தமிழகத்தில் 73.67% வாக்குப்பதிவு: இறுதி புள்ளி விவரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம் தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 73.67 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழக தேர்தல் ஆணையம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் குறித்த இறுதி நிலவரத்தை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 73.67 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் இத்தகவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையிலேயே நடந்து முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில், 39 தொகுதிவாரியாக பதிவான வாக்குகளின் இறுதி பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 81.07% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 60.4% வாக்குகளும் பதிவாகின. தருமபுரியில் அதிகபட்சமாக 81.58% ஆண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் பதிவான 73.67 சதவீத வாக்குகளில், ஆண்கள் 73.49%, பெண்கள் 73.85%, மூன்றாம் பாலினத்தவர் 12.72% என்ற அளவில் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இம்முறை ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 73.67% வாக்குகள் என்பது, கடந்த 2009-ம் மக்களவைத் தேர்தலை காட்டிலும் 0.69% உயர்ந்துள்ளது என்பது கவனிக்கதக்கது.
Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2014
(105)
-
▼
April
(20)
- 73.67% வாக்குப்பதிவு.
- +2 தேர்வு மறு கூட்டல்
- +2 results
- விடுதலையில் திடீர்திருப்பம்
- பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர்கள் மாறுதல் விண்ணப்பம்.
- புகார் /atm/ bank
- ATM பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்
- TET 2nd paper CV datails
- நோக்கியா போன் பெயர் மாற்றம்.
- சுறுசுறுப்பாக இருக்க தோப்பக்கரணம் போடுங்கள்
- தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் கவனத்திற்கு
- வாக்காளர்கள் மிக குறைவாக உள்ள வாக்கு சாவடி.
- பெண் ஊழியருக்கு 730 விடுப்பு.
- மின் கட்டணம்
- Indian bank news.
- எழை குழந்தைகளுக்கும் தனியார் க
- change ur online passwords
- ஒய்வூதிய விபரத்தை அறிய
- அரசே மின் கட்டணத்தை செலுத்தும்.
- வரலாறு -வினா விடை
-
▼
April
(20)
Saturday, 26 April 2014
Friday, 25 April 2014
விடுதலையில் திடீர்திருப்பம்
7 பேர் விடுதலையில் திடீர் திருப்பம்: வழக்கு விசாரணை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்! Posted Date : 10:44 (25/04/2014)Last updated : 11:02 (25/04/2014) புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு எதிராக வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் திடீரென உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை பிப்ரவரி 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த 3 பேர் உள்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட 4 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு தனது அதிகாரத்திற்குட்பட்டு முடிவெடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதையடுத்து இந்த 7 பேரையும் விடுக்க முடிவு செய்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதியன்று முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடைபெற்றது. இதில், அனைத்துத்தரப்பு வாதங்களும் கடந்த மார்ச் 27 ஆம் தேதியன்று முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது என்றும், 5 அல்லது 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி சதாசிவம் கொண்ட இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கில் 7 விதமான விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது என்று கூறியுள்ள நீதிபதிகள், இதுபோன்ற வழக்கை முதல்முறையாக எதிர்கொள்வதாகவும், 3 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க அரசியல் சாசன அமர்வுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு மீதான தடை தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர்கள் மாறுதல் விண்ணப்பம்.
Trs counselling will be held on july 2nd week.more details.
Tuesday, 22 April 2014
புகார் /atm/ bank
ATM பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்
Monday, 21 April 2014
சுறுசுறுப்பாக இருக்க தோப்பக்கரணம் போடுங்கள்
தினமும் போடுங்க தோப்புக்கரணம்... தோப்புக்கரணம் போடுவது உடலுக்கு நல்ல யோகப் பயிற்சி. மூளை சுறுசுறுப்படைந்து மனமும் உற்சாகத்தில் மிதக்கும். 100 கலோரிகளை எரிக்க... * 10 நிமிடங்கள் தோப்புக்கரணம் போடுங்கள். * நான்கு மாடிக் கொண்ட மாடிப்படிகளில் ஒருமுறை ஏறி இறங்குங்கள். * 45 நிமிடங்கள் வீட்டு வேலை செய்யுங்கள்.
தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் கவனத்திற்கு
தபால் வாக்கை உரிய தேதிக்கு முன் போட்டு விடுங்கள். தபால் ஓட்டு சம்மந்தமான படிவங்கள் கடைசி தேர்தல் வகுப்பில் வழங்கப்படும். முதல் முறையாக தேர்தல் பணிக்குச் செல்பவர் என்றால் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்யும் முறை, உள்ளுறை, வெளியுறை, படிவம் நிரப்புதல் அத்தாட்சிக் கையொப்பம் பெறுதல் போன்ற விஷயங்களை மற்றவரிடம் கேட்டோ விதிமுறைகளை நன்றாகப் படித்துவிட்டோ செய்யுங்கள். அவசரப்பட்டு தவறு செய்துவிட்டால் மாற்றிக்கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வாக்கை தவறாமல் செலுத்திவிடுங்கள். 2. உங்கள் தேர்தல் பணி உத்தரவைப் பத்திரமாக எடுத்து வையுங்கள். நகல் எடுத்து வையுங்கள். தபால் வாக்கு விண்ணப்பிக்கவும் தேர்தல் பணிக்காகச் செல்லும்போதும் திரும்பி வீடு வரை வரும்போதும் அதுதான் நம் பாதுகாப்புக் கவசம். 3. உங்களுக்குரிய வாக்குச்சாவடியை உறுதி செய்து கொள்ளுங்கள். வாக்குச்சாவடி அமைந்துள்ள ஊரின் பெயரைத் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளுங்கள். ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்கள் ஒரே மாவட்டத்தில் உள்ளன. சான்றாக, சின்னியம்பாளையம் என்ற ஊர் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் உள்ளன. உங்களுக்குரிய ஊர் எது என்பதில் தெளிவாக இருங்கள். 4. உங்கள் சாவடியில் நீங்கள் எந்தவகைப் பணியில் இருந்தாலும் மற்ற எல்லோரிடமும் அனுசரித்துப் பேசுங்கள். அவர்களைப் பார்க்கும் போதும் ஃபோனில் பேசும்போதும் வணக்கம் சொல்லியும் நலம் விசாரித்தும் பேச்சைத் தொடங்குங்கள். 5. டூத்பேஸ்ட், பிரஷ், சோப்பு, ஷாம்பூ, சீப்பு, பர்ஸ், ATM அட்டை, அடையாள அட்டை, பணி ஆணை, மாற்றுத் துணிகள், துண்டு, பெட்ஷீட், காற்றுத் தலையணை, முகம் பார்க்கும் கண்ணாடி, முகப்பவுடர், மூக்குக்கண்ணாடி வைக்கும் பெட்டி, செல்ஃபோன் சார்ஜர், டார்ச் விளக்கு, கொசுவர்த்திச் சுருள், தீப்பெட்டி போன்றவற்றை முதல் நாளே தயாராகப் பைக்குள் எடுத்து வையுங்கள். 6. ஸ்கெட்ச், பேனா, பென்சில், கத்தரிக்கோல், பிளேடு, ரப்பர், பசை, செல்லோடேப், அளவுகோல் போன்ற ஸ்டேஷனரி பொருட்களை ஒரு டப்பாவில் எடுத்துக் கொள்ளுங்கள். (சாவடியில் வழங்கப்படும் பொருட்கள் பற்றாக்குறையாகவோ பழுதாகவோ இருந்தால் பயன்படுத்த) 7. புளிசாதம் / தக்காளி சாதம்/ தயிர்சாதம்/ எலுமிச்சை சாதம் ஓரிரு வேளைக்கு பார்சல் எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் ஃப்ளாஸ்க் எடுத்துக் கொள்ளவும். 8. அதிகமான பணம் கொண்டு செல்வதை அறவே தவிர்க்கவும். 9. சாவடி ஏஜண்ட்களிடமோ உள்ளூர்வாசிகளிடமோ உங்கள் தொடர்பு எண்ணையோ முகவரியையோ தனிப்பட்ட விவரங்களையோ தெரிவிக்காதீர்கள். 10. தலைவலி, காய்ச்சல், ஒவ்வாமை, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
Saturday, 19 April 2014
Friday, 18 April 2014
பெண் ஊழியருக்கு 730 விடுப்பு.
மின் கட்டணம்
Thursday, 17 April 2014
Indian bank news.
Friday, 11 April 2014
எழை குழந்தைகளுக்கும் தனியார் க
change ur online passwords
ஒய்வூதிய விபரத்தை அறிய
அரசே மின் கட்டணத்தை செலுத்தும்.
அரசு பள்ளி மின் கட்டணத்தை நேரடியாக செலுத்த இயக்குனரகம் முடிவு அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதில், குளறுபடி ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்ய, இயக்குனரகம் மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்த, முடிவு .