Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday 25 February 2016

2016-17 ரயில்வே பட்ஜெட்.

2016_17 ரயில்வே பட்ஜெட்.

1) 2016-17ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அமைச்சர் சுரேஷ் பிரபு

2) ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, தனது 2-வது பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்

3) இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்யும்

4) பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டங்களின் அடிப்படையில் பட்ஜெட் தயாரிப்பு

5) தேசத்தின் பயணம், மாற்றத்தை பதிவு செய்யும் ஆவணமாக பட்ஜெட் அமையும்

6) இந்திய ரயில்வே துறைக்கு சவாலான தருணமாக இது கருதப்படுகிறது

7) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கேந்திரமாக ரயில்வே திகழ்கிறது

8) ரயில்வே துறையை இந்தியாவின் முதுகெலும்பாக மாற்றும் பிரதமரின் கனவுத் திட்டத்தை ஊக்குவிக்கும் பட்ஜெட் ஆக இது அமையும்

9) நீண்ட கால ஒப்பந்தங்களால் ரயில்வேயின் மின் செலவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது

10) ரயில்வேயின் சேவைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

11) கடந்த பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.8,720 கோடி அளவுக்கு செலவினங்கள் குறைப்பு

12) ரயில்வேயின் இயக்கத் திறனை 92% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயம்

13) ரயில்வே முதலீட்டு திட்டத்திற்காக ரூ.1.21 லட்சம் கோடி

14) வரும் நிதியாண்டில் ரயில்வே துறையின் வருவாய் வளர்ச்சி 10.1% ஆக இருக்கும்

15) வரும் நிதியாண்டில் ரூ.1.8 லட்சம் கோடி வருவாய் ஈட்ட ரயில்வே துறை இலக்கு

16) ரயில்வே வருவாயை பெருக்க சரக்கு கட்டணக் கொள்கையில் மாற்றம் செய்யப்படும்

17) தினமும் 7 கி.மீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க இலக்கு

18) கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 139 திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை தொடக்கம்

19) துறைமுகங்களை, ரயில் நிலையங்களுடன் இணைக்கும் திட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவம்

20) நடப்பு நிதியாண்டில் 1,600 கிலோ மீட்டர் இருப்புப் பாதை மின்மயமாக்கப்படும்

21) அடுத்த நிதியாண்டில் 2,000 கி.மீ. இருப்புப் பாதையை மின்மயமாக்க இலக்கு

22) 2020ம் ஆண்டுக்குள் சரக்கு ரயில்கள் இயக்கத்தில் கால அட்டவணை அறிமுகம் செய்யப்படும்

23) வடகிழக்கு மாநிலங்களுக்கான ரயில் சேவை அதிகரிக்கப்படும்

24) ரயில்வே துறையை நவீனப்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.8.5 லட்சம் கோடி செலவிட முடிவு

25) ரயில்வே துறை செயல்பாடுகளை 100% வெளிப்படைத்தன்மை உடையதாக மாற்றுவதே இலக்கு

26) வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த சமூக வலைதளங்களை பயன்படுத்த முடிவு

27) ஆளில்லா லெவல் கிராசிங்குகளை நவீன தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்த திட்டம்

28) ரயில்வே செயல்பாடுகள் குறித்து தினசரி ஒரு லட்சம் அழைப்புகள் வருகின்றன

29) ரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு

30) பாசஞ்சர் ரயில்களின் நேர தாமதத்தை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பயனளிக்கின்றன

32) மாநில அரசுகளுடன் இணைந்து கூட்டு திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை

33) மாநில அரசுகளுடன் இதுவரை 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன

34) கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி

35) ரயில் நிலையங்களின் தூய்மைத் தன்மையை மேம்படுத்த சுவர்களில் ஓவியங்கள்

36) வரும் நிதியாண்டில் 100 ரயில் நிலையங்களில் வை- ஃபை வசதி அறிமுகப்படுத்தப்படும்

37) அடுத்த 2 ஆண்டுகளில் 400 ரயில் நிலையங்களுக்கு வை-ஃபை வசதி விரிவாக்கப்படும்

38) அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்

39) ரயில் நிலையங்களில் சுகாதாரமான குடிநீர் வழங்க 2,500 இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன

41) ரயில் பயணத்திற்கு வழங்கப்படும் மானியத்தால், ரூ.30,000 கோடி கூடுதல் செலவு

42) 1,780 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் வரும் நிதியாண்டில் நிறுவப்படும்

43) சென்னை- டெல்லி இடையிலான சரக்கு ரயில் பாதைக்கு முன்னுரிமை

44) ரயில் மறு வளர்ச்சித் திட்டங்களுக்கு விரைவில் புதிதாக ஒப்பந்தங்கள் கோர திட்டம்

45) ரயில்களில் தினசரி 2.30 கோடி மக்கள் பயணிக்கின்றனர்

47) வரும் நிதியாண்டில் ரயில்வே துறைக்காக மத்திய அரசு சார்பில் ரூ.4,000 கோடி நிதி

48) ஏழை மக்கள் நலனுக்காக குறைந்த கட்டணத்தில் நீண்ட தூர ரயில்களை இயக்கத் திட்டம்

49) பகலில் இயக்கப்படுவது போல் இரவிலும் டபுள்- டக்கர் ரயில்கள் இயக்கப்படும்

50) பார்வையற்றோர் வசதிக்காக பிரெய்லி வசதியுடன் கூடிய ரயில் பெட்டிகள் அறிமுகம்

51) ரயில் பெட்டிகளை தூய்மைப்படுத்த குறுஞ்செய்திகள் மூலம் பணியாளர்களை அழைக்க புதிய வசதி

52) அனைத்து ரயில் நிலையங்களிலும் மாற்று திறனாளிகள் வசதிக்கான சக்கர நாற்காலி வசதி

53) குழந்தைகளுடன் செல்லும் தாய்மார்களுக்கு தேவையான உணவு வசதிகள் செய்து தரப்படும்

54) முன்பதிவு கீழ் படுக்கைகளில் 50% மூத்த குடிமக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும்

55) ரயில்வே சுமை தூக்கும் பணியாளர்களுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படும்

56) ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டு வசதி அறிமுகம்

57) எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

58) அனைத்து பெட்டிகளிலும் குளிரூட்டி வசதி கொண்ட Hamsafar எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்படும்

59) வதோதராவில் இயங்கும் தேசிய ரயில்வே அகாடமி, பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும்

60) ரயில்வே டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% உள் ஒதுக்கீடு அளிக்க முடிவு

61) 884 ரயில் பெட்டிகளில் 65 ஆயிரம் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும்

62) சரக்கு ரயில் வருவாயை அதிகரிக்க புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்

63) நாட்டின் முதல் ரயில் உதிரி பாக கேந்திரம் சென்னையில் உருவாக்கப்படும்

64) நிமிடத்திற்கு 7,200 டிக்கெட் பதிவு செய்யும் வகையில் ஆன்-லைன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

65) ரயில்வே வாரியத்திற்கு மாற்றாக ரயில்வே மேம்பாட்டு ஆணையம் உருவாக்க முடிவு

66) ரயில்வே மேம்பாட்டு ஆணையதிற்கான வரைவுத் திட்டம் தயார்

67) பயணிகள் ரயில் கட்டணம் மூலம் ரூ.51,012 கோடி திரட்ட இலக்கு

ரயில்வே தொடர்பு எண் 139ஐ தொடர்பு கொண்டு முன்பதிவு டிக்கெட்களை ரத்து செய்ய புதிய வசதி

69) பயணிகள் எண்ணிக்கை அதிகம் உள்ள வழித்தடங்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கொண்ட அதி விரைவு ரயில் இயக்கப்படும்

No comments:

Post a Comment