Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Sunday 13 March 2016

14/3/16; செய்திகள்

வெற்றி என்பது பெற்றுக் கொள்வது. தோல்வி என்பது கற்றுக் கொள்வது. முதலில் கற்க! பிறகு பெறுக!! காலை வணக்கத்துடன் இன்றைய செய்திகள்
14/3/16.
(திங்கட்கிழமை)

🎽🍎🎽14:03:1879
ஆல்பர்ட்  ஐன்ஸ்டீன் பிறந்த தினம்..
நோபல் பரிசு பெற்ற உலகம் போற்றும் விஞ்ஞானி..

🎽🍎🎽மார்ச் 14 பை நாள்
பை நாள்
🎽🎽எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை 15:03:2016 தொடங்குகிறது. இந்த தேர்வை 11 லட்சத்து 20 ஆயிரத்து 749
மாணவ-மாணவிகள்எழுதுகிறார்கள்

🎽🎽நெல்லை மாவட்டத்திற்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வரும் மார்ச் 23 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.மாற்றாக ஏப்ரல் 9 வேலை நாள்.

🎽🎽இந்தியாவில் 13 சதவீத பள்ளிக் குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை:ஆய்வில் தகவல்

🎽🎽பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியா கண்டுபிடிப்பு

🎽🎽பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவோர், 9:00க்கு தேர்வறைக்குள் இருக்கணும். மாணவர்களுக்கான அறிவுரை

🎽🎽180 விதமாக பட்டாம் பூச்சிகளை வரைந்து தேவராயபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்

🎽🎽தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால் தண்டனை

🎽🎽மே 2-ம் தேதி தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்குகிறது- பேட்டி ஒன்றில் ராஜேஷ் லக்கானி

🎽🎽அரசு பள்ளி, கல்லூரி விழா:கட்சியினரை அழைக்க தடை

🎽🎽சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க ஆசிரியர்கள், விஏஓ தலைமையில் குழ

🎽🎽மாயமாகும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள்.

🎽🎽பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடம் குறித்த அரசாணை: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
🎽🎽தொலைக்காட்சி, வானொலியில் தேர்தல் பிரசார அனுமதி: தேர்தல் கமிஷன் அறிவிப்பு
🌅🌅🌅🌅🌅

உங்கள்சிந்தனைக்கு....
TRY YOUR BEST
👉 ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரையில் முயற்சியை கைவிடாத வெண்கொக்கு!
👉 ஆயிரக்கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில் உளியை உறவாக எண்ணும் கருங்கல்!
👉 கால்களில்லாத போதிலும் பாறைகளில் மோதியும் படுகுழியில் விழுந்து கடலைச் சேரும் குறிக்கோள்களை கடத்திவிடாத நதி!
👉 கைகளை துண்டித்தாலும் தலையைத் தறித்தாலூம் நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்!
👉 இரும்பு முள்ளில் குத்தினாலூம் ரணத்தையும் கூட ரசித்துக்கொண்டே வண்டியிழுக்கும் எருதுகள்!
நண்பனே..!
கனவு நிறைவேறும்வரை கலைத்து விடாதே முயற்சியை ஏனெனில்....
முயற்சி மட்டுமே முன்னேற்ற மாளிகைக்கு முதலிடமாகும்!
வெற்றிப்பாதை!!
👉 உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது!
👉 அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது!
👉 இடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது!
👉 துவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறது!
👉 ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது!
👉 தட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறது!
👉 செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது!
👉 பதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது!
👉 மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது!
👉 புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது!
👉 தோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்!
👉 தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்!
முயல்வோம்.....
வெற்றி பெறுவோம்.....

மன்றம்
மு. மோகன்.
www.mandramtn.blogspot.com

No comments:

Post a Comment