Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Monday 5 September 2016

12-ம் வகுப்பு கணினி அறிவியல் ( தமிழ் வழி ) - ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சிக்கான, ஆண்ட்ராய்டு செயலி!

12-ம் வகுப்பு கணினி அறிவியல் ( தமிழ் வழி ) - ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சிக்கான, ஆண்ட்ராய்டு செயலி!

12-ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணினி அறிவியல் பாடத்தில் 75 ஒரு மதிப்பெண் வினா-விடைகள் கேட்கப்பட்டு வருகிறது. பொதுவாக தமிழ் வழியில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் ஒரு மதிப்பெண் வினா-விடைகளுக்கு குறைந்த அளவே கவணம் செலுத்துகின்றனர். மேலும், பொதுத்தேர்வில் வினாக்கள் வரிசை முறை மாறி வருவது, மாணவர்கள் படித்த கேள்விகளுக்கே சரியான விடை அளிப்பதற்கு குழப்பமடைகின்றனர்.

இவற்றிற்கு தீர்வாக, விளையாட்டாக கற்கவும், மாணவர்கள் சுயமாக பயிற்சி செய்யவும், எளிதில் நினைவில் நிறுத்தவும், மீண்டும் மீண்டும் பயிற்சி செய்ய தூண்டும் விதமாக பல வண்ணங்களில் மதிப்பெண்களை கணக்கிடும் முறைய (Color Graph) ஆகிய சிறப்பம்சங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலியே “TN XII CS”.

சிறப்பம்சங்கள் :

பாட வாரியாக,  புத்தக தொகுதி வாரியாக வினா-விடை பயிற்சி.

50 மற்றும் 75 மதிப்பெண் தேர்வுகளுக்கான வரிசை முறை மாறிய (Shuffle) - பயிற்சி.

ஒவ்வொரு வினாக்களுக்குமான விடைகள் அவ்வப்பொழுதே தெரிந்துக் கொள்வது.

எத்தனை சதவீத வினாக்கள் பயிற்சி பெற்றுள்ளீர்கள் என்பதற்கான விபரம்.

மாணவர்கள் தேர்வு எழுதிய பாடம், தேதி, மாதம் வாரியாக பெற்றுள்ள மதிப்பெண்கள் தானாகவே சேமிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் மாணவர்களின் மதிப்பெண் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்க இயலும்.

மொத்தமாக எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் என்பதற்கான – விபரம்.

மாணவர்கள் சரியான விடைகள் மீது கவனம் செலுத்த ஏதுவாக, விடைகள் ஒவ்வொரு முறையும் வரிசை முறை (Shuffle) மாறி வருவது.

மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட கேள்விகளுக்கே பதில் அளிக்காமல் இருக்க ஒரு முறை சரியான மதிப்பெண் பெற்ற கேள்விகள் அந்த பாடத்திலுள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வரை தோன்றாமல் இருப்பது.

பயிற்சியின் போதே எந்த பாடத்திற்கான கேள்வி? இதுவரை எத்தனை வினாக்களுக்கு சரியான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள்? மீதம் எவ்வளவு வினாக்கள் உள்ளன? என்பது போன்ற விபரங்கள் வினாக்களுக்கு மேற்பகுதியிலேயே தோன்றுவது.

செயலியை பயன்படுத்தும் முறை :

தங்களது ஆண்ட்ராய்டு போனிலிருந்து Google Play – க்கு சென்று ”TN XII CS” என்று தட்டச்சு செய்து தேடி INSTALL செய்யவும்.

பிறகு செயலியை ஓபன் செய்து REGISTER என்பதை கிளிக் செய்யவும்.

தங்களது பெயர், மொபைல் எண், ஊர் மற்றும் மாவட்டம் ஆகியவை தட்டச்சு செய்து ரெஜிஸ்டர் செய்யவும்.

பிறகு தாங்கள் தட்டச்சு செய்த மொபைல் எண் கொண்டு LOGIN செய்யவும்.

மேற்கண்ட செயல்முறைகள் ஒரு முறை செய்தால் போதும். ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டிய தேவை இல்லை. தங்கள் செயலியில் உள்ள ”TN XII CS” குறும்படத்தை கிளிக் செய்து நேரடியாக பயிற்சியில் ஈடுபடலாம்.

No comments:

Post a Comment