Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Tuesday 26 July 2016

அப்துல் கலாம் நினைவேந்தல்...

#மாமனிதர்_தமிழ்த்தாயின்_புதல்வர்

அப்புதுல் கலாம் என்னும்
அற்புதர்
தமிழன்னையின்
தலைமகன்...!

இந்தியாவில்
நடமாடிய
ஒரே உயிர் தெய்வம்...!

விஞ்ஞானத்தின்
ஆணிவேர் ...!

மாணவர்களுக்காகவே
வாழ்ந்து
வழிக்காட்டிக்கொண்டிருக்கும்
புனித மகான்...!

வயது
முதிர...முதிர...
குழந்தையாகிக் கொண்டேயிருந்த
உலக
அதிசயங்களின் முதல்...!

தன்
புன்னகையால்
கோபத்திற்கு
சமாதிக்கட்டிய சரித்திரம் ...!

அவரை
பாடமாக ஏற்றுக் கொண்ட
அனைவருமே
மகா மனிதர்களே...!

கலாமை
அறியாமல்
உலா வரும்
யாவரும் மனிதம் புரியா
வீண் பிறவிகளே...!

இமயம்
மிக உயர்ந்திருந்தாலும்
அதன் அடிவாரம் பூமியே என்பதாக...

கலாம்
பேராசிரியர்
விஞ்ஞானி, ஜனாதிபதி, சிந்தனையாளர்
கவிஞர் , ஓவியர்
என
பல முகங்களோடு சிகரம் தொட்டாலும்...
அவரின்
அடிப்படை மனிதமென்னும்
சாதாரணமே...!

கலாம்
பூவின் வாசம் போல்
சுகமாய் வீசியவர்....!

தென்றலைப் போல்
இதமாய் பயணித்தவர்...!

நிலாவைப் போல்
குளிராய் ஒளிர்ந்தவர்...!

மழையைப் போல்
மக்களின் பயனுக்காய்
பொழிந்தவர்...!

மொத்தத்தில்
கலாம் மனிதராக வாழ்ந்த
அற்புத இயற்கை ...!

அவரிடம்
இருந்ததில்லை
என்றென்றும் செயற்கை ...!

அவர்
எளிமையின் அர்த்தம்...!

அவர்
கொண்டதில்லை
யாரிடமும் வருத்தம் ...!

சாதி, மதம்
சாராத ஒரு சாம்பவான்...!

அனைவரும்
மதித்த ஒரே மகான்...!

எதிரியின்றி
வாழ்ந்த ஒரு ஆச்சரியம் ...!

மேகலாவில்
கடந்த
27.07.2015 -
இதே நாளில்...

மலை முகட்டில் மிதந்த
முகிலோடு கலந்து
இயற்கையோடு
இணைந்துக் கொண்டவர்...!

அவர் மரணித்து விட்டார்
என்பது மடமை...!

நம்மை
தவழும் அனைத்து இயற்கையோடும்
அவர்
உலவிக் கொண்டு
நம்மோடு வாழ்ந்துக் கொண்டுதான் உள்ளார்...

எனவே
நாம்
அவர் குறிப்பிட்ட "கனவுக் காணுங்கள் "
என்னும்
இலக்கை அடைந்து
இந்தியாவை
வல்லரசாக்குவோம்...!

அதற்கு
ஏதேனுமொரு நல்லரசு அமைந்து
வழிக்காட்டுமா...??

No comments:

Post a Comment