Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 27 July 2016

யாரெல்லாம் E-filing செய்ய வேண்டும்?*

*24Q,Form-16,E-filing குறித்த ஒரு விளக்கம்*
நாம் செலுத்தக் கூடிய வருமானவரித் தொகையானது, உ.தொ.க அலுவலரின் TAN number il தான் சேரும்.. அத்தொகையை நமது PAN number க்கு பிரித்து, ஒவ்வொருவருக்கும் மாற்றும் வேலைக்கு பெயர்தான் 24-Q..
இதை தனிநபர் செய்ய முடியாது..அனைத்து ஆசிரியர்களுக்கும் தான் செய்தாக வேண்டும்..இது உ.தொ.க அலுவலரின் வேலை..
24-Q File செய்து முடிக்கும்போது FORM -16 generate ஆகும்.. இந்த வேலையை அனைவருக்கும் பொதுவாக ஒரு ஆடிட்டரை வைத்து செய்து, Generate ஆன Form -16 ல் கையொப்பமிட்டு உ.தொ.க அலுவலர் நமக்கு தருவார்..இது ஒவ்வொரு காலாண்டுக்கும் செய்ய வேண்டிய வேலை..
அடுத்ததாக E-filing என்பது,
நமது Form -16 அல்லது IT statementஐ வைத்துக் கொண்டு, வருமான வரி அலுவலகத்தில் ஒரு புக்லெட் போன்ற ITR படிவத்தை வாங்கி, நிரப்பி, அதை மீண்டும் வருமானவரி அலுவலகத்தில் ஒப்படைத்து ACKNOWLEDGEMENT வாங்குவோம்..
வருமானவரி அலுவலகத்தில் நமது ITR படிவத்தை வைத்து ONLINE ல் தரவேற்றம் செய்வார்கள்..
அப்போது நமக்கு 24-Q செய்த போது தரவேற்றிய தொகையும், தற்போது நாம் வருமானவரி அலுவலகத்தில் ஒப்படைத்த ITR ல் உள்ள தொகையும் ஒரே மாதிரி இருந்தால் நமக்கு பிரச்சினை இல்லை.. ஆனால், வித்தியாசம் இருந்தால், அந்தத் தொகையை நாம் திருப்பி செலுத்துமாறு வருமான வரித் துறையில் இருந்து நமக்கு கடிதம் வரும்..
இந்த மனஉளைச்சலை தவிர்க்க நாம் E-filing செய்யும் போது,
ஏற்கனவே 24-Q செய்த போது தரவேற்றிய தொகையையும், தற்போது நாம் தரவேற்றும் தொகையையும் Tally செய்து விடுவதால் நமக்கு வருமானவரித் துறையில் இருந்து வரியை மீண்டும் கட்டும்படி எவ்வித கடிதமும் வராது..
*யாரெல்லாம் E-filing செய்ய வேண்டும்?*
Taxable income 5,00,000/- க்கு மேலும்,
Refund வரவேண்டி இருப்பவர்களும் *கட்டாயம்* செய்ய வேண்டும்..
ஆனாலும் அனைவரும் செய்து கொள்வது நல்லது..நமது வருமானவரிக் கணக்கு முறையாக சம்பந்தப்பட்ட துறைக்கு சென்று சேர்ந்து விட்டது என்ற திருப்தி நமக்கு ஏற்படும்..
*ஆசிரியர்களின் தகவலுக்காக:*

No comments:

Post a Comment