Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Tuesday 29 March 2016

புதுச்சேரி பள்ளிகளுக்கு நேரம் மாற்றம்...

புதுச்சேரி:அடுத்த கல்வி ஆண்டு (2016-17) முதல் புதுவை அரசு பள்ளிகளின் இயங்கும் நேரம் மாற்றம். கல்வி துறை இயக்குனர் அறிவிப்பு.


Monday 28 March 2016

மன்றம் மாநில மாநாடு ,ஆயத்தக்கூட்டம்

மன்றம் மாநில மாநாடு ,ஆயத்தக்கூட்டம்

தேர்தல் ஆணையம் அனுமதி.

தேர்தல் ஆணையம் அனுமதி.

மாநில மாநாடு

மாநில மாநாடு ஆயத்தக் கூட்டம்.

தமிழக முதலமைச்சர்கள் பட்டியல் 1920 முதல் தமிழக முதலமைச்சர்கள்

தமிழக முதலமைச்சர்கள் பட்டியல்
1920 முதல் தமிழக முதலமைச்சர்கள்

1. திரு.A. சுப்பராயலு – 17-12-1920 to 11-07-1921

2. திரு. பனகல் ராஜா – 11-07-1921 to 03-12-1926

3. டாக்டர். P. சுப்பராயன் – 04-12-1926 to 27-10-1930

4. திரு. P.முனுசாமி நாயுடு – 27-10-1930 to 04-11-1932 
-->

5. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 05-11-1932 to 04-04-1936

6. திரு. P . T . ராஜன் – 04-04-1936 to 24-08-1936

7. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 24-08-1936 to 01-04-1937

8. திரு குர்ம வேங்கட ரெட்டி நாயுடு – 01-04-1937 to 14-07-1937

9. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 14-07-1937 to 29-10-1939

10. திரு தன்குதுரி பிரகாசம் – 30-04-1946 to 23-03-1947

11. திரு O P ராமசாமி ரெட்டியார் – 23-03-1947 to 06-04-1949

12. திரு P S குமாரசுவாமி ராஜா – 06-04-1949 to 09-04-1952  -->

13. திரு C ராஜகோபாலாச்சாரி – 10-04-1952 to 13-04-1954

14. திரு K காமராஜ் – 13-04-1954 to 02-10-1963

15. திரு M பக்தவத்சலம் – 02-10-1963 to 06-03-1967

16. டாக்டர். C.N. அண்ணாது ரை – 06-03-1967 to 03-02-1969

17. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 10-02-1969 to 04-01-1971, 15-03-1971 to 31-01-1976

18.டாக்டர். M G ராமசந்திரன் – 30-06-1977 to 17-02-1980, 09-06-1980 to 15-11-1984, 10-02-1985 to 24-12-1987

19. திருமதி ஜானகி ராமசந்திரன் – 07-01-1988 to 30-01-1988

20. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 27-01-1989 to 30-01-1991

21. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 24-06-1991 to 12-05-1996

22. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 13-05-1996 to 13-05-2001

23. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 14-05-2001 to 21-09-2001

24. திரு O. பன்னீர்செல்வம் – 21-09-2001 to 01-03-2002 -->

25. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 02-03-2002 to 12-05-2006

26. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 13-05-2006 to 15-05-2011

27. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா 16-05-2011 முதல்

-----------------------------------------------------------------------------
அதிக முறை (5) பொறுப்பேற்ற முதல்வர் மு. கருணாநிதி.

மிக நீண்ட காலம் (தொடர்ந்து) பொறுப்பிலிருந்த முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் ஆவார். ஆண்ட காலம் 10 வருடம், 5 மாதம் 25 நாட்கள்

மிகக்குறுகிய காலம் (24 நாட்கள்), பொறுப்பிலிருந்தவர் ஜானகி இராமச்சந்திரன்

Opposite words

Opposite words

absent × present
accept × decline, refuse
accurate × inaccurate
admit × deny
advantage × disadvantage
agree × disagree
alive × dead
all × none, nothing
always × never
ancient × modern
answer × question
apart × together
appear × disappear, vanish
approve × disapprove
arrive × depart
artificial × natural
ascend × descend
attractive × repulsive
awake × asleep
backward × forward
bad × good
beautiful × ugly
before × after
begin × end
below × above
bent × straight
best × worst
better × worse, worst
big × little, small
black × white
blame × praise
bless × curse
bitter × sweet
borrow × lend
bottom × top
boy × girl
brave × cowardly
build × destroy
bold × meek, timid
bound × free
bright × dim, dull
brighten × fade
broad × narrow
calm × windy, troubled
capable × incapable
careful × careless
cheap × expensive
cheerful × sad, discouraged, dreary
clear × cloudy, opaque
clever × stupid
clockwise × counterclockwise
close × far, distant
closed × open
cold × hot
combine × separate
come × go
comfort × discomfort
common × rare
contract × expand
cool × warm
correct × incorrect, wrong
courage × cowardice
create × destroy
crooked × straight
cruel × kind
compulsory × voluntary
courteous × discourteous, rude
dangerous × safe
dark × light
day × night
dead × alive
decline × accept, increase
decrease × increase
deep × shallow
definite × indefinite
demand × supply
despair × hope
disappear × appear
diseased × healthy
down × up
downwards × upwards
dry × moist, wet
dull × bright, shiny
early × late
east × west
easy × hard, difficult
empty × full
encourage × discourage
end × begin, start
enter × exit
even × odd
export × import
external × internal
fade × brighten
fail × succeed
false × true
famous × unknown
far × near
fast × slow
fat × thin
few × many
find × lose
first × last
foolish × wise
fold × unfold
forget × remember
found × lost
friend × enemy
generous × stingy
gentle × rough
get × give
girl × boy
glad × sad, sorry
gloomy × cheerful
good × bad
great × tiny, small, unimportant
guest × host
guilty × innocent
happy × sad
hard × easy
hard × soft
harmful × harmless
hate × love
healthy × diseased, ill, sick
heaven × hell
heavy × light
here × there
high × low
hill × valley
horizontal × vertical
hot × cold
humble × proud
in × out
include × exclude
inhale × exhale
inner × outer
inside × outside
intelligent × stupid, unintelligent
interior × exterior
join × separate
junior × senior
knowledge × ignorance
known × unknown
landlord × tenant
large × small
last × first
laugh × cry
lawful × illegal
leader × follower
left × right
less × more
like × dislike, hate
limited – boundless
little × big
long × short
loose × tight
loss × win
loud × quiet
low × high
major × minor
many × few
mature × immature
maximum × minimum
melt × freeze
narrow × wide
near × far, distant
never × always
new × old
no × yes
noisy × quiet
none × some
north × south
odd × even
offer × refuse
old × young
on × off
open × closed, shut
opposite × same, similar
out × in
over × under
past × present
peace × war
permanent × temporary
plural × singular
polite × rude, impolite
possible × impossible
powerful × weak
pretty × ugly
private × public
pure × impure, contaminated
push × pull
qualified × unqualified
quiet × loud, noisy
raise × lower
rapid × slow
rare × common
regular × irregular
real × fake
rich × poor
right × left, wrong
rough × smooth
safe × unsafe
secure × insecure
scatter × collect
separate × join, together
shallow × deep
shrink × grow
sick × healthy, ill
simple × complex, hard
singular × plural
sink × float
slim × fat, thick
sorrow × joy
start – finish
strong × weak
success × failure
sunny × cloudy

Saturday 26 March 2016

27/3/16 செய்திகள்

இன்றைய செய்திகள்
27-03-16

இன்று ஈஸ்டர் தினம்

♻ இன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு உ. சுப்ரமணியன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழாவில்..
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் பாவலர் திரு .க.மீனாட்சிசுந்தரம் பங்கேற்கிறார்


♻சனிக்கிழமைகளில் பள்ளிகள் முழு வேலைநாளாக இயங்க கட்டாயமில்லை
RTI Act தகவல்

♻குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் மருத்துவ விடுப்பு எடுக்கலாம் RTI act தகவல்.

♻மார்ச் மாத ஊதியம் ஏப்ரல் 4தேதி  கிடைக்கும்

♻ முடியும் தனியார் பள்ளிகள் எவை:பட்டியல் வெளியிட கோரிக்கை:

♻ஒரு ரூபாய் இருந்தால் லேப்டாப் வாங்கலாம்.! டெல் நிறுவனம் அதிரடி!

♻தமிழ்நாடு திருத்திய ஊதிய விகிதம் 2009 - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெருவோருக்கு பதவிஉயர்வில் ஊதிய நிர்ணயம் செய்தல் -தெளிவுரைகள்


♻15169 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு நிரந்தர வேலை வழங்குவதற்காக ஆண்டுக்கு 1000 கோடி அரசு செலவிட கோரிக்கை!!!!!.


♻10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப். 15ல் துவக்கம்:கருணை மதிப்பெண் எதிர்பார்ப்பு

♻மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிக்க முன்னுரிமை: தேர்தல் ஆணையம் உத்தரவு.

♻7 வயது அரசு பள்ளி மாணவி தேர்தல் தூதுவராக அறிவிப்பு.

♻மதிய உணவு திட்டம் கண்காணிக்க மாவட்டத்தில் இருவர் குழு.


♻செவிலிய பட்டயப்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி.

♻G.O (2D). No. 6 Dt: February 19, 2016அறிவிப்புகள் - சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - வளரிளம் பருவத்திலுள்ள மாணாக்கரிடையே தற்கொலை எண்ணத்தினைˆ தவிர்க்க ஆலோசனை வழங்கும் திட்டம் .15.04 இலட்சம் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்படுகிறது

@பள்ளிக்கல்வித்துறை (6 முதல 12) ஏப்ரல் 22முதல் கோடை விடுமுறை.

♻தொடக்கப்பள்ளி மற்றும்
நடுநிலைப்பள்ளிகளுக்கு மே 1 முதல் கோடை விடுமுறை.

♻தேர்தல் பிரசாரத்துக்கு பள்ளி மைதானத்தை பயன்படுத்தலாமா?: தேர்தல் ஆணையம் நிபந்தனை

♻மன்றம்♻
♻ மு. மோகன்♻

7வது ஊதியக்குழு ஒர் கண்ணோட்டம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு உயர்வு எப்போது?

-முகைதீன் சேக்தாவூது

மிக அருகில் வந்துவிட்டது, அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஏழாவது ஊதியக்குழு.
'நடப்பு நிதியாண்டிலேயே (2016-17) ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமலாக்கம் செய்திட 1.02 லட்சம் கோடி தேவை என கணக்கிடப்பட்டு, ரூ.70,000-யை கோடி பொது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துவிட்டார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்' என்ற அறிவித்துவிட்டார்.
இது மத்திய அரசு ஊழியர்களுக்கான மத்திய அரசின் அறிவிப்பு. மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஊதியக் குழு உயர்வு எப்போது?

ஏன் ஊதியக் குழு?

ஆண்டுதோறும் நம்மிடையே வந்து, நம்மை அமைதிப்படுத்தி, அலங்கரித்து, அழகு பார்க்கும் கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகளைப் போல், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து அரசு ஊழியர்களை அடுத்த தளத்துக்கு இட்டுச்செல்ல அமைக்கப்படும் வைபவம் தான் ஊதியக்குழு!

'ஆறு மாதத்துக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வும், ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வும் வழங்கப்பட்டு வரும்போது, ஊழியக்குழு அமைத்து வேறு ஊதியத்தை உயர்த்த வேண்டியது அவசியமா?' என்றொரு கேள்வி எழக்கூடும்! அதற்கான பதில்:

மாதம் முழுதும் செய்யும் பணிக்கு ஊதியம், விலைவாசி உயர்வை எதிர்கொள்ள அகவிலைப்படி. ஊழியர்களின் பணிக்கால நீளத்தை (Length of service) கௌரவிக்க ஆண்டு தோறும் ஊதிய உயர்வு!
இவை போல, கால மாற்றத்தை சமன் செய்ய ஊதியக்குழு!

காலம் என்ன செய்கிறது?

50 ஆண்டுகளுக்கு முன் நாம் தொலைக்காட்சி பார்த்ததுண்டா? 40 வருடங்களுக்கு முன் செல்போன் தொடர்பு உண்டா? 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை 'சொந்த வீடு' நம்மில் எத்தனை பேரிடம் இருந்தது? 20 வருடங்களுக்கு முன்பு இருந்தனவா இத்தனை இருசக்கர வாகனங்கள்? 10 ஆண்டுகளுக்கு முன் 'கார் வாங்க வேண்டும்' என்ற சிந்தனை கடுகளவேனும் இருந்ததா சராசரி மனிதரிடம்? -இதுதான் காலமாற்றம்! இதற்காகத்தான் ஊதியக்குழு!

ஊதியக்குழுவின் பணப்பயன் அரசு ஊழியர்களோடு முடிந்துபோய்விடுவது கிடையாது. சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் இதனடிப்படையில்தான் ஊதிய மாற்றம், ஏற்றம், எல்லாம்! நிதி நிர்வாகத்தின் அடிப்படை அளவுகோல் ஊதியமே!

ப்ளஸ் 1...எதிர்பார்க்கப்படுவதும், 01.01.2016 தொடங்கி அமலாக்கம் செய்யப்பட இருப்பதும் ஏழாவது ஊதியக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு. இதே தேதி முதல், இதே அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு தரப்பட இருப்பது எட்டாவது ஊதியக்குழு. காரணம், தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு கூடுதலாக ஓர் ஊதியக்குழு அமைத்து கௌரவித்திருப்பதுதான்.

கால அலகு (Periodicity)

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியக்குழுக்களின் அமலாக்க தேதி பின் கண்டபடி இருந்தது.

ஊதியக்குழு                         அமலாக்க தேதி

முதலாவது ஊதியக்குழு     - 01.06.1960 முதல்
இரண்டாவது ஊதியக்குழு - 02.10.1970 முதல்
மூன்றாவது ஊதியக்குழு    - 01.04.1978 முதல்
நான்காவது ஊதியக்குழு    - 01.10.1984 முதல்
ஐந்தாவது ஊதியக்குழு    - 01.06.1988 முதல்
ஆறாவது ஊதியக்குழு    - 01.01.2006 முதல்
ஏழாவது ஊதியக்குழு             - 01.01.2016 முதல்

எதிர்பார்ப்பது

மேற்கண்ட அட்டவணையை கவனித்தால், ஓர் ஊதியக்குழுவுக்கும் அதற்கடுத்த ஊதியக்குழுவுக்குமான கால இடைவெளி ஒரே சீராக இல்லாமல் முன்னும், பின்னுமாய் அமைந்திருக்கும். 01.01.1996 முதல் இது சீரமைக்கப்பட்டு இரண்டு ஊதியக்குழுக்களுக்கு இடைப்பட்ட காலம் 10 ஆண்டுகள் என நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அரசுப்பணியில் சேரும் ஓர் ஊதியர் அதிகபட்சமாக ஐந்து ஊதியக் குழுக்களின் பரிந்துரைகளால் பயன் பெற்று ஓய்வு பெற முடியும்.

குறைந்த பட்சம்: அதிக பட்சம்

01.06.1960 அன்று அமலாக்கம் செய்யப்பட்ட முதலாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி -
*தரப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் (ஊதியம் + அகவிலைப்படி) = 50+10 = 60

*பெறத்தக்க அதிகபட்ச ஊதியம் = 1800/-
முதலாவது ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து சுமார் 56 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது அமுலில் உள்ள 7வது ஊதியக் குழுவின் கடைசி நாளான 31.12.2015 அன்று நிலவரப்படி -

* தரப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் (அடிப்படை ஊதியம் + தர ஊதியம் + அகவிலைப்படி 119%) = 4800+1300+7259 = 13,359

* பெறத்தக்க அதிகபட்ச ஊதியம் = 67000+10000+91630 = ரூ.168630/-
அதாவது, குறைந்தபட்ச ஊதியம் 222 மடங்குக்கு சற்று அதிகமாகவும், அதிக பட்ச ஊதியம் 93 மடங்குக்கு சிறிது அதிகமாகவும் உயர்ந்து விட்டிருக்கிறது.

பணப்பலன் (Monetary Benefit)!

ஊதியக்குழு ஒவ்வொன்றும் தனது பரிந்துரையில் குறைந்தபட்ச பலனை அறிவிப்பது வழக்கம். இந்த பணப்பலன் 5 ரூபாய், 10ரூபாய் என இருந்தது மாறி மூன்றாவது ஊதியக்குழு வில் பணப்பலன் சதவீத கணக்கில் குறைந்தபட்சம் 5% ஆக தரப்பட்டது. இப்பணப்பலன் 4-வது ஊதியக்குழுவில் 7% ஆகவும், 5-வது ஊதியக்குழுவில் 10% ஆகவும் உயர்ந்து கொண்டே வந்து - ஆனந்த அதிச்சியாக 40% பணப்பலனை அறிவித்தது 6வது ஊதியக்குழு பரிந்துரை. அதாவது, அடிப்படை ஊதியத்தில் 40% ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டது.

நடைமுறையில் உள்ள 7வது ஊதியக்குழு!

01.01.2006 முதல் அமலாக்கம் செய்யப்பட்ட அலுவல் குழு (ஊதியக்குழு) பரிந்துரைக்கான அரசாணை 01.06.2009 அன்றுதான் வெளியிடப்பட்டது. அதாவது அமலாக்க தேதியிலிருந்து 41 மாதங்கள் கழித்து, என்றாலும் -

'தாமதமாய் வந்தாலும் தரமாக வருவேன்' என்பது போல், இதுவரை அறியப்படாத 'தர ஊதியம்' எனும் ஒரு புதிய ஊதிய அலகை அறிமுகம் செய்தது இந்த ஊதியக்குழு.

முந்தைய ஊதியகுழு பரிந்துரைகள் 10% 40% என சதவீத கணக்கில் பணப்பலன் தந்தது போல் அல்லாமல், 'தர ஊதியம்' தான் இந்த ஊதியக்குழுவின் பணப்பலனாக அமைந்தது.

குறைந்தபட்ச தர ஊதியம் ரூ.1300/- அதிக பட்ச தர ஊதியம் ரூ.10,000/- அறிமுகம் செய்யப்பட்ட தர ஊதியங்களின் எண்ணிக்கை 29.

01.01.2006 அன்று ஓர் ஊழியர் பெற்றிருந்த அடிப்படை ஊதியம் + தனி ஊதியம் + அகவிலை ஊதியம் + அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகை 186%. அதாவது, ஊதியம் + தர ஊதியம் = 100% அகவிலை (Dearness Pay) ஊதியம் 50%. இவைகள் மீதான அகவிலைப்படி 24+12% = 36%. ஆக 186%. எனவே, அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 1.86 என்ற காரணியால் பெருக்கி அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. இத்துடன் ஊதியக்குழுவின் பணப்பலனாக தர ஊதியம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இவ்வாறு சேர்க்கப்பட்ட தர ஊதியம் தந்த அதிக பட்ச பணப்பலன், அடிப்படை ஊதியத்தில் 86% ஆக இருந்தது. பணப்பலன் சதவீத ரீதியில் சொல்லப்படாததால் இது வியப்பாக இருக்கலாம். அதற்கான கணக்கீடு பின் வருமாறு:

* ஓர் ஊழியர் 31.12.2005 அன்று பெற்றிருந்த ஊதியம் ரூ.5000/-
* இவரது ஊதிய ஏற்றமுறை (Pre Revised Scale of Pay) ரூ.5000 - 150 - 8000
* 01.01.2006 முதல் இவருக்கு தரப்பட்ட தர ஊதியம் ரூ.4300/-
* சதவீத ரீதியில் பணப்பலன் 4300/5000X௴100=86%

(இந்த ஊதிய வீதத்துக்கான தர ஊதியம் ரூ.4200/- என அறிவிக்கப்பட்டு, பின்னர் 4300/- ஆக உயர்த்தப்பட்டது)
எல்லாருக்கும் 86% பணப்பலன், தர ஊதியத்தின் மூலம், கிடைத்து விடவில்லை. ஆனால், சராசரியாக, பணப்பலன் 50 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருந்தது. முந்தைய ஊதியக் குழுவின் பணப்பலனை மிகைத்ததாகவே அமைந்தது.

ஊதிய உயர்வு (increment) ஊதிய உயர்வு தரப்படாத வேலை என்று எதுவும் இல்லை. அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை
இந்த ஊதிய உயர்வானது (Annual Increment) 01.06.1960 முதல் 31.12.2015 வரையான 56 ஆண்டுகளில் - அதாவது முதலாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுக்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அடைந்துள்ள மாற்றத்தை பார்ப்போம்.

01.06.1960-ன்போது தரப்பட்ட குறைந்தபட்ச ஊதிய உயர்வு தொகை (ஊதியம் + அகவிலைப்படி 50-1-60 என்ற ஊதிய ஏற்ற முறையில்) 1+0=1
பெறத்தக்க அதிகபட்ச ஊதிய உயர்வு தொகை 37400-67000+GP10000 என்ற ஊதிய ஏற்ற முறையில் 2010+2392 = 4402

ஊதிய உயர்வு தொகை கணக்கிடுவதில் இந்த 7-வது ஊதியக்குழு ஒரு சமச்சீர் முறையையும் கொண்டு வந்தது. அதாவது, ஒன்றுமுதல் ஆறுவரையான ஊதியக்குழுவின்படி பரிந்துரைக்கப்பட்ட ஊதிய ஏற்ற (Scale of Pay) முறைப்படி ஆண்டு ஊதிய உயர்வு (Annual Increment) தொகையானது அனைவருக்கும் ஒரே சதவீத அளவாக இல்லாமல், பதவிக்கு பதவி, ஊதியக்குழுவுக்கு ஊதியக்குழு வேறுபட்ட சதவீத அளவில் இருந்தது. ஊதிய உயர்வு தொகை 1.6% ஆகவும் இருந்தது. 6.1% ஆகவும் தரப்பட்டது.

இந்த முரண்பாடுகளை களைந்து அரசுப்பணியில் உள்ள அனைவருக்கும் 3% ஊதிய உயர்வாக தந்து சமச்சீர் நிலையை எட்டியது, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை.
நிலுவை (Arrears)!

ஊதியக்குழு பரிந்துரையின்படி புதிய ஊதிய வீதங்கள் அமலாக்கம் செய்யப்பட்ட தேதியிலிருந்து அதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் வரை உள்ள காலத்துக்கு நிலுவைத் தொகை கணக்கிட்டு வழங்கப்படுகிறது.
இந்த நிலுவையானது முதல் நான்கு ஊதியக்குழு வரை ரொக்கமாகவும், 5வது ஊதியக்குழு நிலுவையின் ஒரு பகுதி பொது வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்பட்டும் வழங்கப்பட்டது. ஆறாவது, ஏழாவது குழுக்களின் நிலுவை தவணை முறையில் ரொக்கமாக தரப்பட்டன.
 

முதன்முறையாக...!

பொதுவாக, ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியமானது ஏறுமுகமாகத் (Upward) தான் இருக்கும். முதன் முறையாக அது இறங்குமுகத்தை (Downward) சந்தித்தது. அதாவது, ஊதியக்குழு பரிந்துரையின்படி முறையாக உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வுக்கு எந்த பங்கமுமில்லை; எவருக்கும் குறைக்கப்படவில்லை.

ஆனால் - 'ஊதியக்குழு பரிந்துரைப்படி உயர்த்தப்பட்ட சம்பள வீதம் போதுமானதாக இல்லை' என்ற முறையீட்டின் பேரில் 'ஒரு நபர் குழு' அமைத்து அறிக்கை பெறப்பட்டது. அந்த ஒரு நபர் குழு அறிக்கைக்குப் பின் பெரும்பான்மை பதவிகளுக்கு 'மீண்டும்' ஒரு உயர்வு வழங்கப்பட்டது. ஊதிய வீதம் / தர ஊதியத்தில்.
அவ்வாறு மீண்டும் தரப்பட்ட உயர்வு சீராய்வு (Review) செய்யப்பட்டது. சீராய்வின்படி, மீண்டும் உயர்த்தப்பட்டு 'சில பதவிகளுக்கு' வழங்கப்பட்ட ஊதியமானது இதே பதவிக்கு மத்திய அரசு போன்றவற்றில் தரப்படும் ஊதியத்தை விட அதிகம் எனவும், இதே சம்பளம் தரப்படும் தமிழக அரசின் பிற பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகம் என்றும் அறிவித்து 'ஒரு சில பதவிகளுக்கு' மட்டும் 'மீண்டும்' உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியம் குறைப்பு செய்யப்பட்டது.

எதிர்பார்ப்பு!

எந்த ஒரு மாநில அரசும் தராத எத்தனையோ சலுகைகளை வழங்கியுள்ளது, தமிழக அரசு. இன்னும் சொல்லப் போனால், அகவிலைப்படி உயர்வு, மத்திய அரசின் ஊதியக் குழு அறிக்கை போன்றவற்றை மற்ற மாநிலங்கள் பரிசீலித்துக் கொண்டிருக்கையில், பட்டுவாடா செய்து முடித்திருக்கிறது, தமிழக அரசு எனினும், நினைவு கூறத்தக்க சில விடுபாடுகளும் உண்டு; அவை சரி செய்யப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு. அவற்றுள் சில:

* உயர்த்தப்படாத ஓய்வு பெறும் வயது
* மத்திய அரசுக்கு இணையாக வீட்டு வாடகைப்படி...

பெண்ணைப் பெற்றவர்களுக்கு் ஒரு தகவல்

ஒரு தந்தை மகளின் உரையாடல் -
பெண்ணைப் பெற்றவர்கள் அவசியம் படிங்க.
--------------------------------------------------
அவர் சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னார் “குளிர் காலம் பாருங்க, இருட்டா இருக்குன்னு பொண்ணோட ஸ்கூல் பஸ் வர்ற இடம் வரைக்கும் நான் காலேல துணைக்குப் போறேன். அப்போ நாங்க தனியா எங்களுக்குள்ள பேசிக்குவோம்.

அவ , ஒரு வாரம் முன்னாடி இப்படி ஒரு காலை நடையில் , “அப்பா , ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?” அப்படின்னாள்...

“மாட்டேன், தாராளமாச் சொல்லு”

”அந்த 304-ல இருக்கானே, ராகுல் ? அவன் என்னப் பாத்து சிரிக்கறான்”

“சரி” என்றேன் கொஞ்சம் எச்சரிக்கையாக.

அவனுக்கு இவளை விட ஒரு வயசு கூட இருக்கும். 12ம் வகுப்பு.

”மொதல்ல அந்த பையங்கிட்ட ஒழுங்காத்தான்ப்பா பேசிட்டிருந்தேன். நாலுநாள் முன்னாடி, திடீர்னு அவன் ‘நீ எனக்கு ஸ்பெஷல் ப்ரெண்டு’ன்னான்.”

“நீ என்ன சொன்னே?”

“ம்ம். .. நானும்..  Shut Up-னு முதல்ல சொல்லிட்டேன். ஆனா, அவனைப் பாக்கறப்போ என்னமோ ஒரு மாதிரி படபடன்னு வருதுப்பா. “

நான் மவுனமாக இருந்தேன்.

“இது தப்பாப்பா? எனக்கு ரொம்ப பயம்ம்மா இருக்கு. நான் தப்பு பண்றேனோ?”

நான் இன்னும் அமைதியாக நடந்தேன்.

“அப்பா” என்றாள். பெண் குரல் உடைந்து, ரோடு என்றும் பார்க்காமல் திரும்பி, என் கைகளைப் பிடித்துக்கொண்டு “சாரிப்பா, நான் தப்பா ஏதேனும் சொல்லிட்டேனோ? சாரி..  சாரி” என்று அழுதாள்.

“இல்லேம்மா., நினைச்சுப் பாத்தேன். நீ ஒன்ணாங் கிளாஸ்ல இருக்கறச்சே, ஸ்கூல்ல க்ளாஸ்லயே உச்சா போயிட்டே. ஸ்கர்ட் எல்லாம் நனைஞ்சு .. It was a mess you know?.
அந்த வயசுக் குழந்தைக்கு இயற்கை உபாதையை அடக்கத் தெரியாது. இப்ப நீ எவ்வளவு பெரிய , பொறுப்பான பெண்ணாயிட்டன்னு நினைக்கறச்சேயே, பெருமையா இருக்கு”

“அப்பா?” என்றாள் அவள் குழம்பிப்போய். இதுக்கும், அவள் சொன்னதுக்கும் என்ன தொடர்பு?ன்னு நினைச்சிருக்கலாம்.
“இப்போ கிளாஸ்ல இருக்கறச்சே பாத்ரூம் வந்ததுன்னு வைச்சுக்கோ.
அது இயற்கைன்னு க்ளாஸ்லேயே போயிட முடியுமா? “

“சீ. ச்சீய்” என்றாள் அவள்.
வெட்கமாக, என் கையைக் கிள்ளினாள்.
“கிளாஸ் முடியற வரை அடக்கி வைச்சிருந்து, இண்டெர்வெல்ல ஓடிப்போறேல்ல? அதுமாதிரிதான். இந்த பையன் பத்தின உணர்ச்சியெல்லாம், இயற்கையோட வேலை.

நாம படிக்கறச்சே இதைத் தவிர்த்திடணும். அப்புறம் காலம் வந்தப்போ அதும்பாட்டுக்கு நடக்கும்.”

அவள் கலங்கிய கண்களோடு ஒரு நிம்மதியுடன் என்னைப் பார்த்தாள்.

“So, இனிமே அந்தப் பையனைப் பார்த்தா பாத்ரூம்னு ஞாபகம் வரும் இல்லையா?”

“உவ்வே” என்றாள் போலியாக வாந்தி எடுப்பதாகக் காட்டி. பஸ் திருப்பத்தில் வந்திருந்தது.

எப்படி ஒரு நாசூக்கான விஷயத்தை,”நாயே, அதுக்குள்ள காதல் கேக்குதோ?” என்றெல்லாம் பொங்காமல், மிக அமைதியாக ஒரு பொறுப்புணர்வுடன் கையாண்டு இருக்கிறார்?

வளர்ப்பதில் நாமும் வளர்கிறோம்...

பொறுப்பு தெரிந்திருந்ததால்.....