Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Monday 4 April 2016

50 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்காளர் அடையாள மை தயாரிக்கும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நிறுவனம்

50 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்காளர் அடையாள மை தயாரிக்கும் ஒரே நிறுவனம்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்காளர் அடையாள மை தயாரிக்கும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நிறுவனம்

அடையாள மை இதுவரை கவுரவத்தின் அடையாளம் ஆள் காட்டி விரலில் வைக்கப்பட்டு நாட்டை ஆள தகுதி உள்ளவர்களை அடையாளம் காட்டுகிறோம்.

தேர்தல் திருவிழாவில் பொறிக்கப்படும் இந்த மை வைத்த அடையாளம் குறைந்த பட்சம் 20 நாட்கள் வரை விரலில் இருந்து மறைவதில்லை.

பாரம்பரியமாக இந்த மையை அன்று முதல் இன்று வரை ஒரே நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.

கர்நாடக மாநிலம் மைசூரில் செயல்படும் ‘மைசூர் பெயின்ட் மற்றும் வார்னீஸ் லிட்’ என்ற நிறுவனம்தான் இதை தயாரிக்கிறது.

சுதந்திரத்துக்கு முன்பே அதாவது 1937ம் ஆண்டு மைசூர் மன்னர் நல்வடி கிருஷ்ணராஜ உடையார் இந்த நிறுவனத்தை தொடங்கினார். அப்போது பெயின்ட் மற்றும் அது தொடர்பான பொருட்கள் தயாரிப்புக்காக தொடங்கினார். சுதந்திரம் அடைந்ததும் இந்த நிறுவனம் நாட்டுடமை ஆக்கப்பட்டது.

1962–ல் நாட்டின் 3–வது பாராளுமன்ற தேர்தலில் அடையாள மை தயாரிக்கும் பணி இந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் அடையாள மை இந்த நிறுவனத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. வேறு எந்த நிறுவனத்துக்கும் அனுமதி வழங்குவது கிடையாது. இந்த மைக்கான கலவைக்கான பார்முலாவை தேசிய ஆய்வகம் உருவாக்கி கொடுக்கும். அது மிக மிக ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.

கர்நாடக அரசு நிறுவனமாக செயல்படும் இந்த நிறுவனம் தேர்தல் ஆணையத்தின் தேவைக்கேற்ப மை தயாரித்து வழங்கி வருகிறது.

5 மில்லி, 7.5 மில்லி, 20 மில்லி, 50 மில்லி, 80 மில்லி அளவு பாட்டில்களில் தயாரித்து வழங்கப்படுகிறது.

5 மில்லி ‘மை’ சுமார் 300 வாக்காளர்களுக்கு பயன்படுத்த முடியும். இதுவரை சுமார் 30 கோடி பேரின் விரல்களில் இந்த மை பதிக்கப்பட்டு பல தேர்தல்களை சந்தித்துள்ளது.

இந்த நிறுவனம் தாய்லாந்து, சிங்கப்பூர், நைஜீரியா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் அடையாள மை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. ஆப்கானிஸ்தான், கம்போடியா நாடுகளில் நடத்தப்பட்ட தேர்தல்களுக்கும் இந்த நிறுவனம் தான் அடையாள ‘மை’ தயாரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment