Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday 25 February 2016

EMIS update

EMIS news:

EMIS update all schools.முதல் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம்.

முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து ஜூன்-2015 க்கு பிறகுTC வாங்கி சென்ற மாணவர்களை transfer செய்ய வேண்டும்.

Transfer செய்வதற்கு முன் மாணவனின் admission no, date of TC issued கண்டிப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

பின் வெளி பள்ளிகளில் இருந்து நம் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை common pool லிருந்து நம் பள்ளிக்கு கொண்டு வந்து சரியான வகுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும்.
Common pool என்பது Transfer செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் இதில் இருப்பார்கள். அதிலிருந்து தான் நம் பள்ளிக்கு கொண்டு வர வேண்டும்.

இதெல்லாம் முடித்த பிறகே முதல் வகுப்பு மாணவர்களின் பதிவை மேற்கொள்ளலாம்.

ஏனென்றால் முதல் வகுப்பு மாணவனின் விவரங்கள் (blood group, height,weight போன்ற 43 விவரங்கள் திரட்டுவதற்கு ஓரிரு நாட்கள் ஆகும்)அனைத்தும் விடுபடாமல் இருந்தால் மட்டுமே save செய்ய முடியும்.

முதலில் நாம் transfer மற்றும் உள்ளீடு செய்வோம்.

வெற்றி ஒன்றே குறிக்கோள்: EMIS guidelines:
30.9.15 ல் தங்கள் பள்ளியின் வருகைப்பதிவேட்டில்  உள்ள ((std1 )மாணவர்களை EMIS  இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.

2,3 Std மாணவர்கள் உள்ளீடு செய்யாமல் (தங்கள் பள்ளியிலேயே முந்தைய ஆண்டு 1,2படித்திருந்தால்)விடுபட்டிருந்தால் அவர்களை உள்ளீடு செய்யலாம்.

30.9.15ல் வருகைப்பதிவேட்டில் இல்லாத மாணவர்களை student pool க்கு transfer செய்ய வேண்டும்.

1,2,3 Std மாணவர்களை மட்டும்தான் உள்ளீடு செய்ய முடியும்.

கடந்த ஆண்டு 5,8,10 ம் வகுப்பு படித்த மாணவர்கள் student pool க்கு மாற்றப்பட்டுள்ளது.

தங்கள் பள்ளியில் 6,9,11 வகுப்பு படிக்கும் மாணவர்களை student pool லிருந்து update செய்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment