Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 14 December 2016

வே எனபதின் பொருள்

"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.

தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.

மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.

சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.

சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.

'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.

நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.

வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.

பாம்பின் கால் பாம்பு அறியும். தமிழைக் கற்றவருக்கே தமிழின் இனிமை தெரியும்.

வாழ்க தமிழ்..

2 comments:

  1. இது தவறான தகவல். ..
    வே என்றால் வேகுதல் என்பதே பொருள்

    ReplyDelete
    Replies
    1. ஆம் அண்ணா தவறான தகவல்களே தேவையில்லாமல் பகிர்ந்து தமிழை கெடுக்கிறார்கள்.

      தமிழ் எங்களுக்கு இயலவே வழங்கப்பட்ட அரும் பொக்கீஷம் உங்கள் கற்பனை குதிரையை பறக்க விடும் பந்தயம் அல்ல என்பதை பதிவிட்டவர் புரிந்து கொள்ளவும்

      Delete