Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 4 February 2017

,உண்மையில் வருமான வரி சலுகை எவ்வளவு?

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி சலுகையின் மூலம், மூன்று லட்சம் ரூபாய் வரை வருமான வரிசெலுத்த வேண்டாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில், 2.5 லட்சம் ரூபாய் முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வரி, 10 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர,

வருமான வரி சட்டத்தின்87 ஏ பிரிவின் கீழ், ஐந்து லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டு வந்தவரிசலுகையான, 5,000 ரூபாய் என்பது, 2,500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், ஆண்டு வருமானம், மூன்று லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு வரி இருக்காது.

மூன்று லட்சம் ரூபாய் முதல், 3.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள், 2,500 ரூபாய் செலுத்த வேண்டியதாக இருக்கும். எனினும்,4.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி சட்டத்தின் 80 சி பிரிவின் கீழான வரி சலுகைகளை முழுமையாக பயன்படுத்தினால், வரி ஏதும் செலுத்த வேண்டாம் என்ற சூழ்நிலை ஏற்படும்.

கூடுதல் வருமானம் உள்ளவர்களுக்கும் இந்த, 5 சதவீத வரி கட்டமைப்பில் வருவார்கள். எனவே, கூடுதல் வருமானம் உள்ளவர்களுக்கு, தலா, 12, 500 ரூபாய் வரை வரி குறைய வாய்ப்பு உள்ளது.தனிநபர்களின் ஆண்டு வருமானம், 50 லட்சம் ரூபாயில் இருந்து, ஒரு கோடி ரூபாய் வரை இருந்தால், 10 சதவீதம் கூடுதல் வரி வசூலிக்கப்படும்.

தற்போது இந்த பிரிவில் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி கிடையாது. எனினும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ஏற்கனவே வசூலிக்கப்படும் கூடுதல் வரியான, 15 சதவீதம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment