Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Tuesday 11 October 2016

ராகுகாலம் - எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள சுலபமான வழியினை காணலாம்.

ராகு காலம் -எம கண்டம் சுலபமாக பார்க்க

பெரும்பாலான நிகழ்ச்சிகளை ராகுகாலம் எமகண்டம் நேரம்;தவிர்த்து செய்வார்கள். ஒவ்வொரு நாளும் ராகுகாலம் - எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள சுலபமான வழியினை காணலாம்.இந்த பாடலினை மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்.
திருவிழா சமயத்தில் வெளியில் புறப்பட்டு
விளையாட செல்வது ஞாயமா? இந்த பாடலில் முதலில் உள்ள எழுத்தின் படி கிழமையை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.அதன்படி
இதில்
திருவிழா -     திங்கள் -              7.30 -9.00
சமயத்தில் -  சனி -                     9.00-10.30
வெளியில்-    வெள்ளி-             10.30-12.00
புறப்பட்டு -   புதன் -                  12.00-1.30.
விளையாட   -வியாழன்          1.30-3.00
செல்வது -      செவ்வாய் -         3.00- 4.30
ஞாயமா -       ஞாயிறு -              4.30-6.00.

அவ்வளவு தாங்க...ராகுகாலம் நினைவில் வந்துவிட்டதா...

இதுபோலவே   எமகண்டமும்

விடுதலை புலிகள் சென்ற திசையில்
ஞான சம்பந்தன் வெளியேறலாமா!

இதில்

விடுதலை   -    வியாழன் -  6.00 -7.30.
புலிகள்         -     புதன்          -  7.30 -9.00
சென்ற        -செவ்வாய் -       9.00-10.30
திசையில்-திங்கள் -            10.30-12.00
ஞான          -ஞாயிறு-              12.00-1.30
சம்பந்தன்-சனி                         1.30 -3.00
வெளியேறலாமா -வெள்ளி -3.00-4.30.

மேற்கண்ட இரண்டு பாடல்களையும் மனப்பாடம் செய்து கொண்டால் நீங்கள் சுலபமாக ராகுகாலம் எமகண்டம் நேரங்களை சொல்லாம்.

No comments:

Post a Comment