Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 7 June 2014

எம்.எஸ.சி்இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி க்கு பட்டதாரி பணி.

எம்.எஸ்.சி இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்கு வேதியியல் பாடப்பிரிவு பட்டதாரி ஆசிரியர் பணி உயர் நீதிமன்றத்தில் இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் படிப்பை முடித்த திருவருட்செல்வன், மதிவாணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் பாடப்பிரிவில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி யிடத்துக்கு நாங்கள் விண்ணப்பம் செய்தோம். நாங்கள் இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி பாடப்பிரிவில் எம்எஸ்சி படித்துள்ளோம். எம்எஸ்சி வேதியியல் படித்தவர்களுக்கு மட்டும்தான் வேதியியல் பாடப்பிரிவில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று கூறி எங்களுக்கு பணி வழங்கவில்லை. கடந்த 20102011ல் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் எங்களின் பாடப்பிரிவைக் காட்டி எங்களுக்கு பணி வழங்கவில்லை. எனவே, எங்களுக்கு பணி வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார் பில் ஆஜரான கே.வெங்கடரமணி வாதிடும்போது, பாரதியார்பல்கலைக்கழகத்தில் உள்ள எம்எஸ்சி இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி பாடப்பிரிவும் எம்எஸ்சி வேதியியல் பாடப்பிரிவும் சமமானது தான் என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் மனுதாரர்கள் இருவரும் அதே பிரச்னையில்தான் உள்ளனர் என்றார். இதையடுத்து, நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரர்கள் இருவரும் படித்த எம்எஸ்சி இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி படிப்பும், எம்எஸ்சி வேதியியல் படிப்பும் சமமானதுதான் என்றும் இரு பிரிவுகளில் படித்தவர் களுக்கான கல்வித் தகுதியும் ஒன்று தான் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது. எனவே, இந்த வழக்கில் மனுதாரர்கள் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் பாடப்பிரிவில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற தகுதியுள்ளவர்கள்தான். எனவே, அவர்களுக்கு பணி வழங்குவது குறித்து 8 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment