Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 22 October 2016

SABL ஏற்கக் கூடிய ஒன்றா? இணையத்தில் ஓர் கட்டுரை !! கற்பிப்பு முறைகளும் கள(கால)த் தேவையும்

SABL ஏற்கக் கூடிய ஒன்றா? இணையத்தில் ஓர் கட்டுரை !!
கற்பிப்பு முறைகளும் கள(கால)த் தேவையும்:

*செயல்வழிக் கற்றல் எளிமைப்படுத்தப்பட்டதா?*

SABL மிக எளிய நடைமுறையாக இருக்க வேண்டுமெனில், ஒரு வகுப்பில்

1. மாணவர்கள் மீத்திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டும்.

2. மாணவர் எண்ணிக்கை 15

3. ஆசிரியர் துடிப்பான & உடல் வலிமை மிக்கவராக இருத்தல்.

ஆகிய இம்மூன்றில் ஏதேனும் 2 கூறுகள் இருந்தே ஆகவேண்டும்.

2 கூறுகள் கூட இல்லையெனில் SABL நடைமுறை 100% வெற்றி பெறவது இயலாது.

SABL ஏற்கக் கூடிய ஒன்றா?

மேலை நாடுகள் சிலவற்றிலும் இம்முறை உள்ளது. ஆனால் அங்கு ஆசிரியர் மாணவர் விகிதம் பின்பற்றப்படுகிறது. உதாரணமாக அமெரிக்காவில், 5 வயதினருக்கு 1:10, 7 வயதினருக்கு 1:12 என்று மாணவர் விகிதம் வயதைப் பொறுத்து நடைமுறையில் உள்ளது. மேலும், பல்வகுப்புக் கற்பித்தல் இல்லை. இதுபோன்ற நடைமுறை இங்கும் பின்பற்றப்படுமாயின் இது ஏற்கக் கூடியதே!

*சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளனரா?*

ஆம். நானல்ல, எனது நண்பர்கள் சிலர் SABL-ஐ மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகின்றனர். அவர்களின் வகுப்பறை மேலே கண்ட கூறுகளில் ஏதேனும் 2-னை உடையதாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக இவர்கள் சோர்வறியாதவர்கள். மாணவர் எண்ணிக்கை கூடும் சூழலில் அவர்களும் மலைத்ததுண்டு. அவர்களின் வலிமை அவ்வேளையில் உற்ற துணையாக இருந்துள்ளது.

*SABL சிறப்பாக உள்ளதா?*

என்றால் இல்லை என்பதே விடை. புத்தகம் - அட்டை என பல குழப்பங்களை உள்ளடக்கியுள்ளது. 2-ற்கும் இடையே அதிக வேறுபாடுகளும் உள்ளது. ஏணிப்படி நிலையிலும் முன்பின் முரண் & பாடப்பகுதி இல்லாதது என பல குறைபாடுகள் உள்ளது.

"தனியாள் வேற்றுமை" என்ற பதத்தை உளவியல் தேர்வோடு மறந்துவிட்ட கல்வித்துறை அலுவலர் & அதிகாரிகள், ஆசிரியர் என்பவரும் மானுடன் தான்; அவருக்கும் மானுடத்திற்குரிய அனைத்து உளவியல் & உடலியல் கூறுகள் உண்டு என்பதையும் மறந்து மறத்துப் போய்விட்டதன் விளைவே ஒரே எதிர்பார்ப்பில் அனைத்துப் பள்ளிகளையும் பார்வையிடுதல் என்பது.

நோயுற்றவனைச் சோதித்து தான் மருந்துகள் வெளியிடப்படும். ஆனால் கல்வித் துறையில் மட்டும் மிகச் சிறந்த மீத்திறன் மாணவர் பெரும்பான்மையாக உள்ள பள்ளிகளில் தங்களின் பயிற்றுவிப்பு நடைமுறைகளைச் சோதித்துவிட்டு அதனை மாநிலம் முழுமைக்கும் நடைமுறைப்படுத்துவதோடு, அதே விளைவு அனைத்துப் பள்ளிகளிளும் எதிர்பார்க்கப்படுகிறது.

*என்னதான் செய்வது?*

கல்விக் கொள்கைகளை விவாதத்திற்கு உட்படுத்துதல் எவ்வளவு இன்றியமையாததோ அதே அளவு முக்கியமானது கற்பித்தல் முறைகளைப் பற்றிய விவாதங்களும்.

கற்பித்தல் முறைகள் தொடர்பான விவாதத்திற்கு எந்தவொரு ஆசிரிய இயக்கமும் முன்வந்ததாக எனக்கு நினைவில்லை. அதிகார வர்க்கத்தின் திணிப்பை எவ்வித விமர்சனமும் இன்றி அப்படியே பின்பற்றி வரும் நிலை தான் இன்றும் உள்ளது.

கற்பித்தல் முறை என்பதும் ஆசிரியர் & மாணவர்சார் பிரச்சினையே என்பதை அனைத்து இயக்கங்களும் உணர வேண்டும்.

நடைமுறையில் உள்ள SABL, SALM, ALM என அனைத்து கற்பித்தல் முறைகளையும் ஆசிரிய இயக்கங்கள் தாமே முன்வந்து தனதளவில் ஆய்வு செய்திட வேண்டும். ஏனெனில் நடைமுறைச் சிக்கல்களை பச்சை மையில் கையொப்பமிடும் அதிகாரிகள் அல்ல பச்சைக் குழந்தைக்குப் பாடம்புகட்டும் ஆசிரியர்கள் தான் அறிவர்.

ஆண்டுதோறும் கோடிக்கணக்கான நிதி குறு / வட்டார வளமையப் பயிற்சிகள் என்ற பேரில் களத்தேவைக்கு ஏற்பில்லாத பணியிடைப் பயிற்சிகளால் வீணாகிக் கொண்டு தான் உள்ளது. காரணம் இப்பயிற்சிகளை முடிவு செய்வது அதிகார வர்க்கமாக உள்ளதே அன்றி, தனது தேவையை உணர்ந்த ஆசிரியர்கள் / ஆசிரியப் பயிற்றுநர்கள் அல்ல.

நாடாக் கோப்பில் முன்மொழியப்படும் திட்டங்கள் எந்த அளவிற்கு நடைமுறைச் சாத்தியம் உள்ளது என்பதை ஆய்ந்து தெளியும் அறிவுப் பணியில் ஆசிரிய இயக்கங்கள் கவனம் செலுத்தி, ஆய்ந்து செயல்படுத்த முன்வர வேண்டும்.

இப்படிப்பட்ட ஆய்வுகளை நடைமுறைச் சாத்தியத்திற்கு ஏற்றதாக்கும் பொறுப்பும் கடமையும் இயக்க உறுப்பினர்களான ஆசிரியர்களிடமே உள்ளது.

உடல் நலம் பெற வேண்டுமெனில் பிணியாளிக்கான மருத்துவ முறையை  மருத்துவர் தான் நிர்ணயிக்க வேண்டும். நாடு வளம்பெற வேண்டுமானால் மாணவர்களுக்கான பயிற்றுவிப்பு முறையை ஆசிரியர் தான் தீர்மானிக்க வேண்டுமே அன்றி பயிற்றுவிக்கும் சூழலே அறியாத ஆட்சிப்பணி அதிகாரிகள் அல்ல.

_*✍🏼சிறுதுளி💧

Friday 21 October 2016

CRC, BRC பயிற்சியில் கலந்து கொள்ள இயலாத ஆசிரியர்கள் CEO அவர்களிடம் முன்அனுமதி பெற்ற பின்னரே விடுப்பு எடுக்க வேண்டும். -CEO,புதுக்கோட்டை

CRC, BRC பயிற்சியில் கலந்து கொள்ள இயலாத ஆசிரியர்கள்
CEO அவர்களிடம் முன்அனுமதி பெற்ற பின்னரே விடுப்பு எடுக்க வேண்டும்.
-CEO,புதுக்கோட்டை

சளி, காய்ச்சல் போன்ற எளிய நோய்களுக்கும் NHIS 2016 - இல் சிகிச்சை கிடைக்குமா? - CM Cell Petition Reply

சளி, காய்ச்சல் போன்ற எளிய நோய்களுக்கும் NHIS 2016 - இல் சிகிச்சை கிடைக்குமா? - CM Cell Petition Reply

சளி, காய்ச்சல் போன்ற எளிய நோய்களுக்கும் NHIS 2016 - இல் சிகிச்சை கிடைக்குமா? - CM Cell Petition Reply

சளி, காய்ச்சல் போன்ற எளிய நோய்களுக்கும் NHIS 2016 - இல் சிகிச்சை கிடைக்குமா? - CM Cell Petition Reply

Thursday 20 October 2016

அங்கீகரிக்கப்பட்ட மனைக்கான நிபந்தனைகள்

*அங்கீகரிக்கப்பட்ட மனைக்கான நிபந்தனைகள்*

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (CMDA) மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கம் (DTCP) இவை தமிழகத்தில் நில அமைப்பு ஒப்புதல் வழங்கும் அதிகரம் பெற்ற அரசு அமைப்புகள். CMDA-வின் அதிகார வரையரை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்குட்பட்ட அதிகார எல்லைகளுக்குள்ளேயே உள்ளது. மாநிலத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் (DTCP)யின் அதிகார வரையறையுள்ளது. நில அமைப்பு ஒப்புதல் வழங்கும் பொறுப்பு 10 ஏக்கர் (5 ஏக்கரிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது) வரை உள்ளூர்த் திட்ட அதிகார அமைப்பால் (LPA) வழங்கப்படுகிறது. LPA, DTCP அமைப்பின் துணைக்குழு. 10 ஏக்கருக்கு மேல் நில அமைப்பு ஒப்புதல் வழங்கும் பொறுப்பு சென்னையில் உள்ள DTCP தலைமை அலுவலகத்தில் உள்ளது.

பஞ்சாயத்து அமைப்பு குறித்து பொதுமக்களிடையே போதுமான சட்டவிழிப்புணர்வு இல்லை. ‘பஞ்சாயத்து ஒப்புதல்’ என்று எந்தச் சொல்லியல் முறையும் இல்லை. CMDA, LPA மற்றும் DTCP ஆகியவை மட்டும் அங்கிகரிக்கப்பட்ட மனைகளுக்கு ஒப்புதல் வழங்கும் அமைப்புகள். எந்த ஒரு பஞ்சாயத்துத் தலைவருக்கும் அவரவர் எல்லைப் பகுதியில்கூட நில அமைப்பு தொடர்பான ஒப்புதல் வழங்கும் அதிகாரம் இல்லை. மேலும் பஞ்சாயத்துத் தலைவர் DTCP/CMDAவால் அங்கிகரிக்கப்பட்ட மனைகளுக்கு மட்டும் கட்டிட அனுமதி வழங்கலாம்.

நில அமைப்பு ஒப்புதல் வழங்குவதற்கான நிபந்தனைகள்:

1. தாசில்தாரிடமிருந்து ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ் (NOC) பெறவேண்டும். அந்த நிலமானது புறம்போக்கு நிலமாக இருக்கக் கூடாது. நிலச் சீர்திருத்த சட்டம் 1961, நில உச்சவரம்புச் சட்டம் 1978 மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளின் கீழ் வரக் கூடாது.

2. தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணத்தில் FMB/டவுண் சர்வே ஸ்கெட்ச், பட்டா/ சிட்டா/ நில கணக்கெடுப்பு “A” சான்று பதிவு, கிராம வரைபடம், அந்த நிலபகுதியில் உள்ள நீரோட்டம் தொடர்பான விவரங்கள் கூறிப்பிடப்பட வேண்டும்.

3. 2,500 சதுர மீட்டருக்கு மேல் (26900 Sq.ft) இருப்பின், 10 சதவீத நிலத்தை திறந்த வெளி இட ஒதுக்கீடு செய்ய (Open Space Reservation) வேண்டும். இந்த இடத்தைத் தான பத்திரம் மூலம் அரசுக்குப் பதிவுசெய்ய வேண்டும். 10,000 சதுர மீட்டர்க்கு மேல் (107600 Sq.ft) இருப்பின் (ரோடுகளைத் தவிர்த்து) பொதுச் சேவைகளுக்கு (கல்விக் கட்டிடம், தபால் நிலையம், காவல் நிலையம், பூங்கா) ஒதுக்கீடுசெய்ய வேண்டும். மேலும் 10 சதவிகித நிலத்தைப் பொருளாதாரத்தில் பின் தங்கிய (Economically Weaker Section) நபர்களுக்கு ஒதுக்கீடுசெய்ய வேண்டும். ஒருவேளை ஒதுக்கீடுசெய்ய முடியாவிட்டால் அந்த 10 சதவீத நிலத்தை நில அமைப்பில் இருந்து 5 கீ.மி. சுற்றளவை உள்ள இடத்தில் அரசாங்கத்துக்குத் தானமாக வழங்க வேண்டும்.

4. மின்சார/ தொலைபேசி வரி தளம் அந்த பாதையில் இருந்தால் ஒரு மறுசீரமைப்பு சமர்ப்பிக்க வேண்டும்.

5. கீழ்க்கண்ட இடங்களில் உள்ள நிலத்துக்கு அது சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து NOC பெறுவது கட்டாயமாகும்.

a) நீர் நிலைகளில் இருந்து 15 மீட்டர் தொலைவில் இருந்தால் (பொதுப்பணித்துறை அல்லது சம்பந்தப்பட்ட துறை)

b) இரயில் பாதையிலிருந்து 30 மீட்டர் (இரயில்வே துறை)

c) ஒரு உர புறத்திலிருந்து (ComPost Yard) (உள்ளாட்சி)

d) இடுகாடு/ சுடுகாட்டிலிருந்து 90 மீட்டர் (சுகாதார அதிகாரி)

e) கல் குவாரியிலிருந்து 300 மீட்டர் (சுரங்க அதிகாரி)

f) 500 மீட்டர் நொறுக்கு (Crusher) ஆலையிலிருந்து. (சுரங்க அதிகாரி)

g) 500 மீட்டர் விமான நிலையத்திலிருந்து (இந்திய விமான அதிகாரத் துறை)

6. TOPO நில அமைப்பு

2000-ம் ஆண்டு முதல் நில அமைப்பு ஒப்புதல் சரிபார்த்தலை CMDA இணையதளமான www.cmdachennai.gov.in என்ற இணையதளத்திலும் காணலாம். அதேபோல், 2011-2012-ம் ஆண்டு முதல் DTCP வழங்கிய அங்கிகரிக்கப்பட்ட ஒப்புதல்களை DTCP இணையதளமான www.tn.gov.in/tcp என்ற தளத்திலும் சரிபார்க்கலாம்.     *MMI-PDKT*

இந்திய அரசு டிஜிலாக்கர் அறிமுகம்!

இந்திய அரசு டிஜிலாக்கர் அறிமுகம்!
வந்துவிட்டது மின்பூட்டு DIGILOCKER இனி எந்த ஆவணத்தையும் கையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டியது இல்லை, நகலும் தேவை இல்லை, இந்திய அரசு டிஜிலாக்கர் என்ற புதிய மின்பூட்டு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.ஆதார் அட்டை எண் உள்ள அனைவரும் www.digitallocker.gov.in என்ற தளத்திற்குள் சென்று,தங்களது கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், 10, 12 மற்றும் பட்டச் சான்றிதழ்கள்,
வருமானவரிக் கணக்கு அட்டை (பான் கார்டு) மின் கட்டண அட்டை போன்ற சான்றிதழ்களைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு நீங்கள் ஏதேனும் ஒரு அரசுத்துறைக்கு விண்ணப்பித்தால். மேற்கண்ட சான்றிதழ்கள் எதையும் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை. பதிலாக உங்கள் ஆதார் அட்டை எண்ணை மட்டும் கொடுத்தால் போதும். அவர்கள் சரிபார்த்துக் கொள்வார்கள். இந்தத் திட்டம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது.பயன்படுத்திக் கொள்ளுங்கள்உங்கள் நண்பர்களுக்கும்வழிகாட்டுங்கள்www.digitallocker.govdigitallocker.gov

குறுவள மைய அளவிலான பயிற்சியில் கலந்துக் கொள்ளாத ஆசிரியர்களிடமிருந்து ( மருத்துவ மற்றும் மகப்பேறு விடுப்பு நீங்கலாக ) உரிய விளக்கம் பெற மாநில திட்ட இயக்குனர் உத்தரவு!!

குறுவள மைய அளவிலான பயிற்சியில் கலந்துக் கொள்ளாத ஆசிரியர்களிடமிருந்து ( மருத்துவ மற்றும் மகப்பேறு விடுப்பு நீங்கலாக ) உரிய விளக்கம் பெற மாநில திட்ட இயக்குனர் உத்தரவு!!

Wednesday 19 October 2016

CPS- Double number- Old Number CPS Amount transfer to New CPS Number

CPS- Double number- Old Number CPS Amount transfer to New CPS Number

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறை வருகிற (நவம்பர்) 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. பொம்மலாட்டம் முறை தமிழ்நாட்டில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் (1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் பொம்மலாட்டம் மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி திட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு சார்பில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது. இதில் பொம்மலாட்டத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் எஸ்.வி.மாணிக்கம், சுகந்தி டெய்சி ராணி உள்பட பலர் பயிற்சி அளித்தனர். பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகுழு இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், இணை இயக்குனர் பாலமுருகன் ஆகியோர் பார்வையிட்டனர். பயிற்சி குறித்து அனைவருக்கும் கல்வி திட்ட சீனியர் ஆலோசகர் ஆர்.மாலதி கூறியதாவது:- 7-ந் தேதி முதல்... தமிழ் உள்பட அனைத்து பாடங்களையும் பொம்மலாட்டம் மூலமாக நடத்தி காண்பித்து மாணவர்களுக்கு எளிமையான முறையில் ஆசிரியர்கள் கற்பிப்பார்கள். அதற்காக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு கற்பிப்பார்கள். பின்னர் அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வருகிற (நவம்பர்) 5-ந் தேதி முதல் நடத்தப்படும். [

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறை வருகிற (நவம்பர்) 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

பொம்மலாட்டம் முறை

தமிழ்நாட்டில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில்
(1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் பொம்மலாட்டம் மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்து உள்ளது.

இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி திட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு சார்பில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

இதில் பொம்மலாட்டத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் எஸ்.வி.மாணிக்கம், சுகந்தி டெய்சி ராணி உள்பட பலர் பயிற்சி அளித்தனர். பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகுழு இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், இணை இயக்குனர் பாலமுருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.

பயிற்சி குறித்து அனைவருக்கும் கல்வி திட்ட சீனியர் ஆலோசகர் ஆர்.மாலதி கூறியதாவது:-

7-ந் தேதி முதல்...

தமிழ் உள்பட அனைத்து பாடங்களையும் பொம்மலாட்டம் மூலமாக நடத்தி காண்பித்து மாணவர்களுக்கு எளிமையான முறையில் ஆசிரியர்கள் கற்பிப்பார்கள். அதற்காக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு கற்பிப்பார்கள். பின்னர் அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வருகிற (நவம்பர்) 5-ந் தேதி முதல் நடத்தப்படும்.
[

Tuesday 18 October 2016

காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால் தமிழ்நாட்டுப் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்!

=================================================
காவிரி வழக்கு:
உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால் தமிழ்நாட்டுப் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்!
=================================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
=================================================

உச்ச நீதிமன்றத்தில் இன்று (18.10.2016), காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட ஆணையிடக் கூடாது என்றும், நாடாளுமன்றம்தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது என்றும் இந்திய அரசு வாதிட்டுள்ளது. இந்த வாதங்கள், தமிழ்நாட்டுக்குக் காவிரி வழக்கில் நீதி கிடைக்கக்கூடாது என்று கர்நாடக அரசைவிட இந்திய அரசு தீவிரமாக இருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

2007இல் காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் ஒதுக்கீடு செய்த தண்ணீர் அளவு போதாது என்று மறு ஆய்வு செய்ய ஆணையிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வேறு; இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கிடைத்திட காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு பின்னர் தொடுத்த வழக்கு வேறு. இந்த இரண்டு வழக்குகளையும் ஒன்றாகக் கலந்து ஒரே நேரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரிப்பதென்பது சட்டப்படி முறையானதல்ல!

இரண்டு வழக்குகளின் தன்மைகளும் வெவ்வேறானவை. ஒன்றோடு ஒன்றைப் போட்டுக் குழப்புவது கர்நாடகத்தின் தந்திரம். அந்தத் தந்திரத்தை நடுவண் அரசு தானும் கையாள்கிறது. அதே தந்திரத்தின்படி உச்ச நீதமன்றம் இரண்டு வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பது நீதி முறையியல் ஆகாது! 

காவிரித் தீர்ப்பாய வழக்கு உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்க உரிமை உடையதுதானா என்று இப்பொழுது உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கிறது. அப்படியென்றால், 2007இல் உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை ஏன் ஏற்றுக் கொண்டது? ஏற்றுக் கொண்டதுடன் இறுதி முடிவு வரும் வரை, தற்போதுள்ள காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு இந்திய அரசு செயல்படுத்த வேண்டுமென்று கட்டளையிட்டது சட்டவிரோதச் செயலா? மூன்று நீதிபதிகள் அமர்வு உச்ச நீதிமன்றத்தின் மாண்புக்கு மாசுகள் ஏற்படும் வகையில் விசாரணை நடத்தக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகளையே மூன்று நீதிபதிகள் அமர்வு கேள்வி கேட்பது என்ன ஞாயம்?

உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தால்தான், 2007-லிருந்து கடந்த 04.10.2016 வரை காங்கிரசு நடுவண் அரசும், பா.ச.க. நடுவண் அரசும் காவிரி வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதை ஏற்றுக் கொண்டு பதில் மனுக்கள் அளித்தன. வழக்குரைஞர் மூலம் வாதாடின.

இப்பொழுது முரட்டுத்தனமாக, உச்ச நீதிமன்றத்திற்கு காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குறித்த   வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை எனச் சொல்வது, இந்திய அரசு நடுநிலை தவறி தமிழர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதையே உணர்த்துகிறது.

இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 262இன் முதல் பகுதி, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறைத் தீர்த்து வைக்க நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டுமெனக் கூறுகிறது. இந்த உறுப்பின் இரண்டாவது பகுதி, நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின்படி அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்பை நீக்குவதற்கு உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட எந்த நீதிமன்றத்திற்கும் அதிகாரமில்லை எனக் கூறுகிறது.

இந்த இரண்டாவது பகுதியின் கீழ் உருவாக்கப்பட்டதுதான் “காவிரித் தீர்ப்பாயம்”. அது கூறியிருக்கும் பொறியமைவுதான் “காவிரி மேலாண்மை வாரியம்”. நாடாளுமன்றத்தின் வழியாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்டம்தான் “காவிரி மேலாண்மை வாரியம்”. மறுபடியும் இதற்கு நாடாளுமன்றம் செல்ல தேவையில்லை.

மற்ற சிக்கல்களில், நாடாளுமன்றச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை மறுபடியும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென இந்திய அரசு கூறுமா?

மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956இல், நடைமுறை அனுபவங்களையொட்டி பல்வேறு திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முகாமையானவை, 6A மற்றும் 6 (2) ஆகும். 6 (2) என்ற திருத்தம், 2002இல் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இந்தத் திருத்தம்தான்,  தண்ணீர் தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குச் சமமான ஆற்றல் கொண்டது எனக் கூறுகிறது.

இந்த 6 (2) உருவாவதற்கு முன், 6A பிரிவில் உள்ள உட்பிரிவு 7, தீர்ப்பாயத் தீர்ப்பை செயல்படுத்த நாடாளுமன்றம் கூடி விவாதித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறுகிறது. அதற்குப் பின், 2002இல் சேர்க்கப்பட்ட 6 (2) பிரிவு – தீர்ப்பாயத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது என்று கூறியதுடன், 2002க்கு முன் இச்சட்டத்தில் உள்ள 6A, 7 ஆகியவை 2002க்குப் பிறகு பொருந்தாது எனக் கூறியுள்ளது.

இவற்றையெல்லாம் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, தெளிவாக விவாதித்துதான் “காவிரி மேலாண்மை வாரியம் கட்டாயம் அமைக்க வேண்டும் (Shall constitute)” என்று கூறியுள்ளது. இவ்வளவு தெளிவாக இந்திய அரசமைப்புச் சட்டததிலும், மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956 சட்டத்திலும் கூறப்பட்ட பின்னும், நாடாளுமன்றத்தில் இதை விவாதிக்க வேண்டுமென்று இந்திய அரசு வாதிடுவது, கர்நாடகத்தையும் விஞ்சிய அளவில் சட்டவிரோதமாக நரேந்திரமோடி அரசு நடந்து கொள்வதையே காட்டுகிறது.
இவ்வளவு தெளிவாக சட்டங்கள் வரையறுத்த பின்னும், உச்ச நீதிமன்றம் இதை மீண்டும் மீண்டும் விவாதித்துக் கொண்டிருப்பது, உச்ச நீதிமன்ற விசாரணை செல்லும் திசை பற்றி பல்வேறு ஐயங்களையும், அச்சங்களையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டாக்கியிருக்கிறது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி, பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவை, தற்போது செயலில் உள்ள காவிரித் தீர்ப்பாயம் மாற்றி முடிவு செய்தால், அந்த முடிவின்படி தண்ணீரைத் திறந்துவிடும் வேலைதான் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இருக்கிறது. மற்றபடி, காவிரி மேலாண்மை வாரியம் தானாக தண்ணீரின் அளவை முடிவு செய்து திறந்துவிட முடியாது. இப்பொழுது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், இப்பொழுதுள்ள இறுதித் தீர்ப்பின்படி அது தண்ணீர் திறந்துவிடும்.

அடுத்து, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு அனுப்ப வேண்டுமென கர்நாடக அரசு கூறுகிறது. இதை ஏற்றுக் கொள்வது போல் இந்திய அரசின் வாதங்கள் பொருள் தருகின்றன. இவ்வாறு, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு மாற்ற வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், காவிரித் தண்ணீர் நிரந்தரமாகத் தமிழ்நாட்டுக்கு இல்லை  என்றாகிவிடும்!

எனவே, மேற்கண்ட இந்திய அரசமைப்புச் சட்டம், மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956 ஆகியவற்றின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைத்திட, குறுகிய காலவரம்பிட்டு கட்டளை இடுவதொன்றே உச்ச நீதிமன்றத்தின் சட்டக் கடமையாகும் என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு மாறாக, வேறு வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்தால் கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்கு இந்திய அரசு மட்டுமின்றி உச்ச நீதிமன்றமும் துணை போகின்றது என்று தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

மேட்டூர் அணை நீர் திறக்கப்பட்டு சம்பா சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், இதுபோல் உச்ச நீதிமன்றம் இழுத்தடிப்பது நீதி வழங்குவதாகாது! பட்டினியால் அழும் குழந்தைக்கு குச்சி மிட்டாய் காட்டி ஏமாற்றுவது போல் “2,000 கன அடி திறந்து விடு“ என உச்ச நீதிமன்றம் சொல்வது இருக்கிறது. அதைகூட கர்நாடகம் மறுத்த நிலையிலும், கர்நாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க உச்ச நீதிமன்றம் மறுப்பது ஏன்?

காவிரிச் சிக்கலில் இப்பொழுது, ஒட்டுமொத்தமாகத் தமிழ் மக்களும் கட்சி வேறுபாடின்றி ஒருங்கிணைந்து, எழுச்சி பெற்று போராடி வருகிறார்கள். உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால், அந்தப் போராட்டங்கள் புதிய போக்கில் வடிவவெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ. மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு.

==============================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==============================
இணையம்:www.kaveriurimai.com
==============================
பேச: 94432 74002, 76670 77075
==============================

Monday 17 October 2016

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்* காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் பட்டினிப் போராட்டம். .23/10/16 கும்பகோணம்.

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்* காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து  மாபெரும் பட்டினிப் போராட்டம். .23/10/16 கும்பகோணம்.