Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Tuesday 5 April 2016

பழமொழி

வாங்க இன்னைக்கு ஒரு பழமொழிய பார்க்கலாம்..

*தாய் எட்டடி பாய்ந்தால்
பிள்ளை பதினாறடி பாயும் *

இது நமக்கெல்லாம் ரொம்பவே பிடிச்ச பழமொழிதானே ?..

'தாய் எதைச் செய்கிறாளோ, அதைவிட மகள் இரு மடங்கு சிறப்பா அதைச் செய்வாள்'..

இதுதானே இதோட அர்த்தம்..

சமயத்துல இது அப்பா - மகனுக்கும், ஆசிரியர் - மாணவனுக்கும் ஏன் முதலாளி தொழிலாளிக்கும் கூட தொடர்புப் படுத்தி சொல்லக் கேட்டிருக்கோம்..

இது உண்மைதானா ?..

இதெல்லாம் ஒண்ணுக்கொண்ணு ஏறுக்குமாறா இருக்கிறதையும் நடைமுறையில பார்க்கிறோமே..

அப்படின்னா இதோட உண்மையான பொருள்தான் என்ன ?..

அதுக்கு நீங்க கொஞ்சம் விவசாயம் செய்ய வந்தாகணும்..

இது விவசாயத்துல வாழையும் தென்னையும் பயிரிடறதுக்கான முறையைதான் இப்படி சொல்லி இருக்காங்க..

நல்லா வளர்ந்து குலை தள்ளிய வாழை மரத்தை தாய் மரம்னும் அதோட அடியில வர்ற சின்ன வாழைகளை கன்றுன்னும் சொல்லுவாங்க..

அப்படியே தென்னையின் கன்றை தென்னம்பிள்ளைன்னுதான் சொல்லுவாங்க..

சரி இருக்கட்டும், வாங்க இப்போ இதை நடவு செய்யலாம்..

வாழைய நடணும்னா ஒவ்வொரு வாழைக்கும் இடையில இடைவெளி எட்டு அடி இருக்கணும்..

அதே தென்னைக்குன்னா பதினாறு அடி இடைவெளி இருக்கணும்..

இந்த அடிக் கணக்கு அதுங்களோட வேர் பூமிக்குள்ள பரவற எல்லையைதான் அது சொல்லுது..

அதாவது தென்னையாகட்டும் வாழையாகட்டும் ஒரு மரத்தோட இலை மற்றொன்றின் இலையைத் தொடாத அளவு இடைவெளி இருந்தாதான் விளைச்சல் நல்லபடியா இருக்கும்..

இதை உறுதி படுத்தற மாதிரி வேறொரு சொல் வழக்கும் கிராமப் புறத்துல இருக்கு..

'எட்டடி வாழை கமுகு
ஈரடி கரும்பு கத்திரி
பதினாறடி பிள்ளை'..

இதுதாங்க அது..

எதுக்கோ சொன்ன பழமொழிய நம்ம வசதிக்கு இழுத்து பயன்படுத்தி வந்திருக்கோம் பாருங்க..

No comments:

Post a Comment