Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 17 February 2016

ஸ்மார்ட் போன் ரூபாய் 251.

அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வகையில் குறைந்த விலையில் ஒரு போனை தயாரித்துள்ளது ரிங்கிங் பெல் என்ற இந்திய நிறுவனம். ப்ரீடம் 251 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த போனின் விலை 500 ரூபாய் என்று சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.

இந்நிலையில் ‘ப்ரீடம் 251’ போனின் விலை 251 ரூபாய் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக ரிங்கிங் பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள முழு தொழில்நுட்ப விபரங்கள் பின்வருமாறு:

ப்ரீடம் 251 ஸ்மார்ட் போனின் விலை ரூ.251. நான்கு இன்ஞ் திரை, 1.3GHz Quad-core பிராஸசர், 1 ஜிபி ரேம், 8 ஜி.பி. உள்ளக சேமிப்பு (32 ஜிபி வரை விரிவாக்கம் செய்துக்கொள்ள முடியும்), 3.2-மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3 மெகாபிக்சல் முன் கேமரா, லாலீபாப் 5.1 இயங்குதளம் மற்றும் ஒரு 1450mAh பேட்டரி கொண்டது. இது ஒரு ஆண்டு வாரண்டியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் 650 இடங்களில் சர்வீஸ் சென்டர்களும் அமைக்கப்படவுள்ளன.

ப்ரீடம் 251 இன்று மாலை டெல்லியில் வெளியிடப்படவுள்ளது. இந்த விழாவில் டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, மத்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் ஆதரவுடன் இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன விதமான உதவிகளை மத்திய அரசு செய்தது என்பது பற்றி விபரங்கள் தெரியவில்லை.

விலை ரூ.251 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதன் மூலம் உலகின் மலிவான ஸ்மார்ட்போன் என்ற பெயரை பெற்றுள்ளது ப்ரீடம் 251.

ப்ரீடம் 251 போனை வாங்குவதற்கான முன்பதிவு நாளை காலை 6 மணி முதல் http://freedom251.com/ என்ற இணையதளத்தில் தொடங்குகிறது.

No comments:

Post a Comment