Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 29 December 2018

வண்ணம் தேர்வு செய்வது எப்படி

🍑 *வண்ணங்களால் அழகாகும் வீடு*

🌻2019-ம் ஆண்டை வரவேற்கத் தயாராகிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வீட்டின் வண்ணங்களை மாற்றலாம் என்று பலரும் யோசித்துகொண்டிருப்பார்கள்.

🌻தனிநபர்களின் உடல், உணர்வு, மனம், ஆன்மிக மட்டங்களில் தாக்கம் செலுத்தக்கூடியவை வண்ணங்கள்.

🌻அதனால், வீட்டின் வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது கூடுதல் கவனம் எடுத்துகொள்வது நல்லது.

🌻வண்ணங்களுக்குக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. நாம் பார்க்கும் வண்ணங்கள் நமக்குள் பலவிதமான ஆற்றல்களைக்  கடத்துகின்றன. ஒவ்வொரு நிறமும் தனித்துவம் வாய்ந்த அதிர்வைக் கொண்டிருக்கிறது.

🌻அதனால், வீட்டுக்கு வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துகொள்ளலாம்.

🌻இயற்கையாக நமக்குக் கிடைக்கும் சூரிய வெளிச்சத்தைத் தவிர்க்கும்போது, அது நமக்குள் சோம்பல், சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றை உருவாக்கும்.

🌻அதுபோல, வண்ணங்களில் நல்ல வண்ணம் கெட்ட வண்ணம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. ஒரே வண்ணத்துக்கு நல்ல இயல்புகள், தீய இயல்புகள் என இரண்டுமே இருக்கின்றன.

🌻அதனால், எந்தவொரு வண்ணத்தையும் அளவுக்கு மீறி பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

🌻வண்ணங்களை வீட்டின்  சுவர்களுக்கு மட்டும் பயன்படுத்தாமல் அறைக்கலன்கள், கலைப்பொருட்கள், ஓவியங்கள், விளக்குகள், செடிகள், தரைவிரிப்புகள், திரைச்சீலைகள், தலையணைகள், படுக்கைவிரிப்புகள் போன்ற அம்சங்களிலும் பயன்படுத்தலாம்.

🌻எந்த அறைக்கு என்ன வண்ணமடிக்கலாம் என்பதற்கான ஆலோசனைகள்…

🍄வீட்டின் கூரைக்கு (Ceiling) எப்போதும் வெள்ளை, மங்கிய வெள்ளை நிறத்தைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது. வெள்ளை நிறம் வெளிச்சத்தைப் பிரதிபலிப்பதால் கூரைக்கு ஏற்றதாக இருக்கும்.

🥦இயற்கையான வண்ணங்களான பச்சை (வாழ்வையும் வளர்ச்சியையும் குறிக்கும்), மஞ்சள் (நிலைத்தன்மை), ஆரஞ்சு (மகிழ்ச்சி), நீலம் (கவனம் குவிக்க உதவும்) போன்றவை குழந்தைகளின் அறைகளுக்கு ஏற்றவை.

🍄 பூஜை அறைக்கு ஊதா, லாவெண்டர் போன்ற வண்ணங்களைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். ஆன்மிகம், அமைதி, ஞானம் போன்றவற்றை இரண்டு வண்ணங்களும் விளக்குவதால், அவை பூஜை அறைக்கு ஏற்றதாக இருக்கும்.

🥦 ஆரஞ்சு வண்ணத்துக்கு உற்சாகம், ஆர்வத்தைத் தூண்டும் வலிமை இருக்கிறது. இந்த வண்ணம் உடற்பயிற்சி அறைக்கு ஏற்றதாக இருக்கும்.

🍄 சிவப்பு வண்ணம் பசியைத் தூண்டும் வல்லமை கொண்டது. அதனால், சிவப்பு வண்ணச் சிதறல்கள் சாப்பாட்டு அறையில் இருப்பது பொருத்தமானதாக இருக்கும். சிவப்பு வண்ண மலர்கள், சிவப்பு மேசைத் துணி போன்றவற்றை இதற்குப் பயன்படுத்தலாம்.

🥦 படுக்கையறைகளில் எப்போதும் அமைதியான வண்ணங்களைப் பயன்படுத்துவதுதான் பொருத்தமாக இருக்கும். இளஞ்சிவப்பு, பீச் (Peach), இளம் மஞ்சள், பச்சை போன்ற மென்மையான வண்ணங்கள் படுக்கையறைக்குப் பொருத்தமாக இருக்கும்.

🍄 சிவப்பு, கோபத்தையும் பிரதிபலிக்கும் வண்ணம் என்பதால் இந்த வண்ணத்தைப் படுக்கையறைக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment