Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday 15 December 2016

மகாபாரதம் ஒரு புராணம் அல்லது காவியம்..... அது வெறும் கதையா.... கற்பனையா.... வெறும் கதைப்பாடா!! என்பதைத் தாண்டி அது ஒரு வாழ்கைத் தத்துவம், இந்துமதம் அளித்த ஒரு வாழ்கை நெறிமுறை

சமீபத்தில் படித்தில் பிடித்தது. இதை எழுதியவர் பெயர் தெரியவில்லை..... ஆனாலும், "நன்றிகள்" எப்படி நமக்கெல்லாம் தெரிந்த ஒரு காவியத்திற்கு இப்படி ஒரு விளக்கமா !! அசத்திவிட்டார்..... என்ன ஒரு கருத்தாழம், படியுங்கள்.... பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மகாபாரதப் போரில், வெறும் பதினெட்டேநாட்களில்...... போரில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் மடிந்து போனார்கள் என்றுதான் இன்றுவரை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்..... மேலும் படியுங்கள், இதுவரை எந்த தொலைக்காட்சித் தொடரிலும், உபன்யாசங்களிலும் சொல்லப்படாத ஒரு பார்வை.

முதலில் சஞ்சயனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன், அதன்பின் இந்தக் காவியம் சொல்லும் நீதி என்ன என்று பார்ப்போம்.

சஞ்சயன், திருதிராஷ்டிர மன்னரின் தேரோட்டியான காவல்கணா(Gavalgana) என்பவனின் மகன். அவனுக்கு வியாச முனிவர் தூரத் திருஷ்டி வரம் அளித்திருந்தார். அந்தக் கண்ணின் மூலம் அவனால் 50 மைல் தொலைவில் உள்ளதைப் பார்க்க முடியும். அவன்தான், மன்னருக்கு ஆலோசகன். திருதிராஷ்டிர மன்னன் அவனை உடன் அழைத்துக்கொண்டு, யுத்தம் முடிந்த பின் யுத்த களத்திற்குச் சென்றான்.

அங்கு அவன் கண்களுக்கு எதுவுமே புலப்படவில்லை. இவ்வளவு பெரிய யுத்தம் நடந்து முடிந்திருக்கிறது....... அதற்கான ஒரு சிறு தடயம்கூட புலப்படவில்லை..... சுற்றும் முற்றும் பார்த்த சஞ்சயனுக்கு சந்தேகமே வந்துவிட்டது. இந்த இடத்தில்தான் போர் நடந்ததா!! இங்குதான் பாண்டவர்களுடன் பகவான் கிருஷ்ணரும் நின்று கொண்டிருந்தாரா ! இங்குதான் அர்ச்சுன்னுக்கு, கீதை உபதேசிக்கப்பட்டதா ! ஆயிரம் உயிர்கள் மடிந்து போன சுவடுகூட இல்லையே ! என்றெல்லாம் எண்ணங்கள் தோன்ற, சஞ்சயன் உண்மையில் சலனமடைந்தான். அப்போது அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல், "உன் மனதில் தோன்றும் கேள்விகளுக்கெல்லாம் உனக்கு பதிலே கிடைக்காது" என்றது. திரும்பிப் பார்த்தால் ஒரு வயது முதிர்ந்தவர்... வெள்ளை உடையில்...... அந்த சூரிய ஒளியின் பின்னணியில், நின்று கொண்டிருந்தார். அவர் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் வந்திருக்கிறார் என்று மட்டும் புரிந்து கொண்டான்.

"நீ குருஷேத்திர யுத்தம் நடந்து முடிந்த யுத்தகளத்தைப் பார்த்து திருதிராஷ்டிரனுக்கு சொல்வதற்காக வந்திருக்கிறாய். உன்னால் அது முடியாது. அதற்கு நீ முதலில் யுத்தம் யாருக்கும், யாருக்குமிடையே நடந்தது என்று தெரிந்துகொள்ள வேண்டும், அப்போதுதான் உனக்கு முழு உண்மையும் புரியும் என்றார்.
நீங்கள் சொல்வது விளங்கவில்லை என்றான்.

மகாபாரதம் ஒரு புராணம் அல்லது காவியம்..... அது வெறும் கதையா.... கற்பனையா.... வெறும் கதைப்பாடா!! என்பதைத் தாண்டி அது ஒரு வாழ்கைத் தத்துவம், இந்துமதம் அளித்த ஒரு வாழ்கை நெறிமுறை என்றார். அந்த தத்துவத்தை விளக்கும்படி விண்ணப்பித்தான்.
அப்போது அந்த முதியவர் விளக்கமளிக்க ஆரம்பித்தார்.

"பஞ்சபாண்டவர்கள் என்பவர்கள், நமது ஐம்புலன்களாவர் என்றார். அப்படியென்றால் கவுரவர்கள் !? என்று கேட்டான். அவர் கவுரவர்கள் 100 பேர் நமது வாழ்வியலில் நம்மிடைய உள்ள 100 தீய பழக்கங்களாகும். அவைகள் நம்முடைய ஐம்புலன்களை அடக்கி ஆள முயற்சித்துக் கொண்டே இருக்கும். ஆனால், நம்மால் அந்த 100 தீய பழக்கங்களை வெல்ல முடியும். எப்படி என்று விளக்குகிறேன் என்றார்.
சஞ்சயன் கேட்டான், பகவான் கிருஷ்ணர் தேரோட்டி போல இருந்து வழி நடத்தும் போதுகூடவா என்றான். இன்னமும் உன்னிடத்திலுள்ள கேள்விகளையெல்லாம் கேள் என்றார். சஞ்சயனின் சலனம் சற்றே குறைந்த மாதிரி இருந்தது. அவர் கூறினார், "கிருஷ்ணர், உனது மனசாட்சியைப் போன்றவர், அவர்தான் உன்னுடைய ஆன்மா, உன் வாழ்விற்கு வழிகாட்டி. அந்த ஒளியின் பாதையில் நீ நடந்தால், நீ எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதே இல்லை.

Sanjaya was numb but came with another question. ‘Then why are Dronacharya and Bhishma fighting for the Kauravas, if they are vices?’
சஞ்சயன் வாயடைத்துப் போயிருந்தவன், சற்றே தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, கவுரவர்கள் 100 தீய பழக்கங்களென்றால், பிறகு ஏன் துரோணாச்சார்யரும், பீஷ்மரும் அவர்கள் பக்கம் போரிட்டனர், அவர்கள்தான் தீய பழக்கங்களுக்கு இணையானவர்களாயிற்றே !?? என்று கேட்டான்.

அந்த முதியவர் சோகமான புன்னகையுடன், " நாம் வளர, வளர முதியோர்கள் அல்லது குருமார்களைப பற்றிய நமது பார்வை மாறும். நாம் யாரிடத்தில் எந்தக் குறையும் இல்லை என்று தினைத்திருந்தோமோ, அவர்களிடம் உள்ள குறைகள் புலப்படும். அப்படிப்பட்ட புலப்படும்போது, நாம் அவர்களை எதிர்க்க வேண்டி வரும். அதுதான் வாழ்கை முறை. அதனால்தான் பகவத்கீதை மிகவும் முக்கியமான பாடம் என்றார்.

மகாபாரதம் உணர்த்தும் உண்மை, உள்ளர்த்தம், தத்துவம் புரியாமல் தவிர்த்தான் சஞ்சயன். புரியாமல் இல்லை, அது உணர்த்தும் ஆழத்தை, மகத்துவத்தை எண்ணி ஆச்சரியப்பட்டான். மீண்டும் ஒரு முறை அவரைப் பார்த்து, நீங்கள் சொல்லும் விளக்கத்தினை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால்...... கர்ணன் ??!!! என்றான்.
அந்த முதியவர் மாறாத புன்னகையுடன், மகிழ்ச்சியோடு கூறத் தொடங்கினார். கர்ணன், நமது ஐம்புலன்களின் சகோதரனாகிய ஆசை !! ஆசையும் நமது புத்திசாலித்தனம் விளைந்ததுதான், ஆனால் எப்போதுமே ஆசை தீய பழக்கங்களின் அடிக்கோலாக, கூடவே இருக்கும். மனிதன் ஒவ்வொரு முறையும் தவறு செய்யும்போதும், ஆசை அதை நியாயப்படுத்தும். அது நமது ஒவ்வொரு செயலையும் நமக்கே நியாயப்படுத்தும்.

சஞ்சயன் தலை குனிந்தான். அவனுக்குள்ளே எண்ண அலைகள் சூறாவளிக் காற்றின்போது கடலைப்போல கொந்தளித்துக் கொண்டிருந்தது. அவர் கூறிய எல்லாவற்றையும் ஒரு கோர்வையாக சிந்தித்துப் பார்க்க ஆரம்பித்தான். அவன் தலை நிமிர்ந்துப் பார்த்த போது அந்த முதியவர் அங்கே இல்லை. அந்த இடம் இருள் சூழ்ந்து இருந்தது. அது வரை அவனுக்கு கிடைத்திருந்த வரமான, தூர திருஷ்டி என்ற மூன்றாவது கண்ணும் மறைந்தது.

"அதுவரை அவனுக்கு வாழ்கையில் புரியாத பலவற்றை உணர்த்தி வந்த அந்த மூன்றாவது கண், தூரதிருஷ்டி அவனுக்கு இனிமேல் தேவையேபடாது என்ற உண்மையை, மகாபாரதம் உணர்த்திய மிகப்பெரிய உண்மையை, வாழ்கை நெறியை உணர்ந்து கொண்டான்." சஞ்சயன்.

No comments:

Post a Comment