Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 20 August 2016

இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்று புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. இப்பாடத்திட்டத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை கட்டி தமிழன் ஆற்றுநீர்ப்பாசனம் மூலம் வேளாண்மை செய்தான் என்ற வரலாறு இடம்பெறுமா? மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதே இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பல்வேறு தேசிய இன மக்களின் மொழி, பண்பாடு, கல்வி, அரசியல், பொருளாதார நடவடிக்கைகளில் தனித் தன்மைகளைப் பாதுகாப்பதற்கே. ஆனால் மத்தியில் கூட்டுக்கொள்ளை, மாநிலத்தில் தனிக்கொள்ளை என்ற நிலை உருவாகும் வகையில் பிழைப்புவாத அரசியல் வளர்ந்துவிட்டது. தேசிய இன உரிமைகளுக்கு புதிய கல்விக் கொள்கை முற்றிலும் எதிரானது என்ற நிலையில் இருந்து ஒவ்வொரு மாநில மக்களும் இதை எதிர்க்கவேண்டும். ஆனால் இந்திய தேசிய ஒற்றுமை என்ற மாயவலைக்குள் சிக்கியவர்களால் கல்விக் கொள்கையை மாநில மக்களின் அடிப்படை இறையாண்மை மீதான தலையீடாகப் பார்க்கமுடிவதில்லை. சில உள்ளீடுகள் தவறானவை. அவற்றை மாற்றவேண்டும் என்று மட்டுமே பார்க்க முடிகிறது. தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் சூழலில் ஒடிசா மாநில மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சாரத்திற்கேற்ற கல்விக் கொள்கையை ஒடிசா அரசு உருவாக்கும் முயற்சியில் கடந்த ஆண்டிலேயே மேற்கொண்டது. ஒடிசாவைப் பார்த்து அனைத்து மாநிலங்களும் பின்பற்றவேண்டும். அதுதான் மாநில மக்களின் இறையாண்மையைக் காப்பதாக அமையும்.

இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்று புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. இப்பாடத்திட்டத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை கட்டி தமிழன் ஆற்றுநீர்ப்பாசனம் மூலம் வேளாண்மை செய்தான் என்ற வரலாறு இடம்பெறுமா? மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதே இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பல்வேறு தேசிய இன மக்களின் மொழி, பண்பாடு, கல்வி, அரசியல், பொருளாதார நடவடிக்கைகளில் தனித் தன்மைகளைப் பாதுகாப்பதற்கே. ஆனால் மத்தியில் கூட்டுக்கொள்ளை, மாநிலத்தில் தனிக்கொள்ளை என்ற நிலை உருவாகும் வகையில் பிழைப்புவாத அரசியல் வளர்ந்துவிட்டது. தேசிய இன உரிமைகளுக்கு புதிய கல்விக் கொள்கை முற்றிலும் எதிரானது என்ற நிலையில் இருந்து ஒவ்வொரு மாநில மக்களும் இதை எதிர்க்கவேண்டும். ஆனால் இந்திய தேசிய ஒற்றுமை என்ற மாயவலைக்குள் சிக்கியவர்களால் கல்விக் கொள்கையை மாநில மக்களின் அடிப்படை இறையாண்மை மீதான தலையீடாகப் பார்க்கமுடிவதில்லை. சில உள்ளீடுகள் தவறானவை. அவற்றை மாற்றவேண்டும் என்று மட்டுமே பார்க்க முடிகிறது.
தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் சூழலில் ஒடிசா மாநில மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சாரத்திற்கேற்ற கல்விக் கொள்கையை ஒடிசா அரசு உருவாக்கும் முயற்சியில் கடந்த ஆண்டிலேயே மேற்கொண்டது. ஒடிசாவைப் பார்த்து அனைத்து மாநிலங்களும் பின்பற்றவேண்டும். அதுதான் மாநில மக்களின் இறையாண்மையைக் காப்பதாக அமையும்.

No comments:

Post a Comment