Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Sunday 2 October 2016

வேட்பு மனு பரிசீலனை* *பகுதி 4*

*வேட்பு மனு பரிசீலனை*
*பகுதி 4*

*வேட்பாளர்களின் தகுதி இன்மை*

அன்பார்ந்த தோழர்களே!

வேட்பு மனு பரிசீலனை என்பதில் வேட்பாளரின்  தகுதியின்மை என்கிற *இப்பதிவு கொஞ்சம் பெரிய பதிவு தான்*

ஆனால் மிக அவசியமானது என்கிற அடிப்படையில் பொறுக்கவும்.

அது சரி ,

முன்னுரையே இவ்வளவு நேரமா?

மேட்டருக்கு வருவோம்.

*வேட்பாளாரின் தகுதியின்மை குறித்து  (ச.பிரிவு - 33) என்ன சொல்லுதுனு பார்ப்போம்?*

👉🏾ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு போட்டியிடுபவர்கள்.

👉🏾கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் ஒரு வார்டிற்கு மேலாக கூடுதலாக வார்டில் மனு தாக்கல் செய்தவர்.

👉🏾ஊராட்சி வார்டு உறுப்பினர் ஒன்றுக்கு மேற்பட்ட வார்டுகளில் மனுதாக்கல் செய்தவர்.

👉🏾கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (அ) தலைவர்,மாவட்ட ஊராட்சி வார்டு, வட்டார  ஊராட்சி வார்டு, நிற்க தகுதியின்மை.

👉🏾கிராமநிர்வாக அலுவலர், மத்திய அரசு ஊழியர் தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சி,  ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி பணியில் இருப்பவர்கள்  மத்திய/ மாநில அரசின் கட்டுப்பாட்டின் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், இராணுவகுடியிருப்பு அமைப்பு (contentment) இருப்பவர்கள். (ச.பி.34 (1)).

👉🏾ஊராட்சிகள் சட்டப்பிரிவு 58 முதல் 71 முடியவுள்ள சட்டப்பிரிவுகளின் கீழ் தேர்தல் குற்றங்களுக்காகவும் IPC 9 A ன் கீழ் குறிப்பிடப்பட்ட குற்றங்களுக்காகவும் தண்டிக்கப்பட்டவர்கள் (ச.பி.35).

👉🏾சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வில் போட்டியிட தகுதி பெறாதவர் என, எந்த சட்டங்களில் ஆயினும் அறிவிக்கப்பட்டவர்.ஒழுக்கம் சார்ந்த குற்றங்களுக்காக, குற்றவியல் நீதிமன்றத்தால்தண்டனைஅடைந்தவர்(ச.பி.37 (a)).

👉🏾குடியுரிமை பாதுகாப்புச்சட்டம் 1995ன்படி தண்டனை பெற்றவர் (ச.பி.37(2)).

👉🏾புத்தி சுவாதீனம் அற்றவர் என நீதி மன்றத்தால் அறிவிக்கப்பட்டவர். (ச.பி.37(J)).

👉🏾கடனாளியென நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் (ச.பி.37(2)).

👉🏾மாநிலத்தில் உள்ள எந்தவொரு ஊராட்சிக்கும் வாதாடும் வழக்கறிஞர் (ச.பி.37(3(a)).

👉🏾ஒதுக்கப்பட்ட பதவியில் தான் தகுதியற்றவர் எனத் தெரிந்தும், மனுதாக்கல் செய்பவர் (ச.பி.37(3) (D)).

👉🏾தேர்தல் செலவு காட்டாமல், தேர்தல் ஆணையத்தால் தண்டிக்கப்பட்டவர் (ச.பி.37 G).

👉🏾உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்தவேண்டிய தொகையை செலுத்தாதவர்  (ச.பி.37(3) (J)).

👉🏾சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட, என்னென்ன தகுயின்மை இருக்கிறதோ, இதற்கும் பொருந்தும்.

*கீழ்கண்ட சட்டங்களில் தண்டனை பெற்றவர்களும் நிற்க முடியாதுங்க...*

👉🏾மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 1951 (ச.பி.8 (g)) ல் தண்டிக்கப்பட்டவர்.

👉🏾இந்திய தண்டனைச் சட்டம் 1860, ச.பி.1, 157 A, 171F,  ஆகியவற்றால் தண்டிக்கபட்டவர் (ச.பி.371 (a)).

👉🏾குடியுரிமை பாதிப்புச்சட்டம் .P .8 (W) (6),  (ச.பி.37 (b)).

👉🏾1962 சுங்கவிதிச்சட்டம் பிரிவு-11 (ஊ.ச.1994-பிரிவு-37(C).·    

👉🏾அந்நிய செலவாணி கட்டுப்பாட்டுச்சட்டம் 1973 பிரிவு 8 (i)(e) (ஊ.ச. 1994 பிரிவு 37 (e).

👉🏾சட்டவிரோதமான செயல்கள் தண்டனைச்சட்டம் 1967  (ஊ.ச.1994 பிரிவு 37 (d). (ச.பி.11,12).

👉🏾போதைப் பொருள் தடுப்புச் சட்டம் 1985 P.8(1) (f) (ஊ.ச.1994 பிரிவு 37(8).

👉🏾தடாச்சட்டம் 1987 பிரிவு-4.

👉🏾மத நிலயங்களை தவறாக பயன்படுத்துதல் தடைச்சட்டம் 1988 பிரிவு-7 (ச.பி. 37 (g).

👉🏾மக்கள்  சார்பற்றச் சட்டம் 1951 பிரிவு-125 (ஊ.ச.1994 பிரிவு 37 (L).

👉🏾பதுக்கல்,கொள்ளை தடுப்புச் சட்டம் (ஊ.ச.1994 பிரிவு 37 (L).

👉🏾உணவுக்கலப்படச் சட்டம் (ஊ.ச.1994 பிரிவு 37 (m).

👉🏾வரதட்சணை தடுப்புச்சட்டம் 1961 (ஊ.ச.1994 பிரிவு 37 (n).)

👉🏾உடன்கட்டடை ஏறுவதை தடை செய்தல் சட்டம் 1957.

👉🏾 தண்டச்சான்று பிறப்பிக்கப்பட்டவர் (மேல்முறையீடு நிலுவையில்லாதவர்).

இவங்களெல்லாம் தேர்தலில் நிற்க முடியாதுங்கோ...

அது சரி *தண்டனை பெற்றவர்கள் எவ்வளவு காலம் நிற்க முடியாது ,* தண்டனை விதித்த தேதியிலிருந்து அந்த காலம் துவங்குதா? இல்ல தண்டனை காலம் முடிச்சு தடைக்காலம் துவங்குமா?

*உங்க சந்தேகத்த தீர்க்க நான் டைப் பன்றேன்,*
*நான் டைப்பண்ணி அனுப்பியத நீங்க கொஞ்சம் பொறுமையா படிங்க*

No comments:

Post a Comment