Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Friday 26 February 2016

இடைநிலை ஆசிரியர்களின் நிலை -ஒரு சுருக்கம்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டதன் சுருக்கம் 😭😭😭

*தமிழ் நாட்டில் 6 வதுஊதிய குழு ஊதியம் 1.-6-2009 முதல் நடைமுறை படுத்தபட்டது .
அப்போது இடைநிலை ஆசிரியர் பெற்று வந்த ஊதியம் ரூ.8370 /-ஆகும்.

*ஆனால் 6 வது ஊதிய குழு 5200 + 2800 = 8000 என நிர்ணயம் செய்தது. அதாவது பெற்று வந்ததை விட குறைவாக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.

*இந்த பிரச்சனையை போக்க தற்காலிக தீர்வாக பழைய ஊதியம் 4500 ஐ 1.86 ஆல் பெருக்கி 11170 என நிர்ணயம் 31.5.2009 க்கு முன்னர் பணி நியமனம் பெற்றவர்களுக்கு மட்டும் வழங்க பட்டது.

*ஆனால் மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் 6 வது ஊதிய குழுவில் 9300 + 4200 = 13,500 என நிர்ணயம் செய்யப்பட்டது.

*6 வது ஊதிய குழுவில் ஏற்பட்ட ஊதிய பிரச்சனையை தீர்க்க 2009 அக்டோபரில் திரு.ராஜீவ் ரஞ்சன் அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

இந்தக்குழு

*இடைநிலை ஆசிரியர்கள் கிராம புறத்தில் பணி செய்கிறார்கள்.

*எண்ணிக்கை அதிகமாக உள்ளார்கள் ( 116129பேர் )

*நிதி 630 கோடி வேண்டும்

என்பதால் ஊதிய உயர்வு வழங்க முடியாது என காரணம் கூறி மறுத்து விட்டது .

*2012ல் நீதிமன்ற தீர்ப்பு படி திரு.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டது.

இந்த 3 நபர் குழு தனது அறிக்கையில்

*இடைநிலை ஆசிரியர்கள் கல்வி தகுதி S.S.L.C. யுடன் ஆசிரியர் பயிற்சி சான்று மட்டுமே.

*மத்திய அரசு ஆசிரியர் +2 வுடன் 2 வருட டிப்ளமோ பயிற்சி முடித்து உள்ளார்கள்.

*மத்திய அரசு ஆசிரியர்கள் இந்தி ,ஆங்கிலம் கற்பிக்கிறார்கள்,
அவர்களுக்கு கணினி அறிவு உள்ளது பணி நியமனம் தேசிய அளவில் ஆனது.

இந்த தகுதிகள் தமிழக இடைநிலை ஆசிரியர்களிடம் இல்லை.

பணி நியமனம் ஒன்றிய அளவில் ஆனது.

மத்திய அரசில் 1017 ஆசிரியர்கள் மட்டுமே,தமிழ்நாட்டில் 1,16,129 பேர் உள்ளார்கள் .

என இரண்டு ஊதிய குழு அறிக்கையும் பொய் காரணங்களை கூறி 20 ஆண்டுகள் + வுடன் ,டிப்ளமோ கல்வி தகுதி அடிப்படியில் பெற்று வந்த ஊதிய உரிமையை மறுத்து உள்ளது .

*தமிழ்நாட்டிலும் மத்திய அரசிலும் 1986 தேசிய கல்விக்கொள்கையின் படிதான் கல்வி தகுதி பின்பற்றப்படுகிறது.

*ஊதியமும் அதன் அடிப்படையில் 1988 ல் நிதிபதி ராமானுஜம் அவர்களின் 5 ம் ஊதிய குழு அறிக்கை படி பெற்று வந்த ஊதிய உரிமையை 6 வது ஊதியக்குழு பறித்து உள்ளது.

பறிக்கப்பட்ட உரிமையை மீட்க தொடர்ந்து 7 வருடங்களாக ஆசிரியர் சங்கங்கள் தனித்தும் ஒன்றாக சேர்ந்தும் போராடி வருகின்றனர்.

No comments:

Post a Comment