Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Monday 27 June 2016

SRல் இருக்கவேண்டிய பதிவுகள்

ஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பதிவுகள்

1. முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும்.,பெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. பணி நியமன முழு விபரம்.
3. பணி வரன்முறை படுத்தப்பட்ட விபரம்.

4. தகுதி காண் பருவம் முடிக்கப்பட்ட விபரம்.
5. GPF/TPF/CPS எண் விபரம்.
6. NHIS / SPF 1/SPF2 பிடித்தம் தொடங்கப்பட்ட / முடிக்கப்பட்ட விபரம்.
7. ஒவ்வொரு ஆண்டும் பணி சரிபார்ப்பு செய்யப்பட்ட விபரம் (ServiceVerification).
8. ஆண்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட விபரம் .
9. மருத்துவ விடுப்பு / ஈட்டிய விடுப்பு / அரைச்சம்பள விடுப்பு / ஊதியமில்லா விடுப்பு போன்ற விடுப்புகள் எடுக்கப்பட்ட விபரம்.
10. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யப்பட்டவிபரம் (15 /30 நாட்கள்).
11. உயர்கல்வி படிக்க முனு அனுமதி / பின் ஏற்பு அளிக்கப்பட்ட விபரம்.
12. உயர்கல்வி தேர்ச்சி பெற்ற விபரம்.
13. சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெறப்பட்ட விபரம்.
14. ஊக்க ஊதியம் வழங்கப்பட்டதற்கான முழுமையான ஆணை விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்.
15. தேர்வுநிலை / சிறப்பு நிலை வழங்கப்பட்ட விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்
16. ஊதியத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அது பற்றிய முழு விபரம். எடுத்துக்காட்டாக தர ஊதியம் ரூ.2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனி ஊதியம் ரூ.750மற்றும் 4300 தரஊதியம் பெறுவோருக்கு சிறப்பு படி ரூ.500 வழங்கப்படும் விபரம்.
17. பதவி உயர்வு பெறும்போது தொடர்புடைய ஆணை பதிவு, புதிய பதவி பணிவரன் முறை செய்யப்பட்ட விபரம், 22B சான்று பெறப்பட்ட விபரம், பதவி உயர்வு ஊதிய நிர்ணய விபரம்.
18. பதவி உயர்வு பெறும் போது ஊதிய நிர்ணயம் செய்யப்படும் தேதி குறித்து தனியரின் விருப்பம் ஏதேனும் இருந்தால் அது பற்றிய பதிவு.
19. ஊதியக்குழு ஊதிய நிர்ணயம் முழு விபரம் மற்றும் தனியரின் விருப்பம் (option)குறித்த பதிவு.
20. வாரிசுதாரராக யாரை நியமனம் செய்திருக்கிறோம் என்பது பற்றிய விபரம்.
21. பொது மாறுதல்களில் வந்த விபரம்.

No comments:

Post a Comment