Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday 28 November 2019

டிசம்பர் 4: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

டிசம்பர் 4: தமிழ்நாடு  தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.

Sunday 3 November 2019

அறிவியல் பெயர்

அறிவியல் பெயர்

பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய நீதிமன்றத்தில் வழக்கு விபரம்

சுந்தரி என்பவர் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் தட்டச்சராக பணியில் சேர்ந்தார். பின்னர் அவர் வட்டாட்சியராக பதிவு உயர்வு பெற்று சேலத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சேலம் ஊழல் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் ஆய்வாளரால் 2.12.2014 ஆம் தேதி மேற்படி சுந்தரி கைது செய்யப்பட்டு, அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவுகள் 13(2) உ/பி 13(1)(d) ஆகியவற்றின் கீழ் குற்ற எண் 6/AC/2014 என்ற எண்ணின் கீழ் லஞ்சம் வாங்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனால் அவரை தமிழ்நாடு குடிமைப் பணி விதிகளில் விதி 17 (e) (2) ன்படி பணியிடை நீக்கம் செய்து, ஓர் உத்தரவினை R. O. C. 36463/2014/A2 என்ற எண்ணின் கீழ் ஒரு உத்தரவை சேலம் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்திருந்தார். 

அதன்பிறகு சுந்தரி மீது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கிலும், துறை ரீதியான நடவடிக்கையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால் சுந்தரி நீண்ட காலமாக பணியிடை நீக்கத்திலேயே இருந்து வந்துள்ளார் . அதனால் சுந்தரி தன்னை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை இரண்டு முறை தாக்கல் செய்தார். ஆனால் மாவட்ட ஆட்சியர் அந்த கோரிக்கை மனுக்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சுந்தரி தனது கோரிக்கை மனுக்களை சேலம் மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி W. P. NO - 30398/2015 என்ற எண்ணின் கீழ் ரிட் மனு தாக்கல் செய்தார். 

அதனை விசாரித்த தனி நீதிபதி உச்சநீதிமன்றம் "அஜய்குமார் செளத்ரி Vs யூனியன் ஆப் இந்தியா (2015-7-SCC-291)"  என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை அடியொற்றி, சுந்தரியை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, அவரை அதிக முக்கியத்துவம் இல்லாத பணியில் சேர்க்கும்படி தனியமர் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் சுந்தரியின் கோரிக்கை மனுக்களை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் அவரின் கோரிக்கை மனுக்களை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தார். அதனால் குறையுற்ற சுந்தரி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

சுந்தரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தால் "W. P. NO - 18326 /2015, G. செல்லையா Vs முதன்மை செயலாளர் மற்றும் வணிகவரி ஆணையர்" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். மேலும் ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை போல் தற்போது தாக்கல் செய்திருக்கும் வழக்கிலும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

உச்சநீதிமன்றம் "அஜய்குமார் செளத்ரி Vs யூனியன் ஆப் இந்தியா" என்ற வழக்கில், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டால், அது தற்காலிகமான ஒன்றாகவும், குறுகிய காலம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். பணியிடை நீக்க காலம் நீட்டிக்கப்படுவது விதிவிலக்காக இருக்க வேண்டுமே தவிர, தொடர்ந்து நடைபெற்று வருகிற ஒரு செயலாக இருக்கக்கூடாது. 

அதனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நபருக்கு ஏற்படுகிற மன வருத்தம், சமூகத்தில் நன்மதிப்பு இழத்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எப்போது விசாரித்து தீர்மானிக்கப்படும் என்பதை அறியாமல், மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் போது, அந்த குற்றச்சாட்டு மெய்பிக்கப்படும் வரை அவரை நிரபராதியாக கருதப்பட வேண்டும். 1948 ஆம் ஆண்டு உலகளாவிய மனித உரிமை பிரகடனத்தில் கட்டளை 12 ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. 

"அந்த நபருடைய அந்தரங்கம் குடும்பம், வீடு அல்லது தொடர்புகள் அல்லது அவருடைய மதிப்பு மற்றும் மரியாதை ஆகியவற்றில் தலையிடுவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை உரிமையுமில்லை. அத்தகைய தலையீடுகள் அல்லது தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான உரிமை ஒவ்வொரு நபருக்கும் உள்ளது. 

எனவே பணியிடை நீக்கம் உத்தரவானது 3 மாதங்களுக்கு மேல் நீட்டிக்கக்கூடாது. அந்த காலக்கெடுவிற்குள் குற்ற அறிக்கை அந்த ஊழியர் மீது தாக்கல் செய்யப்படவில்லை என்றால் அல்லது தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவருடைய பணியிடை நீக்கம் குறித்து உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது. 

இந்த தீர்ப்பை பின்பற்றி மத்திய அரசின் முதன்மை செயலாளர் 23.7.2015 ஆம் தேதி கடித எண் 13519/N/2015-1 என்ற கடிதத்தை அனைத்து மாநில முதன்மை செயலாளர்களுக்கும், துணை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ளார். 

எனவே ஒரு அரசு ஊழியரை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை 3 மாதங்களுக்கு மேல் துறைத் தலைவர் நீட்டிக்கக்கூடாது. ஒருவேளை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை துறைத் தலைவர் தனது உத்தரவில் குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடாமல் ஒரு அரசு ஊழியரை நீண்ட காலம் பணியிடை நீக்கத்திலேயே வைத்திருக்கக்கூடாது என நீதிபதி R. சுப்பையா தீர்ப்பு வழங்கினார். 

W. P. NO - 34689/2016, DT - 3.11.2016

K. சுந்தரி Vs மாவட்ட ஆட்சியர், சேலம் மாவட்டம் 

2017-1-TLNJ-CIVIL-70

Friday 1 November 2019

சபரிமலை நடை திறக்கும் நாள்கள்

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?*

*ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?*

1. இன்ஷூரன்ஸ் பாலிசி! யாரை அணுகுவது..? 
2. மதிப்பெண் பட்டியல்! யாரை அணுகுவது..? 
3. ரேஷன் கார்டு! யாரை அணுகுவது..? 
4. டிரைவிங் லைசென்ஸ்! யாரை அணுகுவது?  
5. பான் கார்டு! யாரை அணுகுவது? 
6. பங்குச் சந்தை ஆவணம்! யாரை அணுகுவது? 
7. கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?  
8. டெபிட் கார்டு! யாரை அணுகுவது..?  
 9. மனைப் பட்டா! யாரை அணுகுவது..? 
10. பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..? 
11. கிரெடிட் கார்டு! யாரை அணுகுவது? 

👉🏻 https://sunseithi.blogspot.com/2019/10/blog-post_66.html


 *# இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்*