Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 7 June 2014

தலைமையாசிரியர்க்கு நோட்டிஸ்

இலவச நோட்டு, புத்தகம் வினியோகம்: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' சிவகங்கையில், இலவச நோட்டு, புத்தகம் வினியோகம் தொடர்பாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டார். நடப்பு கல்வியாண்டு கோடை விடு முறைக்கு பின், ஜூன் 2ந்தேதி பள்ளிகள் திறக்கும் போது, மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டது. இதன்படி, நோட்டு, புத்தகம், காலணி, பை உள்ளிட்ட நலத்திட்டங்கள் மாணவர்கள் வழங்கப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய இரு மாவட்டத்திற்கு ஒரு இணை இயக்குனர் வீதம் பள்ளிக்கல்வித்துறை நியமித்தது. ஜூன் 2ல் குறிப்பிட்ட சில பள்ளிகளில் காலை முதலே இணை இயக்குனர்கள் ஆய்வு செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இடைநிலைக்கல்வி இணை இயக்குனர் முத்து பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது, இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கியது குறித்து, உறுதி செய்வதற்கான மாணவர்களின் கையெழுத்து பெறவில்லை என்பது தெரிய வந்தது. இந்நிலையில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கருதி, அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, இணை இயக்குனர் உத்தரவிட்டார். முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அவருக்கு விளக்க 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர். அவரது பதிலை பொறுத்து, அவர் மீதான நடவடிக்கை தெரிய வரும் என, சிவகங்கை கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

No comments:

Post a Comment