Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday 24 January 2019

திங்கட்கிழமை 28ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வருகின்ற வழக்கின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவினை அன்றைய தினம் மாலை ஜாக்டோ ஜியோ கூடி முடிவெடுக்கும்

*அன்பார்ந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களே ஜாக்டோ ஜியோ வின் ஒருங்கிணைப்பாளர் இன்று இரவு 9 மணிக்கு கூடி ஆலோசனை செய்தனர் வழக்கறிஞர் வில்சன் அவர்களையும் ஏற்கனவே நமது வழக்கறிஞர் திரு எந் ஜி ஆர் பிரசாத் அவர்களின் ஆலோசனைக்கு பிறகு நாளையதினம் போராட்டத்தை முழுவீச்சுடன் நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது மேலும் வரும் திங்கள் கிழமையும் மாவட்ட தலைநகர்  மறியல் நடத்துவது என முடிவு எட்டப்பட்டுள்ளது* *திங்கட்கிழமை 28ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வருகின்ற வழக்கின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவினை அன்றைய தினம் மாலை ஜாக்டோ ஜியோ கூடி முடிவெடுக்கும் என அறிவிக்கப்படுகிறது மேலும் 17b நோட்டீஸ் அனைவருக்கும் வழங்கப்படும் என கல்வித்துறை மற்றும் வருவாய் துறை செயலாளர்கள் மூலம் அறிவிப்பு* *வெளியிடப்பட்டுள்ளது இது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்றும் அதற்கு ஜாக்டோ ஜியோ முழு பொறுப்பு இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது* எனவே ஊழியர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை தொடர்ந்து போராட்டங்களை மிக வீரியத்தோடு முழுவீச்சோடு களத்தில் பணியாற்ற ஜாக்டோ ஜியோ மாநில அமைப்பு கேட்டுக்கொள்கிறது *தற்காலிக ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரையில்* *ஜாக்டோ ஜியோ கவனத்தில் கொண்டுள்ளது என்றும் இதனால் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவண்ணம் *ஜாக்டோ ஜியோ முடிவு எடுக்கும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது எனவே நாளை மற்றும்* திங்கட்கிழமை இரு நாட்களும் மாவட்ட தலைநகர் மறியலை முழுவீச்சோடு நடத்த ஜாக்டோ ஜியோ மாநில அமைப்பு கேட்டுக் கொள்கிறது சட்டப்பிரச்சினை நீதிமன்றத்தில் நமது வழக்கறிஞர்கள் பார்த்துக்கொள்வார்கள் எனவே யாரும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.
மேலும் தலைமைச் செயலக ஊழியர்கள் இன்றும் நாளையும் உணவு *இடைவேளையின்போது ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் வரும் திங்கள் முதல் ஜாக்டோ ஜியோ உடன் இணைந்து போராட்டத்தில் கலந்து கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளனர்* *அதன்படி இன்று *ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட உணவு இடைவேளை  நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பதை* *அனைவரும் *கவனத்தில் *கொள்ளவும்
மாநில அமைப்பு* ஜாக்டோ ஜியோ*

*அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு* ✍✍✍✍✍✍✍✍ *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் செய்யபடுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குவிசாரணை, மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது* *24/1/19 அன்று மாறுதல் தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்கபட்டது என்பது குறிபிடத்தக்கது..* *நாளை சென்னை உயர்நீதிமன்ற 38வது கோர்ட்டில்* *2வது லிஸ்டில்* *23வது* *வழக்காக நமது வழக்கு ,வழக்கு எண் 1634/2019 விசாரணைக்கு வருகிறது*

*அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு*
✍✍✍✍✍✍✍✍
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் செய்யபடுவதை எதிர்த்து  தொடுக்கப்பட்ட வழக்குவிசாரணை,  மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது*

*24/1/19 அன்று மாறுதல் தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்கபட்டது என்பது குறிபிடத்தக்கது..*

*நாளை சென்னை உயர்நீதிமன்ற 38வது கோர்ட்டில்*
*2வது லிஸ்டில்*
*23வது*
*வழக்காக நமது வழக்கு ,வழக்கு எண்* 1634/2019 *விசாரணைக்கு*
*வருகிறது*

Tuesday 22 January 2019

தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்* *பொதுச்செயலாளர்* *பாவலர் க. மீனாட்சிசுந்தரம் அவர்கள் தொடுத்த வழக்கு நானை விசாரணைக்கு வருகிறது*,

*23/1/19 நாளை  வழக்கு விசாரணை*

*தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்*
*பொதுச்செயலாளர்*
*பாவலர் க. மீனாட்சிசுந்தரம் அவர்கள் தொடுத்த வழக்கு நானை விசாரணைக்கு வருகிறது*,

*அங்கன்வாடிக்கு*
*இடைநிலை*
*ஆசிரியர்களை*
*மாறுதல்* *வழங்குவதற்கு*
*தடைகோரிய வழக்கு*

*நாளை சென்னை உயர்நீதிமன்றம் 38 வது*
*கோர்ட்டில் 13வது  வழக்காக விசாரனைக்கு வருகிறது*

*வழக்கறிஞர் திரு G.சங்கரன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது*

Friday 18 January 2019

திருக்குறளைப் பற்றிய செய்திகள்

#திருக்குறள்  தொடர்பான செய்திகள்:
--------------------------------------------------------------
1. திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் தை முதல் நாள்.

2. திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தவர் மறைமலை அடிகள்.

3. திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக்கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.

4. திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர்.

5. திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.

6. திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள் நாற்பத்து நான்கு.

7. திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு.

8. திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு.

9. திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்.

10. திருக்குறளை ஆங்கிலத்தில் அருளியவர் போப்பையர்.

11. திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.

12. குமரியிலிருந்து தில்லி வரை செல்லும் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவான்.

13. குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி.

14. நெல்லையில் அமைந்துள்ளது திருவள்ளுவர் ஈரடுக்கு மேம் பாலம்.

15. சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம்.

16. திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது.

17. திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணையாக வைக்கப்பட்டுள்ளது.

18. திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.

19. திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.

20. திருக்குறள் உரை வேற்றுமை வழங்கியவர் பேராசிரியர் இரா. சாரங்கபாணி.

21. நரிக்குறவர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளைத் தந்தவர் கிட்டு சிரோன்மணி.

22. திருக்குறளின் பெருமையினை உலக அறிஞர் ஆல்பர்ட்டு சுவைட்சர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

23. வெண்பா யாப்பில் என்றும் பயன் தரும் செய்தியை வழங்குவதால், திருக்குறள் வெள்ளிப்பையில் இட்ட தங்கக்கனி என்பர்.

24. திருக்குறளை 1812 ஆம் ஆண்டு முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.

25. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.

26. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதிதாசன்.

27. திருக்குறளின் முதற்பெயர் முப்பால்.

28. திருக்குறளில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன.

29. திருவள்ளுவர் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன.

30. திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன.

31. திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுது ஔ

32. திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது.

33. திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்கிறார்.

34. திருக்குறளுக்கு உரிய சிறப்புப் பெயர் உலகப் பொதுமறை.

35. திருக்குறளில் உயிரினும் மேலானதாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.

36. காலமும் இடமும் கருதிச் செயலாற்றினால் உலகை வெல்லலாம்.

37. திருக்குறளை அனைத்துச் சமயங்களும் ஏற்றுப் போற்றுகின்றன.

38. திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி.

39. திருவள்ளுவமாலை திருக்குறளுக்கு எழுந்த புகழ்மாலை.

40. திருக்குறள் பொய்யில் புலவன் பொருளுரை எனப் போற்றப்படுகிறது.

41. திருக்குறளை முதலில் பயிற்றுவித்தவர் வள்ளலார் இராமலிங்கம்.

42. அரபி மொழியில் மொழிபெயர்த்தவர் பேராசிரியர் ஜாகிர் உசேன்..

4/11/18 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்,பிடிக்கப்பட்ட ஊதியத்தை மீண்டும் வழங்க திருவாரூர் முதன்மைக் கல்வி ஆணை

4/11/18 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்,பிடிக்கப்பட்ட ஊதியத்தை மீண்டும் வழங்க  திருவாரூர் முதன்மைக்கல்வி ஆணை

Thursday 17 January 2019

ஓரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது

ஓரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர். சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவி யல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர். அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வா ய்க்கும் வழங்கினர்.

இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப் படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் - இந்த ஹோரைகளில் துவங்கலாம். ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை. இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும். இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.

பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.
6 - 1- 8 - 3 இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஓரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.

சூரிய ஓரை : சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விசயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற பெருந்தலைகளை சந்திக்கும் காரியம் செய்யலாம். இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.

சுக்கிர ஓரை : சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.

புதன் ஓரை : கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம்.  நன்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஓரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.

சந்திர ஓரை : வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது. இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய் யலாம். இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.

சனி ஓரை : இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது. உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவ ங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மானிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.

குரு ஓரை : எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வா ங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை உகந்ததல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களை பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உடனே கிடைத்து விடும்.

செவ்வாய் ஓரை: செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிப் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.

ஒரு சிறந்த ஜோதிடராக நீங்கள் ஹோரை சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமும் உண்டு. நவ கிரகங்களில் - ஒன்றுக்கொன்று கடும் பகை கிரகங்களும் உண்டு. அல்லவா ? அதையும் நீங்கள் மனதில் கொண்டு , ஹோரை தேர்ந்தெடுங்கள். என்னதான் குரு ஓரை சுப ஓரை என்றாலும், வெள்ளிக் கிழமை - குரு ஹோரை தேர்ந்தெடுக்க வேண்டாம். சரி, நிஜமாகவே இந்த ஹோரையின் செயல்பாடு அறிய - நீங்களே ஒரு சில விஷயங்களில் , துவங்கிப் பாருங்கள். வியந்து போவீர்கள். மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள். குறிப்பாக கணவன் , மனைவி ஏதாவது வாக்குவாதம் செய் யத் துவங்கினால் , செவ்வாய் அல்லது சனி ஓரை வந்தால், அடக்கி வாசியுங்கள். அது மிகப் பெரிய சண்டையாகிவிடும். கணவன் . மனைவி என்றில்லை. மற்றவருக்கும் பொருந்தும். ஆதலால் , காலத்தின் இந்த ரகசிய கணக்கு - நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை. நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் - மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும் என்பது சித்தர்களின் வாக்கு.

Wednesday 16 January 2019

திருக்குறளைப் பற்றிய செய்திகள்

#திருக்குறள்  தொடர்பான செய்திகள்:
--------------------------------------------------------------
1. திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் தை முதல் நாள்.

2. திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தவர் மறைமலை அடிகள்.

3. திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக்கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.

4. திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர்.

5. திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.

6. திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள் நாற்பத்து நான்கு.

7. திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு.

8. திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு.

9. திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்.

10. திருக்குறளை ஆங்கிலத்தில் அருளியவர் போப்பையர்.

11. திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.

12. குமரியிலிருந்து தில்லி வரை செல்லும் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவான்.

13. குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி.

14. நெல்லையில் அமைந்துள்ளது திருவள்ளுவர் ஈரடுக்கு மேம் பாலம்.

15. சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம்.

16. திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது.

17. திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணையாக வைக்கப்பட்டுள்ளது.

18. திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.

19. திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.

20. திருக்குறள் உரை வேற்றுமை வழங்கியவர் பேராசிரியர் இரா. சாரங்கபாணி.

21. நரிக்குறவர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளைத் தந்தவர் கிட்டு சிரோன்மணி.

22. திருக்குறளின் பெருமையினை உலக அறிஞர் ஆல்பர்ட்டு சுவைட்சர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

23. வெண்பா யாப்பில் என்றும் பயன் தரும் செய்தியை வழங்குவதால், திருக்குறள் வெள்ளிப்பையில் இட்ட தங்கக்கனி என்பர்.

24. திருக்குறளை 1812 ஆம் ஆண்டு முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.

25. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.

26. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதிதாசன்.

27. திருக்குறளின் முதற்பெயர் முப்பால்.

28. திருக்குறளில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன.

29. திருவள்ளுவர் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன.

30. திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன.

31. திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுது ஔ

32. திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது.

33. திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்கிறார்.

34. திருக்குறளுக்கு உரிய சிறப்புப் பெயர் உலகப் பொதுமறை.

35. திருக்குறளில் உயிரினும் மேலானதாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.

36. காலமும் இடமும் கருதிச் செயலாற்றினால் உலகை வெல்லலாம்.

37. திருக்குறளை அனைத்துச் சமயங்களும் ஏற்றுப் போற்றுகின்றன.

38. திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி.

39. திருவள்ளுவமாலை திருக்குறளுக்கு எழுந்த புகழ்மாலை.

40. திருக்குறள் பொய்யில் புலவன் பொருளுரை எனப் போற்றப்படுகிறது.

41. திருக்குறளை முதலில் பயிற்றுவித்தவர் வள்ளலார் இராமலிங்கம்.

42. அரபி மொழியில் மொழிபெயர்த்தவர் பேராசிரியர் ஜாகிர் உசேன்..

Saturday 12 January 2019

சென்னையில் தங்குமிடவசதி பள்ளிகல்லூரிஆசிரியர்களுக்கு மட்டும் ஆசிரியர் அல்லாதவர்களுக்கு அனுமதிஇல்லை

*சென்னையில் தங்குமிடவசதி
பள்ளிகல்லூரிஆசிரியர்களுக்கு மட்டும்

ஆசிரியர் அல்லாதவர்களுக்கு அனுமதிஇல்லை.

ஆசிரியர்கள்
தங்கிட நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு
ரூபாய்.250/- அவருடன்
அழைத்து வரும் மனைவிக்கு
ரூபாய்.300/-
அவர் ஆசிரியர் எனில் ரூபாய்.
250/- மட்டுமே.  குழந்தைகளுக்கு
ரூபாய்.125/- பள்ளி கல்லூரி மாணவர்களாக இருக்க வேண்டும்.

*சாதாரண தனியறை.குளியலறைகழிவறைவசதியுடன்.*

*முன்பதிவு வசதி கிடையாது*

*ஆசிரியர்கள்அடையாளஅட்டையுடன்
நேரில் பதிவு செய்துகொள்ளலாம்..

எக்மோர் to கோயம்பேடு
27B.
முகப்பேர் வழி
27e

பஸ் நிறுத்தம்:-
பிரசிடென்சி பள்ளி.

ஆட்டோ எனில் எக்மோர் to World University service centre.
(ரூபாய்.50-80க்குள்)

இடம்:-
World University service centre.
Mayor Ramanathan Salai.Chetput
Chennai -31
Phone
Off 044-
28362251
Reception:
044-28364422

Monday 7 January 2019

ரேஷன் கடைகளில் முறைகேடு புகார் தகவல் தெரிவிக்க கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்

🔘 ரேஷன் கடைகளில் முறைகேடு புகார் தகவல் தெரிவிக்க கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்
~...........................................................~
☄ *காஞ்சிபுரம்-  9445045604.

☄ *திருவள்ளூர்- 9445045605.

☄ *சென்னை-   9445045601.

☄ *சென்னை (வ)-    9445045602.

☄ *சென்னை (தெ)- 9445045603.

☄ *திருச்சி- 9445045618.

☄ *வேலூர்- 9445045606.

☄ *தஞ்சை- 9445045619.

☄ *தி.மலை- 9445045607.

☄ *திருவாரூர்- 9445045620.

☄ *விழுப்புரம்- 9445045608.

☄ *நாகை- 9445045621.

☄ கடலூர்- 9445045609.

☄ புதுகை- 9445045622.

☄ தர்மபுரி-9445045610.

☄ திண்டுக்கல்- 9445045623.

☄ சேலம்- 9445045611.

☄ தேனி- 9445045624.

☄ நாமக்கல்- 9445045612.

☄ மதுரை- 9445045625.

☄ ஈரோடு- 9445045613.

☄ சிவகங்கை- 9445045626.

☄ கோவை- 9445045614.

☄ விருதுநகர்- 9445045627.

☄ நீலகிரி- 9445045615.

☄ ராமநாதபுரம்- 9445045628.

☄ கரூர்- 9445045616.

☄ தூத்துக்குடி- 9445045629.

☄ பெரம்பலூர்- 9445045617.

☄ நெல்லை- 9445045630.

☄ கன்னியாகுமரி- 9445045631.

☄ கிருஷ்ணகிரி-    9445045632.

☄ அல்லது- 044-28592828

பிறரும் தெரிந்துகொள்ள பகிருங்கள்