Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 12 October 2016

வாட்ஸப்பில் ரகசிய மெஸேஜ் : இனி நோ கள்ளத்தனம்!

வாட்ஸப்பில் ரகசிய மெஸேஜ் : இனி நோ கள்ளத்தனம்!

ஒரு செயலை மறைத்துச் செய்கிறார்கள் என்றால், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்படுமல்லவா? அப்படி தெரிந்துகொள்ளவில்லையென்றால் அனைவரின் முன்பும் வைத்து நம்மை கலாய்த்துவிடுவார்கள். அப்படி ஒரு நிலைமைக்கு வாசகர்கள் ஆளாக வேண்டாம் என்பதால் வாட்ஸப்பில் இருக்கும் இந்த ரகசிய மெஸேஜ் அனுப்பும் வழியைப்பற்றிச்

சொல்கிறோம். முதலில் கிபோ என்ற அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்துகொள்ளவும். பிறகு கீபோர்டு செட்டிங்ஸ் சென்று கிபோ கீபோர்டை செலக்ட் செய்து, எனபிள் (Enable) செய்துவிட்டு வாட்ஸப் ஓப்பன் செய்து டைப் செய்யத் தொடங்கும்போது, கிபோ கீபோர்டை செலக்ட் செய்துகொள்ளவும். இப்போது கிபோ கீபோர்டில் வலது கீழ்ஓரத்தில் தென்படும் பூட்டு போன்ற பட்டனை அழுத்தி எதிர் தரப்பில் இருப்பவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய உண்மையான மெஸேஜை டைப் செய்ய வேண்டும். அதன்பிறகு, கிபோ-வில் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் Default வாக்கியங்களைத் தேர்வு செய்து மெஸேஜை அனுப்பிவிடலாம். உங்களது ரகசிய மெஸேஜைப் படிக்க எதிர்தரப்பில் இருப்பவரும் கிபோ அப்ளிகேஷனைப் பயன்படுத்துபவராக இருக்கவேண்டும். அவருக்கு வரும் மெஸேஜை, அவரது கிபோ கீபோர்டில் இருக்கும் பூட்டு பட்டனைத் தட்டித் திறப்பதன்மூலம் படித்துக் கொள்ளலாம். முகப்பில் வைக்கப்பட்டிருந்த படத்திலிருந்து, இந்த அப்ளிகேஷன் ஆப்பிள் ஐஃபோன்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியது என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்பதை நம்புகிறோம். இந்த அப்ளிகேஷன் ஐடியூன்ஸில் இலவசமாகவே கிடைக்கிறது. ஒருவேளை மனைவியை ஏமாற்ற, இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மனைவியும் இந்த செய்தியைப் படித்திருந்து நீங்கள் மாட்டிக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.

No comments:

Post a Comment