Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 23 December 2017

DEE - அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகள் | அரசு தகவல் தொகுப்பு மையத்தில் இருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது நிலுவை விவரங்கள் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்.

DEE - அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகள் | அரசு தகவல் தொகுப்பு மையத்தில் இருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது நிலுவை விவரங்கள் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்.

Friday 15 December 2017

மாஸ்டர் அட்டெண்டஸ்-ல் pay band & கிரேடு க்கு பதிலாக தற்போது எழுத வேண்டியது .ஏற்கனவே இருந்த கிரேடு பேக்கு நேரக உள்ள லெவல் எண் மற்றும் ஊதிய விகிதம் எழுத வேண்டும்.உதாரணம்:_ ஏற்கனவே தொ.ப.த.ஆ கிரேடு பே 4500 எனில் அவருக்கு தற்போது.லெவல்-15/36200_114800 என எழுத வேண்டும்.

மாஸ்டர் அட்டெண்டஸ்-ல் pay band & கிரேடு  க்கு பதிலாக தற்போது எழுத வேண்டியது .ஏற்கனவே இருந்த கிரேடு பேக்கு நேரக உள்ள லெவல் எண் மற்றும் ஊதிய விகிதம் எழுத வேண்டும்.உதாரணம்:_ ஏற்கனவே தொ.ப.த.ஆ கிரேடு பே 4500 எனில் அவருக்கு தற்போது.லெவல்-15/36200_114800 என எழுத வேண்டும்.

Saturday 2 December 2017

சார்பதிவாளர் அலுவகத்தில், கிரைய பத்திரம் பதிய என்ன நடைமுறை ? என்ன செலவு ? ஒரு பார்வை !( forward
=============================================
அறியாமையால் அதிகம் கொடுத்து ஏமாறுவதைத் தடுக்கவும்.... அறியாமையால் அளவுக்கு அதிகமாக மக்கள் கொடுப்பதே அதிகாரிகள் கடமையை மறந்து பதிவுத்துறையின் நிர்வாகம் சீரழிகிறது என்ற என் எண்ணத்தின் வெளிப்பாடே இந்நீண்ட பதிவு.... சுருங்கச் சொல்லத் தெரியவில்லை. விளக்க முயன்றிருக்கிறேன்....

குறிப்பு:இப்பதிவைப் பார்த்தவர்கள் இப்பதிவு சரி என்றும், மற்றவர்களுக்கும் பயனாக இருக்கும் என்றும் கருதினால் பகிருங்கள்.... பரப்புங்கள்....

கிரயம் என்னென்ன செலவினங்கள்.... பார்ப்போம்.

ஒரு இடம் வாங்கியிருக்கிறீர்கள் அதை பதிவு செய்யப் போகிறீர்கள். எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.

உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.

ஒரு மனைப்பிரிவு உள்ளது. அம்மனைப்பிரிவில் ஒரு இடம் 5.50 செண்ட் வாங்குவாதாக வைத்துக் கொள்வோம். அம்மனைப்பிரிவு எந்த புல எண்ணில் அதாவது சர்வே எண்ணில் உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். ஆவணத்தின் சொத்து விவரத்தில் சர்வே எண்ணானது கிராமத்திற்கு அடுத்ததாக க.ச. என்றோ, புல எண் என்றோ, சர்வே எண் என்றோ, S.F. என்றோ குறிக்கப்பட்டிருக்கும்.

மேற்சொன்ன மனைப்பிரிவிற்கு புல எண் (க.ச.எண்.) 188/2இ, 191/1ஏ என இரண்டு உள்ளன. இந்த இரண்டிற்கான வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இம்மதிப்பை நீங்களே நேரில் சார்பதிவாளரை அணுகித் தெரிந்து கொள்ளலாம் அல்லது tnreginet என்ற பதிவுத்துறை இணையதள சேவையில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

(இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் வழிகாட்டி மதிப்பு பார்வையிடும் முறை காண்பிக்கப்பட்டுள்ளது)

முக்கியக் குறிப்பை நினைவில் கொள்ளவும் சில
நேரங்களில் இணைய தள மதிப்பிற்கும், சார்பதிவாளர் அலுவலக வழிகாட்டி மதிப்பிற்கு மாற்றம் நிகழ வாய்ப்புண்டு. எனவே பதிவுக்கு முன் இணையதளத்தில் உள்ள மதிப்பேதான் அலுவலகப் பதிவேட்டிலும் உள்ளதா என்பதை சார்பதிவாளர் அலுவலகத்தில் நேரில் சென்று உறுதி செய்த பின்னரே பத்திரம் தயாரிக்க வேண்டும். இல்லையென்றால் பெரிய இழப்பு ஒன்றும் ஏற்படப் போவதில்லை. இன்னொரு முறை நீங்கள் அந்தக் குறைவான ஸ்டாம்ப் பேப்பர், பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இதைத் தவிர்க்க சார்பதிவாளரை அணுகி உறுதி செய்து கொள்வது நலம்.

மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று சார்பதிவாளரிடம் மதிப்பைக் கோரும்போது நீங்கள் வாங்க விரும்பும் சொத்தைக் குறித்து ஏதேனும் நீதிமன்றத் தடை, வருமான வரி துறையின் தடை, நகராட்சியால் தடை, ஊராட்சியால் தடை, புறம்போக்கு நிலம், கோயில் நிலம் முதலான வில்லங்கங்கள் இருந்தால் தெரிந்து கொண்டு அச்சொத்தை வாங்குவதா, அல்லது வாங்குவதற்கு முன் உரிய முறையில் அவ்வில்லங்கங்களைத் தீர்த்து, அதன் பிறகு வாங்குவதா என்று முடிவு செய்து கொள்ள உதவியாக இருக்கும். அதை அறியாமல் நீங்கள் பத்திரம் தாக்கல் செய்யும் போது வழிகாட்டி மதிப்பில் ஏதேனும் வில்லங்க விவகாரம் இருந்து தெரிய வந்தால் தாங்கள் வாங்கிய ஸ்டாம்ப் பேப்பர் கட்டணம், தற்போது டிடியோ, ஆன்லைன் பேமெண்டோ செலுத்துவதால் செலுத்திய பணத்தை இழக்கும் வாய்ப்போ, அதைத் திரும்ப்ப் பெற அல்ல்ல்படவோ வாய்ப்புண்டு.

எனவே உத்தேசமாக செலவு விவரத்தைக் கணக்கிட்டுக் கொள்ள மட்டுமே இணையதள வழிகாட்டு மதிப்பைப் பயன்படுத்திக் கொள்வது நலம். பத்திரம் பதிய முடிவெடுத்தால் சார்பதிவாளரை அணுகி தெரிந்து கொண்டு கணக்கிட்டு பதிவிடுவதே நலம் என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்.

சரி வீடியோவைப் பார்த்திருப்பீர்கள் அதில் முதல் களத்தில் சர்வே எண்ணும், இரண்டாவது களத்தில் பூமியாக இருந்தால் ஏக்கரிலும், இடமாக இருந்தால் சதுரடியிலும் மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கும். மூன்றாவதாக உள்ள களத்தில் பூமியாக இருந்தால் ஹெக்டேரிலும், இடமாக இருந்தால் சதுர மீட்டரிலும் மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கும். நான்காவது களம் பூமியா, இடமா, வணிகப்பகுதியா, குடியிருப்புப் பகுதியா என்ற தன்மை குறிக்கப்பட்டிருக்கும்

சரி இனி கணக்கீடு முறையைக் காண்போம்.

இடத்தின் அளவு கிழமேலடி இருபுறமும் 40 அடி தென்வடலடி இருபுறமும் 60 அடி மொத்தம் 2400 சதுரடி அதாவது ஐந்தரை செண்ட் என்றால் இதற்கு எப்படி மதிப்பு கணக்கிடுவது?

2400 சதுரடியை சதுர மீட்டராக மாற்ற வேண்டும்

எப்படி மாற்றுவது?

சதுரடியை சதுர மீட்டராக மாற்ற 10.764 ஆல் வகுக்க வேண்டும்.
2400/10.764 = 222.97 சதுர மீட்டர்

சதுர மீட்டருக்கு 3770 ரூபாய் என்பதைப் பார்த்திருப்பீர்கள்

எனவே 222.97ஐ 3770 ஆல் பெருக்க கிடைக்கும் மதிப்பே இடத்தின் மதிப்பு 8,40,596,90 இதை முழுத் தொகையாக மாற்றிக் கொள்ள தட பாத்திய மதிப்பு போடுவோம்.

அதாவது இப்படிக் குறிக்கப்படும்
மேற்படி இடத்தின் மதிப்பு ரூபாய்.8,40,597.00
தட பாத்திய மதிப்பு ரூபாய். 403.00
ஆக மேற்படி சொத்தின் தற்கால
மதிப்பு ரூபாய்.8,41,000.00

இந்த 8,41,000/-க்குத்தான் ஸ்டாம்ப் பேப்பர், பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் விவரம் காண்போம்.

ஸ்டாம்ப் பேப்பர் 7 சதவீதம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்துக்கள் என்றால் 8 சதவீதம்
8,41,000X7/100=58,870/- இதை முழுத்தொகையாக்கி 59,000/-க்கு ஸ்டாம்ப் பேப்பர் வாங்கியும் பத்திரம் தயாரிக்கலாம்

அல்லது குறைந்த அளவில் 5 பக்கம் போதுமென்றால் 1000 ரூபாய் பேப்பர் ஐந்து வாங்கி பத்திரம் தயாரித்து விட்டு மீதித்தொகை 53,870 ஐ கட்டணமாகவும் செலுத்தலாம். முழுக்க வெள்ளைத்தாளிலோ, காங்கர் சீட்(பச்சை நிறத் தாளிலோ) தயாரித்து விட்டு முழுத் தொகையையும் செலுத்தலாம். தங்கள் விருப்பம்.

ஸ்டாம்ப் பேப்பர் வாங்கும் போது வெண்டருக்கு 1 சதவீதம் கூடுதலாக செலுத்துவது நடைமுறையில் உள்ளது. அதாவது 1 லட்சத்துக்கு 1000 ரூபாய் கூடுதல் தொகை கொடுக்க வேண்டும். பெரும்பாலும் மக்கள் தாங்களே சென்று பேப்பர் வாங்குவதில்லை பத்திரம் தயாரிப்பவரையே வாங்கித் தயாரிக்க சொல்லி விடுவார்கள்.

அவ்வாறு கொடுக்கும் சில பத்திரம் தயாரிப்பவர்கள்(பத்திரம் தயாரிப்பவர்கள் என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் தற்போது பத்திரங்களை உரிமம் பெற்ற பத்திர எழுத்தர்கள் மட்டும் தயாரிப்பதில்லை அரசு உரிமம் பெறாதவர்கள், வேறு சில இடைத்தரகர்கள், சார்பதிவாளார் அலுவலகம் முன்போ, அருகிலோ ஜாப் டைப்பிங் அலுவலகம் , ஜெராக்ஸ் கடை, ஸ்டேசனரி கடை வைத்திருப்பவர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள், தொடர்ச்சியாக ஒரு மாதம் சார்பதிவாளர் அலவலக எல்லையில் உள்ள டீக்கடையில் அமர்ந்து டீக் குடித்தவர்கள் என சகலமானவரும்)

இப்படிப் பல்வேறாக உள்ள பத்திர எழுத்தர்கள் 1 சதவீதத்திற்குப் பதிலாக இரண்டு சதவீதம் என்று மக்களிடம் கூறிப் பெற்று 1 சதவீதம் அதாவது 1 லட்சத்திற்கு 2000 பெற்று 1000 ஐ வெண்டருக்கு கொடுத்துவிட்டு 1000 ஐ தான் வைத்துக் கொள்வோரும் உண்டு.....

அடுத்து பதிவுக் கட்டணம்
========================
8,41,000/-க்கு கட்டணங்கள் விவரம் கீழே இத்தொகை 1000க்கு மேற்பட்டால் டிடி யாகவோ, ஆன்லைன் ஈபெமெண்டாகவோ செலுத்தவேண்டும்.

மேற்படி வீதம் பதிவுக்கட்டணம் 8,410.00
கணிணிக்கட்டணம் 100.00
உட்பிரிவுக்கட்டணம் 80.00
குறுந்தகடுக்கட்டணம் 50.00
கூடுதல் தாள் கட்டணம் 30.00
மொத்தம் 8,670.00

கூடுதல்தாள் கட்டணம் என்பது ஒரு பத்திரத்தில் 10க்கு மேற்பட்ட தாள்கள் இருந்தால் ஒரு தாளுக்கு ரூபாய்.15 வீதம் எத்தனை தாள்கள் கூடுதலாக உள்ளனவோ கணக்கிட்டு செலுத்த வேண்டும்.(மேற்கண்ட உதாரணத்தில் 12 தாள்கள் இருப்பதாகக் கருதி 2 தாளுக்கு 30 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது)

உட்பிரிவுக்கட்டணம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட சர்வே எண்ணோ, ஒன்றுக்கு மேற்பட்ட மனை எண்ணோ, ஒன்றுக்கு மேற்பட்ட செக்குபந்தியோ உள்ள மனை இடங்களோ இருந்தால் ஒன்றுக்கு ரூபாய்.40 வீதம் கணக்கிட்டு செலுத்த வேண்டும். மேற்சொன்ன உதாரணத்தில் இரண்டு சர்வே எண்கள், அதாவது 188/2இ, 191/1ஏ என இரண்டு சர்வே எண்கள் இருப்பதால் 80 ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக மேற்சொன்ன சொத்தின் மதிப்புக்கு செலுத்தவேண்டிய ஸ்டாம்ப் பேப்பர் ரூபாய்.58,870.00 பதிவுக்கட்டணம் ரூபாய்.8,670.00.

ஆக மொத்த செலவினங்கள் அரசு விதிமுறைப்படி மட்டும் செலுத்துவதென்றால்

ஸ்டாம்ப் பேப்பர் 58,870.00
பதிவுக்கட்டணம் 8,670.00
DD கமிசன் 50.00 (8,670க்கு)
ஆவண எழுத்தர் கட்டணம 400.00 (கட்டண விவரம் தனியாக பதிவிட்டுள்ளேன்)
கம்ப்யூட்டர் டைப்பிங் 300.00
மொத்தம் 68,290.00 மட்டுமே

நடைமுறையில் உள்ளவாறு செலவு விவரங்கள்

ஸ்டாம்ப் பேப்பர் 59,000.00

வெண்டர் கமிசன் 1% 590.00 (ஆனால் 2 % என்று 1200 பெறுவோரும் உண்டு)

பதிவுக்கட்டணம் 8,670.00

DD கமிசன் 50.00

பத்திரம் தயாரிக்க கட்டணம் 1,500.00 (தயாரிப்பரைப் பொறுத்து 1000லிருந்து துவங்கும்)

சார்பதிவாளருக்கு கொடுப்பது 500.00 (10 லட்சம் வரை 500 விவரம் தனியாக)

அலுவலக உதவியாளர் 100.00

மொத்தம் 70,410.00

ரவுண்டு செய்து 70,500.00

ஒரு பத்திரம் தயாரிப்பவரிடம் 8,41,000/-க்கு கிரயச் செலவு எவ்வளவு என்று கேட்டால் மேற்படி வீதம் கணக்கிட்டு எது எதற்கென்று விவரங்களைக் குறிப்பிடாமல் 70,500 என்று சொல்வாகள். விவரம் கேட்டு நீங்கள் வலியுறுத்தினால் மேற்படி விவரங்களில் தங்கள் கட்டணமாக 1000 என்று கூறிவிட்டு சார்பதிவாளருக்கு 500க்கு பதிலாக ஆயிரம் என்று கூறிவிடுவார்கள். நீங்கள் அவரிடம் பவ்யமாக குறைக்கச் சொல்லிக் கேட்டால் 500 குறைத்துக் கொள்ளுங்கள் என்றால் நீங்களும் பெருமையாக மிக்க நன்றியுடன் 70,000 கொடுத்து விட்டு விடுவீர்கள். இது நார்மலாக உள்ள குறைந்த கட்டணம்.

மதிப்புக் கூடக் கூட ஆவணம் தயாரித்தவர் கட்டணம் பல்லாயிரங்களாகும். ஆனால் அது அவர் பெறும் கட்டணம் என்று கூற மாட்டார் எனக்கென்னங்க ஆயிரமோ, ரெண்டாயிரமோ நிற்கும் ஆபிசுக்கு கொடுக்கவே சரியாப் போயிடும்னு சொல்லுவாரு...

இன்னொரு விதமான கணக்கு இருக்கு அது எப்படி தெரியுமா(இந்தக் கணக்கு முதல்ல விஐபி அந்தஸ்தில் உள்ள பத்திரம் தயாரிப்பவர்கள் தான் பெற்று வந்தார்கள்.

இன்று அறியாத மக்கள் வந்து விட்டால் பத்திரம் தயாரிப்பவர்கள் 9 சதவீதம் மட்டுமல்ல 10 சதவீதக் கணக்கில் கூட பெற்றுவிடுபவர்கள் உண்டு. நாம் 9 சதவீத்த்திற்கு மட்டும் கணக்கிட்டுப் பார்ப்போம்.

பேப்பர் 7 பர்சென்ட்ங்க, பீஸ் 1 பர்சென்ட்டுங்க, மத்த செலவு அதாவது பேப்பர் கமிசன், டைப்பிங், பிரிண்டிங், ஜெராக்ஸ், SR, பியூன், இதர செலவு எல்லாம் சேர்த்து 1 பர்சென்ட்ங்கன்னா நீங்க நினைச்சுக்கவீங்க அப்பா பரவாயில்ல எல்லாம் சேர்ந்து 1 பர்சென்ட்தானே இத எப்படி குறைக்கச் சொல்ல முடியும்னு நினைச்சுக்குவீங்க...

இந்தக்கணக்குப் படி 9 சதவீத்த்திற்கு எவ்வளவுன்னு பார்ப்போமா

8,41,000/-க்கு கணக்கிடுவோமா... 8,41,000 X 9 / 100 =75690/-

அவரே 690 ஐ பெருந்தன்மையாக கழித்து விட்டு 75000 கொடுங்க பத்திரத்தை வாங்கிக் கொடுத்துவிடுகிறோம் என்று கூறினால் நம் மக்களுக்கு மகிழ்ச்சி கேட்கவா வேண்டும்....

75000 வாங்கியவர் என்ன செய்வார் கீழ்க்கண்டவாறு கொடுப்பார்

ஸ்டாம்ப் பேப்பர் 59,000.00
வெண்டர் கமிசன் 1% 600.00
பதிவுக்கட்டணம் 8,670.00
DD கமிசன் 50.00
சார்பதிவாளருக்கு கொடுப்பது 1,000.00
அலுவலக உதவியாளர் 100.00
ஜெராக்ஸ் முதலான சிறு செலவுகளுக்கு 100.00
மொத்தம் 69,520.00

75,000 இல் 69,600 போனால் பாக்கி 5,400/- யாருக்கானது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அரசு கட்டணப்படி ஆவண எழுத்தர் பெற வேண்டிய அதிகபட்ச கட்டணம் 400/ (இக்கட்டணத்தில் ஒருவர் அலுவலகம் வைத்து தொழில் செய்ய முடியுமா என்பது வேறு)

10 லட்சத்துக்கு குறைவான மதிப்புக் கொண்ட பத்திரங்களுக்கு சார்பதிவாளருக்கு 500 என்பது எழுதப்பட்ட விதி அல்ல. அதாவது ஆவணங்களுக்கு சார்பதிவாளருக்கு லஞ்சமாக எவ்வளவு கொடுப்பது என்று சார்பதிவாளர்களும், இடைத்தரகர்களும் ஏற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கைப்படி.
உடுமலைப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் எதிர்பார்க்கும் தொகை பத்து லட்சத்துக்கு 1000 என்ற வீத்த்தில்தான். ஆனால் ஒரு சிலர் இதில் பல மடங்கு சார்பதிவாளர்கள் பெயரைச் சொல்லிப் பெற்று இந்த 1000க்கும் குறைவாகவே கொடுப்பதும். அதையே நாளை தருகிறேன் என்று இழுத்தடிப்பதும் சார்பதிவாளர்களுக்கும், இடைத்தரகர்களுக்கும் இடையில் இருக்கும் வரவு செலவுப் பிரச்சினை.

இதற்கு சார்பதிவாளர்கள் சிலர் ஒரு தந்திரம் செய்வார்கள். என்னவென்றால் அதிகமாகப் பத்திரம் பதிவு செய்யும் பத்திரம் தயாரிப்பவர் மூலம் ஒரு பெருந்தொகை 1 லட்சம், 2 லட்சமோ பைனான்ஸ் பெற்று விடுவது. அப்பைனான்ஸ்கார்ருக்கு அந்த பத்திரம் தயாரிப்பவர் தான் பதிவு செய்யும் பத்திரங்களுக்கு ஏற்ப கணக்கு கொடுத்து கழித்து வரவேண்டியது. சார்பதிவாளரும் கணக்கு வைத்துக் கழித்து வருவார். இப்படியும் சில சார்பதிவாளர்கள் இம்முறையைக் கடைபிடித்தும் வருகிறார்கள். அதற்காக தற்போதிருக்கும் உடுமலைப்பேட்டை சார்பதிவாளர் அப்படியா என்று கேட்டால் எனக்கு தெரியாது.

சில சார்பதிவாளர்கள் இவ்வளவு கொடு என்று கேட்பதற்கான காரணத்தில் ஒன்று என்னவென்றால், சார்பதிவாளர் பெயரைச் சொல்லி பெருந்தொகை பெற்றுவிட்டு பல மடங்கு குறைவாகக் கொடுப்பதும் அத்தொகையையும் தவணை முறையில் கொடுப்பதுமாகும்.

கூட்டுக் கொள்ளை அடிப்பதில் நேர்மை இல்லையாம். மக்களிடம் ஏமாற்றுவது தவறாகத் தெரிவதில்லை. மக்களிடம் அதிகமாகப் பெற்றுவிட்டு குறைத்துக் கொடுப்பவர் அதிகாரிகளைப் பொறுத்தவரை ஏமாற்றுக்காரர்.
மக்களிடம் சார்பதிவாளர் பெயரைச் சொல்லி எவ்வளவு தொகை பெற்றாலும் தான் கொடுப்பதை மறுக்காமல் வாங்கிக் கொள்ளும் சார்பதிவாளர் இடைத்தரகரின் அபிமானத்திற்குரியவர். அதே சார்பதிவாளர் இடைத்தரகர்களின் தகிடுதத்தம் தெரிந்தவராக இருந்து எப்படியும் இந்த இடைத்தரகர் இவ்வளவு வாங்கியிருப்பார் என்று சரியாகக் கணித்து எனக்கு இவ்வளவு கொடுத்தே ஆக வேண்டும என்று கேட்டால் அவர் பணத்தாசை பிடித்தவர். எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது என்று பொது மக்களிடம் அச்சார்பதிவாளரைக் குறைபேசி வழக்கத்தை விட சேர்த்தும் பெற்று விடும் திறமையான இடைத்தரகர்களும் இருக்கிறார்கள்.

சரி விட்டதிலிருந்து தொடர்வோம்....

எட்டரை லட்சத்துக்கு 5400 என்றால் பல பத்து லட்சங்கள் மதிப்புள்ள பத்திரங்களுக்கு எவ்வளவு என்று கணக்கிட்டுப் பாருங்கள்.

மீண்டும ஓர் உதாரணம் பார்ப்போமா

சொத்தின் மதிப்பு ரூபாய்.60 லட்சம் என்று வைத்துக் கொள்ளுங்கள்

9 சதவீதம் என்று கூறினால் எவ்வளவு 5,40,000/-
என்னென்ன செலவு கணக்கிடுவோமே

ஸ்டாம்ப் பேப்பர் 4,20,000.00
வெண்டர் கமிசன் 1% 4,000.00
(4 லட்சத்துக்கும் பேப்பராக போட்டால்)
பதிவுக்கட்டணம் 60,000.00
கணிணிக்கட்டணம் 100.00
உட்பிரிவுக்கட்டணம் 80.00
குறுந்தகடு கட்டணம் 50.00
கூடுதல்தாள் கட்டணம் சுமார் 150.00
DD கமிசன் 500.00
சார்பதிவாளருக்கு கொடுப்பது 6,000.00
அலுவலக உதவியாளர் 500.00
ஜெராக்ஸ் முதலான சிறு செலவுகளுக்கு 620.00 (முழுமைப்படுத்த)
மொத்தம் 4,92,000.00

இவைதான் செலவு இதைவிட 500 லிருந்து 1000க்குள் குறைவாகலாம். ஸ்டாம்ப் பேப்பர் 2 லட்சம அல்லது இரண்டரை லட்சத்துக்கு மேல் போட மாட்டார்கள். அவ்வாறு குறைந்தாலும் 4,90,000 மட்டுமே மேற்படி வீதம் செலவாகும். மேற்படி செலவுகள் போக பத்திரம் தயாரித்தவருக்கு எவ்வளவு கட்டணம் கொடுக்கலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அரசு கட்டணப்படி பார்த்தால் 400/- தான் கொடுக்க வேண்டும். 400 பெற்று என்ன செய்ய முடியும் என்பதை மக்களே அறிவர். எவ்வளவு கொடுத்தால் நியாயமான கட்டணமாக இருக்கும் என்பதை மக்களே முடிவு செய்யுங்கள்.

எவ்வளவு கேட்பார்கள் என்று ஒரு சோதனை முயற்சியாக
(***** மேற்கண்ட கணக்கீடை கையில் வைத்துக் கொண்டு பத்திர எழுத்தர்களையோ, இடைத்தரகர்களையோ விசாரியுங்கள். அவர்கள் சொல்லும் மொத்தச் செலவில் அவர்கள் கட்டணம் எவ்வளவு என்று தெரிந்து விடும். தனித்தனியாக கணக்குக் கேளுங்கள். மேற்குறிப்பிட்ட எத்தொகை வித்தியாசமாக உள்ளது என்பதை அறிந்து அது குறித்து விசாரியுங்கள். ****)

**** க்கு விளக்கம் அடுத்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது

முன்சொன்னவாறு 9 சதவீதக் கணக்குப் படி பார்த்தால் 60 லட்சத்துக்கு 5 லட்சத்து நாற்பதாயிரம் அதில் நீங்களே குறைக்கச் சொன்னால் எவ்வளவு குறைக்கச் சொல்லுவீர்கள். தயங்கி 5000 அல்லது பத்தாயிரம் குறைக்கச் சொல்வீர்களா? அப்படி பத்தாயிரம் குறைத்துக் கொடுத்தாலும் எவ்வளவு கொடுப்பீர்கள். 5 லட்சத்து முப்பதாயிரம் கொடுப்பீர்களா? அந்த 5 லட்சத்து முப்பதாயிரத்தில் மேலே கணக்கிட்ட கணக்கீட்டுப்படி 4 லட்சத்து தொண்ணுறாயிரத்தைக் கழித்தால் 40000/- யாருக்கு?

இவ்வாறு சதவீதக் கணக்கிட்டு வாங்குபவர் தன் கட்டணம் 40000 என்று சொல்வாரா...ரசீது கொடுக்க வேண்டாம்.... இதே மதிப்புள்ள பத்திரத்திற்கு இரண்டாயிரமோ, ஐந்தாயிரமோ வாங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள். 40000 பெறும் சிலரும் இருக்கிறார்கள். 5000 பெறுபவர் தயாரிக்கும் பத்திரத்திற்கும் 40000 பெறுபவர் தயாரிக்கும் பத்திரத்திற்கும் என்ன வித்தியாசம்? ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறோமா.....
ஏன் இவ்வாறு விவரிக்கிறேன் என்றால் சார்பதிவாளரும், அலுவலகப் பணியாளர்களும் தங்கள் கடமையை உணராமல் பணவெறி பிடித்து மக்களைஅல்ல்ல்படுத்துவதற்கு சார்பதிவாளர் பெயரைச் சொல்லி அதிகத் தொகை பெறும் இடைத்தரகர்கள்தான் முதன்மைக் காரணம் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே....

உரிமம் பெற்ற பத்திர எழுத்தராக இருந்தாலும், வேறு இடைத்தரகராக இருந்தாலும் மக்களிடம் கூலி பெறுபவர்கள்தான்.... சாதாரணக் கூலிஅல்ல... வயிற்றுப் பிழைப்பிற்கான கூலி அல்ல.... .வசதியான ஆடம்பரமான வாழ்வு வாழ்வதற்கான கூலி.... ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தே கொடுப்பவர்களும் உண்டு... பழகிவிட்டோம் என்றும்.... பரவாயில்லை சாப்பிடட்டும் என்றும்.... அறியாமலும் ...... வேறு வகையற்றும்...... இப்படிப் பல வகைகளில் கொடுப்போரும் உண்டு.

ஆனால் எப்படியோ கொடுத்துச் செல்லும் மக்களின் ஆவணங்கள் முறையாகப் பதிவிடப்படுகின்றனவா... குறிப்பிடப் படுகின்றனவா... வில்லங்க சான்றுகள் 100 சதவீதம் வேண்டாம் ஒரு பெரும்பான்மையாகவாவது நம்பகத்தன்மை உள்ளதாக இருக்கின்றனவா.... இல்லையே.... இவையெல்லாம் மக்களுக்குத் தெரியாதே.... இங்கேயே இருக்கிற எங்களுக்குத்தானே தெரியும்...
இதைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை மக்களிடம் வசதியான வாழ்வு வாழக் கூலி பெறுபவர்களுக்கு இல்லையா.... இல்லை..... இல்லவே இல்லை....

அதனால்தான் அதிகாரிகளின் அடிமைகளாக..... மக்களிடம் பணம் பறித்துக் கொடுக்கும் கைக்கூலிகளாக வெட்கமற்று இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க மறந்தது மிகவும் வேதனையாக இருப்பதுடன் தீர்வு காண வழியின்றியே கீபோர்டைத் தட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறேன்........ சிறு தீர்வாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.... மாற்றத்திற்கு இது ஒரு சிறு பொறியாகவாவது இருக்கக் கூடாதா என்ற ஆதங்கத்தில்......

தொடரும்.

கீழே உள்ள வீடியோவில் வழிகாட்டிமதிப்பு பார்ப்பது எப்படி என்று காண்பிக்கப்பட்டுள்ளது.

Note : இது பழைய பதிவு. தற்போதுள்ள கட்டணத்தை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.

Wednesday 22 November 2017

Sunday 12 November 2017

RH (2018) - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

RH (2018) - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

🌟  *ஜனவரி:*

1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.
2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.
3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.

🌟  *பிப்ரவரி:*

1. 13.02.2018 - செவ்வாய் - போகிப் பண்டிகை.
2. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.

🌟  *மார்ச்:*

1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.
2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.
3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.

🌟  *ஏப்ரல்:*

1. 01.04.2018 - ஞாயிறு - ஈஸ்டர் டே.
2. 14.04.2018 - சனி - அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ்.
3. 29.04.2018 - ஞாயிறு - சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி.

🌟  *மே:*

1. 01.05.2018 - செவ்வாய் - ஷபே பரா அத்.
2. 17.05.2018 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள் நோன்பு.

🌟  *ஜூன்:*

1. 11.06.2018 - திங்கள் - ஷபே காதர்.

🌟  *ஜூலை:*

1. RH இல்லை.

🌟  *ஆகஸ்ட்:*

1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.
2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.
3. 24.08.2018 - வெள்ளி - வரலெட்சுமி விரதம்.
4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.
5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.
6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.

🌟  செப்டம்பர்:*

1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.
2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.

🌟  *அக்டோபர்:*

1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.

🌟  *நவம்பர்:*

1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.
2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.
3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.

🌟  *டிசம்பர்:*

1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.
2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.
3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.
4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.