Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Tuesday 27 February 2018

ஜாக்டோ ஜியோவுக்கு பச்சைக்கொடி காட்டிய உயர்நீதிமன்றம்...!

நீங்க இத மட்டும் செய்யுங்க...! உங்க விஷயத்துல நாங்க தலையிடமாட்டோம்...! ஜாக்டோ ஜியோவுக்கு பச்சைக்கொடி காட்டிய உயர்நீதிமன்றம்...!

கடந்த 21 ஆம் தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த 24ம் தேதி சென்னை சேப்பாக்கம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாபெரும் ஆர்ப்பாட்டத்தையும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்லவும் முயன்றனர். இதனையடுத்து பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், மக்களுக்கு இடையூறாக நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் வேலை செய்யும் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினால் ஹைகோர்ட் தலையிடாது எனவும் ஆசிரியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசு பணியில் இருக்கும் ஒருவர் பகுதி நேரமாக வியாபார / தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடலாமா...?

தமிழக அரசு பணியில் இருக்கும் ஒருவர் பகுதி நேரமாக வியாபார / தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடலாமா...?

ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் :

ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் :

தமிழகம் :

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்த ூர் ஆண்டாள் கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி

3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்

...4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)

20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்

22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

26.  வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக

12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச் 21.

27.ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
திரு. சரண்சிங்.

.28. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி

அரசு ஊழியர் ஒருவரின் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் போது கணவருக்கு(அரசு ஊழியர்) சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி உண்டா?

அரசு ஊழியர் ஒருவரின் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் போது கணவருக்கு(அரசு ஊழியர்) சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி உண்டா?

பள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம்

. பள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம்

சிஇஓக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள்.

1. கல்வி துறையில் வரும் ஜூன் 2018 முதல் DE0, DEEO பதவி மாற்றப்பட்டு நான்கு ஒன்றியத்திற்கு ஒரு DE0 மாவட்டத்திற்கு ஒரு CE0.

2. AEEO பதவிகள் மாற்றம் இல்லை.

3. SSA , RMSA மூடப்படுகிறது .

4.DIET + DE0 அலுவலகம் இணைக்கப்படுகிறது.

5. 1 முதல் 12 வகுப்பு வரை மாவட்டத்தின் அனைத்து அதிகாரமும் CEO கையில் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் தலைமை ஆசிரியர் பணி நியமனம் வரை செய்யும் அதிகாரம் சிஇஓ க்குஅளிக்கப்படும்.

6.  சிஇஓ க்கள் இடமாறுதல்,17A, 17B மற்றும் சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

7.  JDமற்றும் இயக்குநர் க்கு மேல்முறையீட்டு அதிகாரி மற்றும்,பணியாளர்களின் பணிமூப்பு பட்டியலை சரி செய்யும் அதகாரம் வழங்கப்படுகிறது.

8. 18 ஆண்டுகளுக்கு பிறகு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள் சிஇஓ க்களுக்கு அளிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு விரல்ரேகை,கருவிழி இல்லாமல் "சிறப்பு நீலநிற ஆதார் அட்டை."  

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு விரல்ரேகை,கருவிழி இல்லாமல் "சிறப்பு நீலநிற ஆதார் அட்டை."

 

மாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்தில் பயணிக்கும் போது துணையாளரை அழைத்துச் செல்வதற்கான மருத்துவச் சான்றிதழ்!!!

மாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்தில் பயணிக்கும் போது துணையாளரை அழைத்துச் செல்வதற்கான மருத்துவச் சான்றிதழ்!!!

Sunday 25 February 2018

Monday 19 February 2018

அரசூழியர் தற்காலிக நீக்கம். விதிகள

அரசு ஊழியர் தற்காலிக பணிநீக்கம் - விதிகள்

NEW PEDAGOGY TIME TABLE

NEW PEDAGOGY TIME TABLE

🙏 *Pedagogy pilot schools book details*

  👍 *முதல் வகுப்பு*

🌹தமிழ் பாடப்புத்தகம்

🌹பயிற்சிப் புத்தகம்

🌹English book with work book

🌹English book

🌹English work book.

*தமிழ் வழி*

🌹கணக்கு புத்தகம்

🌹கணக்கு பயிற்சிப் புத்தகம்

🌹சூழ்நிலையியல் புத்தகம்

🌹சூழ்நிலையியல் பயிற்சிப் புத்தகம்.

👍 *English medium*

🌹Mathematics book 

🌹Work book

🌹EVS book

🌹EVS work book

🌹முதல் வகுப்பு ஆசிரியர் கையேடு.

🌹English  medium

 Teacher hand book

*இரண்டாம்வகுப்பு* 🌹தமிழ் பாடப்புத்தகம்

🌹பயிற்சிப் புத்தகம்

🌹English book with work book

🌹Enlish book

🌹English work book

*தமிழ் வழி*

🌹கணக்கு புத்தகம்

🌹பயிற்சிப் புத்தகம்

🌹சூழ்நிலையியல் புத்தகம்

🌹சூழ்நிலையியல் பயிற்சிப் புத்தகம் 

*English medium*

🌹Mathematics book

🌹Mathematics work book

🌹EVS book

🌹EVS work book   

இரண்டாம்வகுப்பு ஆசிரியர் கையேடு

English medium Teacher hand book

🌹 மூன்றாம் வகுப்பு ஆசிரியர் கையேடு

🌹English medium Teacher hand book 

👍  *1&2 வகுப்புக்குரியது*

🙏 *New pedagogy pilot school இல் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் இருப்பின் கீழ்காணும் முறையில் வகுப்பறைச் செயல்பாடுகள் நடைபெறுதல் வேண்டும்*

🌷   *9.30 to 11. 00 - 90 நிமிடங்கள் முதல் பாடவேளை*

🌷 *9.30 to 10.00 - 30 நிமிடங்கள் ஆசிரியர் செயல்பாடுகள்*

 🌷 *10.00 to 10.30 - 30 நிமிடங்கள்       இணைச்செயல் பாடுகள்*

  🌷 *10.30 to 11.00 - 30 நிமிடங்கள் தனிநபர் செயல்பாடுகள்*

  🌷  *இது போன்றே முதல் 30 நிமிடங்கள் ஆசிரியர் செயல்பாடுகள் அடுத்த 30 நிமிடங்கள் குழுச் செயல்பாடுகள், அடுத்த 30 நிமிடங்கள் தனிநபர் செயல்பாடுகள் என வகுப்பறை யில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மூன்று பாடவேளை யும் நடைபெற வேண்டும்*

🌷  *11.10 to 12.40*

 *இரண்டாம் பாடவேளை*

  🌷  *2.00 to 3.30 மூன்றாம் பாடவேளை*

🙏 *ஒரு நாளைக்கு 3 பாடவேளை என 5 நாட்களுக்கு 15 பாடவேளை*

🌷 *தமிழ் 4 ஆங்கிலம் 4 கணக்கு 4                       சூழ்நிலையியல் 3*

Friday 16 February 2018

http://mandramtn.blogspot.in/2016/03/pavalar-photos.html?m=1

http://mandramtn.blogspot.in/2016/03/pavalar-photos.html?m=1

வாகன இன்சூரன்ஸ் - கவனிக்க வேண்டிய அம்சங்க

வாகன இன்சூரன்ஸ் - கவனிக்க வேண்டிய அம்சங்கள்.

நாம் எல்லோரும் ஆண்டிற்கு ஒருமுறை நமது வாகனத்தின் இன்சுரன்சை புதிப்பித்து வருவோம். ஆனால் எவ்வளவு பேருக்கு அதனுடைய முழு விவரமும் தெரியும் என்பது கேள்விக்குறி தான். காப்பீட்டு ஆவணத்தை எவ்வளவு பேர் படித்துப் புரிந்துகொண்டிருப்பார்கள் என்பதும் கேள்விக்குறி தான்.

ஆனால் அனைவரும் அதை படித்து புரிந்துகொண்டால் நமது பிரிமியத் தொகையில் நன்கு சேமிக்கலாம். வாகன இன்சுரன்ஸ் பற்றி மக்களுக்கு இருக்கும் ஐயங்களைப் போக்கத்தான் இந்தக் கட்டுரை.

மோட்டார் வாகன இன்சூரன்ஸ் என்பது மோட்டார் வாகனச் சட்டம் (1988) கீழ் இந்தியாவில் அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களுக்கு எடுத்திட வேண்டும் என்பது சட்டம். வாகனச் சோதனை செய்யும்போது ஒருவருடைய லைசன்ஸ், வாகனப் பத்திரப் புத்தகம் மற்றும் வண்டியின் இன்சுரன்ஸ் ஆகிய மூன்றும் சோதனை செய்யப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.

மோட்டார் வாகன இன்சுரன்ஸ் நோக்கம் என்ன?

மோட்டார் இன்சூரன்ஸ் என்பது ஒருவருடைய வாகனத்திற்கு பல்வேறு வகைகளில் ஏற்படும் சேதங்களிலிருந்தோ அல்லது வாகனம் திருடு போனாலோ அதன்மீது கிடைக்கபெறும் காப்பீடேயாகும்.

அதைவிட முக்கியமான நோக்கம் ஒன்றுள்ளது. அதுதான் மூன்றாம் தரப்புக் காப்பீடு.

மூன்றாம தரப்புக் காப்பீடு (Third Party Cover) என்றால் என்ன?

மோட்டார் வாகனச் சட்டம் (1988) முக்கியமாக வலியுறுத்துவது இந்த மூன்றாம் தரப்புக் காப்பீடைப் பற்றியேயாகும். வாகனச் சோதனையின்போது போக்குவரத்துக் காவல்துறையினர்  நமது ஆயுள் காப்பீடைப் பற்றியோ அல்லது நமது விபத்துக் காப்பீடுபற்றியோ கேட்காமல் நமது வாகனக் காப்பீடு பற்றி கேட்பதன் நோக்கம் என்ன? வாகனக் காப்பீட்டின் முக்கிய நோக்கம்,

அடுத்தவருக்கு நம்மால் ஏற்படும் விபத்தினால் ஏற்படும் சேதத்திற்கு,  முக்கியமாக விபத்தில் பாதிக்கப்படும் வேறு வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும் காப்பீடு தான் மூன்றாம் தரப்புக் காப்பீடு.

சரி, மோட்டார் இன்சூரன்ஸ் வகைகள் என்னென்ன?

1. லயபிலிட்டி ஒன்லி பாலிஸி (Liability only policy) - மேலே குறிப்பிட்ட மூன்றாம் தரப்புக் காப்பீடை குறிப்பது தான் இந்த லயபிலிட்டி ஒன்லி பாலிஸி. அடுத்தவருக்கு நம்மால் ஏற்படும் விபத்தினால் ஏற்படும் உடல் மற்றும் பொருள் சேதத்திற்கு வழங்கப்படும் காப்பீடு தான் மூன்றாம் தரப்புக் காப்பீடு. மோட்டார் வாகனச் சட்டம் (1988) கீழ் இந்த வகையான காப்பீட்டுத் திட்டங்கள் காட்டாயம் எல்லோரும் எடுத்திருக்கவேண்டும்.
பேக்கேஜ் பாலிசி (Package policy): வாழக்கமாக எல்லோரும் எடுக்கும் பாலிசி இந்த வகையைச் சேர்ந்தது தான். இந்தப் பாலிசி மூன்றாம் தரப்புப் காப்பீடும் சொந்த வாகனக் காப்பீடும் இணைந்தது. காப்பீடு ஆவணத்தில் இரண்டிற்குமுண்டான பிரிமியம் தொகை தனித்தனியே குறிப்பிடப்பட்டிருக்கும்.

காப்பீட்டுத் தொகை(Sum Insured)

ஒரு வாகனத்தின் காப்பீட்டுத் தொகை என்பது அந்த வாகனத்திற்கான ஐ டி வி (Insured’s Declared Value) என வழங்கப்படும் வாகனத்தின் தற்போதைய கணக்கீடு தான் வாகனக் காப்பீடாக எடுத்துகொள்ளப்படும். வாகனம் முழுவதும் சேதமடைந்தாலோ அல்லது திருடு போனாலோ கிடைக்கபெறும் காப்பீட்டுத் தொகைதான் தான் ஐ டி வி. சுருக்கமாகச் சொன்னால், வாகனத்தின் தற்போதைய மதிப்பு தான் ஐ டி வி என்பதன் பொருள்.

பிரிமியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

பிரிமியம் இரண்டுவகையாகக் கணக்கிடப்படுகிறது. சொந்தச் சேதாரம் மற்றும் மூன்றாம் தரப்புக் காப்பீடு ஆகும். இன்சுரன்ஸ் துறையை வழி நடத்தும் ஐ ஆர் டி ஏ (I R D A) தான் மூன்றாம் தரப்புக் காப்பீடுக்குண்டான பிரிமியம் தொகையை நிர்ணயம் செய்கிறது. ஆனால் சொந்தச் சேதாரப் பிரிமியத் தொகையை நிர்ணயிப்பது காப்பீட்டு நிறுவனங்கள் தான். போட்டி கருதி வெவ்வேறு நிறுவனங்கள் பிரிமியத்தில் தள்ளுபடி அதிமாகக் கொடுத்து வருவதால் இன்சுரன்ஸ் எடுப்பவர்கள் சில நிறுவனங்களின் பிரிமியத் தொகையை ஒப்பிட்டு பார்த்தல் அவசியம். 

பிரிமியத் தொகை கணக்கீடு செய்யும்போது ஐ டி வி யிலும் மாறுதல்கள் ஏற்படும். குறைவான பிரிமியம் வேண்டும் என்பதற்காக ஐ டி வியை குறைத்தால் அது வாகனத்தின் இழப்பீட்டில் பிரதிபலிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பிரிமியம் ஒப்பிட்டு பார்க்கும்போது எல்லா நிறுவனங்களின் பிரிமியம் கணக்கீடும் ஒரே மாதரியாக எடுத்திருக்கிறார்களா என்று பார்த்தால் தான் எந்த நிறுவனத்தின் பிரிமியம் குறைவு என்று முடிவு செய்யமுடியும்.

மோட்டார் இன்சுரன்ஸ் பிரிமியம் கணக்கீட்டில் கழிவுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கழிவுகள் இரண்டு வகைப்படும்: கட்டாயக் கழிவு மற்றும் விருப்பக் கழிவு. (Compulsory and Voluntary Deductibles)

சுருக்கமாகச் சொன்னால், நமது வாகனத்துக்கு ரூபாய் 1000 கழிவு என்று வைத்துக்கொள்வோம். இழப்பீடு வாங்கும்போது நமது பங்காக ரூபாய் 1000 செலுத்தவேண்டும். மீதியை காப்பீட்டு நிறுவனம் செலுத்தும் என்பது தான் அதன் பொருள். நாம் சுய விருப்பமாக கழிவுகளை உயர்த்தினால் பிரிமியத் தொகை குறையும். ஆனால் இழப்பீடு காலத்தில் நாம் அதிகமாச் செலுத்தவேண்டிவரும். ஆகவே பிரிமியம் தொகை கணக்கீடு செய்யும்முன் கழிவுகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நோ க்ளைம் போனஸ்: (No Claim Bonus)

வாகன உரிமையாளர்கள் வாகன இழப்பீடு கோரவில்லை என்றால் நோ க்ளைம் போனஸ் என்று உரிமையாளருக்கு வழங்கப்படும். இழப்பீடு இல்லாத ஆண்டிற்குப் பிறகு வரும் ஆண்டில் பிரிமியத் தொகையில் அதற்கு ஏற்றார்போல தள்ளுபடி கிடைக்கும். ஒரு ஆண்டில் இழப்பீடு கோரப்பட்டால் நோ க்ளைம் போனஸ் என்பது ரத்தாகிவிடும்.

அடுத்தமுறை உங்களது வாகன இன்சுரன்ஸ் எடுக்கும்போதோ புதுப்பிக்கும்போதோ மேற்கூறிய அனைத்தையும் மனதில் கொண்டு பல நிறுவனங்களின் பிரிமியத் தொகையை ஒப்பிட்டுப் பார்த்தால் நிச்சயம் உங்கள் பணத்தை சேமிக்க முடியும்.

Important website

Monday 12 February 2018

RH (2018) - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

RH (2018) - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

🌟  *ஜனவரி:*

1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.
2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.
3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.

🌟  *பிப்ரவரி:*

1. 13.02.2018 - செவ்வாய் - மகா சிவராத்திரி
2. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.

🌟  *மார்ச்:*

1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.
2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.
3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.

🌟  *ஏப்ரல்:*

1. 01.04.2018 - ஞாயிறு - ஈஸ்டர் டே.
2. 14.04.2018 - சனி - அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ்.
3. 29.04.2018 - ஞாயிறு - சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி.

🌟  *மே:*

1. 01.05.2018 - செவ்வாய் - ஷபே பரா அத்.
2. 17.05.2018 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள் நோன்பு.

🌟  *ஜூன்:*

1. 11.06.2018 - திங்கள் - ஷபே காதர்.

🌟  *ஜூலை:*

1. RH இல்லை.

🌟  *ஆகஸ்ட்:*

1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.
2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.
3. 24.08.2018 - வெள்ளி - வரலெட்சுமி விரதம்.
4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.
5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.
6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.

🌟  செப்டம்பர்:*

1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.
2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.

🌟  *அக்டோபர்:*

1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.

🌟  *நவம்பர்:*

1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.
2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.
3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.

🌟  *டிசம்பர்:*

1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.
2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.
3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.
4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.

CPS ஆசிரியர்கள் கவனத்திற்கு ரூ.50,000/- கூடுதல் கழிவு குறித்து வருமான வரித்துறை இணைய தளத்தில் உள்ளது CPS / NPS என்றெல்லாம் கூறப்படவில்லை..

Cps ஆசிரியர்கள் கவனத்திற்கு

ரூ.50,000/- கூடுதல் கழிவு குறித்து வருமான வரித்துறை இணைய தளத்தில் உள்ளது CPS / NPS என்றெல்லாம் கூறப்படவில்லை..

கன்னியாகுமரி மாவட்டம் பிப்13 உள்ளூர் விடுமுறை

குமரி மாவட்டத்தில் பிப்ரவரி 13-ம் தேதி சிவாலய
ஓட்டம் தொடங்குவதால், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் அறிவித்து உள்ளார்

Thursday 8 February 2018

உங்கள் ஆதார் கார்டு உங்களுக்கே தெரியாமல் பயன்படுத்தப் பட்டதா? செக் செய்துகொள்ளுங்கள்

🌷 *உங்கள் ஆதார் கார்டு உங்களுக்கே தெரியாமல் பயன்படுத்தப் பட்டதா? செக் செய்துகொள்ளுங்கள்*🌷

  🖐 *ஆதார் கார்டு தொடர்பாக ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டே இருக்கிறது. முதலில் ஆதார் கார்டை வாங்குவதில் சிக்கல் இருந்தது. அதன் பின், போலி ஆதார் கார்டுகள் எனப் பல லட்சம் கார்டுகளை அரசே கேன்சல் செய்தது*

  🌷 *அதன்பின், ஆதார்கார்டின்  தகவல்கள் பல இடங்களில் லீக் ஆனதாகப் புகார் எழுந்தது. ஆனால், இதுவரையில் ஒருமுறைகூட பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் ஹேக் செய்யப் படவில்லை,லீக் ஆகவில்லை என UIDAI அமைப்பு உறுதியாகத்  தெரிவித்தது*

🌷 *இந்தச் சூழ்நிலையில் ட்விட்டரில் ஒருவர் இன்னொரு புகாரை எழுப்பினார். தனது மொபைல் எண்ணுடன்ஆதாரை இணைக்கக் கடைக்குச் சென்ற வருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கெனவே அவரது ஆதார் எண் ஐந்து மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்தது. ஆனால், அவர் அப்படி எந்த எண்ணுடனும் இணைக்கவில்லை என ட்விட்டரில் சொல்லியிருந்தார். ஒருவேளை, நமக்கே தெரியாமல் நம் ஆதார் எண்ணைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதோ என்ற ஐயம் பயனர்களிடம் எழுந்தது. இந்தச் சந்தேகத்தைப் போக்கும் வகையில் UIDAI அமைப்பு ஒரு வசதியைக்கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, கடந்த 6 மாதங்களில் நம் ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்ற தகவலை நிமிடங்களில் இணையம் மூலம் தெரிந்துகொள்ள லாம். ஒருவேளை அப்படிப் பயன்படுத்தப்பட்டு இருந்தால் அதை UIDAIன் தொலை பேசி எண்ணான 1945-க்கு அழைத்துப் புகார் செய்யலாம்*

🌷 *இந்தத் தகவலை எப்படி பார்ப்பது? ஆதார் என்ணுடன் ரெஜிஸ்டர் செய்யப் பட்ட மொபைல் எண்ணைக் கைவசம் வைத்துக்கொள் ளுங்கள்*

*1)  முதலில் ' https://resident.uidai.gov.in/notification-aadhaar என்ற இணைய முகவரியைத் திறந்துகொள்ளுங்கள்*

*2)  'Aadhaar Authentication History' என்ற இடத்துக்குக் கீழிருக்கும் பெட்டியில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்யவும்*

*3) பின்னர் 4 இலக்க செக்யூரிட்டி கோடை அருகிலிருக்கும் பெட்டியில் பார்த்து டைப் செய்து, GENERATE OTP என்பதை க்ளிக் செய்யவும்*

*4) ஆதார் வாங்கியபோது நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும்*

*5) அந்த OTP எண்ணை, அடுத்த பக்கத்தில் என்டர் செய்ய வேண்டியிருக்கும். அதற்குமுன் கீழ்க்கண்ட தகவல் களைஎன்டர் செய்யவும்*

*6) இந்தப் பக்கத்தில்  Authentication Type என்ற டிராப் டவுன் மெனு ஒன்றிருக்கும். அதில் ALL என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (அல்லது உங்களுக்கு விருப்பமான வகையை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம்)*

*7) அடுத்து, எந்தத் தேதியிலிருந்து எந்தத் தேதி வரைக்குமான தகவல் தேவை என்பதை உள்ளீடு செய்யவும். அதிகபட்சமாக 6 மாதங்கள் வரையிலான தகவல்களை இதன் மூலம் பெறலாம்*

*8) அடுத்து, எத்தனை என்ட்ரிகளைப் பார்க்க வேண்டுமென்பதை தெரிவிக்க லாம். (அதிகபட்சம் 50 என்ட்ரிகள்)*

*9) இறுதியாக OTP எண்ணை என்டர் செய்து SUBMIT கொடுக்கவும்*

*10) இப்போது, கடந்த 6 மாதத்தில் உங்கள் ஆதார் எண்ணை எங்கெல்லாம் பயன்படுத்தினீர்  கள் என்ற தகவல்கள் வரும்*

🌷  *ஒருவேளை, எந்த டிரான்ஸாக்‌ ஷனிலாவது சந்தேகம் என்றால் உடனே 1945 என்ற எண்ணை அழைத்துப் புகார் செய்யலாம்*
  🌷   *நன்றி*  🌷

CPSல் பணிபுரியும் உங்களுக்கு 80CCD(1B) ல் கூடுதலாக ₹50000 கழிக்க மாவட்ட கருவூல அதிகாரி மறுக்கிறாரா? அப்போ இதை கண்டிப்பா படிங்க... வருமான வரி கணக்கீட்டில் CPSல் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கழிவான ₹50000ஐ 80CCD(1B)ன் கீழ் கழிக்க மறுத்த மாவட்ட கருவூல அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் அனுமதி கடிதம்

CPSல் பணிபுரியும் உங்களுக்கு 80CCD(1B) ல் கூடுதலாக ₹50000 கழிக்க மாவட்ட கருவூல அதிகாரி மறுக்கிறாரா? அப்போ இதை கண்டிப்பா படிங்க...
வருமான வரி கணக்கீட்டில் CPSல் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கழிவான ₹50000ஐ 80CCD(1B)ன் கீழ் கழிக்க மறுத்த மாவட்ட கருவூல அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் அனுமதி கடிதம்

*Income Tax பற்றி சில ஆலோசனைகள்*

*Income Tax பற்றி சில ஆலோசனைகள்*

✍Professional Tax செலுத்தி, கட்டிய  ரசீது இணைக்கவும் .

✍ Pay Com arrears ஐ பிரித்துக் காட்டவும். HRA கூடுதலாக கழிக்கலாம்.

✍EL surrender பிரித்துக்காட்டத் தேவையில்லை.

✍ இரு நகல்கள் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கவும்.

✍காட்டிய எல்லா Deductionsக்கும் உரிய சான்றுகள் & நகல்கள் வைக்கவும்

✍ பிப்ரவரி 10க்குள் சமர்ப்பிக்க ஏதுவாய் கணக்கிட்டுக் கொள்ளவும்.

✍80.C-ல் CPS தொகை தவிர்த்து மொத்த சேமிப்பு ₹150000 வரும் பட்சத்தில் கூடுதலாக CPS-₹50000 80CCD1-ல் கழித்து கொள்ளலாம்.(80C,150000+CPS 50000)
                                                                                     
✍PLI/LIC செலுத்துபவர்கள் தாங்கள் செலுத்திய TAX சேர்த்து கணக்கிட்டு எழுதவும்(PLI- SERVICE TAX/SBC/KKC/CGST/SGST).
                                                                                    
✍3 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். (DA Arrear , Bonus, surrender, pay fix arrear if any)

✍housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

✍மாற்றுத்திறன்   ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.

✍housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- மற்றும்
அசல் 80c ல் கழித்துக் கொள்ளலாம்.

✍housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

✍School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)

✍LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).

✍வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%

✍Taxable income 3.5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.2500/- கழித்துக்  கொள்ளலாம். பிரிவு 87A.

✍Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.
                                                                              ✍Over due payment recovery கழித்து கொள்ளலாம். 

மன்றம்
நீடாமங்கலம்