Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday 29 June 2017

G.O MS 127 - தொடக்க/நடுநிலைப்பள்ளிகள் - பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களாக மாற்றப்பட்டதற்கான அரசாணை 

*பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?* *1.incometaxindiafiling.gov.in *இணையதளத்திற்கு செல்லவும்* 2. *services கீழ் உள்ள link Aadhaar* *இணைப்பை கிளிக் செய்யவும்* 3.பான் எண், *ஆதார்* எண், *பெயர் பதிவிட்டு Link Adhaar பட்டனை கிளிக் செய்தால் இணைந்து விடும்* https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html

*பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?*
*1.incometaxindiafiling.gov.in *இணையதளத்திற்கு செல்லவும்*

2. *services கீழ் உள்ள link Aadhaar* *இணைப்பை கிளிக் செய்யவும்*

3.பான் எண், *ஆதார்* எண், *பெயர் பதிவிட்டு Link Adhaar பட்டனை கிளிக் செய்தால் இணைந்து விடும்*

https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html

Monday 26 June 2017

மருத்துவப ்படிப்பில் இடம் கிடைக்குமா? சேர்க்கை நிலவரம்  என்ன? உண்மை நிலை விளக்கமும், எமது கணிப்பும்! --------------------------

----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------

1) தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ள மொத்த படிப்பு இருக்கைகள்   (Govt college seats) = 3,050
2) இதில், 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு இருக்கைகள் (All India Quota seats) = 456
3) மீதமுள்ள, 85 சதவீத மாநில  ஒதுக்கீட்டு இருக்கைகள் (TN govt seats) = 3,050 - 456 = 2,594
4) இந்த 2594 இருக்கைகளில், மாநிலப் பாடத்திட்ட ஒதுக்கீட்டு இருக்கைகள் (85 சதவீதம்) = 2,203
5) CBSE உள்ளிட்ட பிற பாடத்திட்ட ஒதுக்கீட்டு
இருக்கைகள் (15 சதம்) = 391
6) மேற்கூறிய அனைத்தும், அரசுக் கல்லூரி இருக்கைகள் என்பதை நினைவில் கொள்ளவும்.
இது போக,  சுயநிதிக் கல்லூரிகள் கொடுக்க வேண்டிய அரசு இருக்கைகள் = 664

மொத்த இருக்கைகள் = 2,594+664=3,258

இத்தகவல்கள் அனைத்தும் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்த  அதிகாரபூர்வமான தகவல்கள் ஆகும்.

7) அரசு (2,594+664) இருக்கைகள் மொத்தம் 3,258 இடங்கள் இருந்தாலும், இங்கு சேர்க்கை குறித்து நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் இருக்கைகள் = 2,203 மட்டுமே. இந்த 2,203 இடங்கள் மட்டுமே அரசுக் கல்லூரிகளின் மாநிலப் பாடத் திட்ட இருக்கைகள் ஆகும்.
8) இந்த 2,203 இடங்களும் பின்வருமாறு
இடஒதுக்கீடு முறையில் வழங்கப்படும்.

அ) திறந்த போட்டி (OPEN) 31% = 683
ஆ) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் BC 30% = 661
இ) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் MBC 20% = 441
ஈ) பட்டியல் சாதியினர் SC 18% = 396
உ) பழங்குடியினர் ST 1% = 22

ஆக மொத்தம் = 2,203 இருக்கைகள்.

10) சேர்க்கை கிடைக்குமா என்று கணக்கிடும் முறை:
-------------------------------------------------------------------------------------------------
ஒரு மாணவருக்கு சேர்க்கை கிடைக்குமா என்று பரிசீலிப்பதற்கு,
அ) அவரின் நீட் மதிப்பெண்
ஆ) அவரின் சாதிக்குரிய (community) ஒதுக்கீடு ஆகிய இரண்டு காரணிகளையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

உதாரணமாக,
ஒரு BC மாணவர் என்றால், மொத்தமுள்ள 2,203 இடங்கள், அவரைப் பொறுத்து, 1344 இடங்களாகச் சுருங்கி விடும். அதாவது MBC/SC/ST இடங்களான 859 இடங்களுக்கு  அவர் போட்டியிட இயலாது.

மேலும், BC க்குரிய 30 சதம் இருக்கைகளில் 3.5 சதவீதம் முஸ்லீம் மதத்தினருக்குச் சென்று விடும். அதாவது, BCக்குரிய இருக்கைகளான 661இல் முஸ்லிம்களுக்கு 77 இருக்கைகள் ஒதுக்கப் படுகின்றன. இது போக, மீதியுள்ள 584 இருக்கைகளுக்கு மட்டுமே (26.5%) முஸ்லீம் அல்லாத ஒரு BC போட்டியிட இயலும். கணக்கிடும் போது இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

நீட் தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் மொத்தம் 740 பேர் உள்ளனர். இவர்களுக்கு ceteris paribus உறுதியாக இருக்கை கிடைக்கும். இவர்களுக்கு கிடைத்த இருக்கைகள் போக, மீதியுள்ள இருக்கைகள் 400க்கு குறைவாக எடுத்தவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

எமது முதல்கட்டக் கணிப்பு!
-----------------------------------------------------
1) பொதுவாக, ceteris paribus,  நீட்டில் 225 மதிப்பெண் அல்லது percentile score 75 உள்ள மாணவர்களுக்கு, அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இருக்கைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
2) 300 மதிப்பெண் அல்லது percentile score 85 உள்ள மாணவர்களுக்கு அரசுக் கல்லூரி இருக்கைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 
3) இக்கணிப்பு தோராயமானதே. மாநில அரசு வெளியிடும் தரவரிசைப் பட்டியல் வெளிவந்த பின்னரே, இன்னும் நெருக்கமான தோராயத்துடன் (still closer approximation) கணிக்க இயலும்.
4) இது ஒரு OPTIMISTIC கணிப்பு.

தோழமையுடன்,
பி இளங்கோ சுப்பிரமணியன்  Ilango Pichandy 
நியூட்டன் அறிவியல் மன்றம்
சென்னை.

பின்குறிப்பு:
1) இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும் 3ஆம் பாலினரையும் குறிக்கும்.
2) CETERIS PARIBUS = other things remaining constant.
(நீதிமன்றத் தீர்ப்புகளாலும் பிற காரணிகளாலும் நிலைமை  மாறக்கூடும்). 
Copied

RL

RL

Sunday 25 June 2017

PF" CALCULATION METHOD

"PF" CALCULATION METHOD





உங்க PF பணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் சட்டம்-1952 (அ) தொழிலாளர் சேமநல நிதி 1952 என்பது இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொடங்கப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.


இதனால் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகையும், மாத ஓய்வூதியம் ஆகியவை அளிக்கப்படுகின்றன. தொழிலாளரின் மாதாந்திர சம்பளத்தில் தொழில் தருவோர் சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பங்களிப்புச் செய்து வட்டியுடன் ஒய்வின் முடிவில் தொழிலாளர்களுக்கு திருப்பி தரப்படும் . இந்தப் பங்களிப்புப் பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் திரும்ப பெற்று கொள்ளலாம்


1971 முதல் ஓய்வூதியத் திட்டத்தையும் சேமநல நிதி திட்டத்துடன் சேர்த்து இந்திய அரசாங்கம் நாடு முழுவதும் இதனை செயல்படுத்தி வருகிறது .   ஒரு தொழிலாளரின் சம்பளம் ரூ. 15000 க்கு கீழ் எனில்  பிஎப் கட்டாயம். ஆனால் தொழிலாளரின் சம்பளம் ரூ.15000க்கு மேல் எனில் தொழிலாளர் விருப்பப்படாவிட்டால் பிஎப் பிடிக்க தேவையில்லை.  


தொழிலாளர் வாங்கும் சம்பளம் மற்றும் இதர படிகளின் மொத்தக்கூட்டுத் தொகையில் 12 சதவிகிதத் தொகையை தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிர்வாகம் அதே 12 சதவிகிதத் தொகையை அந்தத் தொழிலாளர் பெயரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் செலுத்த வேண்டும். இதில் 8.33 சதவிகிதத் தொகை தொழிலாளர்களது குடும்ப நல ஓய்வூதியத்திற்கும், மீதமுள்ள 3.67 சதவிகிதத் தொகை அந்தத் தொழிலாளரின் வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்படும். பிஎப் பணத்துக்கு  ஆண்டுக்கு 8.65 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.


உதாரணமாக:


 ஒருவர் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி(டிஏ) சேர்த்து ரூ.25000  வாங்குகிறார் என்றால் அவரிடம் இருந்து 12 சதவீதம் அதாவது  ரூ. 3,000  பிஎப் பணம் பிடித்தம் செய்யப்படும்.  இதேபோல் நிறுவனமும் ரூ. 3,000 பணத்தை செலுத்தும்.  


ஆனால் அதில் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. 25000 ரூபாயில் 3.67 சதவீதம் அதாவது ரூ. 917.50  பணத்தை தொழிலாளரின் பங்களிப்பாக அவரது கணக்கில் நிறுவனம் சேர்க்கும் . 


இதேபோல் 25 ஆயிரம் ரூபாயில்  15 ஆயிரம் ரூபாயை கழித்துபோக மீதமுள்ள 10000த்தில் தான்  8.33 சதவீதம் பணத்தை (ரூ.832.50 காசு தான்)  தொழிலாளரின்  வைப்பு நிதி கணக்கில் சேர்க்கப்படும். ஆக மொத்தம் அவரது கணக்கில்   நிறுவனம் சார்பாக ரூ. 917.50+ரூ.832.50 சேர்த்து 1750 மாதந்தோறும் சேர்க்கப்படும்.  


நில்லுங்க... 3000 ரூபாய் வர வேண்டுமே ஆனால் ரூ1750 தானே போடுகிறார்கள் என்று தோன்றுகிறதா?  ஏனெனில் மீதமுள்ள 1250 ரூபாய் பென்சன் திட்டத்துக்கு போய்விடும். அதுவும் கணக்குல சேர்த்துக்குவாங்க.


எனவே ஓராண்டு முடிவில் அவர் கணக்கில் உள்ள பணத்துக்கு 8.65 சதவீத வட்டி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டு முடிவிலும்  இதேபோல் 8.65  வட்டி வழங்கப்படும்.  இப்ப கணக்கு போட்டு பாருங்க உங்க பிஎப் கணக்குல எவ்வளவு வரும்னு ஈஸியா தெரிஞ்சிக்கலாம்.


பணத்தை எப்படி எடுப்பது?


ஒருவர் சுய விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறும் பொழுது அந்த உறுப்பினர் தனது வைப்புக் கணக்கை முடித்துக் கொண்டு பணத்தைப் பெறலாம். ஆனால் அந்த உறுப்பினர் வேறு ஒரு தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம் நடைமுறையில் இருக்கும் நிறுவனத்தில் சேர்ந்தால் அவரது கணக்கு புதிதாகச் சேர்ந்த நிறுவனத்தின் கணக்குடன் சேர்த்துக் கொள்ளப்படும். 


ஒருவர் பணியில்  இருந்து விலகிய பின்னர் 60 நாட்களாக வேலையில்லாமல் இருந்தாலோ, அல்லது  பிஎப் வசதி உள்ள நிறுவனத்தில்   வேலை செய்யாமல் இருந்தாலோ ,  பிஎப் கணக்கை முடித்துக்கொண்டு மொத்த பணத்தையும் எடுக்கலாம். ஆனால் வேலையில் இருக்கிறார் என்றால், அவர் 57 வயதில் தான் 90 சதவீத பணத்தை எடுக்க முடியும். இதேபோல் 58 வயதில் மீதமுள்ள 10 சதவீத பணத்தை எடுக்க முடியும்.

Thursday 22 June 2017

கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான தகவல்கள்!!

கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான தகவல்கள்!!

கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு

1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?

இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

2.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
ஆம்,  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

3.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?
தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 1:தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு1

4.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார்,  அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?
உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது,  இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.

5.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?
இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.

6.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?
இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

7.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?
1. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.
2. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம். 1:தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு1
3. இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.
4. இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.
5. இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.
6. நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.
7. கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.
8. வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.
இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.

8.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற  நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு?
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.

9.கேள்வி:- அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?
காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து  கணக்கிடப்படுகிறது.

10.கேள்வி:- காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்? 1:தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு1
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும்,  ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.

11.கேள்வி:- என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3,  என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார்,  நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன்,   என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?
அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,  எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம்,  ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.

12.கேள்வி:- என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன்,  5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை,  எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன்,  நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?
தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்,  ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.

13.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா?
கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03,08,1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும்,  மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

14.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது,  ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்,
தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.

15.கேள்வி:- திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா?
திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.

16.கேள்வி:- மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?
கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
1. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).
2. அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.
3. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.

Wednesday 21 June 2017

G.O's

உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (மறுபதிப்பு)

உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை

1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- ரூ.600/-
2. அழகப்பா பல்கலைக்கழகம்- ரூ.500/-
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்-ரூ.500/-

4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -ரூ.200/-
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்- ரூ.1000/-
6. பாரதியார் பல்கலைக் கழகம்- ரூ.500/-
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -ரூ.1000/-
8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்

9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -ரூ.1500/-
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் ரூ.500/-
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்-
ரூ.500/-
12. பெரியார் பல்கலைக் கழகம்- ரூ.250/-
13. Tamilnau Teacher Education University ரூ.350/-
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- ரூ.500/-

ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள் 

ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில்
தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள்  !!!

ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில்  பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.

*1, திங்களூர் (சந்திரன்):*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*காலை 6மணி*

ஒன்பது  நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான். நீங்கள்  கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி  கிளம்பலாம்.

*2, ஆலங்குடி (குரு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 7.30மணி*

ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள்  சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு  8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்

காலை 8.30 மணிக்குள்  இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்

*3, திருநாகேஸ்வரம் (ராகு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 9.30*

கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் ஹ  10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி  பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க  ஒரு மணி நேரம் ஆகும். பின்னர்  கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு  புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.

*4, சூரியனார் கோவில் (சூரியன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 11.00மணி*

நீங்கள்  11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

*5, கஞ்சனூர் (சுக்கிரன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 12.15*

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால்  மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே  12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.

*6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*மாலை 4மணி*

நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை  20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம்.  மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

*7, திருவெண்காடு (புதன்) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 5.15மணி*

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம்  மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.

*8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 6.15மணி*

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம்.  ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்

*9, திருநள்ளாறு (சனி) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*இரவு 8.00மணி*
நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால்  8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம்  தரிசிக்கலாம்.

9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்....