Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 25 May 2016

10 ம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு படித்து முடித்தவரா நீங்கள்?

10 ம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு படித்து முடித்தவரா நீங்கள்*

*🔰முதலில்  செய்யவேண்டியது*

*🔰 உங்கள் படிப்பை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும*்

*🔰ஆன் லைனில்  வேலைவாய்ப்பு பதிவு செய்வது எப்படி❓*

🔰மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப் பட்டுள்ளன.

🔰புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி
இதற்கு

🎟குடும்ப அட்டை,
🎟ஜாதி சான்றிதழ்,
🎟10th (or)  12th  மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில்

🎟இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று

🔰click here for new user ID registration என்று இருக்கும்.

🔰அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில்

🔰பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர்,
ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID  கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில்

🔰உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Create ஆகிவிடும்.

🔰குறிப்பு 1
Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

🔰குறிப்பு 2
மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

🔰குறிப்பு 3
ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home  பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

🔰குறிப்பு 4
Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

🔰அவ்வளவு தான் இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment