Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday 28 April 2016

மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மருத்துவ மாணவர் சேர்க்கை 2016-17-க்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றம் அனுமதி

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய அளவில் 2016-17 கல்வியாண்டுக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதன் படி மே 1-ம் தேதி முதற்கட்ட நுழைவு தேர்வையும், ஜூலை 24-ம் தேதி 2-ம் கட்ட நுழைவுத் தேர்வையும் நடத்த உத்தரவிட்டதோடு ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் முடிவை வெளியிடவும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பல்வேறு கல்வி மையங்கள் தனித்தனி யாக நுழைவுத்தேர்வு நடத்துவதால் மாணவர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். இதை தடுக்கும் நோக்கத்துடன் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் இணைந்து தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (என்இஇடி) நடத்த முடிவு செய்தன.

இதை எதிர்த்து, வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அரசியல் சட்டத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை பறிபோவதாக அவர்கள் வாதிட்டனர்.

இந்த வாதங்களை கேட்ட அப்போதைய தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், நீதிபதிகள் அனில் தவே, விக்ரம்ஜித் சென் அடங்கிய அமர்வு, தேசிய நுழைவுத் தேர்வு நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மாணவர் சேர்க்கை என்பது கல்வி நிறுவனத்தை நிர்வகிக்கும் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமையின் ஒரு பகுதி. எனவே, தேசிய நுழைவுத்தேர்வு நடத்தி அவர்களது உரிமையைப் பறிப்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்தனர். இதில் ஒரு நீதிபதி இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவு என்ற அடிப்படையில் இத்தீர்ப்பு அமலுக்கு வந்தது.

இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டபோது, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற்று, தேசிய அளவில் ஒரே மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது மருத்துவப்படிப்புக்கான பொது நுழைவு மற்றும் தகுதித் தேர்வு உத்தரவினால் மாநிலம் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் தேர்வுகள் கேள்விக்குறியாகியுள்ளன.

இந்தத் தீர்ப்பினை அடுத்து நாடு முழுதும் சுமார் 6.5 லட்சம் மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிணறுக்குள் சித்ரா பொர்ணமி விழா

பூமிக்கு அடியில் சித்ரா பௌர்ணமி

காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே ஏழு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, ‘ஐயங்கார் குளம்’ எனும் திருத்தலம். இங்குள்ள சஞ்சீவிராயர் சுவாமி கோயிலையொட்டி உள்ள பெரிய குளத்தின் அருகே நடவாவிக் கிணறு என்ற சிறப்பு வாய்ந்த கிணறு உள்ளது. இந்தக் கிணற்றுக்குள் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகள் வழியாகக் கீழே சென்றால் கருங்கல்லால் ஆன, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபத்தைக் காணலாம். இது ஓர் அபூர்வ கட்டிட அமைப்பு என்று ஆய்வாளர்கள் கூறுவர். எப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படும் இந்தப் பெரிய கிணற்றில் ‘சித்ரா பௌர்ணமி அன்று ஒருநாள் மட்டும் உள்ளிருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றிவிடுவார்கள். அன்று மாலை பூமிக்கு அடியில் (கிணறு) அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் காஞ்சி வரதராஜப் பெருமானை எழுந்தருளப் பண்ணுவார்கள். மறுநாள் மாலையில் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரையும் அந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். இரண்டு நாட்கள் மட்டும் பூமிக்கு அடியில் கிணற்றுக்குள் சுவாமிகளைத் தரிசிக்கலாம். அதன்பின் கிணற்றில் நீர் ஊற்றுப் பெருக்கெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நிரப்பிவிடும். இந்த அபூர்வ காட்சியைத் சுற்றுவட்டாரத்து மக்கள் வந்து தரிசித்து பெருமாளின் திருவருளைப் பெறுகின்றனர்.

Tuesday 26 April 2016

Emis update

EMIS update

சர்வதேச நாட்கள்

சர்வதேச நாட்கள்

ஜனவரி

10 உலக சிரிப்பு தினம்
12 தேசிய இளஞர் நாள்
15 இராணுவ தினம்
16 விக்கிபீடியா நாள்
19 மதங்கள் தினம்
20 சமூக நிதி தினம்
22 சாரணியர் தினம் .
26 சுங்கவரிதினம்
27 ஹோலோ காஸ்ட் நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோர் தினம்
28 நோயாளர் தினம்
29 அரசியலமைப்பு நாள்
30 தொழுநோய் ஒழிப்பு தினம்&தியாகிகள் தினம்

பிப்ரவரி

02 புனித வாழ்வுக்கான தினம்&சதுப்புநிலதினம்
08 பரிநிர்வாண நாள் - பௌத்த வழிபாட்டு நாள்
11 காதலர் தினம்
12 டார்வின் நாள்
21 தாய் மொழிகள் தினம்
24 கலால் வரி தினம்
28 அறிவியல் தினம்

மார்ச்

06 புத்தகங்கள் தினம்
08 பெண்கள் தினம்&எழுத்தறிவுதினம்
11 பொது நலவாய அமைப்பு தினம்
13 சிறுநீரக விழிப்புணர்வுதினம்
15 நுகர்வோர்தினம்
20 ஊனமுற்றோர்தினம்&சிட்டுக்குருவிகள் தினம்
21 காடுகள்தினம்&சர்வதேச இனவேறுபாட்டுக்கு எதிரான தினம்&கவிதைகள் தினம்
22 தண்ணீர்தினம்
23 தட்பவெப்பநிலை தினம்
24 காசநோய் தினம்
28 கால் நடை மருத்துவ தினம்

ஏப்ரல்

01 முட்டாள்கள் தினம்
02 சிறுவர் நூல் நாள்
04 நிலக்கண்ணி வெடி விழிப்புணர்வுதினம்
05 சமுத்திரதினம்
07 சுகாதார தினம்
08 உரோமர் கலாச்சாரதினம்
12 வான் பயண தினம்&வீதியோர சிறுவர்களுக்கான தினம்
14 அமைதி தினம்
15 அரவாணிகள் தினம்&நூலகர்கள் தினம்
17 இரத்த உறையாமை தினம்.
18 மரபு தினம்
19 புகைப்பட தினம்
22 பூமி தினம்
23 புத்தக தினம் மற்றும் காப்புரிமை தினம்
25 இறைச்சல் விழிப்புணர்வு தினம்
26 அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்
30 குழந்தை தொழிலாளர்கள் தினம்

மே

01 உலக தொழிலாளர் தினம்
03 பத்திரிகை சுதந்திர தினம்&சக்தி தினம்
04 தீயணைக்கும் படையினர் நாள்
02 ஆவது ஞாயிறு அன்னையர் தினம்
08 செஞ்சிலுவை தினம்&விலங்குகள் பாதுகாப்பு தினம்
12 சர்வதேச செவிலியர் தினம்
15 குடும்பங்கள் தினம்
17 தொலைத்தொடர்பு தினம்
16 தொலைக்காட்சி தினம்
18 அருங்காட்சியக தினம்
19 கல்லீரல் நோய் தினம்&பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்
21 உலக பண்பாட்டு தினம் &வன்முறை ஒழிப்பு தினம்
22 உயிரின பல்வகைமை தினம்
23 ஆமைகள் தினம்
24 காமன் வெல்த் தினம்
29 ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதிக்காப்போர் தினம்&தம்பதியர் தினம்
31 புகையிலை எதிர்ப்புதினம்

ஜூன்

01 சர்வதேச சிறுவர் தினம்
05 சுற்றுபுறதினம்
08 சமுத்திர தினம்
03 வது ஞாயிறு தந்தைகள் தினம்
12 சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலகதினம்
14 இரத்ததான தினம்&வலைப்பதிவர் நாள்
15 மேஜிக் வித்தை தினம்
20 அகதிகள் தினம்
21 உலக இசை நாள்
23 இறைவணக்க தினம்
26 போதை ஒழிப்பு தினம்&26 சித்திரவதைக்கு ஆளான்னோருக்கான ஆதரவு நாள்
27 நீரிழிவு நோய் ஒழிப்பு தினம்
28 ஏழைகள் தினம்

ஜூலை

01 கேளிக்கை தினம்& மருத்துவர்கள் தினம்
01வது சனிக்கிழமை கூட்டுறவுதினம்
11 மக்கள் தொகை தினம்
15 கல்வி நாள்
3 வது ஞாயிற்று கிழமை தேசிய ஐஸ் கிரீம் தினம்
20 சதுரங்க தினம்

ஆகஸ்ட்

01 தாய்ப்பால் தினம்&சாரணர் தினம்
02 ந‌ட்பு ‌தின‌ம்
06 ஹிரோஷிமா தினம்
09 நாகசாகி தினம்&ஆதிவாசிகள் தினம்
12 இளஞர் தினம்
13 இடதுகை பழக்கமுடையோர் தினம்
14 கலாசார ஒற்றுமை நாள்
18 உள்நாட்டு மக்களின் சர்வதேசதினம்
30 காணாமற்போனோர் நாள்

செப்டம்பர்

05 இந்திய ஆசிரியர் தினம்
08 எழுத்தறிவு தினம்
18 அறிவாளர்கள் தினம்
15 மக்களாட்சி நாள்
16 ஓஷோன் தினம்
21 பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 ஊமை&காது கோளாதோர் தினம்
27 சுற்றுலா தினம்

அக்டோபர்

01 முதியோர் தினம்&இரத்ததான தினம்
02 சைவ உணவாளர் தினம்&அகிம்சை தினம்
03 குடியிருப்பு (உறைவிடம்) தினம்&வனவிலங்குகள் தினம்
04 விலங்குகள் நல தினம்
05 இயற்கை சூழல் தினம்
08 இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
10மரணதண்டனை எதிர்ப்பு தினம்
09 அஞ்சலக தினம்
12 உலக பார்வை தினம்
14 தர நிர்ணய நாள்
15 விழிப்புலனற்றோர் தினம்
16 உணவுதினம்
17 வறுமை ஒழிப்பு தினம்
18 இடப்பெயர்வாளர் தினம்
24 ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 சிந்தனைகள் தினம்
31 சிக்கன நாள்

நவம்பர்

11நினைவுறுத்தும் நாள்
14 நீரிழிவு நோய் தினம்
16 உலக சகிப்பு நாள்
17 அனைத்துலக மாணவர் நாள்
03 ஆவது வியாழக்கிழமை உலக தத்துவ நாள்
19 தேசிய ஒருமைப்பாட்டு தினம்
24 படிவளர்ச்சி நாள்
25 பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்
26 சட்ட தினம்
29 பாலஸ்தீன மக்களுடன் சர்வதேச தோழமை தினம்

டிசம்பர்

01 எயிட்ஸ் தினம்
02 அடிமைத்தனம் ஒழிப்பு தினம்&ஒளிபரப்பு தினம்
03 ஊனமுற்றோர் தினம்
05 பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற பங்காளர்களின் நாள்
06 மத நல்லிணக்க தினம்
07 கொடிதினம்
08 தேசிய மனவளர்ச்சி குன்றியோர் தினம்
09 விமானபோக்குவரத்து தினம்&ஊழல் எதிர்ப்பு நாள்
10 மனித உரிமைகள் தினம்
11 சர்வதேச மலை நாள்
17 பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்
18 சிறுபான்மையினர் உரிமை தினம்
21 சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்
23 விவசாயிகள் தினம்.

Monday 25 April 2016

இபிஎப்-க்கு 8.7 சதவிகித வட்டி; மத்திய அரசு ஒப்புதல்

இபிஎப்-க்கு 8.7 சதவிகித வட்டி; மத்திய அரசு ஒப்புதல்

2015-16-ம் நிதி ஆண்டுக்கான இபிஎப் டெபாசிட் திட்டங்களுக்கு 8.7 சதவிகிதம் வட்டி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதி அதாவது (இபிஎப்) டெபாசிட் திட்டங்களுக்கு 8.7 சதவிகிதம் வட்டி அளிக்க மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஒப்புதல் அளித்துள்ளார்.

தேர்தல் அலுவலர் ஊதியம்

தேர்தல் அலுவலர் ஊதியம்

மாணவர்களின் தேர்ச்சிவிகிதம் குறைந்தால் ஆசிரியர்கள் பொறுப்பல்ல - மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

மாணவர்களின் தேர்ச்சிவிகிதம் குறைந்தால் ஆசிரியர்கள் பொறுப்பல்ல - மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

Sunday 24 April 2016

தமிழகம் பற்றிய தகவல்

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்
1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?
7வது இடம்
2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
23 வது இடம்
3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
16வது இடம்
4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
15வது இடம்
5 ) இந்தியாவின்
கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
14வது இடம்
6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?
மதுரை
7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2004
8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?
72993
9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?
சென்னை
10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?
1076 கி.மீ
11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது
1986
12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
சென்னை (23,23,454)
14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
சென்னை (46,81,087)
15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
68.45 ஆண்டுகள்
16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?
13 மாவட்டங்கள்
17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
234
18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?
1
19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?
12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன
20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?
சென்னை
21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
71.54 ஆண்டுகள்
22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
15979
23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
561
24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
146
25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
18
26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
39
27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி (64.71 சதவீதம்)
28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
பெரம்பலூர் 5,64,511
29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
31) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?
32
32) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?
அரியலூர்
33) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?
திருப்பூர்
34 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்
80.33 சதவீதம்
35 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?
17.58 சதவீதம்
36 ) தமிழகததின் மாநில விலங்கு எது?
வரையாடு
37 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
38 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
39 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2. கோவை
3. மதுரை
4. திருச்சி
5 தூத்துக்குடி
6 சேலம்
40 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?
999பெண்கள்(1000 ஆண்கள்)
41 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. நீலகிரி
2. சேலம்
3. வேலூர்
4. கன்னியாக்குமாரி
42 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. திருவாரூர்
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி
4. கடலூர்
43) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
44) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?
www.tn.gov.in
45) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
சென்னை
46 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
47 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?
திருவில்லிபுத்தூர் கோபுரம்
48 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
49 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?
நீராடும் கடலுடுத்த
50 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
பரத நாட்டியம்
51 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
மரகதப்புறா
52 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனைமரம்
53 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
செங்காந்தர் மலா்
54 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
கபடி
55 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?
1,30,058 ச.கி.மீ
56 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
7,21,38,958
ஆண் 36158871 பெண் 35980087..

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி .ஞானகௌரி அவர்கள் ,விசாரணை அலுவலராக கரூர் மாவட்ட அரவக்குறிச்சி பட்டதாரி ஆசிரியர் திரு வடிவேலு என்பாருக்கு நியமிக்கப்பட்டு கடந்த 18-04-2016அன்று விசாரணைக்காக கரூர் சென்றுள்ளார் . தனக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதாக நினைத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரின் தாயாரை விசாரணைக்கு அழைத்து அழைப்பாணை அனுப்பியுள்ளார் அவ்வாறு அனுப்பப்பட்ட ஆணைக்கு விசாருணைக்கு செல்லாமல் ,முதன்மை கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டுள்ள கடிதம் உங்கள் பார்வைக்கு.....

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி .ஞானகௌரி அவர்கள் ,விசாரணை அலுவலராக கரூர் மாவட்ட அரவக்குறிச்சி பட்டதாரி ஆசிரியர் திரு வடிவேலு என்பாருக்கு நியமிக்கப்பட்டு கடந்த 18-04-2016அன்று விசாரணைக்காக கரூர் சென்றுள்ளார் .

தனக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதாக நினைத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரின் தாயாரை விசாரணைக்கு அழைத்து அழைப்பாணை அனுப்பியுள்ளார்

அவ்வாறு அனுப்பப்பட்ட ஆணைக்கு விசாருணைக்கு செல்லாமல் ,முதன்மை கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டுள்ள கடிதம் உங்கள் பார்வைக்கு.....

போலி ஆசிரியர்கள் யார்: களம் இறங்கிய கல்வித்துறை: குழப்பத்திற்கும் தீர்வு போலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உண்மைத் தன்மை சான்று பெறுவதில் இருந்த குழப்பத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்த்து வைத்துள்ளது. சமீபத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர் பிடிபட்டார். இதையடுத்து 2012, 2013 ல் தகுதித் தேர்வு மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் தகுதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை கண்டறிய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டது. தகுதிச்சான்றின் உண்மைத் தன்மை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டுகொள்ளாமல் இருந்ததால் தலைமை ஆசிரியர்கள் தகுதிச்சான்று பெற முடியாமல் தவித்து வந்தனர். போலி ஆசிரியர்களை கண்டு பிடிப்பதிலும் சிக்கல் இருந்தது. தற்போது 'தகுதித் தேர்வை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. தகுதிச் சான்றுகளை முதன்மை கல்வி அலுவலர்களே அளித்தனர். இதனால் உண்மைத் தன்மை சான்றுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம். சந்தேகம் இருந்தால் மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுப்படுத்தி உள்ளது.

போலி ஆசிரியர்கள் யார்: களம் இறங்கிய கல்வித்துறை: குழப்பத்திற்கும் தீர்வு

போலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உண்மைத் தன்மை சான்று பெறுவதில் இருந்த குழப்பத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்த்து வைத்துள்ளது. சமீபத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர் பிடிபட்டார். இதையடுத்து 2012, 2013 ல் தகுதித் தேர்வு மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் தகுதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை கண்டறிய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டது.

தகுதிச்சான்றின் உண்மைத் தன்மை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டுகொள்ளாமல் இருந்ததால் தலைமை ஆசிரியர்கள் தகுதிச்சான்று பெற முடியாமல் தவித்து வந்தனர். போலி ஆசிரியர்களை கண்டு பிடிப்பதிலும் சிக்கல் இருந்தது. தற்போது 'தகுதித் தேர்வை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. தகுதிச் சான்றுகளை முதன்மை கல்வி

அலுவலர்களே அளித்தனர். இதனால் உண்மைத் தன்மை சான்றுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம். சந்தேகம் இருந்தால் மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுப்படுத்தி உள்ளது.

இரத்தம் பற்றிய சில தகவல்கள்

இரத்தம் பற்றிய சில தகவல்கள் :-

🍎 இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி
🍎 இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்
🍎  இரத்த வகைகள் - A, B, AB, O
🍎 இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது -   Rhesus குரங்கில்
🍎 இரத்தத்தில் Rh  காரணி இருந்தால் - பாசிடிவ்  (Positive)
🍎 இரத்தத்தில் Rh  காரணி இல்லாத வகை - நெகடிவ் (Negative)
🍎 சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு - 5 லிட்டர்
🍎 இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின் என்ற நிறமி
🍎 இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் - பிளாஸ்மா (Plasma)
🍎 இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு - 100-120mg%
🍎 மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் - 120/80mm Hg
🍎 இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் - இன்சுலின்
🍎  அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB
🍎  அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை -  O
🍎 120 mmHg என்பது - Systolic Pressure
🍎 80 mmHg என்பது - Diastolic Pressure
🍎 இரத்த செல்களின் வகைகள் - 3
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்

1. இரத்த சிவப்பு அணுக்கள்:-
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் - எலும்பு மஜ்ஜை
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் - இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்
🍓 ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள்  எண்ணிக்கை -  5.2 மில்லியன்
🍓 பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள்  எண்ணிக்கை - 4.5 மில்லியன்
🍓 ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள்  வாழ்நாள் - 120 நாட்கள்
🍓 பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை (அனிமியா)
🍓  இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா

2. இரத்த வெள்ளை அணுக்கள்:-
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் - லியூகோசைட்டுகள்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் - எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் - வடிவமற்றது
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியூகோபினியா
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா
🍉 உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது - இரத்த வெள்ளை அணுக்கள்
🍉 லியூகோசைட்டுகள் வகைகள் - 2
1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்
🍉 துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் -3
☆ நியூட்ரோஃபில்கள்
☆ இயோசினாஃபில்கள்
☆ பேசோஃபில்கள்
🍉 துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் - 2
☆ லிம்போசைட்டுகள்
☆ மோனோசைட்டுகள்
🍉 மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை
🍍இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:-
🍉 நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)
🍉 இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%)
🍉 பேசோஃபில்கள் - 0.1%
🍉 லிம்போசைட்டுகள் - (20 - 30%)
🍉 மோனோசைட்டுகள் - (1 - 4%)

3. இரத்த தட்டுகள் :-
🍈 இரத்த தட்டுகள் வேறு பெயர் - திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)
🍈 இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்
🍈 இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது - இரத்த தட்டுகள்
🍈 இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000
🍈 இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைய காரணமான நோய் - டெங்கு ஜுரம்