமதமாக விழிப்புணர்வு கிடைக்கப் பெற்று, தேர்வுக்கு படித்து வரும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கும் இந்தச் சலுகைகள் பெரும் வாய்ப்பாக இருக்கும். இவ்வாறு பிரேம்கலா ராணி கூறினார். திடீர் மாற்றத்துக்கு காரணம் சென்னை ஷங்கர் ஐ.ஏ.எஸ். அகடமி இயக்குநர் டி.சங்கர் கூறியதாவது: கடந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தனர். 2 விருப்பப் பாடங்கள் என்பது ஒன்றாக குறைக்கப்பட்டு பொது அறிவுத்தாள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கப்பட்டது. ஏற்கெனவே, தொடர்ந்து பல பழைய தேர்வுத் திட்டத்தில் படித்துவந்த மாணவர்களுக்கு மெயின் தேர்வில் செய்யப்பட்ட திடீர் மாற்றங்களை எதிர்கொள்ள சிரமமாக இருந்தது. இதைச் சமாளிக்கும் வகையில் தேர்வெழுத கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதுடன், வயது வரம்பையும் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்று அனைத்து வகுப்பினருக்கும் கூடுதலாக 2 வாய்ப்புகளும், 2 ஆண்டு வயது வரம்பு சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதனால், தற்போது கடைசி வாய்ப்பு, வயது வரம்பில் கடைசி நிலையிலும் இருக்கும் மாணவர்கள் குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன்பெறுவர். கிராமப்புற இளைஞர்களுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய விழிப்புணர்வு தாமதமாக ஏற்படுவதால், தற்போது அளிக்கப்படும் சலுகைகள் அவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இவ்வாறு சங்கர் கூறினார்.

2/6/2014 அனைத்து பள்ளிகளும் திறப்பு.

அனைத்து பள்ளிகளும் 2/6/2014 அன்று திறக்கப்படும் .அன்றே மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என் பள்ளிகல்வித் துறை அறிவிப்பு.

no BT promotion for this yr

Tuesday 27 May 2014

பாடப் புத்தகம்

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பாடப்புத்தகங்கள் பார்த்துப் பயன்பெற... http://www.textbooksonline.tn.nic.in/ Government of Tamil Nadu, India - Textbooks Online

Sunday 18 May 2014

usefull website for students.

May 18, 2014 மாணவர்களுக்கு பயன் தரும் இணையதளங்கள்..... 1. http://www.textbooksonline.tn.nic.in/ இதனை தமிழக அரசின் கல்வி அமைச்சகம் இதனை உருவாக்கியுள்ளது.இதிலே 12 ம் வகுப்பு வரை தமிழ்,அறிவியல்,கணக்கு என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. 2. http://www.alfy.com/  இதில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், மற்றும் நிறம்தீட்டுதல் வீடியோ கிளிப்ஸ் என விளையாட்டுடன் கற்றலை மேம்படுத்துகிறது இத்தளம். 3. http://www.coolmath4kids.com/ இத்தளம் குழந்தைகளின் கணித அறிவு ஆற்றலை விளையாட்டுடன் கற்றுத் தருகின்றது. 4. http://kids.yahoo.com/ இது குழந்தைகளுக்காக யாஹூ நிறுவனத்தின் படைப்பாகும். 5. http://kalvimalar.dinamalar.com/tamil/default.asp  இது தினமலர் நாளிதழின் கல்விக்கானப் படைப்பாகும் இதிலே மாணவர்களுக்கானத் தகவல்கள் குவிந்து இருக்கின்றன. 6. http://www.educationatlas.com/ படிக்கும் திறனைச் சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல்,உங்களுடைய தனிப்பட்டப் படிக்கும் திறன் குறித்து அறிந்து கொள்ளுதல் அவற்றினை மேம்படுத்துதல் போன்றவற்றினை இத்தளம் சிறப்பாகக் கூறுகின்றது. 7. http://www.learn-english-online.org/LessonA/LessonA.htm ஆங்கில அறிவினை ஆரம்பத்தில் இருந்தே வளர்த்துக் கொள்வதற்கானத் தளம். 8. http://www.tamilnotes.com/ தமிழ் இலக்கண அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இணையம் Admin Share ‹ › Home View web version Powered by Blogger

Thursday 15 May 2014

cps ,,,எண் பெற்றபின்னர் சம்பளம்.

புதிதாக சேர்ந்த அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் தேனி: தமிழக அரசு ஊழியர்களுக்கு,பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், கடந்த 2003 ஏப்ரல் மாதம் முதல் அமலில் உள்ளது. இந்த ஆண்டிற்கு பிறகு, பணியில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்கள், மற்றும் பணி வரன் முறை பெறாத அரசு ஊழியர்கள், சென்னையில் உள்ள தகவல் தொகுப்பு மையத்தில், ஊழியர் பெயரில், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண், பெற்றிருக்க வேண்டும். இந்த எண் பெறவில்லை என்றால், புதிய பென்ஷன் திட்டத்திற்காக, அடிப்படை சம்பளத்தில் இருந்து, பணம் பிடித்தம் செய்ய முடியாது. எனவே, இந்த எண் பெறாத அரசு ஊழியர்களுக்கு, ஜூன் மாதம் முதல் சம்பளம், நிறுத்தி வைக்க வேண்டும், என நிதித் துறை பென்ஷன் பிரிவில் இருந்து, அனைத்து கருவூல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் கருணை அடிப்படையில், பணிக்கு சேர்ந்தவர்கள் குறித்து, எந்த விதக் குறிப்புகளும் இல்லை. எனவே, பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண் பெறாத, அரசு ஊழியர்களுக்கு ஜூன் மாதம் முதல் சம்பளம் கிடைக்காது.-

குடும்ப ஒயவூதியம்

குடும்ப ஓய்வூதியத்தில் 2-வது மனைவிக்கும் பங்கு உண்டு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், 2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு கணவரின் குடும்ப ஓய்வூதியத்தில் பாதியைப் பெறுவதற்கு உரிமை உண்டு என உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. கன்னியாகுமரி-கீழகல்குறிச் சியைச் சேர்ந்த விசாலாட்சியம்மாள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் ஸ்தானுத்தான் தம்பிக்கும் எனக்கும் 1958-ல் திருமணம் நடைபெற்றது. 2 மகள்கள் உள்ளனர். முதன்மைக் கல்வி அதிகாரியான எனது கணவர் என்னை விவாகரத்து செய்யாமலேயே 1965-ம் ஆண்டு வசந்தகுமாரி தங்கச்சி என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். என் கணவர் 2012 செப். 13-ம் தேதி இறந்தார். அவரின் இறப்புக்குப் பிறகு வசந்தகுமாரிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது. என்னை விவாகரத்து செய்யாத நிலையில் குடும்ப ஓய்வூதியம் பெற 2-வது மனைவிக்கு சட்டப்படி உரிமை கிடையாது. எனவே, எனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன் பிறப்பித்த உத்தரவு: திருமணம் செய்யாமலும், வசந்தகுமாரியும், ஸ்தானுத்தான் தம்பியும் 47 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். பாசம் காரணமாக வசந்தகுமாரியை வாரிசுதாரராக நியமித்துள்ளார். அவருக்கும் குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. இறந்தவரின் குடும்ப ஓய்வூதியத்தை அவர் மனைவிக்கும், அவருடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணுக்கும் பிரித்து வழங்கலாம். கணவன் இறந்த பிறகு மனைவி சௌகரியமாக வாழவே குடும்ப ஓய்வூதியம் தரப்படுகிறது. இந்த வழக்கில் குடும்ப ஓய்வூதியத்தை மனுதாரருக்கும், வசந்தகுமாரி தங்கச்சிக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்க வேண்டும். யாராவது ஒருவர் இறந்துவிட்டால் உயிருடன் இருப்பவருக்கு முழு குடும்ப ஓய்வூதியத் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

வீட்டுக்கடன். பெறுவது எப்படி

May 15, 2014 வீட்டுக்கடன் பெறுவதில் உள்ள பிரச்னைகளை களைவது எப்படி.? வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் செய்து பார்' என்பது அனைவரும்ஒருமுறையாவது உச்சரிக்கும் கிராமத்து பழமொழி. வீடுகட்டுவதற்கு அனைவருக்கும் வசதி இருப்பதில்லை. இதற்காககடன்களை பெற நினைக்கும் போது முதலில் மனதில் தோன்றுபவை வங்கியின் வீட்டுக்கடன்களே. அவற்றைப் பெறுவதில் வரும் சிக்கல்களைப் பற்றி இந்தகட்டுரையில் பார்ப்போம். வீட்டுக் கடன்களைப் பெறுவது விளம்பரங்களில் காண்பது போல்மிகவும் எளிதானதாக இருந்தாலும், அது மிகவும் கடினமான மற்றும் நீளமான செயல்பாடாகவே உள்ளது. வட்டி விகிதங்கள் நிலையற்றதாக இருப்பதால் இந்தியாவில் வீட்டுக் கடன்பெற்றவர்கள் பெரும்பாலோர் பாதிக்கப்படுகிறார்கள். பணத்தின் மதிப்பை பொறுத்த வரை மிகவும் பெரிய கடன்களாக இருக்கும் வீட்டுக் கடன்களால், கடன் பெறுபவர்கள் அடையும் பாதிப்புகள் எண்ணிலடங்காது. அது போன்று வீட்டுக் கடன் பெற்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி உங்களுக்கு கொடுத்துள்ளோம். இவற்றைப் படித்து பயன் பெறுவீர்கள் என்றுநம்புகிறோம்.. ஆரம்ப கட்டத்தில் நிராகரிக்கப்படுதல் இது சோகமான செய்தி தான் ஆனாலும் உண்மை.பெரும்பாலானவர்களின் கடன்களை பெற முன்நிற்கும் ஆரம்பகட்டங்களிலேயே நிராகரிக்கப் படுகிறார்கள். இதற்கு பலகாரணங்கள் இருந்தாலும், கடன் தரும் நிறுவனத்தின் தேவைகளுக்கும், கடன் பெறுபவரின் தகுதிக்கும் உள்ள முரண்பாடுகள் தான் காரணமாக உள்ளன. வயது, கள ஆய்வுகளில் தேர்ச்சியடையாமல் இருத்தல், முறையான ஆவணங்கள் தராமல் இருத்தல், வங்கிகள் முறையாக ஆவணங்களை பார்வையிடாமல் இருத்தல், வருமான வரம்பு மற்றும் பல்வேறு காரணங்களும் இந்தநிராகரிப்புகளின் பின் உள்ளன. தீர்வு: ஆரம்ப கட்டத்தில் நிராகரிக்கப்படாமல் இருக்க விரும்பினால்,வங்கிகளைப் பொறுத்து அவர்கள் விரும்பும் தகுதிகளைபரிசோதித்துப் பார்க்கவும். உங்களுடைய தகுதிக்கேற்ற வங்கிகளைதேர்ந்தெடுத்து விண்ணப்பம் கொடுங்கள். முறையானஆவணங்களையும், பரிசோதிக்கத்தக்க விபரங்களையும் கொடுப்பதுதான் ஆரம்ப கட்டத்தில உங்களுடைய வீட்டுக் கடன் விண்ணப்பம்நிராகரிக்கப்படாமல் இருக்க உதவும் வழிமுறைகளாகும். திரும்ப பெற இயலாத செயல்பாட்டு கட்டணம் திரும்ப பெற இயலாத செயல்பாட்டு கட்டணம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம். நீங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது உங்களுடைய வங்கி, 0.25 சதவிகிதம் முதல்1 சதவிகிதம் வரையில் இந்த திரும்ப பெற இயலாத செயல்பாட்டு கட்டணம் கட்டணத்தை செலுத்தும் படி வங்கி உத்தரவிடம். வழக்கமாகவே இந்த செயல்பாட்டுக் கட்டணத்தை திரும்பப் பெறஇயலாது. உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் கூடுஇந்த செயல்பாட்டுக் கட்டணத்தை திரும்பப் பெற இயலாது. நீங்கள்தரக் கூடிய கட்டணங்கள், வீட்டுக் கடனுக்காக விண்ணப்பம் செலுத்துவதற்கான கட்டணமாக கருதப்படும். விரும்பிய அளவு கடன் அனுமதிக்கப்படுவதில்லை வீட்டுக் கடன் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.வங்கிகளைப் பொறுத்த வரையில், கடன் வாங்குபவர் அதை திரும்பசெலுத்தும் வல்லமை உள்ளவராக இருக்க வேண்டும் என்பது ஒருமுக்கியமான தகுதியாகும். மேலும், வங்கிகள் கடனுக்கானஅதிகபட்ச தொகையை நிர்ணயிக்கும் வேளகைளில், வேறு சிலதகுதிகளும் இடம் பெறுகின்றன. செலுத்தப்படாமல் இருக்கும் கடன்கள், நிதி வரலாறு, விண்ணப்பதாரரின் மாதாந்திர வருமானம், பழைய கடனை திரும்பசெலுத்திய விதம், கிரெடிட் கார்டின் பயன்பாடு, பவுன்ஸ் ஆனகாசோலைகள், வங்கிகளில் அவரின் சராசரி இருப்பு, தற்போதைய வேலையில் இருக்கும் கால அள, மொத்தமாக வேலை செய்த காலஅளவு மற்றும் செய்யும் வேலையின் தன்மை ஆகிய விஷயங்களும்இந்த தொகையின் அளவை நிர்ணயம் செய்வதில் பங்குபெறுகின்றன. இந்த தகவல்களை எல்லாம் ஒன்றாக திரட்டி, தன்னால் பணத்தைதிரும்ப பெற முடியும் தொகை எவ்வளவு என்று வங்கி தீர்மானித்து அதனையே கடனாக வழங்கும். வட்டி விகிதங்கள் தொடர்பான பிரச்னைகள் வீட்டுக் கடன்களைப் பொறுத்த வரையில் நிலையான வட்டி விகிதம்(Fixed Rate) சிறந்ததா அல்லது காலத்திற்கேற்ப மாறும் ப்ளோட்டிங்வட்டி விகிதம் (Floating Rate) சிறந்ததா? வீட்டுக் கடன் பெறும்ஒவ்வொரு நபரும் எதிர்கொள்ளும் குழப்பம் இதுவாகும். குறிப்பிட்ட வகை கடன் பெறுவது என்று பெருமளவு முடிவு செய்துவிட்டாலும், சில நேரங்களில் வீட்டுக் கடன்களின் விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் உங்களுடைய வட்டி விகிதங்களில் விளையாடி விடுகின்றன. எடுத்துக்காட்டாக, நீங்கள் நிலையான வட்டி விகிதம்வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தாலும், உங்களுக்கு தரப்படும்அச்சு ஆவணங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிலையானவட்டி விகிதம் மாறும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால்,உங்களுடைய நிலைமை மிகவும் மோசமாகி விடும். அதேபோல,ஃப்ளோட்டிங் வட்டி விகிதங்களின் போது, வட்டி குறையும் நேரங்களுக்கான பலன்களை வங்கிகள் நிராகரித்தாலும், உங்களுக்கு சிறிதளவே பலன் கிடைக்கும். இது போன்ற சூழல்களை தவிர்க்க, வீட்டுக் கடன்களுக்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மிகவும் கவனமாக நீங்கள் படித்துப பார்த்து,உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். சொத்து மதிப்பில் மாறுபாடுகள் நீங்கள் ஒரு சொத்தை வாங்க திட்டமிடுகிறீர்களா? ஆமாம் என்றால்,இந்த கருத்தை படிப்பது மிகவும் அவசியம். நீங்கள் ஒரு சொத்தைவாங்கும் போது அதன் மதிப்பாக குறிப்பிடும் அளவையே,உங்களுடைய வங்கியும் எடுத்துக் கொள்ளும் என்று கருதவேண்டாம். வங்கிகள் அவற்றிற்கான வழிமுறைகளில்சொத்துக்களை மதிப்பீடு செய்கின்றன. இதற்காக சட்டப்படியான,தொழில்நுட்பம் தெரிந்த மற்றும் நிதி மதிப்பீடு செய்பவர்கள்பயன்படுத்தப்படுவார்கள். டவுன் பேமண்ட் (Down Payment) நீங்கள் டவுண் பேமண்ட் கட்டாமல், உங்களுக்கான வீட்டுக் கடன் விநியோகிக்கப்பட மாட்டாது. டவுன் பேமண்ட் என்பது, உங்களுடைய வீட்டுக் கடனில் 10 முதல் 20 சதவிகிதத்தில் ஒரு சிறுதொகையை செலுத்துவது தான். இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். இந்த பணத்தை செலுத்துவது வீட்டுக் கடனை பெறுவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, நீங்கள் 10 லட்சம்ரூபாய் வீட்டுக் கடன் பெறும் போது, அதில் 1 அல்லது 2 இலட்சம்ரூபாய் டவுன் பேமண்ட் ஆக இருக்கும். இந்த பணத்தை கடன்பெறுபவர் கடன் பெறும் போது வைத்திருக்க வேண்டும். மேலும், சந்தை விலையை விட குறைவாக வங்கி உங்களுடைய சொத்தை மதிப்பீடு செய்தால், கடன் பெறுபவர் மீதத் தொகையை செலுத்த வேண்டும். இதன் மூலம் உங்களுடைய டவுன் பேமண்ட் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து விடும். இந்த சிக்கலான சூழலைதிறனுடன் எதிர்கொள்ள நினைத்தால், சொத்தை முன்னதாகவே மதிப்பிட்டு விடுங்கள் மற்றும் டவுன் பேமண்டை உங்களிடம் தயாராக வைத்திருங்கள் பத்திரம் மற்றும் தடையில்லா சான்றுதல் நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் வீட்டுக் கடன் நிராகரிக்கப்பட காரணமாக இருப்பவை டைட்டில் டீட் மற்றும் தடையில்லா சான்றுகள் ஆகியவையாகும். இவற்றை வங்கி கேட்கும்வடிவங்களில் கொடுக்க வேண்டியது அவசியமாகும். இது போன்ற ஆவணங்களை, சரியான வடிவங்களில் கொடுக்காமல் இருந்தால் நீங்கள் வீட்டுக் கடன் பெறுவது கனவு தான். இது போன்ற சிக்கலான சூழல்களை எதிர்கொள்வதை தவிர்க்க,வங்கிகள் எதிர்பார்க்கும் எல்லாவிதமான ஆவணங்களைப் பற்றியும்விசாரியுங்கள் மற்றும் அவற்றை குறிப்பிட்ட நேரத்தில் தயாராகவைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்திடுங்கள். முடிவுரை ஒரு வீட்டையோ அல்லது சொத்தையோ வாங்குவது அனைவருக்கும் கனவாக இருந்தாலும், அது வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளில் ஒன்றாகவும் உள்ளது. ஒவ்வொரு தனிமனிதருனும் சொத்துக்களை தங்களுடைய சேமிப்புகள் அல்லதுவருமானத்தை கொண்டே வாங்க முடிவதில்லை. அவர்களுக்கு வங்கிகளின் வீட்டுக் கடன்கள் தேவைப்படுகின்றன. வீட்டுக் கடன்கள் மக்கள் விரும்பும் வழிமுறைகளில் ஒன்றாக இருந்தாலும், அவற்றைப் பெறுவது அவ்வளவு எளிதும் அல்ல. இந்த செயல்பாட்டில் பெரும்பாலானவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் ஆனால் மேற்கண்ட தகவல்களை கொண்டு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். Admin Share ‹ › Home View web version Powered by Blogger

Wednesday 14 May 2014

டான்செடதேர்வு முடிவுகள்

டான்செட்' தேர்வு முடிவு வெளியீடு சென்னை: எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., உள்ளிட்ட, முதுகலை படிப்புகளில் சேர்வதற்காக, அண்ணா பல்கலை நடத்திய, பொது நுழைவுத்தேர்வு (டான்செட்) முடிவு, பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில், முதுகலை படிப்புகளில், 8,000த்திற்கும் அதிகமான இடங்கள் உள்ள