Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Monday 4 April 2016

திருப்பதி செல்வோர் ஆதார் அவசியம் எடுத்து வரவும்..

திருப்பதியும் ஆதார் அட்டையும்

திருமலையில் விரைவு தரிசனச் சீட்டு, விடுதி அறைகள் முன்பதிவுக்கு இம்மாதம் 15-ஆம் தேதி முதல் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

திருமலைக்கு வரும் பக்தர்களை இடைத்தரகர் தொல்லையிலிருந்து விடுவிக்கவும், வாடகை அறை பெறுவதற்கும், இணையதளத்தில் ரூ. 300 விரைவு தரிசனச் சீட்டு, ரூ. 50 சுதர்சன தரிசனச் சீட்டு, ஆர்ஜித சேவா சீட்டுகளை முன்பதிவு செய்யவும், தேவஸ்தானம் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி உள்ளது.

இந்த நடைமுறை இம்மாதம் 15-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

தர்ம தரிசனம், நடைபாதை பக்தர்கள் தரிசனம் தவிர்த்து பிற அனைத்து தரிசனங்களுக்கும், வாடகை அறை பெறவும் ஆதார் அட்டை கட்டாயம் தேவை.

எனவே, திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தங்கள் ஆதார் அட்டையைக் கொண்டுவர வேண்டும்.

ஆதார் அட்டை இல்லாதவர்கள் தங்களுடன் வரும் மற்றவர்களின் ஆதார் அட்டை மூலம் வாடகை அறை, தரிசனச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். 

ரூ. 300 விரைவு தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் தரிசன நுழைவு வரிசை மிகவும் தொலைவாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

அவர்களுக்கு வரும் 8-ஆம் தேதி முதல் ஏழுமலையான் கோயில் அருகிலிருந்து புதிய தரிசன வரிசை ஏற்படுத்தப்படும்.

திருமலையில் வாடகை அறை, பாதுகாப்புப் பெட்டகம், போர்வை, பாய் உள்ளிட்டவற்றைப் பெற முன் பணம் வசூலிக்கப்படுகிறது.

அது இனிமேல் ரத்து செய்யப்படும்.

தாழ்த்தப்பட்டவர்கள்,
மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு, திருப்பதியில் உள்ள ஸ்வேதா பவனில் இலவச அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும். 

இலவச திருமணம்: திருமலையில் இனி இலவசமாக மணமக்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.

அவர்களுக்கு அன்னதானம், லட்டுப் பிரசாதம், தங்கும் இடம், தரிசனம் இலவசமாக வழங்கப்படும்.

பக்தர்கள் தங்கள் சந்தேகங்கள், கேள்விகள், ஆலோசனைகளை, தேவஸ்தானத்தின் 24 மணிநேர கால்சென்டர் எண் 180042 54141, 0877-227 7777 என்ற தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.

அல்லது,

eottd@tirumala.org, jeotml@tirumala.org, jeotpt@tirumala.org, cvso@tirumala.org, pro@tirumala.org என்ற இமெயில் முகவரிக்கும் அனுப்பலாம் .

No comments:

Post a Comment