Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Sunday 30 December 2018

வருவாய் கோட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்...

*வருவாய் கோட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்...*
********************************
வருவாய் கோட்டாச்சியருக்கான அதிகாரங்கள்...
#########################
1. வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்ட அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சிறப்புத் திட்டபணியாளர்கள் ஆகியோரது பல்வேறு பணிகளை மேற்பார்வை செய்தல்.

2. வட்ட அலுவலகங்களை தணிக்கை செய்தல்.

3. கோட்டத்திலுள்ள களப்பணியாளர்களது நாட்குறிப்புகளை ஆய்வு செய்தல்.

4. வட்ட அலுவலகங்களில் கடன் பிரிவுகளை அரையாண்டுக்கு ஒருமுறை தணிக்கையிடல்.

5. முதல் வகுப்பு நிருவாக நீதிபதியாக செயல்பட்டு கோட்டத்தில், சட்டம் ஒழுங்கினை நிருவகித்தல்.

6. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 107 முதல் 110 வரையுள்ள பிரிவுகளின்படி விசாரணை நடத்தி ஆணை பிறப்பித்தல்.

7. காவல் நிலை ஆணை எண் பிரிவு 145-ன்படி விசாரணை செய்தல்.

8. குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 142 மற்றும் 145-ன்படி விசாரணை செய்து ஆணைகள் பிறப்பித்தல்.

9. கிராம நிருவாக அலுவலர்களுக்கு நியமனம், மாறுதல் மற்றும் தண்டனை வழங்குதல்.

கிராம உதவியாளர்கள் நியமனம் மற்றும் தண்டனை தொடர்பான வட்டாட்சியரின் ஆணையின் மீதான மேல் முறையீட்டு மனுக்களில் விசாரணை செய்தல்.

10. நுலகவரி, அரசுக் கடன்கள், நில அளவைக் கட்டணங்கள், பிற அரசுத் துறைகளுக்கு சேரவேண்டிய பாக்கிகள், வேளாண் வருமான வரி, நகர்ப்புற நிலவரி, நீதிமன்ற வழக்குக் கட்டணம், வறியவர் வழக்கு கட்டணம் உள்ளிட்ட அரசுக்குச் சேரவேண்டிய பாக்கிகளை வசூலித்திட வசூல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வசூல் பணியைத்துரிதப்படுத்துதல், வருவாய் வசூல் சட்டத்தின் மூலம் அரசுக்கு சேர வேண்டிய பாக்கியை வசூலித்தல்.

11. நில ஒப்படை மற்றும் பராதீனம் ஆகிய இனங்களைத் தணிக்கை செய்தல்.

12. ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மேல்முறையீடுகள் ஆகியவைகளில் நடவடிக்கை மேற்கொண்டு பொது இடங்களை ஆக்கிரமிப்பு தாரர்களிடமிருந்து மீட்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.

13. நிலமாற்ற முன்மொழிவுகளின் மீது தணிக்கை செய்தல்.

14. ஆதீன ஒழிப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட இனங்களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தல்.

15. 1960-ம் ஆண்டு நிலப்பயன்பாட்டு ஆணையினை செயல்படுத்துதல்.

16. நிலச் சீர்திருத்த சட்டங்கள் மற்றும் குத்தகைச் சட்டங்கள் ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்துதல்.

17. மேம்பாட்டு வரி விதிப்பின் மீது வரும் மேல்முறையீடுகளை முடிவு செய்தல்.

18. சிறப்பு சிறுபாசனத் திட்ட பணிகளை பார்வையிடுவதுடன் தண்ணீர் தீர்வை எவ்வளவு விதிக்க வேண்டும் என்பதை நிர்ணயித்திடுதல்.

19. ரூ.25000-க்கும் அதிகமாக இழப்பீடு தர வேண்டிய நில எடுப்பு அலுவலராக பணியாற்றல்.

20. வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது நிலவரி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று வட்டாட்சியரால் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் தொடர்புடைய இடங்களை பார்வையிட்டு நிலவரி தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுத்தல்.

21. இந்திய முத்திரைச் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்துதல்.

22. கிராமக் கணக்குகளைத் தணிக்கை செய்தல் மற்றும் பயிர் மேலாய்வு செய்தல்.

23. தமிழ்நாடு இனம் (நியாயவாரம்) சட்டம் 1963 -ன்படி மேல் முறையீடுகளை விசாரித்தல்.

24. குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் வரும் முறையீடுகளை பரிசீலித்தல்.குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் வரும் முறையீடுகளை பரிசீலித்தல்.

25. முழைமானிகள், சர்வே கற்கள், கல் டெப்போக்கள் ஆகியவற்றை தணிக்கை செய்தல்.

26. கிராமக் கணக்குகளின் ஆண்டு தணிக்கை (வருவாய்த் தீர்வாயம்) முடித்து சரியான கேட்பினை முடிவு செய்தல்.

27. தமிழ்நாடு விவசாயகுத்தகைச் சட்டம் 1969-ன்படி மேல் முறையீடுகளை விசாரித்தல்.

28. மரப்பட்டா- வழங்குதல் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரித்தல்.

29. அரசு நிலங்கள் குத்தகை இனங்களைப் பார்வையிடுதல்.

30. முறையான தண்ணீர் தீர்வை நிர்ணயம் குறித்து ஆய்வு செய்தல். 31. முதியோர் உதவித் தொகை மற்றும் இதர உதவித் தொகை வழங்கும் பணியைக் கண்காணித்தல், வட்டஅலுவலக முதியோர் உதவித் தொகை பிரிவினை காலாண்டு தோறும் தணிக்கை செய்தல்.

32. பர்மா மற்றும் சிலோன் அகதிகள் நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்துதல்.

33. வெள்ளம், தீ விபத்து, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளின் போது காப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடல்.

34. ஆதிதிராவிடர் குடியிருப்புகளைப் பார்வையிடுதல் மற்றும் ஆதிதிராவிடர் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.

35. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.

36. விபத்து மற்றும் சாலை விபத்து நிவாரண நிதி வழங்குதல்.

37. காப்புறுதித் திட்டங்களை ஆய்வு செய்தல்.

38. மனுநீதி திட்ட முகாம் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடத்திடல்.

39. நியாயவிலைக் கடைகள், அரிசி ஆலைகள் தணிக்கை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் தொடர்பாக ஆய்வு செய்தல்.

40. கொள்முதல் மையங்கள் மற்றும் கிடங்குகள் தணிக்கை அரசு உணவு தானியக் கிடங்குகள் ஆய்வு மற்றும் இருப்புகள் தணிக்கை.

41. (சில பகுதிகளில்) குடியிருப்பு கட்டுப்பாடு அலுவலராக செயல்படுதல்.

42. 1960ம் ஆண்டு தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை ஒழுங்கு) சட்டத்தினை செயல்படுத்தல்.

43. நிரந்தர மற்றும் தற்காலிக திரை அரங்குகளைத் தணிக்கை செய்தல்.

44. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவு பதிவேடுகளைத் தணிக்கை செய்தல்.

45. வெடி மருந்துச் சட்டம், படைக்கலச் சட்டம், பெட்ரோலியம் சட்டம் ஆகியவை தொடர்பான பணிகளைச் செய்தல்.

46. அரசு அலுவலர்கள் பிறப்பு தேதி குறித்து விசாரணை செய்தல். 47. எரிசாராயம் மற்றும் கரும்புப்பாகு (மொலாசஸ்) உரிய கணக்குகள் தணிக்கையிடல்.

48. அடகுக் கடைகள் தணிக்கை மற்றும் அடகு கடைக்காரா சட்டம் அமுல் செய்தல்.

49. முக்கியப் பிரமுகர்கள் வருகையைக் கவனித்தல்.

50. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளைச் செய்தல்.

51. ஆறிவொளி இயக்கம் முதலிய அரசுத்திட்டங்களைச் செயல்படுத்த ஒத்துழைப்பு நல்குதல்.

52 கிராமச் சாவடிகள் மற்றும் கால்நடைப்பட்டிகளைத் தணிக்கை செய்தல்.

53. வருவாய் நிலையாணைகளில் கூறப்பட்டுள்ள பிற பணிகளைச் செய்தல்

Saturday 29 December 2018

வண்ணம் தேர்வு செய்வது எப்படி

🍑 *வண்ணங்களால் அழகாகும் வீடு*

🌻2019-ம் ஆண்டை வரவேற்கத் தயாராகிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வீட்டின் வண்ணங்களை மாற்றலாம் என்று பலரும் யோசித்துகொண்டிருப்பார்கள்.

🌻தனிநபர்களின் உடல், உணர்வு, மனம், ஆன்மிக மட்டங்களில் தாக்கம் செலுத்தக்கூடியவை வண்ணங்கள்.

🌻அதனால், வீட்டின் வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது கூடுதல் கவனம் எடுத்துகொள்வது நல்லது.

🌻வண்ணங்களுக்குக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. நாம் பார்க்கும் வண்ணங்கள் நமக்குள் பலவிதமான ஆற்றல்களைக்  கடத்துகின்றன. ஒவ்வொரு நிறமும் தனித்துவம் வாய்ந்த அதிர்வைக் கொண்டிருக்கிறது.

🌻அதனால், வீட்டுக்கு வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துகொள்ளலாம்.

🌻இயற்கையாக நமக்குக் கிடைக்கும் சூரிய வெளிச்சத்தைத் தவிர்க்கும்போது, அது நமக்குள் சோம்பல், சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றை உருவாக்கும்.

🌻அதுபோல, வண்ணங்களில் நல்ல வண்ணம் கெட்ட வண்ணம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. ஒரே வண்ணத்துக்கு நல்ல இயல்புகள், தீய இயல்புகள் என இரண்டுமே இருக்கின்றன.

🌻அதனால், எந்தவொரு வண்ணத்தையும் அளவுக்கு மீறி பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

🌻வண்ணங்களை வீட்டின்  சுவர்களுக்கு மட்டும் பயன்படுத்தாமல் அறைக்கலன்கள், கலைப்பொருட்கள், ஓவியங்கள், விளக்குகள், செடிகள், தரைவிரிப்புகள், திரைச்சீலைகள், தலையணைகள், படுக்கைவிரிப்புகள் போன்ற அம்சங்களிலும் பயன்படுத்தலாம்.

🌻எந்த அறைக்கு என்ன வண்ணமடிக்கலாம் என்பதற்கான ஆலோசனைகள்…

🍄வீட்டின் கூரைக்கு (Ceiling) எப்போதும் வெள்ளை, மங்கிய வெள்ளை நிறத்தைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது. வெள்ளை நிறம் வெளிச்சத்தைப் பிரதிபலிப்பதால் கூரைக்கு ஏற்றதாக இருக்கும்.

🥦இயற்கையான வண்ணங்களான பச்சை (வாழ்வையும் வளர்ச்சியையும் குறிக்கும்), மஞ்சள் (நிலைத்தன்மை), ஆரஞ்சு (மகிழ்ச்சி), நீலம் (கவனம் குவிக்க உதவும்) போன்றவை குழந்தைகளின் அறைகளுக்கு ஏற்றவை.

🍄 பூஜை அறைக்கு ஊதா, லாவெண்டர் போன்ற வண்ணங்களைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். ஆன்மிகம், அமைதி, ஞானம் போன்றவற்றை இரண்டு வண்ணங்களும் விளக்குவதால், அவை பூஜை அறைக்கு ஏற்றதாக இருக்கும்.

🥦 ஆரஞ்சு வண்ணத்துக்கு உற்சாகம், ஆர்வத்தைத் தூண்டும் வலிமை இருக்கிறது. இந்த வண்ணம் உடற்பயிற்சி அறைக்கு ஏற்றதாக இருக்கும்.

🍄 சிவப்பு வண்ணம் பசியைத் தூண்டும் வல்லமை கொண்டது. அதனால், சிவப்பு வண்ணச் சிதறல்கள் சாப்பாட்டு அறையில் இருப்பது பொருத்தமானதாக இருக்கும். சிவப்பு வண்ண மலர்கள், சிவப்பு மேசைத் துணி போன்றவற்றை இதற்குப் பயன்படுத்தலாம்.

🥦 படுக்கையறைகளில் எப்போதும் அமைதியான வண்ணங்களைப் பயன்படுத்துவதுதான் பொருத்தமாக இருக்கும். இளஞ்சிவப்பு, பீச் (Peach), இளம் மஞ்சள், பச்சை போன்ற மென்மையான வண்ணங்கள் படுக்கையறைக்குப் பொருத்தமாக இருக்கும்.

🍄 சிவப்பு, கோபத்தையும் பிரதிபலிக்கும் வண்ணம் என்பதால் இந்த வண்ணத்தைப் படுக்கையறைக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

Saturday 22 December 2018

தனியார் கல்வி வணிகத்தில் பங்கு பெறவே அரசு பள்ளிக்கு மூடு விழா ! மத்திய மாநில அரசுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச் செயலாளர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் கடுங் கண்டனம் .!

தனியார் கல்வி வணிகத்தில் பங்கு பெறவே அரசு பள்ளிக்கு மூடு விழா !

மத்திய மாநில அரசுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச் செயலாளர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் கடுங் கண்டனம் .!

அஞ்சல் வழி கல்வி மூலம் பகுதி நேரப் படிப்பில் சேர்ந்து ஆய்வியல் நிறைஞர் (எமஃபில்) படிப்பதற்கு கடைசி வருடம் இரண்டாயிரத்து ஏழு இரண்டாயிரத்து எட்டு என்றுதான் அரசு அறிவித்த்திருந்தது இப்பொழுது இரண்டாயிரத்து ஆறு என்று கூறி இருப்பது ஆசிரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஞ்சல் வழி கல்வி மூலம் பகுதி நேரப் படிப்பில் சேர்ந்து ஆய்வியல் நிறைஞர் (M.Phil) படிப்பதற்கு கடைசி வருடம் இரண்டாயிரத்து ஏழு இரண்டாயிரத்து எட்டு என்றுதான் அரசு அறிவித்த்திருந்தது இப்பொழுது இரண்டாயிரத்து ஆறு என்று கூறி இருப்பது ஆசிரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Thursday 20 December 2018

ரோசன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய..1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்

ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்....ஆனால்..ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது...
மண்டல அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என கடைக்காரர் கூறுவார்...ஆனால் அது தேவையில்லை...1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ...தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் அடுத்து குடும்ப அட்டை வைத்திருப்பவரா என்பதற்கு 2ஐ அழுத்தினால்....சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார்..
அவர் உங்கள் ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார்...எ.கா. 005/w/ 33657778 என்ற எண்ணை சொல்லவும்..
பின்னர் குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கேட்பார் ..அதையும் தெரிவிக்க வேண்டும்... நீங்கள் போன் செய்வதற்கு முன் ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்...
இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்னவுடன் நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம்..அல்லது நம்பரை மாற்றலாம் ...அடுத்த 2 நிமிடங்களில் உங்கள் மொபைல் எண் ஆக்டிவேட் ஆகிவிடும்..
இதற்காக வேகாத வெயிலில் மண்டல அலுவலகம் சென்று நிற்க வேண்டாம்....இதை தெரிந்தவர்களுக்கு பகிருங்கள்..
இதேபோல, ரேஷன் கடையில் நீங்கள் ஆதார் அட்டை மட்டும்தான் பதிவு செய்திருப்பீர்கள்.....ஆனால் போட்டோ கொடுத்திருக்க மாட்டீர்கள்....அதனால் உங்களுக்கு ஸ்மார் கார்டு வராது..
போட்டோவை மொபைல் ஆப் மூலமாகவோ....அல்லது TNEPDS என்ற இணைதளம் மூலமாகவோ மட்டுமே அப்லோடு செய்ய முடியும்...அதன் பிறகுதான் ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் செய்வார்கள்...
தெரியாதவர்களுக்கு இந்த மெசேஜை பகிரவும்...
புதிதாகவும் ஸ்மார்ட் கார்டு ஆன் லைனில் அப்ளை செய்ய முடியும்...நன்றி
சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்..

*அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.*

*அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.*

இவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும்.தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சில பொது பாடங்களுக்கு இணையாக, புதிய பெயரில், பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன.

உதாரணமாக, எம்.காம்., மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு, வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதற்கு இணையானவை என்ற பெயரில், 33 புதிய பட்ட மேற்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன; பல்கலைகளும் அனுமதி அளித்துள்ளன.

ஆனால், மத்திய அரசின் பல்கலை மானிய குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் ஆகியன, இவற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளன.

இந்த விபரம் தெரியாமல், புதிய படிப்புகளை முடித்தவர்கள், அரசு வேலை கிடைக்காமல் ஏமாறும் நிலை உள்ளது. இதையடுத்து, அரசு வேலைக்கு தகுதியில்லாத படிப்புகளின் பட்டியலை, தமிழக உயர் கல்வி
துறைதயாரித்துள்ளது.இந்த பட்டியலில், தமிழகத்தின், எட்டு பல்கலைகளில் நடத்தப்படும், 33 படிப்புகள் இடம் பெற்றுள்ளன.

*தகுதியற்ற படிப்புகள் என்னென்ன?*

*பெரியார் பல்கலை:* எம்.காம்., - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும், கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகிய, இரண்டுபடிப்புகள், எம்.காம்., படிப்புக்கு, இணை கிடையாது.

*அழகப்பா பல்கலை:* எம்.எஸ்சி., 'இன்பர்மேஷன் டெக்னாலஜி' படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை

*சென்னை பல்கலை:* எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை.

*பாரதியார் பல்கலை:* எம்.எப்.டி., என்ற, 'மாஸ்டர் ஆப் பாரின் டிரேட்' மற்றும் எம்.காம்., 'இன்டர்நேஷனல் வணிகம்' ஆகிய படிப்புகள், எம்.காம்., பட்ட மேற்படிப்புக்கு இணை இல்லை.

*எம்.எஸ்சி.,* படிப்பில் பல்வேறு பாட பிரிவுகளான, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன், சாப்ட்வேர் சிஸ்டம், சாப்ட்வேர் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எம்.சி.ஏ., ஆகிய, எட்டு படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை அல்ல.

*பாரதிதாசன் பல்கலை:*
எம்.எஸ்., இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.எஸ்.,இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி, சைபர் டெக்னாலஜி, இ - காமர்ஸ் அப்ளிகேஷன்ஸ், சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்., சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.சி.ஏ., என, ஒன்பது படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை இல்லை

*அண்ணாமலை பல்கலை:* எம்.எஸ்சி.,யில், சாப்ட்வேர் இன்ஜினியரிங்; ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பு; இன்பர்மேஷன் டெக்னாலஜி; தொலைநிலை கல்வியில், எம்.சி.ஏ., படிப்பு; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, எம்.சி.ஏ., ஆகிய, ஐந்து படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை.

*மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை:* எம்.எஸ்சி.,யில், இன்பர்மேஷன் டெக்னாலஜி; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும், எம்.சி.ஏ,, ஆகிய மூன்று படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு இணை இல்லை.

*அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம்:* எம்.ஏ., மேம்பாட்டு மொழியியல் படிப்பு, எம்.ஏ., தமிழுக்கு இணையானது அல்ல; முதுநிலை மனை அறிவியல் விரிவாக்க கல்வி - எம்.ஏ., சமூக பணி படிப்புக்கு இணை கிடையாது.

இந்த பட்டியல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, TNPSC செயலர், அனைத்து பல்கலைகளின் பதிவாளர்கள் உட்பட பலருக்கு அனுப்பப்பட்டு
உள்ளது.

Ref . *தினமலர் : டிசம்பர் 19,2018*

Treasury website இல் salary settlement date எப்படி பார்ப்பது? நமக்கு ஊதியம் வழங்கும் தேதி மாதத்திற்கு மாதம் மாறுகிறது.இதனால் கடன் தவணைச் செலுத்துவது,குடும்பச் செலவு திட்டமிடுவது போன்ற பல காரியங்கள் ஊதியத் தேதியை நம்பியுள்ளது. ஆகவே அத்தேதியை முன்கூட்டியே எப்படி அறிவது என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும், ஒரு சிலர் இன்னும் அறியாமல் உள்ளனர். கீழ்காணும் linkஐ click செய்து District treasury என்ற பகுதியில் உங்கள் மாவட்டத்தையும்,sub treasury என்ற இடத்தில் உங்களுக்கு ஊதியம் வழங்கும் treasuryஐயும் select செய்து,உங்களின் GPF/CPS NO type செய்து, Code என்ற பகுதியில் EDN கொடுக்கவும்(சில ஒன்றியங்களில் code மாறலாம்)எந்த மாதம்,எந்த ஆண்டு என select செய்து submit கொடுத்தால் நீங்கள் உங்களின் Net salary,Bill Present Date,Passed Date,Settlement Date முதலியவற்றை காணலாம்.settlement dateதான் உங்கள் ஊதியம் உங்கள் A/cக்கு வரப்போகும் தேதி அல்லது வந்த தேதி ஆகும்.அவ்வாறின்றி நீங்கள் Submit கொடுத்தவுடன் Nodata available என்று வந்தால் இன்னும் bill ready ஆகவில்லை என்று அர்த்தம். இதன் மூலம் EL சரண்டர்,PF Loan,FA உள்ளிட்ட அனைத்து பணப்பலன்களும் உங்களுக்கு கிடைக்கும் தேதியை முன்கூட்டியே அறிந்து பயன்பெறலாம். link கீழே http://treasury.tn.gov.in/Public/gpf.aspx

Treasury website இல் salary settlement date எப்படி பார்ப்பது?

Treasury website இல் salary settlement date எப்படி பார்ப்பது?

நமக்கு ஊதியம் வழங்கும் தேதி மாதத்திற்கு மாதம் மாறுகிறது.இதனால் கடன் தவணைச் செலுத்துவது,குடும்பச் செலவு திட்டமிடுவது போன்ற பல காரியங்கள் ஊதியத் தேதியை நம்பியுள்ளது.

ஆகவே அத்தேதியை முன்கூட்டியே எப்படி அறிவது என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும், ஒரு சிலர் இன்னும் அறியாமல் உள்ளனர்.

கீழ்காணும் linkஐ click செய்து District treasury என்ற பகுதியில் உங்கள் மாவட்டத்தையும்,sub treasury என்ற இடத்தில் உங்களுக்கு ஊதியம் வழங்கும் treasuryஐயும் select செய்து,உங்களின் GPF/CPS NO type செய்து, Code என்ற பகுதியில் EDN  கொடுக்கவும்(சில ஒன்றியங்களில் code மாறலாம்)எந்த மாதம்,எந்த ஆண்டு என select செய்து submit கொடுத்தால் நீங்கள் உங்களின் Net salary,Bill Present Date,Passed Date,Settlement Date முதலியவற்றை காணலாம்.settlement dateதான் உங்கள் ஊதியம் உங்கள் A/cக்கு வரப்போகும்  தேதி அல்லது வந்த தேதி ஆகும்.அவ்வாறின்றி நீங்கள் Submit கொடுத்தவுடன் Nodata available என்று வந்தால் இன்னும் bill ready ஆகவில்லை என்று அர்த்தம்.

இதன் மூலம் EL சரண்டர்,PF Loan,FA உள்ளிட்ட அனைத்து பணப்பலன்களும் உங்களுக்கு  கிடைக்கும் தேதியை முன்கூட்டியே  அறிந்து பயன்பெறலாம்.

link கீழே

http://treasury.tn.gov.in/Public/gpf.aspx

நமக்கு ஊதியம் வழங்கும் தேதி மாதத்திற்கு மாதம் மாறுகிறது.இதனால் கடன் தவணைச் செலுத்துவது,குடும்பச் செலவு திட்டமிடுவது போன்ற பல காரியங்கள் ஊதியத் தேதியை நம்பியுள்ளது.

ஆகவே அத்தேதியை முன்கூட்டியே எப்படி அறிவது என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும், ஒரு சிலர் இன்னும் அறியாமல் உள்ளனர்.

கீழ்காணும் linkஐ click செய்து District treasury என்ற பகுதியில் உங்கள் மாவட்டத்தையும்,sub treasury என்ற இடத்தில் உங்களுக்கு ஊதியம் வழங்கும் treasuryஐயும் select செய்து,உங்களின் GPF/CPS NO type செய்து, Code என்ற பகுதியில் EDN  கொடுக்கவும்(சில ஒன்றியங்களில் code மாறலாம்)எந்த மாதம்,எந்த ஆண்டு என select செய்து submit கொடுத்தால் நீங்கள் உங்களின் Net salary,Bill Present Date,Passed Date,Settlement Date முதலியவற்றை காணலாம்.settlement dateதான் உங்கள் ஊதியம் உங்கள் A/cக்கு வரப்போகும்  தேதி அல்லது வந்த தேதி ஆகும்.அவ்வாறின்றி நீங்கள் Submit கொடுத்தவுடன் Nodata available என்று வந்தால் இன்னும் bill ready ஆகவில்லை என்று அர்த்தம்.

இதன் மூலம் EL சரண்டர்,PF Loan,FA உள்ளிட்ட அனைத்து பணப்பலன்களும் உங்களுக்கு  கிடைக்கும் தேதியை முன்கூட்டியே  அறிந்து பயன்பெறலாம்.

link கீழே

Wednesday 19 December 2018

Flash News 22-08-2017 அன்று ஆசிரியருக்கு பிடித்தம் செய்த ஊதியத்தை வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

Flash News 22-08-2017 அன்று ஆசிரியருக்கு பிடித்தம் செய்த ஊதியத்தை வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

Saturday 15 December 2018

4/10/18 மழைக்காக விடுமுறை விடப்பட்ட நாளில் - எவ்வித சம்பளப் பிடித்தமும் செய்யக்கூடாது நீதிமன்றம் ஆணை.

4/10/18 மழைக்காக விடுமுறை விடப்பட்ட நாள்-
-  அந்த நாளுக்கு எவ்வித சம்பளப் பிடித்தமும் செய்யக்கூடாது நீதிமன்றம் ஆணை.

Thursday 13 December 2018

*E pay slip பற்றி பார்ப்போம்.* *ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.ஒவ்வொரு மாதமும் நாம் நம் ஊதியத்தை சரிபார்த்துக் கொள்ள e pay slip நமக்கு உதவியாக உள்ளது.ஒவ்வொரு மாதமும் உங்களின் சம்பளப் பிடித்தங்கள் என்ன என்பதை நீங்கள் அறிய இது நமக்கு அவசியமாகிறது.இதைப் பற்றி பலர் அறிந்து பயன்பெற்றாலும்,ஒரு சிலர் இதை அறியாமல் உள்ளனர்.அவர்களும் அறிய வேண்டும் என்ற நோக்கில் பதிவிடுகிறேன்.கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்து employee code என்ற பகுதியில் உங்கள் PF/Cps number கொடுக்கவும்,suffix என்ற பகுதியில் EDN கொடுத்து பின்னர் password ஆக உங்கள் பிறந்தநாளை slash குறியுடன்[eg:01/01/1980] கொடுத்து* *உள்நுழைந்தாள் payslip,annual income statement ,paydrawn purticulars என்ற மூன்று பகுதிகளில் எது உங்களுக்கு தேவையோ அதைக் கிளிக் செய்து எந்த financial year வேண்டுமோ அதையும் select செய்து உங்கள் ஊதியத்தை பிடித்தங்களுடன் பார்க்கலாம்.மேலும் அந்த pageஇல் உள்ள நீலநிற print buttonஐ கிளிக் செய்தால் pdf (or)exel file ஆக donloadம் செய்யலாம்.தகவலுக்காக* *http://epayroll.tn.gov.in/epayslip/payslip* 🙏🏻ⓂⓂ🙏🏻

*E pay slip பற்றி பார்ப்போம்.*

*ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.ஒவ்வொரு மாதமும் நாம் நம் ஊதியத்தை சரிபார்த்துக் கொள்ள e pay slip நமக்கு உதவியாக உள்ளது.ஒவ்வொரு மாதமும் உங்களின் சம்பளப் பிடித்தங்கள் என்ன என்பதை நீங்கள் அறிய இது நமக்கு அவசியமாகிறது.இதைப் பற்றி பலர் அறிந்து பயன்பெற்றாலும்,ஒரு சிலர் இதை அறியாமல் உள்ளனர்.அவர்களும் அறிய வேண்டும் என்ற நோக்கில் பதிவிடுகிறேன்.கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்து employee code என்ற பகுதியில் உங்கள் PF/Cps number கொடுக்கவும்,suffix என்ற பகுதியில் EDN கொடுத்து பின்னர் password ஆக உங்கள் பிறந்தநாளை slash குறியுடன்[eg:01/01/1980] கொடுத்து* *உள்நுழைந்தாள் payslip,annual income statement ,paydrawn purticulars என்ற மூன்று பகுதிகளில் எது உங்களுக்கு தேவையோ அதைக் கிளிக் செய்து எந்த financial year வேண்டுமோ அதையும் select செய்து உங்கள் ஊதியத்தை பிடித்தங்களுடன் பார்க்கலாம்.மேலும் அந்த pageஇல் உள்ள நீலநிற print buttonஐ கிளிக் செய்தால் pdf (or)exel file ஆக donloadம் செய்யலாம்.தகவலுக்காக*


*http://epayroll.tn.gov.in/epayslip/payslip*
*E pay slip பற்றி பார்ப்போம்.*

*ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.ஒவ்வொரு மாதமும் நாம் நம் ஊதியத்தை சரிபார்த்துக் கொள்ள e pay slip நமக்கு உதவியாக உள்ளது.ஒவ்வொரு மாதமும் உங்களின் சம்பளப் பிடித்தங்கள் என்ன என்பதை நீங்கள் அறிய இது நமக்கு அவசியமாகிறது.இதைப் பற்றி பலர் அறிந்து பயன்பெற்றாலும்,ஒரு சிலர் இதை அறியாமல் உள்ளனர்.அவர்களும் அறிய வேண்டும் என்ற நோக்கில் பதிவிடுகிறேன்.கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்து employee code என்ற பகுதியில் உங்கள் PF/Cps number கொடுக்கவும்,suffix என்ற பகுதியில் EDN கொடுத்து பின்னர் password ஆக உங்கள் பிறந்தநாளை slash குறியுடன்[eg:01/01/1980] கொடுத்து* *உள்நுழைந்தாள் payslip,annual income statement ,paydrawn purticulars என்ற மூன்று பகுதிகளில் எது உங்களுக்கு தேவையோ அதைக் கிளிக் செய்து எந்த financial year வேண்டுமோ அதையும் select செய்து உங்கள் ஊதியத்தை பிடித்தங்களுடன் பார்க்கலாம்.மேலும் அந்த pageஇல் உள்ள நீலநிற print buttonஐ கிளிக் செய்தால் pdf (or)exel file ஆக donloadம் செய்யலாம்.தகவலுக்காக*


*http://epayroll.tn.gov.in/epayslip/payslip*

🙏🏻ⓂⓂ🙏🏻
🙏🏻ⓂⓂ🙏🏻