Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Monday 22 February 2016

பாவலரின் அறிக்கை..

விலைபோகா வீரமகன்
தலைஞாயிற்று தலைமகன்
கலைஞரின் இதயம்
சுயமரியாதை சூரர்
திராவிடத் தீரர் பாவலரின் அறிக்கை!

♻♻♻♻♻
திருச்சியில் உயர்மட்டக்குழுவை கூட்ட வேண்டாம். யாருடைய நெருக்கடிக்கோ இலக்காகி உயர்மட்டக்குழுவை திருச்சியில் பிப்ரவரி 21 அன்று நீங்கள் கூட்டுவதாயிருந்தால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கலந்து கொள்ளாது; அக்கூட்டத்தைப் புறக்கணிக்கும் என அதிகாரபூர்வமாக பொதுச்செயலாளரும், மாநிலத்தலைவரும் ஒருங்கிணைப்பாளரிடம் அறிவித்துவிட்டோம். ஆனால் அலைபேசி வழியாக ஜாக்டோவின் உயர்மட்டக்குழுவை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பெ.இளங்கோவன் கூட்டியுள்ளார்.

போராட்டத்தை முறியடிக்க அரசு அதன் "கைத்தடி" சங்கத்தின் மூலம் செய்த சூழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் பலியானதோடு குறிப்பிட்ட சிலர் தங்களுக்கான பயன் கருதி கூறியவைகளை ஏற்று பொதுக்குழு முடிவுக்கு மாறாக அவற்றை எதிர்த்தவர்களைக் கண்டுகொள்ளாமல் தீர்மானங்கள் என்ற பெயராலே தன்னிச்சையாக சில முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள் என்று தெரியவருகிறது.
அதாவது கோட்டை நோக்கிப் பேரணி மற்றும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் உட்பட அனைத்துப் போராட்டங்களையும் 3 மாதங்களுக்கு தள்ளிவைப்பதாகவும், 3 மாதத்திற்குப் பின் அமையப்போகும் அரசிடம் (முறைப்படி அணுகாமலே) போராடப் போவதாகவும் அவர்கள் அறிவித்திருப்பது கேலிக்குரியதாகும்; கேள்விக்குரியதாகும்; உள்நோக்கம் கொண்டதாகும்;கண்டிக்கததக்கதாகும்.
எந்த அரசு ஆசிரியர்களின் வறுமையைப் போக்கி வளமோடு வாழச் செய்தது என்றும், எந்த அரசு அரசு ஊழியர் ஆசிரியர்களின் பணப்பயன் சலுகைகளை பறித்து, டெஸ்மா, எஸ்மா சட்டத்தைப் பிறப்பித்து கொடுமைப்படுத்தியது என்பதையும், தந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறந்தது என்பதையும் உணர்வார்கள்.
அரசமைப்பதற்கு வாய்ப்பே இல்லாதவர்களையும் அரசூழியர் ஆசிரியர்கள் உணர்வார்கள். எனவே ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் இவையனைத்தையும் ஆராய்ந்து மிகச்சரியாகவே தங்கள் ஜனநாயக்கடமையை ஆற்றுவார்கள். அவர்களின் அந்த உரிமையில் எந்த அமைப்பும் தலையிடத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
க.மீனாட்சி சுந்தரம் Ex.MLC                              பொதுசசெயலாளர்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி
  ஆசிரியர் மன்றம்

No comments:

Post a Comment