Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 14 June 2017

ஜிமெயில் அக்கவுண்டினை பாதுகாப்பது எப்படி?

மெயில் சேவையை பயன்படுத்த அனைவரும் விரும்பும் தளமாக கூகுளின் ஜிமெயில் உள்ளது.
ஜிமெயில் முகவரியை கொண்டு பல்வேறு சேவைகளை தினமும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இதே முகவரியை கொண்டு சமூக வலைத்தளங்களையும் நாம் பயன்படுத்துகிறோம்.
அதிக சேவைகளை பயன்படுத்துவதால் ஜிமெயில் சில சமயங்களில் நமது பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் ஒன்றாக இருக்கிறது. உங்களின் ஜிமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டால் உடனே உஙகளது லாக்-இன் பாஸ்வேர்டினை மாற்றிட வேண்டும்.
ஆனால் உங்களது ஜிமெயில் அக்கவுண்டினை பாதுகாப்பது எப்படி? தொடர்ந்து வரும் ஐந்து வழிமுறைகளை பின்பற்றி உங்களது ஜிமெயில் அக்கவுண்ட் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுங்கள்..
உங்களது அக்கவுண்டினை பாதுகாப்பு கூகுளில் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இங்கு உங்களது ஜிமெயில் அக்கவுண்டினை லாக்-இன் செய்ய ஏற்கனவே கூகுளில் ரெஜிஸ்டர் செய்துள்ள மொபைல் போன் நம்பருக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் அனுப்பப்படும். இதை பதிவு செய்தால் மட்டுமே கூகுளில் லாக்-இன் செய்ய முடியும்.
இந்தவசதியை இயக்க ப்ரோஃபைல் -- மை அக்கவுண்ட் -- சைன்-இன் & செக்யூரிட்டி -- பாஸ்வேர்டு & சைன்-இன் மெத்தட்ஸ் -- பாஸ்வேர்டு செட்டிங்ஸ் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். இங்கு டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷனுக்கான ஆப்ஷன் தெரியும். இங்கு உங்களது மொபைல் போன் நம்பரை கிளிக் செய்து ஆப்ஷனை ஆன் செய்யக் கோரும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
இனி உங்களது மொபைல் நம்பரை என்டர் செய்து உங்களுக்கு வரும் ஒன்டைம் பாஸ்வேர்டினை பதிவு செய்ய வேண்டும்.
இந்த வழிமுறையில் தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பும் முன் அவற்றை என்க்ரிப்ட் செய்ய முடியும். இதை செயல்படுத்த ஜிமெயில் அக்கவுண்ட் சென்று செட்டிங்ஸ் -- செட் பிரவுஸர��

No comments:

Post a Comment