Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Tuesday 8 March 2016

முக்கிய கல்வி செய்திகள்.

♻♻♻♻♻♻
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை: முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசுப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசுப் பணியாளர்கள் சுமார் 47 லட்சம் பேர் மற்றும் 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஆகியோரது ஊதியத்தை உயர்த்துவது குறித்து 7-ஆவது ஊதியக் குழு சில பரிந்துரைகளை முன்வைத்தது. அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசுச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான குழுவை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அமைத்தது.

♻பிஎச்.டி. காலத்தை ஆசிரியர் அனுபவமாக கருதுவதற்கு வரவேற்பும், எதிர்ப்பும்

♻ஆராய்ச்சிப் படிப்பு (பிஎச்.டி.) கால கட்டத்தை, கல்லூரி ஆசிரியர் பணி அனுபவமாகக் கணக்கில் கொள்ளும் வகையிலான முடிவை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எடுத்துள்ளது. தில்லியில் அண்மையில் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

♻பிளஸ் 2 தேர்வில் முறைகேடு: 6 பேர் பிடிபட்டனர்

பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக திருவள்ளூர், தஞ்சாவூரில் 6 பேர் பிடிபட்டுள்ளனர்.
தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. மொழிப் பாடம் முதல் தாள் தேர்வு கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 2-ஆம் தாள் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

♻746 மெட்ரிக். பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத 746 மெட்ரிக். பள்ளிகளுக்கு மே 31-ஆம் தேதி வரை வழங்கப்பட்ட தாற்காலிக அங்கீகாரம் மேலும் நீட்டிக்கப்படாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திங்கள்கிழமை உறுதியளித்தது.  அரசு விதித்த நிபந்தனைகளின்படி, குறைந்தபட்ச நில அளவு, பிற கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிக். பள்ளிகள் வரும் மே 31-ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்பட பள்ளிக்கல்வித் துறை தாற்காலிக அங்கீகாரம் வழங்கியது. இதுதொடர்பாக 2015 ஆகஸ்ட் 18-இல் 2 அரசாணைகள் வெளியிடப்பட்டிருந்தன.


♻தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்தை அதிகரிக்க வேண்டும்: கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

அரசு பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதியத்தை ரூ. 80-இல் இருந்து ரூ. 400ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கலை ஆசிரியர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் அவசரக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.ராஜ்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலர் முரளி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


♻பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாளில் எதிர்மறைக் கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க வலியுறுத்தல்

பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் கதைப் பகுதியில் கேட்கப்பட்ட எதிர்மறைக் கேள்விக்கு மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழாசிரியர்கள் வலியுறுத்தினர்.அதே வேளையில் பெரும்பாலான வினாக்கள் பள்ளிக் கல்வித் துறை, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வழங்கிய குறைந்த கற்றல் பெட்டகத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.

♻பிளஸ் 2 தேர்வு: தமிழ் இரண்டாம் தாள் 331 பேர் எழுதவில்லை

பிளஸ் 2 பொதுத் தேர்வில் திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப் பாடங்களில் பிரஞ்சு மொழித் தேர்வெழுத அனைவரும் வந்த நிலையில், தமிழ் இரண்டாம் தாள் தேர்வுக்கு 331 பேர் வரவில்லை.

♻தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

பள்ளிக் கல்வித் துறையில் தன்னிச்சையாக செயல்படும் தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,  அந்த அலுவலகத்தில் ஆசிரியர்கள் பலர் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

♻எட்டாம் வகுப்பு மாணவ,மாணவிகள் அறிவியல் ஆய்வக களப்பயணம் தேவகோட்டை.

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள்  கல்லூரி ஆய்வகங்களுக்கு  அறிவியல் ஆய்வக களப்பயணம் மேற்கொண்டனர்.இப்பள்ளி  8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கல்லூரி ஆய்வக சோதனை கூடங்களுக்கு நேரில் களப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

♻746 மெட்ரிக் பள்ளிகளின் தாற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படாது: தமிழக அரசு

விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் வழங்கப்பட்டுள்ள தாற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.அரசு நிர்ணித்த விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச நில அளவு, பிற கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மே 31 ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்படுவதற்கு  பள்ளிக் கல்வித்துறை தாற்காலிக அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக  2015 ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரு அரசாணைகள் வெளியிடப்பட்டன.

♻தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

சென்னையில் நேற்று, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான, சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், தலா இரண்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தலைமை தாங்கினார். தேர்தல் கமிஷனில் இருந்து வந்திருந்த அதிகாரிகள், பயிற்சி அளித்தனர்.

♻தேர்தல் விதிமீறல் புகார் தெரிவிக்க'வாட்ஸ் ஆப்' மொபைல் எண் அறிவிப்பு

தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, 'வாட்ஸ் ஆப்' மொபைல் போன் எண் மற்றும் 'மொபைல் ஆப்ஸ்' அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:தமிழகத்தில், தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க, வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் தொடர்பான சந்தேகங்களை,

♻ஆசிரியர்களை கண்காணிக்கும்கல்வித்துறை அதிகாரிகள்

சிவகங்கை: தேர்தல் நேரத்தில் ஆசிரியர்களை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தொடக்க கல்வித்துறையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஒருங்கிணைந்து, இரண்டு பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தி வருகிறது.

♻பள்ளி 'மேப்'பிலும் ஜெ., படம்:தேர்தல் விதியால் நீக்கப்படுமா?

ஊட்டி:-பள்ளி வகுப்பறைகளில் உள்ள, 'மேப்'பிலும் முதல்வர் ஜெ., புகைப்படத்தை நீக்கி, தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து, மாணவர்களுக்கு கற்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு சார்பில், பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள, 'மேப்'பில், முதல்வரின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதியின்படி, அரசு அலுவலகங்களில், முதல்வரின் புகைப்படம் அகற்றப்பட்டு வரும் நிலையில், வகுப்பறை மேப், புத்தக பைகளில் ஒட்டப்பட்டுள்ள முதல்வரின் புகைப்பட ஸ்டிக்கரை என்ன செய்வது என, தெரியாமல், ஆசிரியர்கள் குழம்பி போய் உள்ளனர்.

♻பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்: தனியார் பள்ளிகள் கலக்கம்

பிளஸ் 2 தேர்வில், பாடங்களின் உள் பகுதியிலிருந்து கேள்விகள் இடம் பெறும் நடைமுறை அமலாகியுள்ளதால், தனியார் பள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளன. மாணவர்களை, 'சென்டம்' வாங்க வைக்கும் வகையில் தனியார் பள்ளிகளில், கல்லுாரி பேராசிரியர்கள் மூலம் அவசர சிறப்பு வகுப்புகளை துவங்கி உள்ளனர்.



♻தேர்வுப்பணியில் 'ஆப்சென்ட்' ஆசிரியர்கள்: மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

சேலம் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு, பணிநியமன ஆணை பெற்றும், பணிக்கு செல்லாமல் பல ஆசிரியர்கள் அலட்சியம் காட்டிய சம்பவம்அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பணிக்குவராமல் இருந்த ஆசிரியர்களிடமிருந்து விளக்கக்கடிதம் பெறப்பட்டுள்ளது.

♻தொடக்கக்கல்வி - மூன்றாம் பருவ தேர்வு அட்டவணை !
2016 ஆம் ஆண்டின் மூன்றாம் பருவ தேர்வு

1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு
ஏப்ரல் 22 (வெள்ளி) தமிழ்.
ஏப் 25(திங்கள்)ஆங்கிலம்.
ஏப. 26 (செவ்வாய்)கணிதம்.
ஏப் 27 (புதன்) அறிவியல்.
ஏப் 28(வியாழன்) சமூகவியல்.
ஏப் 29 (வெள்ளி) உடற்கல்வி.
ஏப் 30 (சனி ) இந்த கல்வியாண்டு இறுதி வேலை நாள்..

No comments:

Post a Comment